மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் புதிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது திருத்தப் பிரதிகள் இணைக்கப் படவில்லை.
இந்நிலையில் 16 திருத்தங் களுடன் மாற்றுத் திறனாளிகள் மசோதா திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பழைய சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் குற்றம் சாட்டின. இதுதொடர்பாக அந்த அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் முறையிடப்பட்டது.
இதுதொடர்பாக 2011 முதல் மாற்றுத் திறனாளிகள் மசோதா வில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
அதன்படி மாற்றுத்திறனாளிகள் திருத்த மசோதாவுக்கு கடந்த டிசம்பர் 30-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மசோதாவில் தங்களது முக்கிய கோரிக்கைகள் இடம்பெறவில்லை என்று கோரி ஜாவித் அபிதி தலைமையில் மாற்றுத் திறனாளிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில் தற்போது நடைபெறும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. புதிய மசோதாவில் 19 விதமான உடல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு, உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 3 சதவீத இடஒதுக்கீடு 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment