டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், புரோக்கரிடம் முறைகேடாக வினாத்தாளை வாங்கி தேர்வெழுதி, பதவி பெற்றவரிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தமிழகத்தில், 2012 ஆக., மாதம் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு நடந்தது. ஈரோடு, தர்மபுரி, அரூர் உட்பட
இடங்களில், தேர்வுக்கு முன்பே, வினாத்தாள் வெளியானதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., போலீசார், புரோக்கர்களிடம் விசாரணை நடத்தியதில், 2011 ஜூலை நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்விலும், முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதில், பண்ருட்டியை சேர்ந்த
ரவிக்குமார், புரோக்கரிடம், வினாத்தாளை வாங்கி தேர்வெழுதி, நாகை மாவட்ட வணிக வரித்துறையில் துணை
கமிஷனராக பதவி பெற்று இருந்தது தெரியவந்தது. அவர், இரண்டு நாட்களுக்கு முன், கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் , விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், "புரோக்கர்களிடம் இருந்து வினாத்தாள்களை பெற்றது குறித்து, ரவிக்குமாரிடம், விசாரணை நடத்தப்படுகிறது.
புரோக்கர்களிடம் வினாத்தாள் பெற்று, மோசடி செய்து
தேர்வெழுதி, அரசுப் பணி பெற்றவர்கள் விபரம்
சேகரிக்கப்பட்டு வருகிறது' என்றனர்.
No comments:
Post a Comment