Monday, 10 March 2014

டில்லி ஐகோர்ட்டில் நீதித்துறை சேவைத் தேர்வு

பிரசித்தி பெற்ற டில்லி உயர் நீதிமன்றம் 1966ல் நிறுவப்பட்டது. 1970ல் இமாச்சலப் பிரதேச மாநிலம் உருவாகும் வரையில் அந்த மா நிலத்திற்கும் சேர்த்து இந்த உயர் நீதிமன்றமே இணைந்து செயல்பட்டு வந்தது. இந்த உயர் நீதிமன்றத்தின் சார்பாக ௨ கட்ட நிலையிலான ஜூடிசியல் சர்வீஸஸ் தேர்வை நடத்தி 80 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: 01.01.2015 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி: எல்.எல்.பி., அல்லது இதற்கு நிகரான சட்டப் பிரிவு பட்டம் பெற்றிருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான 'டி.ஜே.எஸ்.இ.,' படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் பொருத்தமான விண்ணப்பக் கட்டணத்தையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு ஸ்பீட் போஸ்ட் அல்லது பதிவுத் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
The Joint Registrar (Vig.), Delhi High Court, Sher Shah Road, New Delhi - 110 503.
முழுமையான தகவல்களுக்கு கட்டாயம் இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.03.2014
இணையதள முகவரி: www.delhihighcourt.nic.in/announcement.asp
Click Here

No comments:

Post a Comment