ஆதார் அடையாள அட்டை
ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.
வரலாறு
இந்த திட்டத்திற்கு முன்னோடி திட்டமாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.என் எனப்படும் சமூக பாதுகாப்பு எண்திட்டம் கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த திட்டம் நந்தன் நீல்கேனியின்தலைமையில் 2009 பெப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.
உள்ளீடு செய்யப்படும் தகவல்கள்
கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிளுருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவைக்கப் பட்டுள்ளது. 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.
தகவல் பாதுகாப்பு
மக்களிடம் திரட்டப்படும் தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். பெரும்பாலும் உள்ளூர் அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகத் தகவல்கள் திரட்ட திட்டமிடப்பட்டிருகிறது. தகவல்கள் முதலில் "ஆஃப்லைன்"இல் உள்ளீடு செய்யப்பட்டு பிற சங்கேத மொழிகளில் மற்றம் செய்யப்பட்டு மத்தியதரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்றன. எனவே தகவல் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும்.
எதிர்நோக்கும் சவால்கள்
போதிய கல்வியறிவு இல்லாத மக்கள், தங்களிடம் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, புகைப்பட வாக்களர் அடையாள அட்டைக்கான விவரம் சேகரிப்பு போன்ற பிரதிபலன் இல்லாத கணக்கெடுப்புகளுக்கு காட்டும் அலட்சியம் சரியான தகவல் சேகரிக்க பெரும் சவாலாக உள்ளது. இதனை மனதில் வைத்து வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் இதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தவிர்த்து விடாமல் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய்ஊக்கத்தொகையாக வழங்கவும் இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.
No comments:
Post a Comment