Wednesday, 18 June 2014

பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் பல்வேறு பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குருப் 'பி' பிரிவு பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: வேளாண்மை மற்றும் கிராம பொருளாதாரம் போன்ற பாடங்களில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: உதவி தொல்பொருள் வேதியியல் வல்லுநர்
காலியிடங்கள்: 23
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: வேதியியல்துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: உதவி தொல்பொருள் ஆய்வாளர்
காலியிடங்கள்: 19
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்திய வரலாறு அல்லது தொல் பொருள் ஆய்வியல் அல்லது நிலத்தியல் போன்ற ஏதாவதொரு பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: டிராப்டஸ்மேன்
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: +2 முத்து எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற துறைகளில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: உதவியாளர் (சட்டம்)
காலியிடங்கள்: 06
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.எல் முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: மாநில சட்டத்துறையில் 3 வருடம்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 19
கல்வித் தகுதி: வணிகவியல், பொருளியல், சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ,4,200.
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: புலனாய்வாளர்
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மனித இனஇயல் அல்லது சமூகவியல் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டிராப்ட்ஸ்மேன்
காலியிடம்: 01
வயது: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடம்: 02
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: வேளாண்மை துறையில் பட்டம் மற்றும் கிராமப் பொருளாதாரம், மரபியல், தாவர பெருக்கவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி இயக்குநர்
பணி: 07
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
கல்வித் தகுதி: வணிகவியல், பொருளியல், புள்ளியியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சந்தையியல் ஆய்வு, விளம்பரம் போன்ற துறைகளில் 2 வருடம்.

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: வேளாண்மை துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 2 வருடம்.

பணி: சப்-இன்ஸ்பெக்டர் (தடயவியல்)
காலியிடங்கள்: 39
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: உயிரியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், தடய அறிவியல், குற்றவியல், மேம்பாட்டு உயிரியல், உயிரி வேதியியல், செல் உயிரியல், நுண்ணுரியியல், உயிரி இயற்பியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை ஆராய்ச்சி உதவியாளர்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: மதிப்பீட்டாளர் (மலையாளம், தமிழ், வங்கம்)
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் வட்டார மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பணி: இந்தி உதவி ஆராய்ச்சி அதிகாரி
காலியிடங்கள்: 08
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: இந்தி அல்லது சம்ஸ்கிருதத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

பணி: டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 09
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் அப்ளிகேசன்ஸ் அல்லது கணினி அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பவியல் அல்லது கணினி பொறியியலில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: ஹவுஸ்கீப்பர்
காலியிடம்: 01
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
கல்வித் தகுதி: ஓட்டல் மேனேஜ்மென்ட் துறையில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 3 வருடம்.

பணி: டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 04
வயது வரம்பு: 18 - 28-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: கணிதம், புள்ளியியல், பொருளியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி நூலகர் மற்றும் தகவல் தொடர்பு அதிகாரி
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நூலக அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்.

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 03
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: பொருளியல், புள்ளியியல், வணிகவியல் அல்லது கூட்டுறவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (மண் பாதுகாப்பு)
காலியிடங்கள்: 04
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: வேளாண்மை, மண் அறிவியல், தாவரவியல், வனவியல், வேதியியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்ந்தப்பட்ட துறையில் 2 வருடம்.

பணி: உதவிகள அதிகாரி
காலியிடங்கள்: 49
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: மண் அறிவியல், வேளாண் வேதியியல் அல்லது வேளாண்மை துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி விரிவாக்க அலுவலர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: வேளாண்மை, வேளாண்மை விரிவாக்கம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 2 வருடம்.

பணி: மத்திய உதவி நுண்ணறிவு பிரிவு அலுவலர்
காலியிடங்கள்: 08
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + ரூ.4,600.
கல்வித் தகுதி: ஆங்கிலத்தை கட்டாய பாடமாக எடுத்து அரபிக், சைனீஸ், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் அல்லது ருஷ்யன் போன்ற ஏதாவதொரு மொழிகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டாகுமென்டேசன் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (கூட்டுறவு)
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: வேளாண்மை, வேளாண்மை பொருளியல், பொருளியல், வணிகவியல், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: புலனாய்வாளர்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: : 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: புள்ளியியல், கணிதம் அல்லது பொருளியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்.

பணி: நில இயல் நிபுணர்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
கல்வித் தகுதி: புவியியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்.

பணி: அரசு செய்தியாளர்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: வரலாறு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சம்ஸ்கிருதத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: தொற்றுநோய் தடுப்பு இன்ஸ்பெக்டர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விலங்கியல் அல்லது நுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 2 வருடம்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (உலோக தொழிற்கலை)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மெட்டாலர்ஜிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: 2 வருடம்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரிக்கல்)
காலியிடங்கள்: 18
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது இன்ஸ்ட்ருமென்டேசன் அல்லது இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: 2 வருடம்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 21
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் அல்லது மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமேசன் அல்லது மரைன் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: 2 வருடம்.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 06
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: முதுநிலை நூலகர் மற்றும் தகவல் உதவியாளர்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: நூலக அறிவியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: 2 வருடம்.

பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 06
வயது வரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: உயிரியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல் போன்ற துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 02
வயது வரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: உயிரியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், மருத்துவ தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (வனவிலங்கு)
காலியிடம்: 01
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: விலங்கியல் அல்லது வனவிலங்கு உயிரியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: பொருளியல் ஆய்வாளர் (நிலை - 2)
காலியிடம்: 01
வயது வரம்பு: 18 - 25-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பொருளியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பணி: டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 09
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: அறிவியல், கணிதம், பொருளியல், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 26
வயது வரம்பு: 18 - 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பூ
ச்சியியல், செடி நோய்க்குறியியல், உயிரி வேதியியல் பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை சென்ட்ரல் ஃபீ ரெக்ருட்மென்ட் ஸ்டாம்ப் மூலம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE REGIONAL DIRECTOR (NR),
STAFF SELECTION COMMISSION,
BLOCK NO:12, LODHI ROAD,
CGO COMPLEX, NEWDELHI 110504.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.06.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://sscnr.net.in/newlook/site/index.htm என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்...

01. அம்மீட்டர் (Ammeter)- மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது
02. அலிமோ மீட்டர் (Anemometer)- காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.
03. ஆடியோ மீட்டர் (Audiometer)- கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.
04. ஆல்டி மீட்டர் (Altimeter):- குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.
05. எலக்ட்ரோஸ்கோப் (Electrosospe)- மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி
06. கம்யுடேட்டர் (Commutator)- மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.
07. கோலரிமீட்டர் (Colorimeter)- நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.
08. கலோரி மீட்டர் (Calorimeter)- வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி
09. கால்வனோமீட்டர் (Calvanometer)- மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.
10. கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer)- மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி.
11. குரோனா மீட்டர் (Chronometer)- கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.
12. சாலினோ மீட்டர் (Salinometer) - உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)
13. செய்ஸ்மோ கிராஃப் (Seismograph)- நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி
14. குவாட்ரண்ட் (Quadrant)- பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.
15. டிரான்சிஸ்டர் (Transistor) - மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.
16. டெலிபிரிண்டர் (Teleprinter)- தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.
17. டெலி மீட்டர் (Telemeter)- வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)
18. டெலஸ்கோப் (Telescope) - தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.
19. டைனமோ (Dynamo)- இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி
20. டைனமோ மீட்டர் (Dynamometer)- மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.
21. தெர்மோ மீட்டர் (Thermometer)- வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி
22. தெர்மோஸ்கோப் (Thermoscope)- வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு மாற்றங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும் வெப்பங்காட்டி.
23. தெர்மோஸ்டாட் (Thermostat)- ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)
24. பாரோமீட்டர் (Barometer) - வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.
25. பிளான்டி மீட்டர் (Plantimeter)- சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி
26. பெரிஸ்கோப் (Periscope)- நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின் காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.
27. பைக்னோ மீட்டர் (Phknometer)- நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion): அளக்க உதவும் அடர்வளவி.
28. பைனாகுலர்கள் (Binoculars) - தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி
29. பைரோ மீட்டர் (Pyrometer)- உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.
30. மாக்னடோ மீட்டர் (Magneto Meter)- காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic Moments), புலங்களையும் (Fields) ஒப்புநோக்க உதவும் காந்த அளவி
31. மானோ மீட்டர் (Manometer)- வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி
32. மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass)- முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி
33. மைக்ரோ மீட்டர் (Micrometer):- சிறு தொலைவுகள் மற்றும் கோணங்களைத் துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.
34. மைக்ரோஸ்கோப் (Microscope)- நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும்  நுண்காட்டி
35. ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer)- ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.
36. ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் (Resistance Thermometer)- வெப்பத்தால் மின் கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய உதவும் மின்தடை வெப்ப அளவி.
37. ரெயின்கேஜ் (Raingauge)- மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.
38. ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter)- வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண்ணளவி
39. லாக்டோ மீட்டர் (Lactometer)- பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது
40. வெர்னியர் (Vernier)- அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்தமாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.
41. வோல்ட் மீட்டர் (Voltmeter)- இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.
42. ஸ்டெதஸ்கோப் (Stethoscope)- இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.
43. ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter)- இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.
44. ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance)- பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.
45. ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer)- ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.
46. ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope)- மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.
47. ஸ்ஃபியரோ மீட்டர் (Spherometer)- கோளக வடிவப் பொருட்களின் வளைவைத் துல்லியமாக அளக்க  உதவும் கோள அளவி.
48. ஹைக்ரோ மீட்டர் (Hygrometer)- வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி (relative Humidity) அளந்திட உதவும் கருவி
49. ஹைக்ரோஸ்கோப் (Hygroscope)- வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய உதவும் ஈரப்பதங்காட்டி
50. ஹைட்ரோஃபோன் (Hydrophone)- நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீரொலி வாங்கி.
51. ஹைட்ரோமீட்டர் (Hydrometer) நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அரங்கம்: பொருளாதாரத்துக்கு வழங்கப்படும் நோபல் பரிசின் மற்றொரு பெயர்...

01. பொருளாதாரத்துக்கு வழங்கப்படும் நோபல் பரிசின் மற்றொரு பெயர் - Bank of Sweeden Prize.
02. அமைதிக்கான நோபல் பரிசை முதலில் பெற்றவர்கள் - ஜீன் ஹென்றி டுனட் மற்றும் பிரயெனக் பாஸி (1901)
03. நோபல் பரிசை வென்ற முதல் ஆசிரியர் - ரபீந்திரநாத் தாகூர் (1913)
04. வேதியலுக்காக நோபல் பரிசு வழங்கப்படும் இடம் - ஆஸ்லோ
05. இதர நோபல் பரிசுகள் வழங்கப்படும் இடம் - ஸ்டாக் ஹோம்.
06. மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - ஹேர்கோவிந்த் கொரளா.
07. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட துவங்கிய ஆண்டு - 1969
08. நோபல் பரிசு வழங்கப்படும் துறைகள் - வேதியியல், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் சமாதானம்.
09. இயற்பியல் மற்றும் வேதியலுக்கான நோபல் பரிசை வென்றவர் - மேரி க்யூரி.
10. சலீம் அலியின் பிறந்தநாள் (நவம்பர் 12) - பறவைகள் தினம்.

11. ஹாக்கி ஜாம்பவான் தியான் சந்தின் பிறந்தநாள் (ஆகஸ்ட் 29) - தேசிய விளையாட்டு தினம்.
12. விவேகானந்தர் பிறந்த தினம் (ஜனவரி 12) - தேசிய இளைஞர் தினம்.
13. தேசிய வாக்காளர் தினம் - ஜனவரி 25
14. மகாத்மாகாந்தி இறந்த நாள (ஜனவரி 30) தியாகிகள் தினம்.
15. செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்த ஜீன் ஹென்றி டூனட்-டின் பிறந்த தினம் (மே 6) - சர்வதேச செஞ்சிலுவை தினம்.
16. இந்திராகாந்தி பிறந்த நாள் (அக்டோபர் 31) - தேசிய ஒருமைப்பாட்டு தினம்.
17. மகாத்மாகாந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய நாள் (ஜனவரி 9) - வெளிநாடுவாழ் இந்தியர் தினம்.
18. ஐ.நா.சபை நிறுவப்பட்ட நாள் (அக்டோபர்  24, 1945) - ஐ.நா. தினம்
19. ஐ.நா. சபையின் மனித உரிமை பிரகடனம் வெளியிடப்பட்ட நாள் (டிசம்பர் 10) - சர்வ தேச மனித உரிமைகள் தினம்.
20. கிரீன் ஆஸ்கர் என்றழைக்கப்படும் விருது - Whitley Golden விருது.

21. பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் மணி - இந்திரா காந்தி.
22. இந்தியாவின் மிக உயர்ந்த இராணுவ விருது - பரம்வீர் சக்ரா.
23. ஞானபீட விருது பெற்ற இரண்டு தமிழர்கள் - அகிலன் (1975), ஜெயகாந்தன் (2002).
24. பாரத ரத்னா விருது பெற்ற முதல் அயல்நாட்டவர் - கான் அப்துல் கபார்கான்.
25. நோபல் பரிசுக்கு இணையாக கணிதத்துக்கு வழங்கப்படும் விருது - ஆபெல் விருது.
26. ஆசியாவின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் விருது - இராமன் மக்ஸாசே விருது.
27. மிகச் சிறந்த இந்திய விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் விருது - சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது.
28. மிகச் சிறந்த விளையாட்டு பயிற்சியாளருக்கு வழங்கப்படும் மத்திய அரசு விருது - துரோணாச்சார்யா விருது.
29. ராஜீவ்காந்தி கேள் ரத்னா விருது வழங்கப்படுவது - சிறந்த விளையாட்டு வீரருக்கு.
30. பசுமைப் புரட்சி - வேளாண்மை]

31. வெண்மைப் புரட்சி - பால் பொருட்கள்
32. சாம்பல் புரட்சி - முட்டை
33. பொன் புரட்சி - பழங்கள்
34. மஞ்சள் புரட்சி - எண்ணெய் வித்துக்கள்
35. நீலப்புரட்சி - கடல் பொருள்கள்.
35. பிங்க் புரட்சி - மாமிசம்
36. பிரெளன் புரட்சி - மரபுசாரா எரிசக்தி
37. பசுமைப்புரட்சி என்ற பதத்தை உருவாக்கியவர் - வில்லியம் காண்டே.
38. மெகஸ்தனீஸ் (கிரேக்க தூதர்) - சந்திரகுப்த மெளரியர் அவை.
39. பாகியான் (சீனப் பயணி) - இரண்டாம் சந்திர குப்தர் அவை
40.. யுவான்சுவாங் (சீனப்பயணி) - ஹரர் அவை

41. இபின்பதூதா (மெராக்கோ பயணி) - முகமது பின் துக்ளக் காலம்.
42. பியட்ரோ வேலி (இத்தாலிய பயணி) - ஜஹாங்கீர் காலம்.
43. பெர்னியர் (பிரெஞ்சு) - ஷாஜகான் காலம்.
44. மனுக்சி (இத்தாலி) - ஷாஜகான் காலம்
45. இட்சிங் (சீனா) - முகமது பின் துக்ளக் காலம்.
46. அல்பருணி (இரான்) - கஜினி முகமது காலம்
47. அப்துல்ரசாக் (பெர்சியா) - இரண்டாம் தேவராயர் காலம்.
48. இராஜதரங்கினி - கல்ஹணர்
49. கல்பசூத்திரம் - பத்திரபாகு.
50. இண்டிகா - மெகஸ்தனிஸ்

51. மகாபாஷ்யம் - பதஞ்சலி
52. புத்தசரிதம் - அகவகோஷர்
53. மிருட்சககடிகம் - சூத்ரகர்.
54. பிகுத்சம்கிதை - வராகிமிரர்
55. காதம்பரி - பாணபட்டர்
56. முத்திரராட்சகம் - விசாக தத்தர்
57. ஷா நாமா - பிர்தெளசி.
58. மகாத்மா காந்தி - ராஜ்காட்
59. ஜவஹர்லால் நோரு - சாந்திவனம்
60. இந்திராகாந்தி - சந்திஸ்தல்

61. சரண்சிங் - கிசான் காட்
62. ஜெயில்சிங் - ஏக்தாஸ்தர்
63. லால்பகதூர் சாஸ்திரி - விஜய்காட்
64. மொரார்ஜி தேசாய் - அபங்காட்
65. ஜெகஜீவன்ராம் - சமதாஸ்தல்
66. குல்சாரிலால் நந்தா - நாராயண்காட்
67. ராஜீவ்காந்தி - வீர்பூமி
68. ஜஸ்டிஸ் வர்மா கமிஷன் - ராஜிவ் காந்தி படுகொலை
69. லிபரான் கமிஷன் - அயோத்தியா சம்பவம்
70. நரசிம்ஹம் கமிஷன் - வங்கி மறுசீரமைப்பு

71. தினேஷ் கோஸ்வாமி கமிஷன் - தேர்தல் மறு சீரமைப்பு
72. சர்க்காரியா கமிஷன் - மத்திய, மாநில உறவுகள்
73. ராஜா செல்லையா கமிஷன் - வரி மறுசீரமைப்பு
74. பல்வந்த்ராய் மேத்தா கமிஷன் - பஞ்சாயத்து ராஜ்
75. அசோக் மேத்தா கமிஷன் - சர்க்கரை ஊழல்
76. கோத்தாரி கமிஷன் - கல்வி
77. முகர்ஜி கமிஷன் - சுபாஷ் சந்திரபோஸ் மறைவு.
78. கி.மு. 58 - விக்ரம சகாப்தம்
79. கி.மு. 539 - மகாவீரர் பிறப்பு
80. கி.மு. 563 - புத்தர் பிறப்பு

81. கி.பி. 78 - சக ஆண்டு தொடக்கம்
82. கி.பி. 320 - குப்த சகாப்தம்
83. கி.பி. 712 - அராபியரின் சிந்து படையெடுப்பு.
84. கி.மு. 3 முதல் கி.பி. 3 - சங்க காலம்.
85. கி.பி. 1010 - தஞ்சை பெரியகோவில் கட்டப்பட்டது.
86. கி.பி. 1938 - தைமூர் படையெடுப்பு
87. கி.பி. 1498 - வாஸ்கோடகாமா இந்தியா வருகை.
88. உலகின் மிக வறண்ட பூமி - அட்டகாமா பாலைவனம்.
89. வருடத்துக்கு 250 மி.மீக்கும் குறைவாக மழை பொழியும் பகுதிகள் - பாலைவனங்கள்.
90. பூமியின் மிகப்பெரிய பாலைவனமாகக் கருதப்படும் கண்டம் - அண்டார்டிகா.

91. உலகின் மிகப்பெரிய வெப்ப பாலைவனம் - சஹாரா.
92. பாலைவனங்களைப்பற்றிய படிப்பு - Eremology.
93. உலகின் மிகப்பெரிய சூரியமின்சாரத் திட்டம் - அமெரிக்காவின் மொஜாவ் பாலைவனத்தில் செயல்படுகிறது.
94. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய பாலைவனம் - அரேபிய பாலைவனம்.
95. மிக அதிக நாடுகளில் பரந்து கிடக்கும் பாலைவனம் - சஹாரா.
96. தார் பாலைவனம் இடம்பெற்ற இந்திய மாநிலங்கல் - ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத்.
97. பிரபலமான நீலம் பாலைவனம் அமைந்துள்ள நாடு - எகிப்து.
98. பாலில் அடங்கியுள்ள சர்க்கரை - லாக்டோஸ்
99. பாலில் அடங்கியுள்ள முக்கிய புரதம் - காஸீன்.
100. பாலுக்கு சுவையளிப்பது -லாக்டோஸ்.

தருமபுரி, மதுரையில் சிசுக்கொலை அதிகம்; உலகில் வேறு எங்கும் இல்லாத கொடூரம்: உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கொன்ற இளம்பெண்ணின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உலகில் வேறு எங்குமே இல்லாத வகையில் தருமபுரி, மதுரை மாவட்டங்களில்தான் பெண் சிசுக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றன என்று நீதிபதி பி.தேவதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் மரியம்பட்டி கிராமத்தில் தனக்குப் பிறந்த பெண் குழந்தையை ஓர் இளம்பெண் கொன்றுவிட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.தேவதாஸ், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். உத்தரவில் அவர் கூறியுள்ளதாவது:
மனுதாரர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். பெண்ணாகப் பிறந்ததைத் தவிர அந்த சிசு வேறு எந்த பாவமும் செய்யவில்லை. இதுபோன்ற பெண் சிசுக்களை கொலை செய்யும் சம்பவங்கள் தருமபுரி மாவட்டத்தில்தான் அதிகம் நடக்கின்றன. தருமபுரி மாவட்ட மக்கள் பெண் குழந்தையை விரும்புவதே இல்லை என்பது போன்ற தோற்றத்தையே இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன.
சாதித்த ‘கருத்தம்மா’
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ‘கருத்தம்மா’ என்று ஒரு திரைப்படம் எடுத்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள குக்கிராமத்தில் பெண் குழந்தைக்கு கள்ளிப்பால் புகட்டுவார்கள். அந்த பெண் குழந்தை அங்கிருந்து தப்பிச் சென்றுவிடுவாள். பிற்காலத்தில் நன்கு வளர்ந்து ஒரு டாக்டராக மீண்டும் அந்த கிராமத்துக்கு வருவாள். தன் தந்தைக்கே அவள் மருத்துவம் பார்ப்பதுபோல அந்த திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
முளையிலேயே கிள்ளி எறிவது போல பிஞ்சுக் குழந்தைகளை இவ்வாறு கொலை செய்யும் சம்பவங்கள் கிராமங்களில் நடக்கின்றன. படித்தவர்கள்கூட இவ்வாறு செய்கின்றனர். இது போன்ற சமூக விரோத செயல்கள் தருமபுரி, மதுரை மாவட்டங் களில்தான் அதிகம் நடக்கின்றன. சட்ட விரோதமாக குழந்தைகளை தத்தெடுக்கும் நிகழ்வுகளும் தருமபுரி மாவட்டத்தில் அதிகம் நடக்கின்றன.
பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்துக்காக பெண் சிசுக்களை ஈவிரக்கமின்றி கொலை செய்யும் சம்பவம் உலகில் வேறு எங்குமே நடைபெறுவதில்லை. பிளேடால் சிசுக்களின் கழுத்தை அறுத்து கொல்வதும், பிறந்த குழந்தைக்கு உமியைக் கொடுத்து கொல்வதும் தருமபுரியில் நடக்கிறது. இத்தகைய சம்பவங்களில் பெண்கள் முக்கியக் குற்றவாளிகளாக உள்ளனர். பெண் குழந்தைகளை விரும்பாத கணவர்களுக்கும் பெண் சிசுக் கொலையில் சம பங்கு உள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரரான பெண் மீது இந்த நீதிமன்றம் மிகவும் பரிதாபம் காட்டுகிறது. இவரது வழக்கு தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இரக்கமின்றி நடவடிக்கை
பெண் சிசுக் கொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வித இரக்கமும் காட்டாமல் மேற்கொள்ள வேண்டும். பெண் சிசுக் கொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் வருவாய், காவல் துறையினர் முக்கியப் பங்காற்ற வேண்டும்.
இந்த சமூக அவலத்தை தூக்கி எறியும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு முகாம்களை சட்டப் பணி குழுக்கள் நடத்த வேண்டும். பெண் சிசுக் கொலைக்கு எதிரான சட்டக் கல்வி முகாம்களை கிராமங்களில் நடத்த தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தேவதாஸ் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Monday, 16 June 2014

யு.பி.எஸ்.சி.,யின் வனத்துறை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

மத்திய அமைச்சகத்தில் காலியாக உள்ள இடங்களை யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு நடத்தி நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் வனத்துறை சார்ந்த 85 காலியிடங்களை நிரப்புவதற்கான பாரஸ்ட் சர்வீசஸ் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.08.2014 அடிப்படையில் 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 
கல்வித் தகுதி: அனிமல் ஹஸ்பெண்டரி, வெர்டினரி சயின்ஸ், தாவரவியல், வேதியியல், மண்ணியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், விலங்கியல், விவசாயம், வனவியல் ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். 
தேர்ச்சி மையங்கள்: யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட தேர்வை தமிழகத்தின் சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையம் ஏதாவது ஒன்றில் எழுதலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இந்தத் தேர்வை எழுதுவதற்கு ரூ.100/-ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் ரொக்கமாகவோ அல்லது நெட்பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.06.2014
இணையதள முகவரி: http://upsc.gov.in/

எஸ்.எஸ்.சி.,யின் ஸ்டெனோகிராபர் தேர்வு

மத்திய அரசின் பணியிடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு நடத்தி நிரப்பி வருவது நாம் அறிந்ததே. இந்த அமைப்பின் சார்பாக கிரேடு சி மற்றும் டி பிரிவுகளைச் சார்ந்த 2014 ஆண்டிற்கான ஸ்டெனோகிராபர் பொது எழுத்துத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரங்கள்: மேற்கண்ட பொது எழுத்துத் தேர்வின் மூலம் கிரேடு சி பிரிவில் 38 இடங்களும், கிரேடு டி பிரிவில் 496 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளின்படி இட ஒதுக்கீடும் உள்ளது.
தகுதிகள்: பிளஸ் 2 விற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் ஸ்டெனோகிராபியிலும் தகுதி தேவைப்படும். முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: ஸ்டெனோகிராபியில் தகுதித் திறன் அறியும் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு என்ற முறையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Regional Director (SR), Staff Selection Commission, 
EVK Sampath Building, 2nd
Floor, College Road, Chennai, Tamil Nadu-600006
விண்ணப்பிக்க இறுதி நாள்: 25.06.2014
இணையதள முகவரி: <http://ssc.nic.in/notice/examnotice/Notice%20StenoC&D%202014.pdf>

கடலோரக் காவல் படையில் பதவி

இந்தியாவின் கடலோர எல்லைகளை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கான துணை ராணுவப் படையாக இந்தியக் கடலோரக் காவல் படை விளங்குகிறது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது: இந்தியன் கோஸ்ட் கார்டின் யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும். அதாவது 01.02.1993க்கு பின்னரும் 31.01.1997க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஆகிய பிரிவைச் சார்ந்தவர்களுக்கு உச்ச பட்ச வயதில் சலுகை உள்ளது.
உடல் தகுதி: உயரம் குறைந்த பட்சம் 157 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் இருக்க வேண்டும். மார்பு விரிவடையும் தன்மை குறைந்த பட்சம் 5 செ.மீ., இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிசிக்கல் எபீசியன்சி டெஸ்ட் மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கான எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னையில் கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Indian Coast Guard Store Depot, CG Complex, Near Kalmandapam Police Station, GM Pettai Road, Royapuram, Chennai-13.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுடைய மேற்கண்ட தகுதிகள் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்-லைன் முறையில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். 
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.06.2014
இணையதள முகவரி: www.joinindiancoastguard.gov.in/pdf/Advertisement/yantrik.pdf

பூனை புலியான கதை: சிங்கப்பூர் நகரக் கட்டமைப்பு

பூனையை ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டினால், அங்கிருந்து தப்பிக்க அது எப்படி வேங்கையைப் போல் மாறுமோ, அது கடுகு போன்று சிறுத்திருக்கும் சிங்கப்பூர் நாட்டுக்கும் முற்றிலும் பொருந்தும்.
சற்றேறக்குறைய சென்னைப் பெருநகரையொத்த அளவில் 710 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள, சுகாதாரத்துக்குப் பெயர் பெற்ற இந்தப் பொருளாதார வல்லரசு, சில தசாப்தங்களுக்கு முன்பு காலராவின் பிடியில் சிக்கியிருந்தது; குடிநீர்ப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது என்பதை நம்புவது சிரமமே.
ஒரு காலத்தில் இந்திய மன்னர்களால் ஆளப்பட்டதை உணர்த்தும் வகையில், சிங்கபுரி என்ற சமஸ்கிருதப் பெயரை வரலாற்று அடையாளமாக இன்றும் தாங்கி நிற்கிறது இந்த சிங்கப்பூர்.
1965-ல் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்கப்பூர், இன்று வளர்ச்சியில் மலேசியாவை மிஞ்சியுள்ளது. சிறிய நிலப்பரப்பை எப்படி உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சதா சர்வகாலமும் சிந்தித்து, முறையாகத் திட்டமிட்டு அவற்றை உரிய முறையில் அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருவதே இந்நீடித்த வளர்ச்சிக்குக் காரணம். இருக்கின்ற சிறிய வட்டத்துக்குள்தான் வளர்ந்தாக வேண்டும் என்ற இக்கட்டான நிலை உருவானதே சிங்கப்பூரின் சீரிய வளர்ச்சிக்குக் காரணம் என்கிறார் அந்நாட்டுச் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் விவியன் பாலசுப்பிரமணியம்.
சாலைகள்
ஒரு நகரின் அடிப்படைத் தேவைகளான தரமான சாலைகள், சுகாதாரமான குடிநீர், இலகுவான பொதுபோக்குவரத்து சேவை ஆகியவற்றை மக்களுக்குச் சிறப்பாக அளித்து உலகின் சிறந்த நகரமைப்பு நிர்வாகங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது சிங்கப்பூர். 85 சதவீத மக்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர்.
சாலைகளில் குப்பையைப் பார்க்கவே முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அங்குள்ள சந்து பொந்து சாலைகளில் கூட ஒரு குண்டு குழியைக் காணமுடியவில்லை. நம்மூரில் சாலைகளில் காணப்படும் சிறு சிறு ஒட்டு வேலைகள் அங்குத் தென்படவே இல்லை என்பது கூடுதல் தகவல்.
நமது நாட்டில் சாலைகளுக்குப் பயன்படுத்தும் அதே தாரைத்தான் அங்கும் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டும் எப்படித் தரத்துடன் காட்சியளிக்கிறது என்பதை நமது சாலை காண்டிராக்டர்கள்தாம் சொல்ல வேண்டும். மையப்பகுதியில் இருந்து இடது ஓரத்துக்கு நீர் வழிந்தோடும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதைகளின் ஓரங்களில் மரங்களுக்கு நீர் கிடைக்கும் வகையில் அவற்றைச் சுற்றிப் புல்தரையைப் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே இரும்பு கிரில்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றினுள் மழைநீர் புகுந்து, மக்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக நகரில் உள்ள நீர் சேகரிப்பு மையங்களை நோக்கி ஓடுகின்றன. இதனால் வெள்ளப் பெருக்கோ, நீர் தேக்கமோ கிடையவே கிடையாது.
இந்த நகரத்தில் எங்குமே இதுவரை நிலத்தடி குழாய் கிணற்றில் தண்ணீர் கிடைத்ததே இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. அதை உணர்ந்துதான் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பகுதிகளை மழை நீர் சேகரிப்புக்கேற்றவாறு அரசு மாற்றியுள்ளது, இன்றும் குறிப்பிட்ட அளவு குடிநீரை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்கிறது சிங்கப்பூர் அரசு.
நியூ வாட்டர் புரட்சி
இதுதவிர, வீடுகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீர், சொட்டுக் கூட விரயமாகாமல், நகர் முழுவதும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட பிரத்தியேக ராட்சத குழாய்கள் மூலம், நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. மழை நீரைச் சேகரிக்கத் தனியாக வேறு நிலத்தடி குழாய்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படும் நீரை நியூவாட்டர் (Newater) என்று அவர்கள் அழைக்கின்றனர். கழிவுநீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் “யூஸ்டு வாட்டர்” என்ற பதத்தையே அவர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர். சவ்வூடு பரவல் , நவீன உத்திகள் மூலமாக இந்நீர் சுத்திகரிக்கப்படுகிறது. எனினும், இதில் தாதுச்சத்துக்கள் குறைவாக உள்ளதால், அதிக அளவில் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படுவதில்லை.
ஆனால், சுத்தமான நீர் தேவைப்படும் தொழிற்சாலைகளில் முழுக்க, முழுக்க நியூவாட்டரே பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. நியூவாட்டரின் ஒரு பகுதியை மழைநீர் சேகரிப்பு மூலம் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீரிலும் கலக்கிறார்கள். சிங்கப்பூரின் 30 சதவீத தேவையை நியூவாட்டர் பூர்த்தி செய்கிறது. ஆனால் குழாயைத் திறந்ததும் காய்ச்சாமல் குடிக்கும் வகையில், பாதுகாப்பான குடிநீர் வருவதை அரசு உறுதி செய்துள்ளது.
கூவம் போல் மாசுபட்டுக் கிடந்த கல்லாங் நதியை 10 ஆண்டுகளில் சுத்தப்படுத்தி, அதைச் சுற்றுலா மையமாகவும், பொழுதுபோக்கு மையம் போலவும் மாற்றியிருப்பது சென்னைவாசிகளுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகும். சிங்கப்பூர் அரசு, அந்த ஆற்றங்கரைகளில் வசித்த குடிசைவாசிகளுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்து, ஆற்றினுள் கலக்கும் கழிவுநீர் கால்வாய்களைக் கண்டுபிடித்து அடைத்து, ஒரு வழியாக 1987-ல் முழுவதுமாகச் சுத்தப்படுத்தியது.
பன்றி இறைச்சிக் கூடங்கள் அகற்றப்பட்டுப் பன்றி வளர்ப்பு தடை செய்யப்பட்டது. பன்றிக் கழிவுகள் கொட்டப்படுவதும் தடுக்கப்பட்டது. அந்த ஆற்றில் காணாமல் போயிருந்த மீனினம் மீண்டும் அங்கு திரும்பத் தொடங்கியது அந்நீரின் தூய்மைக்குச் சான்று என்று மார்தட்டிக்கொள்கிறது சிங்கப்பூர் நிர்வாகம்.
பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கொட்டும் இடங்களைப் பார்த்து புலம்பும் நமக்கு, லோரங் ஹாலஸ் என்னும் பூங்கா பொறாமையை ஏற்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அதுவும் குப்பை கொட்டும் இடமாகத்தான் இருந்துள்ளது. இன்சினரேஷன் எனப்படும் திடக்கழிவுகளில் இருந்து நீரைப் பிரித்து, ஆவியாக்கி, பின்னர் குப்பைகளைச் சாம்பலாக்கும் முறையைப் பின்பற்றியதால் குப்பைகளை மலை போல் சேர்த்து வைக்கும் நிலை தவிர்க்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் அரிய வகை பறவைகளும், அதன் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது என்கிறார் லோரி என்னும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி.
மணமாகலையா? வீடில்லை
சிங்கப்பூரில் 85 சதவீத மக்கள் சொந்த வீடுகளில் (அடுக்குமாடி) வசிக்கின்றனர். அனைவருக்கும் வீட்டு வசதியை அரசு செய்து தருகிறது. திருமணமாகாதவர்களுக்குக் கண்டிப்பாக வீடு கிடையாது. ஈபிஎஃப் பணத்தைப் பயன்படுத்திக்கூட வீட்டுக் கடன் தவணையைக் கட்ட அரசு அனுமதிக்கிறது.
கார் வாங்குவதில் ஒழுங்குமுறை
சிங்கப்பூர்வாசிகள் நினைத்த மாத்திரத்தில் கார் வாங்கிவிட முடியாது. அதற்கு டெண்டர் முறையில் ஏலம் நடத்தியே அரசு முடிவு செய்கிறது. ஏலம் எடுப்பதற்கு காரின் குதிரை சக்தித் திறனுக்கேற்றாற்போல் சுமார் ரூ.40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ஒரு டாலர் சுமார் ரூ.49), வரை செலுத்த வேண்டியிருக்கும். அந்தச் சான்றிதழை பெற்ற பிறகே, ஒருவர் காரை வாங்க முடியும். அதனால் மிக மிக வசதி படைத்தவர்கள் மட்டுமே கார் வாங்க முடியும்.
மேலும், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கார்களை நகருக்குள் ஓட்டுவதற்குத் தனி உரிமமும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டுவதற்குச் சற்று குறைந்த விலையில் தனி உரிமமும் வழங்கப்படுகிறது. அவசரமாகப் போகவேண்டுமெனில் பீக் ஹவர்களில் பிந்தைய வகை சான்றளிக்கப்பட்ட கார்கள் தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் கார்களின் தேவையற்ற பெருக்கம் தடுக்கப்படுகிறது. சாலைகளில் நெரிசலும் தடுக்கப்படுகிறது. பைக் வாங்குவதற்கும் ஏலமுறை உண்டு.
இவற்றின் காரணமாக, மெட்ரோ ரயில், பஸ் , லைட் ரயில் சிஸ்டம் போன்ற பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். முக்கியமாக, போதுமான அளவில் அதாவது, 6 ஆயிரம் பஸ்களும், பல நூறு ஜோடி மெட்ரோ ரயில்களும், லைட் ரயில் சேவைகளும் (பெட்டிகள் குறைவான மெட்ரோ ரெயில்) இயக்கப்படுவதால் போக்குவரத்து என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இல்லை.
மின்சாரம், தண்ணீர் ஆகியவை மிக அரிதான பொருட்கள் என்பதால் அவற்றுக்கு மானியம் இல்லாமல் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தேவைக்கேற்ப அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்திகிறார்கள், என்கிறார் ஜார்ஜ் மாதவன்.
நகரத்தில் மக்கள் தொகை பெருகப்பெருக, ஆற்றங்கரையோரம் வசித்து வந்த மக்களைக் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றி, புறநகர்ப் பகுதிகளில் சொந்த வீடுகளில் வசிக்கச் செய்தது முதல், அவர்களுக்கு அங்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வைத்தபிறகே அந்த இடங்களுக்கு அவர்களை இடம்பெயரச் செய்தது வரை, அந்நாட்டு அரசு நகர்ப்புறத் திட்டமிடலைக் கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்றிருந்தும், மற்ற வளர்ந்த மாநகரங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டுமென்ற உந்துதல் காரணமாக இம்மாநாட்டை சிங்கப்பூர் நடத்தியது. இந்தத் தேடல்தான் அந்நாட்டை நகர நிர்வாகத்தில் உலகின் முன்மாதிரி நாடாக திகழச் செய்கிறது என்பதில் ஆச்சரியம் இல்லை.

கடன் அட்டை தவணைக்கு ஒரு மாதம் வரை தாமதக் கட்டணம் கிடையாது: ஆர்பிஐ உத்தரவு

கடன் அட்டை நிலுவை செலுத்துவதில் கால தாமத கட்டணம் வசூலிப்பதில் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்கலாம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு கடன் அட்டை தவணை செலுத்துவோருக்கு மிகப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பொதுவாக கடன் அட்டை அறிக்கை (ஸ்டேட்மெண்ட்) அளிக்கும் காலம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். கடன் தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்துவதற்கான கால அவகாசமும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்விதம் குறிப்பிட்ட தேதிக்குள் தவணைத் தொகை செலுத்தாவிடில் வங்கிகள் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த அளவானது ரூ. 100 முதல் ரூ. 700 வரை உள்ளது. செலுத்த வேண்டிய தொகை ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் வங்கிகள் ரூ. 700-ஐ தாமதக் கட்டணமாக வசூலிக்கின்றன.
குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு அடுத்த நாளே தவணை தொகை செலுத்தினாலும் இந்த கால தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்விதம் தவணைத் தொகை செலுத்துவதில் 30 நாள்கள் வரை அவகாசம் அளிக்கலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதனால் குறிப்பிட்ட கெடு தேதிக்குள் தவணை செலுத்தாவிடினும், ஒரு மாதத் துக்குள் செலுத்தினால் கால தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது. இப்புதிய உத்தரவு திடீர் செலவுக்காக கடன் அட்டைகளைப் பயன்படுத்தும் நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கால தாமதக் கட்டணமானது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையின் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது. இது குறைந்த பட்சம் ரூ. 100-லிருந்து ரூ. 700 வரை உள்ளது. பொதுவாக மின்சாரம் மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் குறித்த காலத்துக்குள் தொகையை செலுத்தாவிடில் தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் கடன் அட்டை வழங்கிய வங்கிகள் செலுத்த வேண்டிய தொகைக்கு வட்டியை வசூலிக்கின்றன. அத்துடன் குறித்த தேதியில் செலுத்தாததற்கு தாமதக் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கிறது.
குறிப்பிட்ட சில வங்கிகள் மற்றும் கடன் அட்டை அளிக்கும் நிறுவனங்கள் சில சமயங்களில் குறித்த தேதியில் தவணைத் தொகை செலுத்தாவிடில் அந்த அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன. வங்கிகள் பல சமயங்களில் இது தொடர்பான அறிவிப்பை முன்னதாகவே வாடிக் கையாளருக்குத் தெரிவித்து விடுகின்றன.
ஆனால் சில தனியார் வங்கிகள் குறித்த தேதியிலிருந்து 10 தினங்களுக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிடில் அட்டையின் செயல்பாட்டை முடக்கிவிடுகின்றன.
வாடிக்கையாளருக்கு 72 நாள் அவகாசம் தருவதாக கோடக் மஹிந்திரா வங்கி தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகே அட்டையின் செயல்பாடு முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளருக்கு 75 நாள் அவகாசம் அளிக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்றால் என்ன?

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது மரபுசாரா எரிசக்தி என்பது என்ன?
புதுப்பிக்கத்தக்க அல்லது மரபுசாரா எரிசக்தி என்பது பசுமை எரிசக்தி என்றும் அழைக்கப்படுகிறது. காற்று, சூரியஒளி, உயிரிக் கழிவுகள், தாவரக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகக் கருதப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நேரடியாக உற்பத்தி செய்து, அப்போதே பயன்படுத்த முடியுமா?
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் காற்று, சூரிய ஒளி ஆகியவற்றின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை நேரடியாக பயன்படுத்த முடியாது. அவற்றை பேட்டரியில் சேமித்து அல்லது மின் தொகுப்பில் இணைத்தே பயன்படுத்த முடியும்.
சூரிய சக்தி, காற்றாலை மின்சாரத்தை ஏன் நேரடியாக பயன்படுத்த முடியாது?
சூரிய ஒளியும், காற்று வீசும் திறனும் இயற்கையின் வானிலை மாற்றத்துக்கு ஏற்ப நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறுபடும் தன்மை கொண்டது. எனவே, அதன்மூலம் உற்பத்தியாகும் மின்சார அளவும் நொடிக்கு நொடி மாறுபடும். சில நேரங்களில் மின் உற்பத்தி இல்லாத நிலையும் ஏற்படும். இதனால்தான் நேரடியாக பயன்படுத்த முடிவதில்லை.
சூரியசக்தி என்றால் என்ன? அதை வீடுகளில் பயன்படுத்த முடியுமா?
சூரிய மின்சக்தி என்பது சூரிய ஒளியில் இருக்கும் வெப்பத்தை மின் திறனாக மாற்றி சேமிப்பதாகும். சூரிய மின்சக்தியை பேட்டரியில் சேமித்து, பின்னர் அதை வீடுகளில் பயன்படுத்த முடியும்.
சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின் சாதனங்களை இயக்க முடியுமா?
நொடிக்கு நொடி சூரிய ஒளி மாறுபடுவதால், மின்சாதனங்கள் சீராக இயங்க முடியாது. எனவே, சூரிய மின்சக்தியை மட்டுமே நம்பி மின்சாதனங்களை இயக்க முடியாது. சூரிய மின்சக்தியை பேட்டரி மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
காற்றாலைகளால் ஆண்டு முழுவதும், நாள் முழுவதும் மின் உற்பத்தி செய்ய முடியுமா?
காற்றாலைகளைப் பொருத்தவரை காற்று நிலையாக வீசும் காலத்தில் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். தமிழகத்தில் தென் மேற்கு பருவக்காற்று வீசும் காலத்தில் மே மாதம் முதல் அக்டோபர் வரை, காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். மற்ற மாதங்களில் எதிர்பார்க்கும் அளவு உற்பத்தி இருக்காது. ஆனால் நிலையற்ற முறையில் கூடுதலாகவோ, குறைவாகவோ மின்சாரம் உற்பத்தியாகும்.
உயிரிக் கழிவு மின்சாரம் என்பது என்ன?
மனித மற்றும் விலங்குக் கழிவுகள், தாவரக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கழிவுகள் இருக்கும் அளவுக்கு ஏற்ப மின்உற்பத்தி செய்ய முடியும்.

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநர் மகள்


சத்தியமங்கலத்தை அடுத்த உக்கிரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகராஜ் ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி கனிமொழி. இவர்க ளுக்கு திலிப்குமார் என்ற மகனும், நெல்சன் பிரியதர்ஷினி (24) என்ற மகளும் உள்ளனர்.

நெல்சன் பிரியதர்ஷினியின் பெற் றோர் ஏழ்மை நிலையில் இருந் தாலும் அவர்களின் மகளை சாதனை படைக்க வேண்டுமென்ற லட்சியத் துடன் வளர்த்தனர். பட்டப்படிப்பு முடித்தவுடன் தனியார் வங்கியில் பணியில் இருந்தவாறே ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாரான பிரியதர்ஷினி, தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து நெல்சன் பிரிய தர்ஷினி கூறியதாவது: முதல் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சத்தியமங்கலம் தனியார் பள்ளியி லும், பின் கோவை கல்லூரியிலும் படித்துவிட்டு, தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தேன். சிறுவயது முதலே எனது தந்தை, தாய் மற்றும் தாய்மாமா புவியரசு ஆகியோர் என்னை நன்கு படித்து கலெக்டராக வேண்டும் என கூறிவந்தனர். அத னால் எனக்கு ஐஏஎஸ் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
இளங்கலை படிப்பு முடித்தபின் பணியில் சேர்ந்துவிட்டாலும், ஐஏஎஸ் படிப்பதற்கான அடிப் படை தகுதித் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். இதன்பின் எனது குடும்பத்தினரும், வங்கி மேலாள ரும் தொடர்ந்து படிக்குமாறு ஊக்க மளித்தனர். பின்னர் விடாமுயற்சி யுடன் இதற்கான புத்தகங் களை சேகரித்தும், இணையதளங்க ளில் உள்ள பாடங்களைப் படித் தும் ஐஏஎஸ் தேர்வெழுதினேன். தற்போது, 88-வது ரேங்க் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டு மென்ற விருப்பம் நிறைவேறி யதில் எனக்கு மிகுந்தமகிழ்ச்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாட்டின் பணவீக்கம் 6.01% ஆக அதிகரிப்பு


மே மாதத்திற்கான நாட்டின் பணவீக்கம் 6.01% ஆக அதிகரித்துள்ளது. முந்தைய மாதத்தில் பணவீக்கம் 5.20% ஆக இருந்தது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு, காபி, தேநீர் போன்ற பானங்கள் விலை மற்றும் மீன், காய்கறி விலைவாசி உயர்வால் பணவீக்கம் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் மொத்த விற்பனை விலை அளவின்படி கணிக்கப்பட்ட பணவீக்கம் 4.58% ஆக இருந்தது. ஆனால் நடப்பு ஆண்டு மே மாதத்தில் உணவு பணவீக்கம் 6.01% ஆக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 6.4% ஆக இருந்த பணவீக்கம் 5 மாதங்களுக்குப் பிறகு இந்த மாதம் கடுமையாக உயர்ந்துள்ளது.
வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில்: கடந்த மாதம் காபி விலை 23%, கோழி விலை 7%, மீன் விலை 6%, டீ, பழங்கள், காய்கறிகள் விலை 4% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வாலேயே பணவீக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருள்களின் விலை குறைந்து, பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய நிதித் துறைச் செயலர் அரவிந்த் மாயாராம் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.