நாட்டின் பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.68 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 9 மாதங்களில் பணவீக்கம் இந்த அளவுக்குக் குறைந்தது இதுவே முதல் முறையாகும்.
வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலை குறைந்ததும் பணவீக்கம் சரிந்ததற்கு முக்கியக் காரணமாகும். பணவீக்கம் குறைந்ததால், எதிர்வரும் காலாண்டு நிதிக் கொள்கையில் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1-ம் தேதி தனது நிதிக் கொள்கையை அறிவிக்க உள்ளது. உணவுப் பணவீக்கம், ஒட்டு மொத்த விலைக் குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அந்த வகை யில் பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 8.12 சதவீதமாக இருந்தது. கடந்த ஜனவரியில் இது 8.8 சதவீதமாக இருந்தது. அனைத்து பொருள்களின் விலையும் அதிக அளவு அதிகரிக்காததே இதற்குக் காரணமாகும். இருப்பினும் பழங்கள், பால் விலை அதிகரித் திருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தி லிருந்தே பணவீக்கம் குறையத் தொடங்கியது. ஜனவரி மாதத்தில் 5.05 சதவீதமாக இருந்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் 4.58 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் 5.16 சதவீதமாக உயர்ந்தது.
வெங்காயத்தின் விலை ஆண்டுக்காண்டு அடிப்படையில் பிப்ரவரியில் 20.08 சதவீதம் உயர்ந்ததாகவும், உருளை விலை 8.36 சதவீதம் உயர்ந்ததாகவும் அரசு வெளியிட்ட அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக காய்கறி களின் விலை 3.99 சதவீதம் குறைந்தது. ஜனவரியில் இது 16.6 சதவீதமா இருந்தது. இதேபோல பருப்பு, கோதுமை ஆகியவற்றின் விலையும் கடந்த பிப்ரவரியில் கணிசமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும் பழங்கள், பால் மற்றும் புரதச்சத்து நிறைந்த முட்டை, மீன், இறைச்சி ஆகிய வற்றின் விலைகள் தொடர்ந்து உயர்ந்தே வந்துள்ளன. பழங்களின் விலை 9.92 சதவீதம் உயர்ந்தது. ஜனவரியில் இது 5.32 சதவீதமாக இருந்தது. பால் விலை 7.22 சதவீதத்திலிருந்து 8.45 சதவீதமாக உயர்ந்தது.
சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை 2.76 சதவீதம் அதிகரித்தது. இதனி டையே டிசம் பரில் திருத்தப்பட்ட பணவீக்க அளவு 6.4 சதவீதமாக உயர்ந்தது. முன்னர் இது 6.16 சதவீதமாக மதிப்பிடப்பட்டது.
No comments:
Post a Comment