Tuesday, 11 February 2014

தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம் (பிப்.11- 1847)

தாமஸ் ஆல்வா எடிசன் 1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசனின் பெற்றோர் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள். தந்தை சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கர்; தாயார் நான்சி எடிசன். இவர்களுக்கு எடிசன் எழாவதாகவும் கடைசியாகவும் பிறந்தார்.

தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். 1880-ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.

தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார்.
மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் தங்களுடைய மதத்தினைப் பரப்பவே தமிழைப் பயின்றனர். டாக்டர் ஜி.யூ.போப்பும் அவர்களைப் போலவே தம்முடைய மதத்தைப் பரப்பவே தமிழ் கற்றாலும், சைவத் தமிழை, குறிப்பாகத் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலைநாட்டவர்க்கு அறிமுகப்படுத்தினார்.
தமிழகத்தின் உண்மைச் சமயம் சிவநெறியே என்பதைத் திடம்பட எடுத்து மொழிந்தார். மேலைநாட்டுத் தமிழறிஞர்கள் பலருள்ளும் ஜி,யூ,போப் அவர்களின் மீது தமிழர்களுக்கு, அதிலும் தமிழ்ச் சைவர்களுக்கு ஒரு தனிப்பாசம் உண்டு.
பிறப்பு: ஏப்ரல் 24, 1820 -ல் கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில்(இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜோன் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் போப் (ஜார்ஜ் உக்லோ போப்).
கல்வி: குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
தமிழகம் வருகை: விவிலிய நூற்கழகத்தில் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839 இல் தமிழகத்திற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.
தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
சாயர்புரத்தில் தங்கியிருந்த போது அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நண்பராகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறித்துவரானார். அதனால் ஒரு தொடக்கப் பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப்.
திருமணம்: 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.
தமிழ் இலக்கணத்தை Elementary Tamil Grammar என 3 பாகமாக எழுதினார். தமிழ்ப் புலவர்களையும், தமிழ்த் துறவிகளையும் பற்றி ஆங்கிலத்தில் நூல்கள் எழுதினார்.
தமிழ்த் தொண்டு:
* இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
* 1886 ஆம் ஆண்டு திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். Sacred Kural என்ற அவரது மொழியாக்கம் மிகச்சிறப்பானதாகப் போற்றப்படுகிறது.
இது தவிர நாலடியார்(1893), திருவாசகம் (1900) போன்ற நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். இவைகள் தமிழ்-ஆங்கில அகராதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜி.யு.போப் எழுதிய இலக்கண நூல்கள் தமிழறிஞர்களால் பாராட்டப் பெற்று பல பதிப்புகள் கண்டவை.
ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப் மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது. தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், " நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும்" என்று வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு போப் தனது முதுமையினைக் குறிப்பிட்டு, அது நீண்ட நெடிய பணி அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று நம்பிக்கையில்லை எனக் கூறியிருக்கிறார். அதற்கு போப்பின் நண்பர்" ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்டகாலம் வாழ்வதற்குண்டான வழி.நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்".அதன் பின்னர் மொழிபெயர்ப்பினை துவக்கிய போப் தனது எண்பதாவது வயதில் இப்பணியினை முடித்திருக்கிறார்.தனது 80ஆவது பிறந்தநாளன்று எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"I date this on my eightieth birthday. I find by reference that my first Tamil lesson was in 1837. This ends, as I suppose, a long life devoted to Tamil studies. It is not without deep emotions that I thus bring to a close my life's literary work."
* புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
* தமிழ் மீது பெரும் பற்று பெற்ற போப் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
மறைவு: தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப் தனது 88ஆவது வயதில் 12.02.1908 மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் என்றும் தனது கல்லறையின் மீது "A Student of Tamil" இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்று செதுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜி. யு. போப் சிலை நிறுவப்பட்டுள்ளது.

தமிழறிஞர்கள் அறிவோம்: பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை

இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு வரன்முறையான ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாறாகப் பரிணமிப்பதற்கு பேரா. ச.வையாபுரிப்பிள்ளையின் பங்களிப்பு முக்கியமானது.  தமிழ் நூற்பதிப்புத் துறையில் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியவர். தமிழில் சிறந்த புலமை உள்ளவர்; ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், கதை,கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர்.
சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவராகச் செயற்பட்டவர். பிற மொழி கலப்பதை வெறுப்பதும், சமஸ்க்ருதத்தை வெறுப்பதும், இந்தியை இகழ்வதும், தனித் தமிழ் நாடு குறித்து கனவு காண்பதும் போன்ற விருப்பு வெறுப்புகள் ஏதுமற்ற தமிழ் அறிஞர் ஒருவர் இருந்தார் என்றால் வியப்பாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு ஆச்சரியம் தான் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்.
பிறப்பு: நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் 1891 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி சரவணப்பெருமாள் - பாப்பம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.
கல்வி: பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டு சென்னை மாகாணத்திலேயே தமிழில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று "சேதுபதி தங்க மெடல் (பதக்கம்)" பெற்ற பெருமைக்குரியவர் ஆனார்.
சட்டம்: தமிழில் ஆர்வம் அதிகமிருந்தும் வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.
வழக்கறிஞர் பணி: திருவனந்தபுரத்தில் ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகவும், மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
நண்பர்கள்: "இரசிகமணி" டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றவர்கள்நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.
தமிழ் ஆய்வு: வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரை அறிஞர்கள் மத்தியில் பேசப்பட வைத்தன. உ.வே.சாமிநாதய்யருக்குப் பிறகு பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து வெளியிட்ட பெருமை எஸ். வையாபுரிப் பிள்ளையைத் தான் சாரும். ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்ததுடன் நிற்காமல் அந்த இலக்கியங்களுக்குக் கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்குப் பெரும் பங்கு உண்டு.
பதிப்பாசிரியர்: வையாபுரிப்பிள்ளை 1926 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். 1946 வரை அப்பணியில் சிறப்பாகச் செயல்பட்டு, பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கினார்.
தமிழ்த்துறைத் தலைவர்: வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலத்தைப் பொற்காலம் என்று கூறுவார்கள். சுமார் நான்கு ஆண்டுகள் அப்பதவியில் வையாபுரிப் பிள்ளை இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. இந்தக் காலகட்டத்தில் தான், பின்னாளில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தராக விளங்கிய வ. ஐ. சுப்பிரமணியம், ஆய்வு மாணவராக வையாபுரிப் பிள்ளையிடம் பணியாற்றி அவரது வாரிசு என்ற பெயரையும் பெற்றார்.
இரா. பி. சேதுப்பிள்ளையைப் போலவே கம்பனின் கவிநயத்தில் தன்னைப் பறிகொடுத்த வையாபுரிப் பிள்ளை, "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி மற்றும், வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகிய இருவரிடமும் வையாபுரிப் பிள்ளைக்கு நெருங்கிய அறிமுகம் இருந்தது. தனது சிறைவாசத்துக்குப் பிறகு, அரசியல் வாழ்வில் வெறுப்புற்றிருந்த வ. உ. சி., ஏட்டிலிருந்த இளம்பூரணரின் தொல்காப்பிய உரையைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு படியெடுத்தார். அதனை எஸ்.வையாபுரிப் பிள்ளையிடம் காட்டி செப்பம் செய்தார். வையாபுரிப் பிள்ளையையும் அதன் பதிப்பாசிரியராகத் தன்னுடன் இருக்குமாறு கேட்டதையும், ஆனால் இவரோ நீங்களே பதிப்பாசிரியராக இருந்தால் போதும் என்று மறுத்து விட்டதாகவும் அந்த உரைப் பதிப்பின் முன்னுரையில் வ.உ.சி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
வீடு நூலகம்: வையாபுரிப் பிள்ளை தனது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்கள் இருந்தன. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளும், ஓலைச்சுவடிகளும் நூற்றுக்கணக்கில். அவை அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்துவிட்டார் வையாபுரிப் பிள்ளை.
நாற்பதுக்கும் அதிகமான நூல்களையும் நூற்றுக்கணக்கான ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955 இல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார். கம்பராமாயணத்துக்கு உரை எழுதிப் பதிப்பிக்க வேண்டும் என்கிற அவரது அவா மட்டும் நிறைவேறாமலே போய்விட்டது.
மறைவு: வையாபுரிப் பிள்ளை 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி தனது 65-வது வயதில் இயற்கை எய்தினார்.
இயற்றிய நூற்கள்:
    1930 - ஆராய்ச்சி உரை தொகுப்பு, ஆசிரியர் வெளியீடு
    1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு
    1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras
    1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம்
    1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம்
    1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி
    1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு
    1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம்
    1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம்
    1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம்
    1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம்
    1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம்
    1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு
    1956 - History of Tamil Language & Literature, NCBH
    1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம்
    1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம்
    1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம்
    1958 - ராஜி
    1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், மூன்றாம் பதிப்பு
    1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம்
    1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம், நான்காம் பதிப்பு

பதிப்பித்த நூல்கள்:
01. மனோன்மணியம், 1922
02. துகில்விடு தூது, 1929
03. நாமதீப நிகண்டு, 1930
04. அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931
05. களவியற்காரிகை, 1931
06. கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932
07. குருகூர் பள்ளு, 1932
08. திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932
09. தினகர வெண்பா, 1932
10. நெல்விடு தூது, 1933
11. தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்பூரணம்), 1933
12. திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933
13. திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933
14. கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933
15. பூகோள விலாசம், 1933
16. திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933
17. மூப்பொந்தொட்டி உலா, 1934
18. பொதிகை நிகண்டு, 1934
19. இராஜராஜதேவர் உலா, 1934
20. தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934
21. இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934
22. மதுரைக் கோவை, 1934
23. தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936
24. புறத்திரட்டு, 1938
25. கயாதாரம், 1939
26. சங்க இலக்கிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்), 1940
27. சீவக சிந்தாமணி, 1941
28. சாத்தூர் நொண்டி நாடகம், 1941
29. நவநீதப் பாட்டியல் - உரையுடன், 1943
30. திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943
31. நான்மணிக்கடிகை, 1944
32. இன்னா நாற்பது, 1944
33. திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944
34. இனியவை நாற்பது, 1949
35. இராமப்பய்யன் அம்மானை, 1950
36. முதலாயிரம், 1955
37. திருவாய்மொழி
38. கொண்டல் விடு தூது

டிஎன்பிஎஸ்சி குரூப்-II 2009 தேர்வில்
கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர்?
வையாபுரிப்பிள்ளை

தூத்துக்குடி துறைமுகத்தில் டெக்னிகல் பணிவாய்ப்பு

தூத்துக்குடி துறைமுகத்தில் டெக்னிகல் பணிவாய்ப்பு

தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்ளது நாம் அறிந்ததே. முத்துக் குளிப்பதில் இந்த நகரம் பெயர் பெற்றது. ஸ்பிக் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களும் இங்கு அமைந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த துறைமுகத்தில் டெக்னிகல் பிரிவிலுள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள் : மெக்கானிக் டீசல் பிரிவில் 9, எலக்ட்ரீசியன் பிரிவில் 12, பிட்டர் மற்றும் வெல்டர் பிரிவுகளில் தலா 2, போர்ஜர் மற்றும் ஷீட் மெட்டல் ஒர்க்கர் பிரிவுகளில் தலா 1, மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள் பிரிவில் 10, டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கில் 2, பாஸா பிரிவில் 5, டெக்னீசியன் அப்ரெண்டிஸ் பிரிவு மெக்கானிக்கலில் 5, எலக்ட்ரிகலில் 3, கிராஜூவேட் அப்ரெண்டிஸ் - மெக்கானிகலில் 4 மற்றும் எலக்ட்ரிகலில் 1 காலியிடமும் நிரப்பப்பட உள்ளது.
தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து ஐ.டி.ஐ., இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங்கில் பட்டப்படிப்பு தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களையும் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
V.O.Chidambaranar Port Trust, Tuticorin-628 004. (0461- 2352423,
Fax:2352385
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.02.2014
இணையதள முகவரி: www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx
Click Here

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான தடை நீக்கம் : சர்வதேச ஒலிம்பிக் பட்டியலில் மீண்டும் இணைந்தது

இந்திய ஒலிம்பிக் கழகத்துக்கான தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், சர்வதேச ஒலிம்பிக் சங்கம், இந்திய ஒலிம்பிக் கழகத்துக்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான (ஐ.ஓ.ஏ.)  நிர்வாகிகள் தேர்தலில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தகுதி நீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கழகம்.
இதனால், தற்போது ரஷ்யாவில் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியினை ஏந்தி செல்ல முடியாமல், சர்வதேச ஒலிம்பிக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதித்த தடை இன்று நீக்கப்பட்டுள்ளதால், சர்வதேச ஒலிம்பிக் கழக உறுப்பினர் பட்டியலில் இந்தியா மீண்டும் இணைந்துள்ளது.

இந்திய வனப்பணி தேர்வு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு- தமிழக அரசு சார்பில் 15-ம் தேதி இலவச முகாம்

ஐ.எப்.எஸ். (இந்திய வனப்பணி) தேர்வு பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் குறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் சென்னையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இலவச முகாம் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய வனப்பணி தேர்வு
தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட மத்திய அரசின் உயர் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிக எண்ணிக் கையில் வெற்றிபெறும் நோக்கில் தமிழக அரசு சென்னையில் அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி வருகி றது. இங்கு பயிற்சி பெறும் மாணவர் கள் அகில இந்திய பணிகளுக்கு அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்படு கிறார்கள்.
ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி தேர்வு பாடத்திட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம் (யு.பி.எஸ்.சி.) சில மாறுதல்களைச் செய்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த புதிய பாடத்திட்டத்தின்படிதான் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
சென்னையில் இலவச முகாம்
அகில இந்திய பணியான ஐ.எப்.எஸ். தேர்வுக்கு, ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வோடு ஒருங்கிணைந்த தேர் வாக முதல்நிலைத் தேர்வு நடத்தப் படுகிறது. அதற்குப் பின்னர் பிரத்யேகமாக மெயின் தேர்வு நடத்துகிறார்கள். இந்த புதிய முறை குறித்து தமிழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஐ.எப்.எஸ். தேர்வு எழுத வசதியாக இருக்கும் என்று அரசு கருதுகிறது.
இதற்கான ஒருநாள் விழிப் புணர்வு முகாம் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பி.எஸ்.குமார சாமி சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் (அண்ணா மேலாண்மை நிலைய வளாகம்) வருகிற சனிக்கிழமை (பிப்ரவரி 15) நடத்தப்பட உள்ளது.
மின்னஞ்சல் மூலம் முன்பதிவு
ஐ.எப்.எஸ். தேர்வைப் பொருத்த வரையில், அறிவியல் பட்டதாரி களே இந்த தேர்வை எழுத முடியும். அண்ணா மேலாண்மை நிலையம் 250 மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் ஐ.எப்.எஸ். அதிகாரிகளும், அண்மையில் ஐ.எப்.எஸ். தேர்வில் வெற்றிபெற்றவர்களும் பயிற்சி அளிப்பார்கள்.
இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் aimchn@dataone.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தங்கள் பெயர், வயது, கல்வித் தகுதி, செல்போன் எண், முகவரி ஆகிய விவரங்களை செவ்வாய்க் கிழமைக்குள் (இன்று) பதிவுசெய்து கொள்ள வேண்டும்.
வாய்ப்பை நழுவ விடாதீர்கள்
முதலில் பதிவுசெய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 250 பேர் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கான அனுமதிச்சீட்டு மின்னஞ்சல் மூலமாக வழங்கப் படும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 10 February 2014

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: வீரமாமுனிவர்

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே.
தோற்றம்: 08.11.1680
மறைவு: 04.02.1747
பிறப்பு: இத்தாலி நாட்டில் வெனிஸ் மாநிலத்தில் மாந்துவா என்னும் மாவட்டத்திலுள்ள காஸ்திகிளியோனே என்ற சிற்றூரில் பிறந்தார்.
இயற்பெயர்: கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி.
1709 - கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் இயேசுசபை குருவானார்.
1710 - தமிழகம் வந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக் கொண்ட இவர். தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதன் என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.
இவர் தமிழகம் வந்தபின், சுப்ரதீக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று இலக்கிய பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.
இலக்கியச் சுவடிகைளைப் பல இடங்களுக்குச் சென்று தேடி எடுத்ததால், சுவடி தேடும் சாமியார் எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்.
தமிழ் கற்க எதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
திருக்காவலூர்த் திருத்தலத்தையும், ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதாவையும் போற்றும் வண்ணம் "திருக்காவலூர் கலம்பகம்" பாடியுள்ளார்.
பல பெயர்களைக் கண்ட பொருட்களின் பெயர்ச் சொற்களைத் தொகுத்துப் 'பெயரகராதி' எனவும், பொருள்களின் பெயர்களைத் தொகுத்து 'பொருளகராதி' எனவும் சொற்கள் பலவாகக் கூடிநின்று ஒரு சொல்லாக வழங்குவதைத் தொகுத்துத் 'தொகையராதி' எனவும், எதுகை மற்றும் ஓசை ஒன்றாக வரும் சொற்களை வரிசைப்படுத்தித் 'தொடையகராதி' எனவும் அமைத்துத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர்! 'சதுரகராதி' கண்ட பெருமையும் வீரமாமுனிவரையே சாரும். தமிழ் மொழியில் தோன்றிய நிகண்டுகளில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது இந்தச் 'சதுரகராதி'.
ஒரு மொழி அகராதி சதுரகராதி, இரு மொழி அகராதி-தமிழ்-இலத்தீன்-அகராதி. மூன்று மொழி அகராதி போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ்-அகராதி உருவாக்கியதால், "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்பட்டார்.
சதுரகாதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
அக்காலத்தில் சுவடிகளில் தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்  குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி “ஆ, ஏ” எனவும், நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.
தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.
திருக்காவலூரில் ஒரு கல்லூரியை ஆரம்பித்து அதில் தாமே தமிழாசிரியராக இருந்து இலக்கணம் கற்பித்தார்.
தமிழ் படைப்புகள்:
* தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார் .
* கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல் முதலாகப் பேச்சுத் தமிழை விவரிக்க முனைந்தார்.
* திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தவர் வீரமாமுனிவர்.
உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்ந்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
* திருக்காவலூர்க் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
* 1728 - புதுவையில் இவரின் பரமார்த்த குருவின் கதை என்ற நூல் முதல் முறையாக இவரால் அச்சியிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
* காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது.
* தேம்பாவணி மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது.
* முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822 இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840 இல் வெளியிட்டார்.
* தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
* 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக் கேற்ப தேம்பாவணி என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
* 'தேம்பாவணி' காப்பியத்தை இயற்றியதற்காக வீரமாமுனிவருக்கு, `செந்தமிழ்த் தேசிகர்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் வாழ்ந்த புலவர்களுள் பல்துறை வித்தகராகத் திகழ்ந்தவர் வீரமாமுனிவரே! இலக்கண அறிவு, இலக்கியப் புலமை, மொழியியல் உணர்வு, பக்தி இலக்கிய ஆற்றல், ஆய்வியற் சிந்தனை, பண்பாட்டில் தோய்வு எனப் பல்வகையிலும் சிறந்தவர்! அவர்தம் திறமையைப் பயன்படுத்தித் தமிழுக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணிகள் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். தமிழுக்காகவே வாழ்ந்து தொண்டு செய்து புகழ் எய்திய வீரமாமுனிவர் 04.02.1747ஆம் நாள் அம்பலக்காட்டு குருமடத்தில் இயற்கை எய்தினார்.
                                                      ***
வீரமாமுனிவர் எழுதிய கதைகளுள் மிகவும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த பரமார்த்த குரு கதை இதோ உங்களின் பார்வைக்கு...
"குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?"
எனக் கேட்டான், முட்டாள்.
"அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார்.
"பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன்.
"அப்படியே செய்வோம்" என்றார் குரு.
"மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு.
"மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி.
பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.
காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான்.
"அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!"
என்றார் பரமார்த்தர்.
"அதற்கு என்ன செய்வது?" எனக் கேட்டான் முட்டாள்.
"இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ணீரில் அழுத்தி வையுங்கள்.
ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்" என்றார் குரு.
உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.
நோயாளியோ "ஐயோ, அம்மா!" என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். "கண் வலிக்கிறது" என்றாள்.
"இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!" என்றான் முட்டாள்.
கிழவியோ, "ஐயையோ" என்று கத்திக் கொண்டு ஓடினாள்.
சிறிது நேரம் சென்றது. "உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது
என்றபடி ஒருவன் வந்தான்.
"சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்றார் பரமார்த்தர்.
முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.
கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, "குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!" என்றான்.
அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.
வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.
"பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?" என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்
"வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்" என்றார் பரமார்த்தர்.
சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!
"இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!" என்றார் பரமார்த்தர்
சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.
"உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!" என்றார் பரமார்த்தர்
யானைக்கால் வியாதிக்காரனோ, "காலை விட்டால் போதும்" என்று தப்பினான்.
"ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறேன்" என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். "இவர் வாயை அடைத்து விடுங்கள்!"
என்று கட்டளை இட்டார்.
குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.
"என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது" என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, "தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்" என்றார்.
"வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்" என்றான் மடையன்.
கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.
அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.
பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப்
பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர்.
பஞ்சாயத்தார் ஒன்று கூடி, குருவும் சீடர்களும் "இனிமேல் இந்த ஊருக்குள்ளேயே நுழையக் கூடாது" என்ற தண்டனையை வழங்கினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு: திருத்தங்களுடன் புதிய மசோதா

மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது திருத்தப் பிரதிகள் இணைக்கப் படவில்லை.
இந்நிலையில் 16 திருத்தங் களுடன் மாற்றுத் திறனாளிகள் மசோதா திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பழைய சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக அந்த அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் முறையிடப்பட்டது.
இதுதொடர்பாக 2011 முதல் மாற்றுத் திறனாளிகள் மசோதா வில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் திருத்த மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் தங்களது முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை என்று கோரி ஜாவித் அபிதி தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய மசோதாவில் 19 விதமான உடல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 3 சதவீத இடஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயில்வே வேலை


ரயில்வே வேலை
இந்திய ரயில்வேயில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீஷியன் பணிகளில் காலியிடங்கள் உள்ளன. இதில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு 1,666 காலியிடங்கள். இதில் உரிய பிரிவினருக்கு ஏற்ப இட ஒதுக்கீடு உண்டு. பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் ஃபிட்டர், எலெக்ட்ரீஷியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட், ரேடியோ அண்டு டிவி. மெக்கானிக், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டர்னர் உள்ளிட்ட ஐ.டி.ஐ. படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 30 வரை. தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகளும் பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்ச்சி உண்டு. எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு உண்டு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 17.2.14. கூடுதல் தகவல்களுக்கு:
www.rrbchennai.gov.in

பவர் கிரிட் வேலை

பவர் கிரிட் வேலை
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனம். இந்நிறுவனத்தில் 15 டெபுடி மேனேஜர், 16 அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பி.காம். ஃபர்ஸ்ட் கிளாஸ் தேர்ச்சியுடன் சி.ஏ. அல்லது ஐ.சி.டபிள்யு.ஏ. படிப்பில் தேறியிருக்க வேண்டும். டெபுடி மேனேஜருக்கு 39 வயது, அக்கவுண்ட்ஸ் ஆபிசருக்கு 33 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.2.14. கூடுதல் தகவல்களுக்கு:
www.powergridindia.com

ராணுவ வேலை

ராணுவ வேலை
இந்திய ராணுவத்தில் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் பணியில் 10 காலியிடங்கள் உள்ளன. எண்ட்ரி ஸ்கீம் அடிப்படை யில் இந்த வேலைக்குத் தேர்வு நடை பெறும். எல்.எல்.பி. பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ராணுவ வேலை என்பதால் திருமணம் ஆகாதவர்களே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 14.2.14. கூடுதல் தகவல்களுக்கு:
www.joinindianarmy.nic.in

நீங்கள் டீம் ஒர்க்கரா?

‘‘என் பணியைச் செய்ய என் குழுவிலுள்ள பிறரது உதவியும் தேவைப்படுகிறது என்றால், நான் அந்தச் சூழலை விரும்பவே மாட்டேன்’’. இந்த வாக்கியம் உங்களுக்குப் பொருந்துகிறதா?
சைக்கோமெட்ரிக் தேர்வில் இப்படிப்பட்ட கேள்விகளும் கேட்கப்படலாம்.
மேற்படி கேள்விக்கு ‘‘ஆமாம்’’ என்று விடையளித்துவிட்டு, அப்படி ஒரு விடையை அளித்ததற்காகச் சிலர் மிகவும் ஆனந்தப்பட்டுக்கொண்டும் இருப்பார்கள்.
ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பணியைச் செய்ய உங்கள் குழுவில் உள்ள பிறரது உதவி தேவைப்படுகிறது எனும் நிலை மிகவும் இயல்பானதுதான். குழு என்பது பலர் இணைந்தது. தனித்துவம் கொண்டது. இணைந்து பணிபுரிய வேண்டும் என்பதற்காகத்தான் குழுக்கள் அமைக்கப் படுகின்றன. எனவே, ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பது குழுவாகப் பணி செய்வதில் இன்றியமையாத ஒன்று.
நீங்கள் ``ஆமாம்’’ என்று பதில் அளித்திருந்தால், அதில் உங்களையும் அறியாமல் உங்களைப் பற்றிய பல தன்மைகளை வெளிப்படுத்திவிடுகிறீர்கள். (இப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதுதானே சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் நோக்கம்?)
ஒருவருக்கொருவர் இருக்க வேண்டிய நல்லுறவை நிர்வாகத் துறையில் ‘இன்டர் பர்சனல் ரிலேஷன்ஸ்’ என்பார்கள். அந்த நல்லுறவு உங்களிடம் கொஞ்சம் மிஸ்ஸாகிறது. அதனால்தான் ஒருவரிடம் உதவி கேட்பது என்றாலே, உங்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை.
மாறாகப் பிறரிடம் உதவி கேட்பதில் உங்களுக்குத் தாங்க முடியாத தயக்கம் அல்லது பயம் இருக்கிறது என்றால், அது உங்கள் தாழ்வு மனப்பான்மையைக் காட்டுகிறது.
உங்களைப் பற்றியே நீங்கள் அதிகமாக நினைத்துக்கொண்டிருந்தாலும், பிறரிடம் உதவி கேட்க மாட்டீர்கள். உங்கள் ஈகோ அதை ஏற்றுக்​கொள்ளாது. இத்தகைய மனநிலை வரவேற்கத்தக்கது அல்ல.
ஆக ‘ஆமாம். நான் அப்படிப்பட்டவன் தான்’ என்று விடை அளிப்பதன் ​மூலம் உங்களுக்கு உயர்வு அல்லது தாழ்வு மனப்பான்மை உண்டு என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறீர்கள்.
கேள்விக்கான காரணம் என்ன?
சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதற்கு முன்னால், அதை எதற்காகக் கேட்கிறார்கள் என்பதில் தெளிவு வேண்டும்.
அந்தத் தெளிவைப் பெறுவதற்கு இதோ இன்னொரு கேள்வி.
‘இந்த மூன்றில் குழு மனப்பான்மைக்கு உதாரணமாக எதைக் குறிப்பிடலாம்?’ என்று ஒரு கேள்வி சைக்கோமெட்ரிக் தேர்வுகளில் கேட்கப்படலாம். இந்தக் கேள்விக்கு ​மூன்று ப​தில்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்.
(அ). காக்கை (ஆ). ராஜநாகம் (இ). எறும்பு
இவற்றில் ராஜநாகத்தை நாம் விட்டு விடலாம். ராஜநாகம் என்பது மிகவும் அரிதானது. அது குழுவாகச் செயல்படுவது கிடையாது என்பதால் அதைக் குழு மனப்பான்மைக்கு ஓர் உதாரணமாகக் கருத முடியாது. போதாக்குறைக்கு ராஜநாகத்தின் முக்கிய உணவு சிறு பாம்புகள்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மீதமுள்ள இரண்டு விடைகள் காக்கை மற்றும் எறும்பு. காக்கையை நினைக்கிறீர்கள். இரண்டு காட்சிகள் உங்கள் நினைவுக்கு வருகின்றன. உணவுப் பொருளை அளித்தால், அதைக் சத்தமின்றித் தின்றுவிடாமல், காக்கை சக காக்கைகளைக் கூவி அழைக்கும். பிறகு எல்லாக் காக்கைகளுமாக அந்த உணவைச் சாப்பிடும்.
திடீரென்று பல காக்கைகள் உரத்துக் குரல் கொடுப்பதை, நீங்கள் கவனித்திருந்தால் அங்கு ஏதாவது ஒரு காக்கை இறந்திருப்பதைக் காணலாம். அதற்குத் தங்கள் வருத்தத்தை (அஞ்சலியை?) வெளிப்படுத்தும் வகையில்தான் காக்கைகள் தங்கள் உறவினர்களோடு கூடி அழுகின்றன.
ஆஹா, காக்கையைவிடக் குழு மனப்பான்மைக்குச் சிறந்த உயிரினம் இந்த உலகில் இருக்க முடியுமா என்று நெக்குருகிப் போய்க் காக்கை என்ற விடையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கேள்வியை இப்படி யோசித்துப் பாருங்கள்.
‘காக்கைகளி​டம் உள்ள எந்தச் சிறப்பு எறும்புகளிடம் இல்லை? எறும்புகளிடம் உள்ள எந்தச் சிறப்பு காக்கைகளிடம் இல்லை?’.
எறும்புகளின் வரிசை நினைவுக்கு வருகிறதா? ஏதோ ஸ்கேலில் வரைந்தது போல நேர்கோட்டில் அவை வரிசையாகச் செல்லும். ஆக, டிசிப்ளின் எனப்படும் கட்டுப்பாடு அவற்றிடையே சிறப்பாக உள்ளது. ஒரு குழுவில் இருப்பவர்கள் ஒட்டுதலோடு இருந்தால் போதாது. பணியைச் செய்து முடிக்கையில் ஒருவித சுயக் கட்டுப்பாடும் அவசியம். எனவே, எறும்பு என்பதுதான் மேலும் துல்லியமான விடையாக இருக்கும்.
இது போன்ற சில கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கொஞ்சம் பொது அறிவு தேவை. அதை நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்குச் சில கதைகளை அறிந்து கொண்டால்தான் சைக்கோமெட்ரிக் கேள்விகளுக்கான சரியான விடையை அளிக்க முடியும்.
கதைகள் தெரியுமா உங்களுக்கு?
கீழே உள்ள குழுக்களில் மிகவும் மோசமான குழு என்று எதைக் கூறலாம்?
அ) பார்வை இழந்தவர்கள் யானையைப் பார்த்த கதை
ஆ) ஆற்றைக் கடந்ததும் அழுத பரமார்த்த குருவும் அவரது சிஷ்யர்களும்
இ) வேடன் நெருங்கியதும் வலையோடு பறந்த புறாக்கள்
மேற்படி கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமென்றால் அதற்கான முதல் தகுதி மூன்று கதைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான். தெரியாதவர்களுக்காக இதோ ரத்தினச் சுருக்கமாக அந்தக் கதைகள்.
யானையின் அருகே பார்வை இழந்தவர்கள் சிலர் சென்றனர். யானையின் காதை தொட்டுப் பார்த்தவர் யானை முறத்தைப் போல உள்ளது என்றார். காலைத் தொட்டுப் பார்த்தவர் யானை ​தூணைப் போல உள்ளது என்றார். யானையின் உடலைத் தொட்டுப் பார்த்தவர் யானை சுவர் போல இருக்கிறது என்றார். தான் சொன்னதே சரி என்று அவர்கள் கடுமையாகச் சண்டை போட்டுக் கொண்டனர்.
நதியைக் கடந்த பரமார்த்த குருவுக்கும் அவரது முட்டாள் சிஷ்யர்களுக்கும் ஒரு சந்தேகம். ‘தங்களில் யாரும் நதியில் ​மூழ்கிவிட வில்லையே?’. ஒவ்வொருவரும் அனைவரையும் எண்ணிப் பார்த்துவிட்டு ‘`ஐயோ எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது. நதியில் நம்மில் யாரோ ஒருவர் மூழ்கி இறந்துவிட்டார்’’ என்று கதறினர். உண்மை என்னவென்றால் ஒவ்வொருவரும் எண்ணும்போது, தங்களை அந்த எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளவில்லை.
வேடன் ஒருவன் புறாக்களைப் பிடிப்பதற்காகத் தானியங்களைப் போட்டிருந்தான். அவன் திட்டப்படி தானியங்களைத் தின்ன வந்த புறாக்கள் வலையில் சிக்கிக்கொண்டன. அவற்றை வேடன் நெருங்கிய கடைசி நிமிடத்தில் அத்தனை புறாக்களும் ஒற்றுமையாக, முழு சக்தியைப் பயன்படுத்தி, ஒரே சமயத்தில் வலையோடு சேர்ந்து மேலே பறந்து தப்பித்தன.
மூன்றாவது கதை மோசமான குழுவுக்கு உதாரணம் அல்ல. தொடக்கத்தில் வேடன் விரித்த வலையில் புறாக்கள் மாட்டிக் கொண்டாலும், பின்னர் ஒற்றுமையான நடவடிக்கையின் காரணமாக, அவை தப்பித்து விட்டன.
அப்படியானால் எது மிக மோசமான குழு? பரமார்த்தக் குரு மற்றும் சீடர்களா?, யானையைப் பரிசோதித்த பார்வை இழந்தவர்களா? என்றால் பரமார்த்தக் குரு ​மற்றும் சீடர்கள்தான். உடல் குறைபாடு இல்லையென்றாலும் மனக் குறைபாடு கொண்டவர்கள். அவர்களில் ஒருவருக்குக்கூடப் புத்திசாலித்தனம் இல்லை. மாறாகப் பார்வை இழந்தவர்கள் கூறியது முழுத் தவறு அல்ல. ஒவ்வொரு வரும் கூறியது ஓரளவு உண்மை.
இப்படிப் பல விதங்களிலும் யோசித்துப் பார்க்க வேண்டும். இந்தத் தர்க்க ரீதியான சிந்தனைகள் மின்னல் வேகத்திலும் நடைபெற வேண்டும். அதுதான் சைக்கோமெட்ரிக் தேர்வுகளின் தனித்தன்மை.

திருச்செந்தூர் கோயில்:
ஒரு வரலாற்று உண்மை

திருச்செந்தூர் கோயிலைக் கைப்பற்றி, அங்குள்ள சிலைகளை டச்சுக்காரர்கள் எடுத்துச் சென்றனர். அதைக் கொடுத்துவிடுமாறு அப்போது தென் தமிழகத்தை ஆண்ட திருமலை நாயக்கர் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு டச்சுப் படைகள் ஒரு லட்சம் ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர்.

இது நடந்தது, 1648ஆம் ஆண்டு வாக்கில். 
ஆனால் இதற்கு மாறான கட்டுக் கதை ஒன்றுதான் இன்று வரலாறாக பேச்சுவழக்கில் உள்ளது.
 திருமலை நாயக்கர் (1623-1659), 1646ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் தனது ஆட்சிக்கு உட்பட்ட காயல்பட்டணம் நகரில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார். அந்தக் காலகட்டத்தில் திருமலை நாயக்கர் போர்த்துகீசியருடனும் வணிகத் தொடர்பு வைத்திருந்தார். அதனால் டச்சுக்காரர்கள் கோட்டை கட்டுவதை போர்த்துகீசியர்கள் விரும்பவில்லை.
அதனால் டச்சுப் படையின் படகைப் பொருட்களுடன் கைப்பற்றி, அதைப் போர்த்துகீசியர் அழித்தனர். டச்சுப் படை அப்போது மலபார், கொழும்பு போன்ற இடங்களில் கோட்டைகள் கட்டி, வலுவான படைகளுடன் இருந்தது. அவர்கள் கொழும்பில் உள்ள தங்கள் தலைமையகத்திற்கு உதவி கேட்டனர்.
தலைமையகம் காயல்பட்டணத்தில் இருந்த டச்சுப் படைகளுக்காக 10 படகுகளில் படைகளை அனுப்பிவைத்தது. அந்தப் படகுகள் மணப்பாடு அருகே தரையிறங்கியது. அவர்கள் வீரராமபட்டணத்தில் இருந்த போர்த்துகீசியர்களின் தேவாலயத்தைக் கைப்பற்றினர். மேலும் அந்தப் படைகள் முன்னேறி திருச்செந்தூர் முருகன் கோயிலையும் துப்பாக்கி முனையில் கைப்பற்றியது.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். கோயில் கைப்பற்றப்பட்டதால் தெய்வ பயமும் அவர்களிடம் சேர்ந்துகொண்டது. இது குறித்து, மன்னர் திருமலை நாயக்கரிடம் முறையிட்டனர். திருமலை நாயக்கர், டச்சுப் படைகளுக்குக் கடிதம் அனுப்பினார். கோயிலை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் காயல்பட்டணத்தில் அவர்கள் கோட்டை தாக்கப்பட்டதற்கு ஈட்டுப் பணம் தருவதாகவும் அவர் உறுதி தந்தார்.
மன்னரின் கோரிக்கையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தூத்துக்குடியை நோக்கி முன்னேறி அதைக் கைப்பற்றினர் (தென்னிந்திய அரசிதழில், 1658இல் டச்சுப் படைகள் தூத்துக்குடியைக் கைப்பற்றியதாகக் குறிப்பு உள்ளது). 40, 000 ரியால்கள் பிணயத் தொகை கேட்டுள்ளனர். அது மிகப் பெரிய தொகை.
இந்த இழுபறிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இதற்கிடையில் திருச்செந்தூர் மக்கள் தங்களாகவே ஒன்றிணைந்து ஒரு படையைத் திரட்டுகின்றனர்.
600 பேர்கள், 60 குதிரைகள், 4 யானைகள் கொண்ட ஒரு படையை உருவாக்குகிறார்கள். டச்சுப் படைகளை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஆனால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 50 வீரர்கள் இறந்து விடுகிறார்கள்.
1648இல் டச்சுப் படையினர் திருச்செந்தூர் கோயிலில் உள்ள சிலைகளுடன் திருச்செந்தூரை விட்டுக் கிளம்பிச் செல்கிறார்கள். சிலைகளுக்குப் பிணயமாக அவர்கள் ஒரு லட்சம் ரியால்கள் கேட்டனர்.
திருமலை நாயக்கரும் அவரது முகவரான வடமலைப் பிள்ளையனும் டச்சுப் படைகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒரு நால்வர் குழுவை அனுப்பினர். பாட்டவியாவில் உள்ள டச்சு கவர்னருக்கு இவர்களின் கோரிக்கை தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் திருமலை நாயக்கர் கொடுக்கும் தொகையை ஏற்றுக்கொண்டு சிலைகளைத் திருப்பிக்கொடுக்க ஆணையிடுகிறார்.
1651ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீட்கப்பட்ட சிலைகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. ஆனால் இந்தச் சம்பவம் குறித்துப் பல்வேறு விதமான கதைகளும் புழக்கத்தில் உள்ளன.

சான்றுகள்கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி
(கலைமகள் 1939), A history of tinnevelly by robert caldwell, caldwell r.bishop, Gazetteer of South India Volume 1, By W. Francis
Prof. K. A. Nilakanta Sastri published in Kalaimagal 1939 xvi p. 412
reproduced in Somasundaram Pillai, pp. 46-7

Crafting your CV

How many of us know that bio-data, curriculum vitae and resume are different ways of presenting your case? Each of these documents is different in format and the purpose it serves. We tend to use the terms interchangeably often.
A bio-data consists of the biographical data of a person such as the date and place of birth, sex, height and so on. This is suitable for applying for a government job. The resume on the other hand, is a summary document of one’s skill set, professional/educational qualifications, work experience and achievements /accomplishments.
Ideally, it is meant for the middle/senior-level executives and the contents here are limited to one or two pages only.
The curriculum vitae (CV) is an appropriate document for freshers which basically reveals one’s academic achievements, personal information, technical skills, volunteer or part time work experience, memberships and can be two to three pages long. Preparing a CV is an art.
It is a frustrating experience for HR managers to go through CVs that are all same, the only difference being the names and addresses! It is a sad fact that many of the students who apply for jobs either send a replica of others' CVs or get it prepared by some agency.
What can go wrong?
We interviewed an MBA graduate whose academic grades were impressive, for a finance company. His CV appeared to go hand-in-hand with his grades. But our initial impression started fading out immediately after we started our discussion.
It was as though he was bowled out at the first ball. In the ‘objectives’ column, he had mentioned: “I would like to be a strategic team player by using my cutting edge skill”. Unfortunately, he could not substantiate the statements. On interacting with him, we gathered that he had purchased his CV from a photocopying shop. A CV is a personal document and it has to be original. It speaks about you and your academic experiences. An air of uniqueness is much appreciated and it is necessary too. Interviewers use CV mainly for two reasons — To select or eliminate from the interviewing process.
Unlike in lateral entries, freshers do not have the comfort of being ‘head hunted’. Your application will be seen along with hundreds and thousands of others. Only an original and genuine CV stands out. Often I hear students lament “We are freshers and therefore we do not have much to write about experience”. Yes, true. A fresher has no work experience and it is well-known to the recruiters as well. Then, how to ensure one’s CV is rich and unique?
It is an art — and you need to plan the sketch from the first year onwards. Draw experience by participating in clubs, debates, symposia, cultural events, and so on, apart from your projects. These experiences can be converted in to your ‘learning’ and can be projected appropriately in your CV.
Substantiate
You can enrich a CV only by including your personal experience and not any borrowed experience. Every word you mention in the CV will have to be substantiated, lest the other side calls your bluff. Look at a common phrase we come across in a CV, “I seek a job that will draw upon my strong communication and organisational skills.” As a statement it qualifies, but will it help in getting what one aspires to? Let us reflect on this:
Does the job one seeks need the above skills?
If the organisation does not require the above skills will he/she refuse the job?
Does the candidate really possess strong, repeat, strong, communication and organisation skills which can be used?
If the answers are negative, these statements should be avoided. Companies looking for freshers do not expect experienced people but certainly they look for ‘attitude’ which a CV can establish. Let the CV speak for your willingness to ‘adapt and learn’.
Therefore, you need to craft a CV like sharpening a pencil deftly. You can always copy the format of the CV from elsewhere but not the contents.
Ensure that your CVs are made in A4 bond sheets with pleasing fonts/size without seeming cramped or crowded. Finally, spell check and provide details correctly. I am sure you will not be the one who mentioned that ‘I studied BE from 1894 to 1998. Everyone knows it is a typing error but still it can put you on your back foot.
The writer is a behavioural scientist, BODHI.