கி.பி எட்டாம் நூற் றாண்டில் இடைக் காலச் சோழர்களின் தலை நகரமாக விளங்கியது தான் ‘பழையாறை’. இன்று இந்தத் தலை நகரம் சுற்றிலும் வரலாற்றை நிருபிக்கும் பெயர்கள் கொண்ட சிறு கிராமங்கள் சூழ்ந்து காட்சி அளிக்கிறது.
ஆதித்த சோழனின் திருப்புறம்பயம் போர் வெற்றியைக் குறிக்க கட்டியதே சோமநாதர் ஆலயம். இன்று சிதிலமடைந்த கோபுரத்துடன் உள்ளது. நான்கு தளிகள் என நாற்புறமும் இருந்த பெருங்கோவில்களில் இன்று எஞ்சியது வடதளியாகிய இந்த சோமநாதர் ஆலயம் மட்டுமே. திருப்பணி வேலைகள் நடக்கின்றன. (முப்பது வருடங்களுக்கு முன் இந்தோனேஷியத் தமிழர்,ஒருவர் தன் சொந்த செலவில் மேற்குப் புற் மதிலைக் கட்டிக் கொடுத்தார்)
பழையாறை அருகில் உள்ள சோழன் மாளிகை மன்னனின் அரண்மனை ஆகும். இன்று அவை யாவும் பூமிக்குள் புதையுண்டு போய்விட்டன.
சுற்றிலும் உள்ள கிராமங்கள் ‘புதுப்படையூர்’, ‘ஆரியப் படையூர்’, ‘மணப்படையூர்’, ‘பம்பப்படையூர்’. பெரும் படைகள் ஸ்தாபனம் ஆகி இருந்த ஊர்கள் அவை. பக்தி மணம் கமழும் பிரசித்தி பெற்ற கோயில்கள் ஒவ்வொரு இரண்டு கி.மீ. தூரத்திலும் உள்ளன.
பட்டீஸ்வரம், தாராசுரம், சத்தி முற்றம், முழையூர், திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்று) ஆகியவை அருகருகே உள்ளன. மூண்று காவிரியின் கிளை நதிகள் பாயும் அப்பகுதிகள் இன்று விவசாயக் கிராமங்களாக உள்ளன.
63 நாயன்மார்களில் ஒருவரான மாதரசி மங்கையர்க் கரசியார் பிறந்த ஊர் ஆகும். இது இவர் மணிமுடிச் சோழனின் மகள் ஆவார். பாண்டிய மன்னன் நின்ற சீர் நெடுமாறனை மணந்து அவரும் சமணத்தில் இருந்து மாறி சைவ சமய 63 நாயன்மார்களில் ஒருவரானார்.
புதையுண்ட இந்தத் தலை நகரத்தை வெளிக்கொணர பெரும் பொருட்ச் செலவாகும் என்பது உண்மை. ஆனால் அதைக் கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை.
- என்.எஸ்.வி.குருமூர்த்தி, கும்பகோணம்
No comments:
Post a Comment