வரும் மக்களவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இணையதளம் வழியாக பிரச்சாரம் மேற்கொள்வது அதிகரித்துள்ளதால் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட இணையதள நிறுவனங்களுக்கு சுமார் ரூ.500 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 81.4 கோடியாக அதிகரித் துள்ளது. இதில் 20 கோடிக்கும் அதிக மானவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்கள். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் இருப்பவர்கள் ஆவர்.
குறிப்பாக, இந்தத் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள 10 கோடி புதிய வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துவதாகவும் அவர்களைக் குறிவைத்து அரசியல் கட்சிகள் இணையதளம் வழியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக வும் டிஜிட்டல் ஊடக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள சுமார் 160 தொகுதிகளின் வெற்றிவாய்ப்பை டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் தீர்மானிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப் படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் வரும் மக்களவைத் தேர்தலுக் காக ரூ.5 ஆயிரம் கோடி வரை விளம்பரங்களுக்காக செலவிட திட்டமிட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள் ளது. இதில், ரூ.500 கோடி வரை டிஜிட்டல் ஊடகங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பேஸ்புக்கில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைப் பின்தொடர்பவர்கள் 1.1 கோடி. டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் 30 லட்சம். காங்கிரஸ் கட்சியின் சசி தரூரை 20 லட்சம் பேர் டுவிட்டரில் பின்தொடர்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் 16 லட்சம் பேர்.
No comments:
Post a Comment