Wednesday, 22 May 2013

குரூப்-2 தேர்வில் முறைகேடு செய்து பதவி : சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை


டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், புரோக்கரிடம் முறைகேடாக வினாத்தாளை வாங்கி தேர்வெழுதி, பதவி பெற்றவரிடம், சி.பி.சி..டி., போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

தமிழகத்தில், 2012 ஆக., மாதம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. ஈரோடு, தர்மபுரி, அரூர் உட்பட இடங்களில், தேர்வுக்கு முன்பே, வினாத்தாள் வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. சி.பி.சி..டி., போலீசார், புரோக்கர்களிடம் விசாரணை நடத்தியதில், 2011 ஜூலை நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்விலும், முறைகேடு நடந்தது தெரியவந்தது.

இதில், பண்ருட்டியை சேர்ந்த ரவிக்குமார், புரோக்கரிடம், வினாத்தாளை வாங்கி தேர்வெழுதி, நாகை மாவட்ட வணிக வரித்துறையில் துணை கமிஷனராக பதவி பெற்று இருந்தது தெரியவந்தது. அவர், இரண்டு நாட்களுக்கு முன், கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சி.பி.சி..டி., அலுவலகத்தில் , விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.பி.சி..டி., போலீசார் கூறுகையில், "புரோக்கர்களிடம் இருந்து வினாத்தாள்களை பெற்றது குறித்து, ரவிக்குமாரிடம், விசாரணை நடத்தப்படுகிறது. புரோக்கர்களிடம் வினாத்தாள் பெற்று, மோசடி செய்து தேர்வெழுதி, அரசுப் பணி பெற்றவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

Tuesday, 21 May 2013

ஆதார் அடையாள அட்டை


ஆதார் அடையாள அட்டை

ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

வரலாறு

இந்த திட்டத்திற்கு முன்னோடி திட்டமாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.என் எனப்படும் சமூக பாதுகாப்பு எண்திட்டம் கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த திட்டம் நந்தன் நீல்கேனியின்தலைமையில் 2009 பெப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.

உள்ளீடு செய்யப்படும் தகவல்கள்

கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிளுருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவைக்கப் பட்டுள்ளது. 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.

தகவல் பாதுகாப்பு

மக்களிடம் திரட்டப்படும் தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். பெரும்பாலும் உள்ளூர் அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகத் தகவல்கள் திரட்ட திட்டமிடப்பட்டிருகிறது. தகவல்கள் முதலில் "ஆஃப்லைன்"இல் உள்ளீடு செய்யப்பட்டு பிற சங்கேத மொழிகளில் மற்றம் செய்யப்பட்டு மத்தியதரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்றன. எனவே தகவல் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.

எதிர்நோக்கும் சவால்கள்

போதிய கல்வியறிவு இல்லாத மக்கள், தங்களிடம் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, புகைப்பட வாக்களர் அடையாள அட்டைக்கான விவரம் சேகரிப்பு போன்ற பிரதிபலன் இல்லாத கணக்கெடுப்புகளுக்கு காட்டும் அலட்சியம் சரியான தகவல் சேகரிக்க பெரும் சவாலாக உள்ளது. இதனை மனதில் வைத்து வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் இதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தவிர்த்து விடாமல் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய்ஊக்கத்தொகையாக வழங்கவும் இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.


Monday, 20 May 2013

2011 குரூப் 2 தேர்வு வினாத்தாளும் அவுட்



கடந்த, 2012ல் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து, சி.பி.சி..டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்விலும், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, வணிக வரித் துறை துணை கமிஷனரான ரவிக்குமார் என்பவரை, கோவை சி.பி.சி..டி., போலீசார் கைது செய்தனர்.


தமிழகத்தில், 2012 ஆக., 12ம் தேதி, அரசுத் துறையில் காலியாக இருந்த, 3,631 பணியிடங்களுக்கு நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6.40 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில், ஈரோடு, தர்மபுரி, அரூரில் வினாத்தாள் அவுட்டானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி செய்து, வினாத்தாளை வாங்கிய, நாகை மாவட்ட வணிக வரித் துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த ரவிக்குமார் என்பவரை, சி.பி.சி..டி., போலீசார் கைது செய்து, ஈரோடு ஜே.எம்., 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மே, 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டதை அடுத்து, ஈரோடு கிளைச் சிறையில் அடைத்தனர்.
கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் மோசடி நடந்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல், 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இது குறித்து, சி.பி.சி..டி.,போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 2011ம் ஆண்டு, ஜூலை, 30ம் தேதி, டி.என்.பி. எஸ்.சி., குரூப் 2 தேர்வில், 6,695 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும், 4.80 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.தேர்வு முடிவுகள் வெளியாகி, தேர்வானவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. கடந்த, 2012ல் நடந்த, குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அவுட் ஆனதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புரோக்கர்களிடம் வினாத்தாள் வாங்கித் தேர்வு எழுதியோர் பற்றி விசாரித்து வந்தோம்.அதிரடி திருப்பமாக,கடலூர் மாவட்டம், பண்ருட்டி, பத்தரக் கோட்டையைச் சேர்ந்த சீராளன் மகன் ரவிக்குமார், 32, கடந்த, 2011ல் நடந்த, குரூப் 2 தேர்வின் போது, கடலூர் புரோக்கர்கள் மூலம் வெளியான வினாத்தாளை வாங்கியதும், தேர்வு எழுதி, தற்போது, நாகை மாவட்ட வணிக வரித் துறையில் துணை கமிஷனராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.இதையடுத்து, ரவிக்குமாரை கைது செய்துள்ளோம். மேலும் மோசடி செய்து, தேர்வு எழுதி, அரசுத் துறையில் பணியாற்றி வருபவர்கள் பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Sunday, 19 May 2013

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கோவையில் மையம் அமையுமா? மாணவ மாணவியர் எதிர்பார்ப்பு


சென்னைக்கு அடுத்தபடியாக அதிக கல்லூரிகள், மாணவர்கள், பிற மாநில மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக உள்ள கோவையை, சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான மையமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மத்திய அரசு பணிகள் தேர்வாணையத்தின் மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்கட்ட தேர்வுகள் நாடு முழுவதும் 30 நகரங்களில் நடக்கிறது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே இதற்கான தேர்வு மையங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தையும் மையமாக அறிவிக்கும் பட்சத்தில், தமிழகம் மட்டுமின்றி, பக்கத்து மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் பயனடைவர். இந்த தேர்வுகளில் பங்கேற்க, ஈரோடு, ஊட்டி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மேற்கு தமிழகம் மட்டும் இன்றி கேரளாவில் பாலக்காடு, மலம்புழா, வயநாடு உள்ளிட்ட பகுதி மாணவர்களும், கர்நாடகாவில் தெற்கு மாவட்ட பகுதி மாணவர்களும் கோவையை மையமாக அமைப்பதால் பயன் பெறுவார்கள்.

இது குறித்து மாநகராட்சி இலவச உயர்கல்வி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் கூறியதாவது:

நடப்பு ஆண்டிற்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் வரும் 26ம் தேதி நடக்கிறது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மட்டும், 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். அனைத்து மாவட்டத்திற்கும் மையமாக உள்ளதால், பிற இடங்களைவிட, கோவையை தேர்வு மையமாக அறிவித்தால் வசதியாக இருக்கும். இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் பொருள், நேரம், பணம் விரயமாகாமல் தவிர்க்கலாம். உதாரணமாக, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மாணவர்கள் 325 கி.மீ., பயணித்து கொச்சினுக்கு செல்வதை காட்டிலும், 200 கி.மீ., தொலைவில் <<உள்ள கோவைக்கு வருவது எளிது.

சென்னைக்கு அடுத்தபடியாக கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் அதிகம் உ<ள்ள கோவை மாவட்டம். அதை சுற்றிலும் உள்ள பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இத்தேர்வில் ஒவ்வொரு வருடமும் பங்கேற்கின்றனர். இதனால் கோவை மாவட்டத்தை தேர்வு மையமாக அமைப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது.

இவ்வாறு, அவர் கூறினார். பயிற்சி மாணவர்கள் வசந்தகுமார், சந்தோஷ், நிஷா ஆகியோர் கூறுகையில், ""தேசிய, மாநில வேலைவாய்ப்பு மற்றும் பிற தேர்வுகளுக்கு கோவையை மையமாக வைத்து நடத்தும்போது, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு மட்டும் மையமாக அறிவிக்காதது ஏன்? கோவை மாவட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் சந்திப்புகள் உள்ளது. அவ்வாறு கோவை மாவட்டத்தை சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு மையமாக அறிவித்தால் பல மாவட்ட மாணவர்கள் பயனடைவார்கள்,'' என்றனர்.

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இரண்டு உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு பள்ளியை தேர்வு மையமாக அறிவிப்பதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று பலதரப்பினர் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Saturday, 18 May 2013

கேள்வி பதில்


கேள்விகள்:

1. அல்லிகளின் பூமி?
2.   இலவங்கம்/கிராம்பு தீவு?
3.   தீவுக் கண்டம்?
4.   கண்ணீர் வாயில்?
5. தமிழகத்தில் இதுவரை எத்தனை முறை ஜனாதிபதி ஆட்சி நடைபெற்றுள்ளது?
6.   நைல் நதியின் கொடை?
7.   பெரிய வெள்ளைவழித்தடம்?
8.   துறவிகள் இராஜ்ஜியம்?
9.   இந்தியாவின்  நுழைவு வாயில்?
10. கேக்குகளின் பூமி?
11. மத்தியத் தரைக்கடலின் சாவி?
12. பகோடா பூமி?
13. சூரியன் உதயமாகும் பூமி?
14. ஐந்து நதிகளின் பூமி?
15. காற்றாலைகளின் பூமி?
16. ஆண்டில்லெஸ்லின் முத்து?
17. கீழை நாடுகளின் முத்து?
18.   ஹெர்குலஸின் தூண்கள்?
19.   இளஞ்சிவப்பு நகரம்?
20. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்?
21.   அட்ரியாடிக்கின் ராணி?
22.   அரபிக்கடலின் ராணி?
23.   ஐரோப்பாவின் நோயாளி?
24.   இந்தியாவின் மசாலா தோட்டம்?
25.   கிழக்கின் வெனிஸ்?
26.   வடக்கின் வெனிஸ்?
27.   வெள்ளை நகரம்?
28.   வெள்ளை மனிதர்களின் கல்லறை?
29.   உலகின் தனிமையான தீவு?
30. உலகின் மிகப்பெரிய நகரம்(பரப்பளவில்)?
31.  இந்தியாவில் எங்கு ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட்டுள்ளது?
32.   உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன திட்டம்?
33.   உலகின் மிகப்பெரிய அரண்மனை?
34.   உலகின் மிக உயரமான விமான நிலையம்?
35.   உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம்?
36.   உலகின் மிக உயரமான அணை?
37.   உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி?
38.   உலகின் மிக உயரமான நகரம்?
39.   உலகின் மிக உயர்ந்த சிகரம்?
40. உலகின் மிக உயரமான சாலை?
41.   உலகின் மிக உயரமான ரயில்வே?
42.   உலகின் மிகப்பெரிய தீவுக் கூட்டம்?
43.   உலகின் மிகப்பெரிய நகரம் (மக்கள்தொகையில்)?
44.   உலகின் மிகப்பெரிய அணை?
45.   உலகின் மிகப்பெரிய ஏரி (உப்புநீர்)?
46.   உலகின் மிக நீண்ட மலைத்தொடர்?
47.   உலகின் மிகப்பெரிய ஏரி (நன்னீர்)?
48.   உலகின் மிகப்பெரிய தீபகற்பம்?
49.   உலகின் மிகப்பெரிய கடல்?
50. உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடை?

விடைகள்:

1.   கனடா
2.   ஜான்சியார்
3.   ஆஸ்திரேலியா
4.   பாப்-எல்-மண்டெப் (ஜெருசலேம்)
5.   4 முறை
6.   எகிப்த்து
7.   பிராட்வே (நியூயார்க்)
8.   கொரியா
9.   மும்பை
10. ஸ்காட்லாந்து
11.   ஜிப்ரால்டர்
12.   மியான்மர்
13.   ஜப்பான்
14.   பஞ்சாப் (இந்தியா)
15.   ஹாலந்து
16.   கியூபா
17.   ஹாங்காங்
18.   ஜிப்ரால்டர் ஜலசந்தி
19.   ஜெய்ப்பூர்
20. சுவிட்சர்லாந்து
21.   வெனிஸ் (இத்தாலி)
22.   கொச்சி (கேரளா)
23.   துருக்கி
24.   கேரளா
25.   ஆலப்புழா (கேரளா)
26.   ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்)
27.   பெல்கிரேடு
28.   கினியா கடற்கரை
29.   டிரிஸ்டன் டா குன்ஹா
30. மவுண்ட் இசா (ஆஸ்திரேலியா)
31.     காவலூர்தமிழ்நாடு.
32.   லாயிட் பாரேஜ் (பாகிஸ்தான்)
33.   வாட்டிகன் (இத்தாலி)
34.   லாசா (திபெத்)
35.   கிம்பர்லி (தென் ஆப்பிரிக்கா)
36.   தி கிராண்ட்ஸ் (சுவிட்சர்லாந்து)
37.   ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா)
38.   வென்சுவான்(சீனா)
39.   எவரெஸ்ட் (நேபாளம்)
40. லே நோப்ரா சாலை (இந்தியா)
41.   கிங்காய்திபெத் ரயில்வே (சீனா)
42.   இந்தோனேஷியா
43.   டோக்கியோ (ஜப்பான்)
44.   முப்பள்ளத்தாக்கு அணை (சீனா)
45.   காஸ்பியன் கடல்
46.   ஆண்டிஸ் (தென் அமெரிக்கா)
47.   சுபீரியர் ஏரி (கனடா)
48.   அரேபிய தீபகற்பம்
49.   தென் சீனக்கடல்
50. கொரக்பூர் (மேற்கு வங்கம்)