இந்தியா முழுவதும் கிளைகள் பரப்பி செயல்பட்டு வரும் அரச நிலக்கரி நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வடக்கு மற்றும் தென் கிழக்கு மண்டல கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பாதுகாவலர், மைனிங் சர்தார், ஃபார்மசிஸ்ட், கணக்காளர் ஸ்டாஃப் நர்ஸ் போன்ற பல்வேறு பணிகள்
காலியிடங்கள்: 3302 இதில் வடக்கு மண்டல பிரிவில் 2602, தென்கிழக்கு மண்டலப் பிரிவில் 700 காலியிடங்கள்.
கல்வித்த தகுதி: வடக்கு மண்டலத்துக்கான பாதுகாவலர் பணி தவிர்த்த மற்ற பணிகளான ஸ்டாஃப் நர்ஸ், ஃபார்மசிஸ்ட், ஸ்டெனோகிராஃபர், எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், வெல்டர், ரேடியோகிராஃபர், மோட்டார் மெக்கானிக் பணிகளுக்கு இத்துறை தொடர்பான சான்றிதழ் படிப்பு போதுமானது. தென்கிழக்கு மண்டலத்துக்கான மைனிங் சர்தார் பணியில் அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறி www.secl.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.04.2014
No comments:
Post a Comment