Wednesday, 1 January 2014

வேதியியல் தொகுப்பு

 
வேதியியல் தொகுப்பு


வேதியியல் பாடத்தை பொறுத்தவரை சற்று கடினமானமாதக இருந்தாலும் கீழ்காணும் தலைப்புகளில் பிரித்து படிக்கத் தொடங்கினால் நல்ல பலன்களை அடையலாம். தற்போதைய சமச்சீர் பாடப் புத்தகங்களிலோ அல்லது பழைய பாடபுத்தகங்களிலோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
01. நீர்
02. பருப்பொருட்களின் தன்மை
03. திண்மம், திரவம், தனிமம், சேர்மம், கலவைகள், அமிலங்கள்
04. அமிலங்களும் அதன் மூலக்கூறுகளும்
05. காரங்களும் மற்றும் உப்புகள்
06. உலோகம் மற்றும் அலோகம்
07. அணு அமைப்பு
08. தனிம வரிசை அட்டவணை
09. வேதி விணைகள்
10. வேதி பிணைப்புகள்
11. நிலக்கரி மற்றும் கார்பன்

வேதியியல் அல்லது இரசாயனவியல் எனப்படுவது பருப்பொருளின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய அறிவியல் ஆகும். வேதியியல் அடிப்படையான மூன்று அறிவியல்களில் ஒன்று. மற்றவை உயிரியல், இயற்பியல் ஆகும். வேதியியலில் கரிம வேதியியல் - Organic Chemistry,   கனிம வேதியியல் - Inorganic Chemistry,   இயல் வேதியியல் - Physical Chemistry என மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன.
வேதியியல் அணுக்கள் பற்றியும், அவ்வணுக்களுக்குப் பிற அணுக்களுடனான இடைவினைகள் பற்றியும், வேதியியல் பிணைப்புக்களின் இயல்புகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.
நிலவியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளை இயற்பியலுடன் இணைக்கும் துறையாக வேதியியல் இருப்பதால், சில வேளைகளில் வேதியியலை "அறிவியலின் மையம்" என்றும் அழைப்பதுண்டு. வேதியியல் இயற்பியல் இரண்டும் அறிவியலின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது இயற்பியலில் இருந்தும் வேறானது.
மரபுவழி வேதியியல் ஆனது அடிப்படைத் துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகள், சாரப்பொருட்கள், உலோகங்கள், பளிங்குகள், பிற பொருட் சேர்க்கைகள் குறித்து ஆய்வு செய்கிறது. இவ்வாய்வு அப் பொருட்களின் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்பெறலாம்.
வேதியியல் ஆய்வு கூடங்களில் வேதியியலில் ஆராயப்படும் இடைவினைகள், தாக்கங்கள், மாற்றங்கள் மற்றும் வேதிப்பொருட்களிடையே இடம்பெறும் இடைவினைகளின் விளைவாக அல்லது பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையேயான இடைவினைகளின் விளைவாக ஏற்படும் வேதிப் பொருட்களின் நடத்தைகள் பற்றிய ஆய்வுகள், வேதியியல் ஆய்வு கூடங்களில் நடைபெறுகின்றன.
"வேதியியல் தாக்கம்" அல்லது "வேதிவினை" என்பது சில சாரப்பொருட்கள் ஒன்று அல்லது பல சாரப்பொருட்களாக மாற்றம் அடைவதைக் குறிக்கிறது. இதை ஒரு வேதிச் சமன்பாட்டினால் குறியீடாக வெளிப்படுத்த முடியும். இச் சமன்பாடுகளின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கை மிகப் பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கும். ஒரு சாரப்பொருள் உட்படும் வேதிவினைகளின் இயல்புகளும், அதனோடு ஆற்றல் மாற்றங்களும், வேதியியல் விதிகள் எனப்படும்

மாசுபாடும் ஓசோன் சிதைவடையும்
* நாம் வாழும் இடத்தின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில், உயிர்களுக்த் தீங்கு விளைவிக்கும் விரும்பத்தகாத மாற்றமே மாசுபடுதல் எனப்படும்.
* நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றுபவர்கள் அங்குள்ள கார்பன் துகள்களை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது. இது கறுப்பு நுறையீரல் நோய் எனப்படும்.
* சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தும்போது அவை ஆவியாகி மேலே சென்று மழை பெய்யும்போது நீரோடு கலந்து அமில மழையைத் தோற்றுவிக்கிறது.
* கதிரியக்கப் பொருட்களான ரேடியம், தோரியம், யுரேனியம் போன்றவற்றின் பயன்பட்டால் காற்று, நிலம் நீர் ஆகியவை மாசுபடுகின்றன.
* 130 டெசிபலுக்கு மேல் உண்டாகும் ஒலியினால் செவிப்பரை, உட்செவியின் மயிரிழைகள் பாதிக்கப்பட்டு தற்காலிக மற்றும் நிரந்தர காது கேளாத் தன்மை ஏற்படும். ஒலி மாசுபாட்டினால் கவனச்சிதைவு ஏற்படுகிறது.
* புவி வெப்பமாதலின் காரணமாக புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் கடல்பகுதிகளில் கால நிலையில் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் எல்நினோ விளைவு எனப்படும்.
* வாயு மண்டலத்தில் உருவாகும் குளோரின் மற்ரும் புரோமின் கூட்டுப் பொருட்களால் தான் ஓசோன் படல சிதைவு ஏற்படுகிறது.
* ஜப்பானில் மினாமிட்டா பகுதியில் 1952ல் மினாமிட்டா நோய் என்ற ஒருவித நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதரசம், பாக்டீரியக்களால் மீத்தைல் மெர்குரி என்ற நச்சாக மாறுவது தான். இதை உண்ட மீன்களை மனிதன் உண்ணும்போது கை, கால்கள், உதடு, மார்பு ஆகிய பகுதிகள் உணர்ச்சியற்றுப் போனதுடன், பார்வைக்குறைபாடு, மனநிலை பாதிப்பு, செவிட்டுத் தன்மையும் ஏற்பட்டது.
* காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு போன்ற பசுமை வாயுக்கள் சூரிய வெப்பத்தை உறிஞ்சி அப்பட்யே தக்க வைத்துக் கொள்வதால், பூமியின் வெப்பநிலை உயர்கிறது. இதுவே பசுமை இல்ல விளைவு எனப்படும்.
* புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரிபொருட்கள் அரைகுறைவாக எரிக்கப்படுவதால் கார்பன் மோனாக்சைடு உண்டாகி காற்ரில் கலக்கிறது. இது இரத்தத்தின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனைக் குறைத்து விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
* நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்களை எரிக்கும்போது உருவாகும் ஹைட்ரோகார்பன்கள் காற்றில் கலந்து மாசுபடச் செய்கிறது.

நீர்
* புவிப்பரப்பில் சுமார் ஐந்தில் நான்கு பங்கு நீர் ஆகும். புவிப்பரப்பில் 1.4 ஆயிரம் மில்லியன் கன கிலோ மீட்டர் நீர் உள்ளது. மொத்த நீரளவில் 3 சதவீதம் தூய நீர் உள்ளது.
* எல்லா உயிர்களிலும் நீர் மிகுதியாக உள்ளது. மனித உடலில் 65 சதவீத நீரும், யானையின் உடலில் 70 சதவீத நீரும், உருளைக்கிழங்கில் 80 சதவீத நீரும், தக்காளியில் 95 சதவீத நீரும் உள்ளது.
* நாளொன்றுக்கு குடிநீராக பெண்களுக்கு குறைந்த அளவு 1.5 லிட்டர் தூய நீரும், ஆண்களுக்கு 2 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.
* மனித உடலில் மூன்றில் இரண்டு வங்கு நீராகும். இயற்கையில் நீர் மூன்று நிலைகளிலும் (திடநிலையில் பநிக்கட்டியாகவும், திரவ நிலையில் நீராகவும், வாயு நிலையில் நீராவியாகவும்) காணப்படுகின்றன.
* 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு கிராம் நீரானது 537 கலோரி வெப்ப ஆற்றலை உட்கொண்டு நீராவியாக மாறுகிறது. இதுவே ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.
* ஒரு கிராம் பனிக்கட்டியானது (திண்மம்) 0 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் நீராக (திரவம்) மாறத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் உருகுதலின் உள் உறை வெப்பம் எனப்படும்.
* பனிக்கட்டியின் உருகுதலின் உள் உறை வெப்ப மதிப்பு மிக அதிகமாகும். அதன் மதிப்பு 79.7 கலோரி/கிராம் ஆகும்.
* ஒரு கிராம் நீரின் வெப்பநிலையில் 1 டிகிரி செலிசியஸ் அதிகரிக்கத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவை நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் என்பர். நீரின் தன்வெப்ப ஏற்புத்திரன் மதிப்பு 1 கலோரி/கிராம்/கெல்வின் ஆகும்.
* நீர் ஒரு சர்வ கரைப்பான் (Universal Solvent) ஆகும். அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரைப்பான் நீர் எனலாம்.
* அம்மோனியா, ஹைட்ரஜன் குளோரைடு, ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களிலும் நீர் கரையும்.
* ஆக்சிஜனும் நீரில் கரைகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனே நீர்வாழ் உயிரினங்கள் சுவாசிக்கப் பயன்படுகிறது.
* கரைபொருளானது எதில் கரையுமோ அதுவே கரைப்பான் ஆகும் எ.கா. நீர், ஆல்கஹால் ஆகியன். கரைபொருளும், கரைப்பானும் சேர்ந்த ஒருபடித்தான கலவை கரைசல் ஆகும்.
* நீர் பற்றியும் அதன் விரவலைப் பற்றியும் படிக்கும் அறிவியல் நீரியல் (Hydrology) எனப்படும்.
* நீர்கோளத்தில் (Hydrosphere) 14,60,000 கன கிலோ மீட்டர் நீர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 97.3 சதவீதம் நீர், கடல் மற்றும் பெருங்கடல்களிலும், 2.7 சதவீத நீர் ஆறு, ஏரி, பனிமலை மற்றும் நிலத்தடி நீரிலும் இருக்கிறது. இதில் 1 சதவீதம் மட்டுமே குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
* உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) 5 மில்லியன் மக்கள் குடிநீர் மாசுபடுதலனால் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
* இந்தியாவில் 70 சதவீத நீர் மாசுபட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
* சில பகுதிகளில் கிடைக்கும் நீரில் சோப்பு எளிதில் கரைந்து நுறையைத் தரும். இந்நீரை நுறைதரும் நீர் அல்லது மென்னீர் (Soft water) என்கிறோம். சோப்புக் கரைசலுடன் நுறையை எளிதில் தராத நீர், வன்னீர் அல்லது கடின நீர் Hardwater எனப்படும்.
* கடின நீர் இரு வகைப்படும். ஒரு வகை கடின நீர் கொதிக்க வைப்பதால் மென்னீராக மாறுகிறது. இது தற்காலிக கடின நீர் (Temporary Hardwater) ஆகும். மற்றொரு வகை கொதிக்க வைப்பதால் மென்னீராக மாறுவதில்லை. இது நிலையான கடின (Permanet Hardwater) நீராகும்.
* நீரின் கடினத் தன்மைக்குக் காரணம் அதில் கரைந்துள்ள சில உப்புக்களே ஆகும். நீரில் கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் பைகார்பனேட்டுகள் கரைந்திருந்தால் அது தற்காலிக கடினநீராகவும், இதே உலோகங்களின் சல்ஃபேட், குளோரைடு உப்புக்கள் கரைந்திருந்தால் அது Permanet Hardwater ஆகவும் அமையும்.
* நீரில் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் எடை இயைபில் 1:8 என்ற விகிதத்திலும், கன அளவு இயைபில் 2:1 என்ற விகிதத்திலும் உள்ளன.
* 1781-ம் ஆண்டு ஹென்றி காவன்டிஷ் என்பவர் இரு கன அளவு ஹைட்ரஜனும், ஒரு கன அளவு ஆக்சிஜனும் சேர்ந்த கலைவையை எரித்து நீரைத் தயாரிக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.
* 1783-ல்  A.L.லவாட்சியர் என்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞர் நீர் என்பது ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆனது எனவும், ஒவ்வொரு நீர் மூலக்கூறிலும், இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் இருப்பதாகக் கண்டறிந்தார்.
* எனவே நீர் மூலக்கூறை ஹைட்ரஜன் மோனாக்சைடு அல்லது ஆக்சிஜன் ஹைட்ரைடு என்றும் அழைக்கலாம்.
* ஹாப்மன் வோல்டா மீட்டர் உபகரணத்தைப் பயன்படுத்தி நீரின் கன அளவு இயைபைக் கண்டறியலாம்.
* ஒரு பொருளில் மின்னோட்டத்தைச் செலுத்தி அதன் மூலக்கூறுகளை பகுதிப்பொருட்களாகப் பிரிகையடையச் செய்யும் (சிதைக்கும்) நிகழ்ச்சியே மின்னாற் பிரிப்பு எனப்படும்.
* மின்னோட்டத்தினால் பிரிகையடையும் பொருள் மின்பகுளி எனப்படும்.
* நீர் ஒரு ஒளிபுகும், நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற நீர்மம். இதில் கரைந்துள்ள காற்று, கார்பன் டை ஆக்சைடு மற்றும் சில வகை உப்புக்ளே இதன் மாறுபட்ட சுவைக்குக் காரணமாகும்.
* வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை 0 டிகிரி செல்சியஸ் ஆகும். 1 வளிமண்டல் அழுத்தத்தில் நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் ஆகும்.
* நீர் வெப்பத்தை லேசாகக் கடத்தும் திறன் உடையது. தூய நீர் மின்னோட்டத்தைக் கடத்தாது.
* அமிலம் அல்லது காரம் கலந்த நீர் மின்னோட்டத்தைக் கடத்தும் திறன் உடையது.
* நீரின் நிறை மாறாமலிருப்பின் அதன் அடர்த்தி பருமனுக்கு எதிர் விகிதத்தில் அமைகிறது. அதாவது நீரின் பருமன் அதிகரிக்கும்போது அடர்த்தி குறைகிறது.
* நீரை 4 டிகிரி செய்சியஸ்க்கும் குறைவாக குளிர்விக்கும்போது நீரின் பருமன் அதிகரிகிகிறது. எனவே 0 டிகிரி செல்சியசில் உள்ள நீரின் மருமனை விட அதிகமாக இருக்கிறது.
* 0 டிகிரி செல்சியஸில் உள்ள பனிக்கட்டியின் அடர்த்தி 4 டிகிரி செல்சியஸில் உள்ள நீரின் அடர்த்தியை விடக் குறைவாக இருக்கும்.
* நீரின் அடர்த்தி 4 டிகிரி செல்சியஸில் 1 கிராம்/க.செ.மீ எனவும், பனிக்கட்டியின் அடர்த்தி 0.91 கிராம்/க.செ.மீ எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
* 0 டிகிரி செல்சியஸில் ஒரு குறிப்பிட்ட நிறையை உடைய பனிக்கட்டியின் பருமன் அதே நிறையை உடைய நீரின் பருமனை விட அதிகம். எனவே 0 டிகிரி செல்சியஸில் பனிக்கடியின் அடர்த்தி 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள அடர்த்தியை விடக் குறைவு. ஆகவே பனிக்கட்டி நீரில் மிதக்கிறது.
* நீரின் முக்கிய இயற்கை ஆதாரம் கடல் ஆகும். கடல் நீரில் 3.5 சதவீதம் உப்புகள் கைரந்துள்ளன. முக்கியப் பகுதிப்பொருளான சோடியம் குளோரைடு 2.8 சதவீதம் உள்ளது. மேலும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றின் உப்புக்களும் அடங்கியுள்ளன.
* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு சராசரியாக 1000 பங்குக்கு 35 பங்காகும். அதாவது 3.5 சதவீதம் ஆகும்.
* கடல்நீரில் இருந்து கிடைக்கும் உப்பை அயோடினேற்றம் செய்து பயன்படுத்துவதால், முன்கழுத்துக் கழலை (Goitre) தடுக்கலாம்.
* கடல் நீரிலிருந்து அதில் கரைந்துள்ள உப்புக்களைப் பிரிக்கின்ற முறைக்கு உப்பு நீக்கம் ( De-salination)  என்று பெயர்.
* ஹைட்ரஜனின் ஐசோடோப்பாகிய டியூட்டிரியத்தைப் பெற்ற சேர்மம் கன நீர் என்றும் டியூட்டிரியம் ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.

பொருட்களின் அமைப்பு
* எதுவொன்று தனக்கென்று ஒரு குறி்ப்பிட்ட பருமனையும் நிறையையும் பெற்றுள்ளதோ அதுவே பருப்பொருள் எனப்படும்.
* குறிப்பிட்ட இடத்தை (பருமன்) ஆக்கிரமித்துக் கொள்வதும், குறிப்பிட்ட வடிவத்தை உடையதும் திண்மம் ஆகும்.
* குறிப்பிட்ட இடத்தை (பருமன்) ஆக்கி்ரமித்துக் கொள்ளாததும், குறிப்பிட்ட வடிவமற்றதும் வாயுவாகும்.
* திடப்பொருளானது சூடேற்றப்படும்போது திரவப் பொருளாக மாறுவதே உருகுதல் எனப்படும். எந்த வெப்பநிலையில் ஒரு திடப்பொருளானது உருகி, திரவ பொருளாக மாறுகிறதோ அதுவே அத்திடப்பொருளின் உருகுநிலை எனப்படும். பனிக்கட்டியன் உருகுநிலை 0 டிகிரி செல்சியஸ் ஆகும்.
* திரவப்பொருளைச் சூடேற்றும்போது அது வாயுவாக மாறுவதே ஆவியாதல் எனப்படும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஆவியாதல் தொடர்ந்து மிக வேகமாக நடைபெறுவதே கொதித்தல் எனப்படும்.
* எந்தவொரு வெப்பநிலையில் திரவமானது கொதிக்க ஆரம்பிக்கின்றதோ, அதுவே அத்திரவத்தின் கொதிநிலை எனப்படும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் எனப்படும்.
* ஒரு திடப்பொருள் சூடேற்றப்படும்போது திரவமாகாமல் நேரடியாக வாயுவாக மாறி, பின் குளிரூட்டப்படும்போது நேரடியாகத் திடப்பொருளாக மாறுவதே பதங்கமாதல் எனப்படும். எ.கா. கற்பூரம், அயோடின். அம்மோனியம் குளோரைடு போன்ற திண்மங்கள் பதங்கமாகின்றன.
* ஒரு திரவப் பொருள் குளிர்விக்கப்படும் போது, திடப்பொருளாக மாறும் நிகழ்ச்சியே உறைதல் எனப்படும்.

பருப்பொருட்களின் நிலைகள்:
* பல துகள்கள் சேர்வதால் கிடைக்கும் உருவம் பருப்பொருள்கள் எனப்படும். எந்த ஒரு பொருளும் மூன்று நிலைகளில் காணப்படுகிறது.
* அதுவே திண்ம, நீர்ம மற்றும் வாயு நிலைகளாகும். இம்மூன்று இயற்கை நிலைகள் பொதுவான சில பண்புகளைப் பெற்றிருக்கின்றன.
* இம்மூன்று நிலைகளும் வெப்பநிலை உயர்த்தப்படும் பொழுது பருமனாளவில் அதிகரிக்கின்றன. வெப்பத் தாழ்வு ஏற்படும்பொழுது பருமனளவில் குறைகின்றன. இவ்விளைவு திண்ம, நீர்ம நிலைகளை விட வாயு நிலைகளில் அதிகம் காணப்படுகிறது.
* திண்மமும், நீர்மமும் புறப்பரப்பு கொண்டவை, ஆனால் வாயுக்கள் இதனைப் பெற்றிருக்கவில்லை.

திண்மங்கள்
* திண்மங்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. இதற்கு அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே காரணமாகும்.
* திண்ணங்களில் காணப்படும் அணுக்கள் அல்லது மூலக்குறுக்களுக்கிடையே கவர்ச்சி விசை உள்ளது. எனவே, அவை நிலையான தன்மையைப் பெற்று வடிவமைப்பைப் பெற்றுள்ளன.
* திடப்பொருட்கள் இரு வகைப்படும். அவை உண்மைத் திண்மங்கள் அல்லது படிகத் திண்மங்கள் மற்றும் படிக வடிவமற்ற திண்மங்கள் எனப்படும்.
* உலோகங்கள், உப்பு, வைரம் ஆகியவை படிகத் திண்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். கண்ணாடி, கார்பன் துகள்கள், பிசின்கள் ஆகியவை படிக வடிவமற்ற திண்மங்களாகும்.
* நீர்மம் மற்றும் வாயுக்கள் பாய்பொருள்கள் எனப்படுகின்றன.

பொருட்களின் நிலைமாற்றம்
* நீரைக் கொதிக்க வைக்கும்பொழுது அது நீராவியாக மாறுகிறது. நீரும் நீராவியும் ஒரு பொருளே. இந்த மாற்றத்தின் பொழுது புதியதாக ஒரு பொருள் தோன்றவில்லை. இம்மாதிரியான மாற்றத்தை இயற்பியல் மாற்றம் என்கிறோம். உறைதல், உருகுதல், காய்ச்சி வடித்தல் மற்றும் பதங்கமாதல் முதலியன இத்தகைய மாற்றங்களில் சில.
* எந்தவொரு மாற்றத்தில் புதிய பொருட்கள் தோன்றுகின்றனவோ அது வேதியியல் மாற்றம் எனப்படும். கற்பூரம் எரியும்பொழுது கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவி ஆகிய புதிய பொருட்கள் தோன்றுகின்றன. இது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
* ஒளிச்சேர்க்கை, வெள்ளி கருத்துப் போதல், இரும்பு துருப்பிடித்தல் மற்றும் எரிபொருள் எரிதல் முதலானவை வேதியியல் மாற்றங்களில் சில. வேதியியல் மாற்றங்களை வேதியியல் வினைகள் என்றும் அழைப்பர்.
* ஒரு வேதிவினையில் ஈடுபடும் பொருட்களுக்கு வினைபடு பொருள்கள் என்று பெயர். ஒரு வேதிவினையில் உருவாகின்ற பொருட்களுக்கு விளைபொருள்கள் என்று பெயர்.
* ஒரு வேதிவினையில் வினைபடு பொருட்கள் விளை பொருட்களாக மாற்றப்படுகின்றன. வேதிவினை நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடு தேவைப்படுகிறது.
* எளிதில் ஆவியாகாத கரைபொருளைக் கொண்டுள்ள நீர்மங்களை தூய்மைப்படுத்தப் பயன்படும் முறையே காய்ச்சி வடித்தல் ஆகும். ஆவியாக்குதலும் பின்னர் அதைக் குளிர்விப்பதும் இதில் அடங்கும்.
* வெவ்வேறு கொதிநிலைகளை உடைய நீர்மங்கள் கலந்துள்ள கலைவையைப் பிரித்தெடுப்பதற்கும் காய்ச்சி வடித்தல் முறையைப் பயன்படுத்தலும். இத்தகைய காய்ச்சி வடித்தல் முறைக்கு பின்னக் காய்ச்சி வடித்தல் என்று பெயர்.

தனிமங்கள்
* பருப்பொருள்களை தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகள் என வகைப்படுத்தலாம்.
* எந்தவொரு தூய பொருளை இயற்பியல் மற்றும் வேதியியல் முறையினால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்களாகப் பிரிக்க முடியாதோ அப்பொருள் தனிமம் எனப்படும்.
* தனிமங்களும் சேர்மங்களும் தூய பொருட்கள் ஆகும்.
* ஒரு தனிமம் என்பது ஒரே விதமான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டதாகும். அனைத்துப் பொருட்களும் தனிமங்களால் உருவாக்கப்பட்டவையே ஆகும்.
* இதுவரை 112 தனிமங்களை வேதியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றுள்ள 82 தனிமங்கள் சாதாரணமானவை (இயல்பானவை). எஞ்சிய 30 தனிமங்கள் கதிரியக்கத் தன்மையையுடையவை. இவை கதிரியக்கத் தனிமங்கள் எனப்படுகின்றன.
* மனித உடலில் 65 சதவீதம் ஆக்சிஜன், 18 சதவீதம் கார்பன், 10 சதவீதம் ஹைட்ரஜன், 3 சதவீதம் நைட்ரஜன், 2 சதவீதம் மற்ற தனிமங்கள் காணப்படுகின்றன.
* இதுவரை கண்டறியப்பட்டுள்ள 112 தனிமங்களில் 21 தனிமங்கள் இயற்கையில் கிடைப்பதில். அவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. எ.கா. புளூடோனியம், கியூரியம், அன்னில்பென்டியம் ஆகியன.
* தனிமங்கள் அவற்றின் பண்புகளுக்கேற்ப உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

அணு
* தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருப்பதும் ஆனால் எப்பொழுதும் வேதி வினைகளில் பங்கு கொள்வதுமாகிய தனிமத்தின் மிகச்சிறிய அலகிற்கு அணு என்று பெயர்.
* அணுவை புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் போன்ற மிகச்சிறிய அணுத்துகள்களாகப் பிரிக்க முடியும்.
* எப்பொழுதும் தனித்தே இருப்பதும், பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் காட்டும் ஒரு பொருளின் மிகச்சிறிய அலகிற்கு மூலக்கூறு என்று பெயர்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.
* ஹைட்ரன் மூலக்கூறு (H2), ஆக்ஸிஜன் மூலக்கூறு (O2 ), குளோரின் மூலக்கூறு (Cl2) நைட்ரஜன் மூலக்கூறு (N2) ஆகியவை ஈரணு மூலக்கூறுகளுக்கு உதாரணங்கள்.
* ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் புளோரின் , குளோரின், புரோமின், அயோடின் போன்ற ஹாலஜன்கள் (உப்பீனிகள்) ஈரணுத்தனிமங்கள் ஆகும்.
* ஒசோன் (O3) மூலக்கூறு மூவணு மூலக்கூறுகளுக்கு உதாரணமாகும். சல்ஃபர் மூலக்கூறு (S8) 8 கந்தக அணுக்களால் ஆனது.
* இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை அல்கெமி (Alchemy)  எனப்படும்.
* பல தனிமங்கள், தனித்த நிலையில் இருக்கும் அணுக்களை தங்கள் அடிப்படை அலகுகளாகக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தனிமங்களில், அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குவதில்லை. இத்தகைய தனிமங்கள் ஓரணுத் தனிமங்கள் எனப்படுகின்றன. உதாரணம் காப்பர், சில்வர், ஹீலியம் போன்றவை.
* ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அதுவே அத்தனிமத்தின் அணுக்கட்டு எண் ஆகும்.
* சில்வர், பொட்டாசியம், கார்பன் மற்றும் மந்த வாயுக்கள் ஆகியவற்றின் அணுக்கட்டு எண் ஒன்று ஆகும். ஹைட்ரஜன், புரோமின், குளோரின், ஆக்சிஜன், நைட்ரஜன் ஃப்ளூரின் ஆகியவற்றின் ஏணுக்கட்டு எண் இரண்டு ஆகும். எனவே அவை H2, B2, Cl2, O2, N2, F2 என குறிக்கப்படுகின்றன.
* பாஸ்பரஸ் மூலக்கூறில் (P4) நான்கு அணுக்கள் உள்ளன. எனவே அதன் அணுக்கட்டு எண் நான்கு. சல்பரின் மூலக்கூறில் (S8) எட்டு அணுக்கள் உள்ளன. அதன் அணுக்கட்டு எண் எட்டு ஆகும்.

சேர்மங்கள்
* ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற சில தனிமங்களே இயற்கையில் தனித்துக் கோணப்படுகின்றன. பெரும்பான்மையான பொருட்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்றிணைந்து உருவானவை. அத்தகைய பொருட்கள் சேர்மங்கள் என்றழைக்கப்படுகின்றன.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து உருவான பொருளே சேர்மம் எனப்படும்.
* சேர்மங்களின் அடிப்படை அலகுகள் தனித்தியங்கும் மூலக்கூறுகளாகும்.
* சேர்மங்கள் ஒரு படித்தான தன்மை பெற்றவை. நீர் ஒரு சேர்மம்.
* கார்பன் ஆக்சிஜனுடன் சேர்ந்து கார்பன் டை ஆக்சைடைக் கொடுக்கிறது. ஹைட்ரஜன், ஆக்சிஜனுடன் சேர்ந்து நீரினைத் தருகிறது. நீரில் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் 1:8 என்ற நிறை விகிதத்தில் உள்ளன.
* மனித இரத்தத்தில் மற்றும் உயிர்ச் செல்களின் முறையான இயக்கத்திற்கு சோடியம் குளோரைடு (NaCl) என்ற சேர்மம் அவசியமாகிறது.
* சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா) சோப்பு தயாரிக்கப் பயன்படுகிறது. செயற்கை உரம் தயாரிப்பில் அம்மோனியா (NH3) என்ற சேர்மம் பயன்படுகிறது.
* இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் இரும்பின் சேர்மமாகும். பசுமையான இலைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் இருக்கும் குளோரோஃபில் என்பது மெக்னீசியத்தின் சேர்மமாகும்.
* கால்சியம் பாஸ்பேட் என்பது எளும்பு மற்றும் பற்களில் இருக்கும் கால்சியத்தின் சேர்மமாகும்.
* சர்க்கரை ஒரு சேர்மம். ஒரு சர்க்கரை மூலக்கூறில் 12 கார்பன் அணுக்களும், 22 ஹைட்ரஜன் அணுக்களும், 11 ஆக்சிஜன் அணுக்களும் உள்ளன.

சலவை சோடா
* சலவை சோடா என்பது சோடியம் கார்பனேட் டெக்கா ஹைட்ரேட் (Na2Co3.10H2O) முன்னர் சோடியம் கார்பனேட் கடல் வாழ் செடிகளின் சாம்பலிருந்து தயாரிக்கப்பட்டது.
* சோடியம் கார்பனேட் முதலில் நீரற்ற சோடியம் காபர்பனேட் சால்வே முறையில் (அம்மோனியா சோடா முறையில்) பெருமளவில் தயாரிக்கப்பட்டு, பின்னர் சலவை சோடா கார்பனேட் டெக்கா ஹைட்ரேட்டாக மாற்றப்படுகிறது.
* சலவை சோடா கடின நீரை மென்னீராக்கவும், காகிதம், சோப்பு, துணி வண்ணப் பூச்சுகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* நீரின் கடினத் தன்மைக்குக் காரணம் அதில் கரைந்துள்ள கால்சியம், மெக்னீசியம் உப்புக்கள் ஆகும்.
* சலவை சோடாவை கடின நீரில் கரைத்தால் கடினத் தன்மைக்குக் காரணமான கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்கள் சலவை சோடாவுடன் வினைபுரிந்து கரையாத திண்மப் பொருளாக வீழ்படிவாகி நீரை மென்னீராக மாற்றுகிறது.
சமையல் சோடா
* சமையல் சோடா என்பது சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் NaHCO3 சோடியம் பை கார்பனேட்) ஆகும்.
* சோடியம் பை கார்பனேட் சால்வே முறையில் பெருமளவில் தயார்க்கப்படுகிறது.
* சமையல் சோடா ரொட்டி சோடா தயாரிக்கப் பயன்படுகிறது. ரொட்டி சோடா என்பது சோடியம் பை கார்பனேட்டும், டார்டாரிக் அமிலமும் கொண்ட கலவையாகும். ரொட்டிச் சோடா உணவுப் பொருளை மென்மைப்படுத்தவும், குளிர்பானங்களில் காற்றூட்டம் செய்யவும் பயன்படுகிறது.
சலவைத் தூள்
* சலவைத் தூளின் வேதிப்பெயர் கால்சியம் ஆக்சிகுளோரைடு (CaOCl2) ஆகும்.
* சலவைத் தூள் பெருமளவில் பெக்மேன் சாதனத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
* சலவைத் தூள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தூள். அதிக அளவு குளோரின் மணமுடையது.
பாரிஸ் சாந்து
* பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் ஆகும். ஜிப்சத்தை திறந்த வெளித் தீயில் எரித்து ஒரு தூளை எகிப்தியர்கள் 5000 வருடங்களுக்கு முன் பெற்றனர். இந்தத் தூளை நினைவுச் சின்னங்கள் கட்டப் பயன்படுத்தினர்.
* இந்தத் தூள் தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் பாரிஸ் நாட்டில் அதிகம் கிடைப்பதால் பாரிஸ் சாந்து என குறிப்பிடப்படுகிறது.
* பாரிஸ் சாந்து சாக்பீஸ் தயாரிக்கவும், சிலைகள் வார்க்கவும், மருத்துவமனைகளில் எலும்பு முறிவுகளைச் சரி செய்யவும், பல் மருத்துவத்திலும் பயன்படுகிறது.
சிமெண்ட்
* முதன்முதலில் எகிப்து நாட்டினர்தான் சிமெண்டின் பயன்களை அறிந்து பிரமிடுகளை கட்டுவதற்கு இதைப் பயன்படுத்தினர்.
* எரிந்த சிலிகேட்டுகள், சுண்ணாம்பு கொண்ட கலவையே இயற்கையில் கிடைக்கும் சிமெண்ட் ஆகும்.
* 1824-ல் ஜோசப் அஸ்பிடின் என்ற செங்கல் செய்யும் ஆங்கிலேயர் முதன்முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.
* போர்ட்லாண்ட் நாட்டில் உள்ள சுண்ணாம்புக் கல்லினை இப்பொருள் ஒத்திருந்தால், அவர் கண்டுபிடித்த சிமெண்ட்டை போர்ட்லாண்டு சிமெண்ட் என்று அழைத்தார்.
* சிமெண்ட் என்றாலும் போர்ட்லாண்ட் சிமெண்ட் என்றாலும் இரண்டும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.
* போர்ட்லாண்ட் சிமெண்டில் சுண்ணாம்பு (CaO) 60 முதல் 70 சதவீதமும், சிலிகா (Si) 20 முதல் 25 சதவீதமும், அலுமினா (Al2O3) 5 முதல் 10 சதவீதமும், ஃபெர்ரிக் ஆக்ஸைடு (Fe2O3) 2 முதல் 3 சதவீதமும் உள்ளன.
* காரை என்பது சிமெண்ட்டும், மணலும் 3:1 என்ற விகிதத்தில், தேவையான நீருடன் கலந்த கலவையே ஆகும். கட்டிடங்கல் கட்டுவதர்கு தேவையான பொருட்களான செங்கல், கற்கள் போன்றவற்றுடன் சேர்ந்து, சிறிது நேரம் சென்றபின் அவை இறுகி கடினமடைகிறது.
* சிமெண்ட், மணல், நொறுக்கப்பட்ட கல், நீர் ஆகியவை கலந்த கலவைக்கு கற்காரை என்று பெயர். சிமெண்ட் இறுகும்போது கற்காரை மிகவும் கடினமாகவும், உறுதியாகவும் மாறுகிறது. இது கட்டிடங்கள், சாலைகள், அணைக்கட்டுகள், பாலங்கள் கட்டப் பயன்படுத்தப் படுகிறது.
* வலுவூட்டப்பட்ட காரை (RCC)  இரும்புத் தண்டுகள் அல்லது எஃகு வலைகளை கற்காரையினுள் புதைத்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரையாகும். இருகும்போது கடினமானதாகவும், உறுதியாகவும் மாறுகிறது.
கண்ணாடி
* முதன்முதலில் கண்ணாடிப் பொருட்களை தயாரித்தவர்கள் எகிப்தியர்கள் இந்தியாவில் வெவ்வேறு வகையான கண்ணாடிகள் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, பெரோசாபாத், தில்லி போன்ற இயங்களில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
* சாதரணக் கண்ணாடியின் இயைபு (Na2) CaO 6SiO என்ற வாய்ப்பாட்டின்படி உள்ளது.
* சாதாரணக் கண்ணாடி தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் சோடியம் கார்பனேட், கால்சியம் கார்பனேட், சிலிகா ஆகியவை.
* கண்ணாடி தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை நன்கு பொடியாக்கி துல்லியமாக எடையறிந்து தகுந்த விகிதத்தில் கலக்க வேண்டும். இக்கலவைக்கு திரட்டு (Batch) என்று பெயர். கண்ணாடியின் இளகு தன்மையை அதிகரிக்க குறிப்பிட்ட அளவு உடைந்த கண்ணாடித் துண்டுகள் (Cullets) சேர்க்கப்படுகின்றன.
* இக்கலவை உலையில் வெப்பப்படுத்தப்பட்டு, நீர்மமாக இருப்பதைக் குளிர்வித்து வார்ப்பதன் மூலம் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.
* கண்ணாடியை மெதுவாகவும், ஒரே சீராகவும் குளிர வைப்பதை கட்டுப்படுத்தி ஆற்றுதல் (Annealing) என்பர்.
* சோடா கண்ணாடி என்பது சாதாரண கண்ணாடி இதையே மென் கண்ணாடி என்றும் அழைப்பர். இவ்வகைக் கண்ணாடியை ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள், சோதனைக் குழாய்கள் மற்றும் கண்ணாடி டம்பளர்கள் செய்யப் பயன்படுத்துவர்.
* கடினக் கண்ணாடி என்பது அதிக வெப்பநிலையில் உருகிறது.. இது வெப்பம் தாங்கவல்ல உபகரணங்களைச் செய்யப் பயன்படுகிறது.
* ஒளி ஊடுருவும் கண்ணாடி என்பது அதிக ஒளி விலகல் எண்ணைக் கொண்டுள்ளது. எனவே மூக்குக் கண்ணாடி வில்லைகள், புகைப்படக் கருவிகள், தொலைநோக்குக் கருவிகள், நுண்ணோக்கிக் கருவிகள் மற்றும் பல ஒளி உபகரணங்கள் செய்யப்பயன்படுகிறது.
* பைரக்ஸ் கண்ணாடி என்பது வெப்பம், அதிர்ச்சி மற்றும் பல வேதி வினைப் பொருளைத் தாங்கக் கூடிய தன்மையுடையதாகும். இது அடுப்புக்களில் வைக்கப்படும் பாத்திரங்கள், குடுவைகள், முகவைகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.
* பிளிண்ட் கண்ணாடி என்பது அதிக ஒளி விலகல் எண் உடையது மறஅறும் ஒளியைச் சிதறடிக்கக் கூடியது. எனவே இது உயர்ந்த ரகக் கண்ணாடி உபகரணங்கள் மற்றும் அலங்காரக் கண்ணாடிப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது.
* கண்ணாடி இழைகள் என்பவை உருகிய கண்ணாடியை மிகக்குறுகிய துளைகளின் வழியாக மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி கண்ணாடி நார்கள் தயாரிக்கப்படுகின்றன. கொத்தாக உள்ள இந்தக் கண்ணாடி இழைகள் கண்ணாடிக் கம்பளியாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
* கண்ணாடிக் கம்பளி ஒரு நல்ல வெப்பக் கடத்தாப் பொருளாக இருக்கிறது. மேலும் நெருப்புப் பற்றாத ஆடைகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
* வண்ணக் கண்ணாடிகள் என்பவை உருகிய கண்ணாடியுடன் உலோக ஆக்சைடுகள் போன்ற நிறமூட்டிகளைச் சிறிதளவு சேர்த்துத் தயாரிக்கப் படுவதாகும்.
* குரோமிக் ஆக்சைடு பச்சை நிறத்தையும், கோபால் ஆக்சைடு நீல நிறத்தையும், மாங்கனீசு டை ஆக்சைடு ஊதா நிறத்தையும், ஃபெரிக் ஆக்சைடு பழுப்பு நிறத்தையும், காட்மியம் சல்பைடு மஞ்சள் நிறத்தையும், செலினியம் சல்பைடு ரூபி சிவப்பு நிறத்தையும் தருகிறது.
* வண்ணக் கண்ணாடிகள் அலங்காரப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.
எஃகு
* முற்காலத்தில் வாள்கள் செய்ய எஃகு பன்படுத்தப் பட்டது. எஃகின் பண்புகள் அதில் உள்ள கார்பன் அளவைப் பொறுத்தது. பொதுவாக இரு வகையான எஃகுகள் உள்ளன.
* முதல் வகை மென்மையான எஃகு. இதில் 0.1 முதல் 0.4 சதவீதம் வரை கார்பன் உள்ளது. இதைத் தகடாக அடிக்கலாம். கம்பியாக நீட்டலாம். மிகவும் உறுதி வாய்ந்தது. இது தகடுகள், கம்பிகள், மோட்டார் வண்டி பாகங்கள், அச்சுகள், திருகாணிகள், தண்டவாளங்கள், சக்கரங்கள், கப்பல்கள், பாலங்கள் ஆகியவற்றில் பயன்படுகிறது.
* இரண்டாவது வகை கடின எஃகு. இதில் 0.5 முதல் 1.5 சதவீதம் வரை கார்பன் உள்ளது. இது மிகக் கடினமானது. மேலும் இதைக் கடினமடையச் செய்தல் (Quenching) மூலம் கடினமாக்கலாம். சவரக் கத்திகள், கத்திகள், துளையிடும் மற்றும் வெட்டும் கருவிகள் தயார்க்கப் பயன்படுகிறது.
* துருப்பிடிக்காத எஃகு என்பது 8 சதவீத நிக்கலும், 18 சதவீத குரோமியமும் உள்ளது. இது துருப்பிடிக்காது. மிக அதிக மீளும் தன்மை உடையது.
* டங்ஸ்டன் எஃகில் 5 சதவீதம் குரோமியமும் சிறிதளவு வெனேடியமும் உள்ளது.
* இது யங்ஸ்டனுடன் சேரும்பொழுது கடினமாகிறது.
* நிக்கல் எஃகில் 2 சதவீதம் நிக்கல் உள்ளது. இது மிதிவண்டி பாகங்கள், வாகன ஊர்தி பாகங்கள், வானூர்தி பாகங்கள் செய்யவும் பயன்படுகிறது.
* மாங்கனீசு எஃகில் 7 முதல் 20 சதவீதம் வரை மாங்கனீசு உள்ளது. இது ஹெல்மேட், பாறை அரைக்கும் இயந்திரங்கள், இரயில் தண்டவாளங்கள் ஆகியவற்றை செய்ய பயன்படுகிறது.
* சிலிக்கான் எஃகில் 15 சதவீதம் சிலிக்கான் உள்ளது. இது அமிலத்தால் தாக்கப்படாது. எனவே அமிலங்களை எடுத்துச் செல்லும் குழாய்கள் செய்ய பயன்படுகிறது. 35 சதவீதம் சிலிகான் இருப்பின் இது மின்கம்பம் செய்யவும், மின் காந்தங்கள் செய்யவும் பயன்படுகிறது.
* கோபால்ட் எஃகில் 35 சதவீதம் கோபால்ட் உள்ளது. இது காந்தத் தன்மை உடையது. எனவே கோபால்ட் எஃகு நிலையான காந்தம் தயார்க்கப் பயன்படுகிறது.
கலவைகள்
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பதே கலவையாகும். அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் எந்த விகிகத்திலும் கலந்திருப்பதே கலவையாகும்.
* ஒரு கலவையில் அதன் பகுதிப் பொருட்கள் ஒரே சீராகக் கலக்கப்பட்டிருந்தால் எது ஒருபடித்தான கலவை எனப்படும். எ.கா. காற்று, உப்புக் கரைசல்கள்.
* எந்தவொரு கலவையில் அதன் பகுதிப் பொருட்கள் சீராகக் கலக்கப்படவில்லையோ அதுவே பலபடித்தான கலவையாகும். எ.கா. மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு ஆகியவற்றால் உருவான கலவை.
* கடல்நீர் என் பது, நீரும் அதிக அளவிலான உலோக உப்புக்களும் கலந்த கலவையாகும். பாறை உப்பு என்பது, சாதாரண உப்பும் நுண்ணிய மணலும் சேர்ந்த கலவையாகும்.
* புகை என்பது கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவையாகும். சமையல் வாயு என்பது பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையாகும்.
* காற்று என்பது ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு , நீராவி கலந்த கலவையாகும்.
* பால் என்பது கொழுப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியன் கலந்த கலவையாகும்.
* கலவைகள் ஒருபடித்தான கலவைகள் என்றும், பலபடித்தான கலவைகள் என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
* ஒருபடித்தான கலவையில் ஒரே ஒரு நிலைமை உள்ளது. உலோகக் கலவைகள், காற்று, ஆல்கஙாலும் நீரும் கலந்த கலவை ஆகியன இதற்கு உதாரணங்கள்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைமைகள் கொண்ட கலவை பலபடித்தான கலவையாகும். நீருடன் எண்ணெய் கலந்த கலவை, மணலும் உப்பும் கலந்த கலவை, * மணலும் சர்க்கரையும் கலந்த கலவை ஆகியன இதற்கு உதாரணங்கள்.
கரைசல்கள்
* ஒரு கரைசலில் எது கரைகிறதோ அது கரைபொருள். எது கரைக்கிறதோ அது கரைப்பான். எனவே கரைசல் என்பது கரைபொருளும் கரைப்பானும் கலந்த ஒருபடித்தான கலவை. அது ஒரே நிலைமையாகத் தோன்றும்.
* உப்பும் காப்பர் சல்பேட்டும் நீரில் கரைகின்றன. எனவே அவை நீரில் கரையும் பொருள்கள் எனப்படும். கால்சியம் கார்பனேட் போன்றவை நீரில் கரையாப் பொருள்களாகும்.
* எந்த அளவிற்கும் ஒரு பொருள் கரைப்பானில் கரைகிறதோ அதுவே அதன் கரைதிறன் ஆகும்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் ஒருபடித்தான கலவை கரைசல் எனப்படும். இரண்டு பொருட்கள் இருந்தால் இருமடி என்றும், மூன்று பொருட்கள் இருந்தால் மும்மடி என்றும், நான்கு பொருட்கள் இருந்தால் நான்மடி என்றும் அழைக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------
தினந்தோறும் வாழ்வில் பயன்படும் சில சேர்மங்கள்
* சலவைத்தூள் அல்லது கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCl2) சலவைத் தொழிலிலும், கிருமிநாசினியாகவும், ஆக்சிஜனேற்றியாகவும் பயன்படுகிறது.
* அயோடோஃபார்ம், குளோரோஃபார்ம் ஆகிய சேர்மங்களைத் தயாரிக்கவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் சலவைத்தூள் பயன்படுகிறது.
* மண்ணின் வேதிப்பெயர் சிலிக்கன் டை ஆக்சைடு (SiO2)
* நீரின் வேதிப்பெயர் சிலிக்கன் டை ஆக்சைடு (H2O)
* சோப்பின் வேதிப்பெயர் சோடியம் பால்மிடேட் (C15H31COONa).
* சர்க்கரையின் வேதிப்பெயர் சுக்ரோஸ் (C12H22O11)
* சலவைத் தூளின் வேதிப்பெயர் கால்சியம் ஆக்சி குளோரைடு (CaOCl2)
* சாதாரண உப்பின் வேதிப்பெயர் சோடியம் குளோரைடு (Nacl)
* பி.வி.சி. பிளாஸ்டிக்கின் வேதிப்பெயர் பாலி வினைல் குளோரைடு.
* சோடியம் பைகார்பனேட் (ரொட்டிச் சோடா) NaHCO3 தீயணைக்கும் கருவியில் பயன்படுவதுடன், வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை நீக்கப் பயன்படுகிறது. மேலும் * சோடியம் பைகார்பனேட் ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்கப் பயன்படுகிறது.
* பேக்கிங் புவடரில் சோடியம் பை கார்பனேட்டும், டார்டாரிக் அமிலமும் உள்ளன. பேக்கிங் பவுடரில் நீரை சேர்க்கும்போது சோடியம் பை கார்பனேட்டும் அமிலமும் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயு உருவாகிறது. கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்போது அவற்றை உப்பச் (மேலெழும்ப வைத்து) மிருதுவாக்குவது கார்பன் டை ஆக்சைடே ஆகும்.
* சோடியம் கார்பனேட் அல்லது சலைவச் சோடா (Na2 Co3) சலவைத் தொழிலில் சலவைச் சோடாவாகப் பயன்படுகிறது. சோடியம் கார்பனேட், வீடுகளில் சுத்தம் செய்யும் பொருளாகவும் பன்படுகிறது. பலவித உலர்ந்த சோப்புப் பவுடர்களில் இது முக்கியப் பகுதிப் பொருளாக உள்ளது. மேலும் கடின நீரை மென்னீராக்கவும், எரிசோடா, போராக்ஸ், கண்ணாடி, சோப்பு போன்ற பல சோடிய சேர்மங்கள் தயாரிக்கவும் காகிதம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) (Nacl) உணவு சயாரிப்பிலும், எரிசோடா, வாஷிங் சோடா, சலவைச் சோடா போன்ற பல சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகவும், ஹைட்ரோகுளோரிக் அமிலம் தயாரிக்கவும், குளோரின் வாயு தயாரிப்பிலும், சோப்பு தயாரிப்பிலும், மிகக்குறைந்த வெப்பநிலையை உருவாக்கும் உறை கலவை (பனிக்கட்டி + சோடியம் குளோரைடு) தயாரிப்பிலும் பயன்படுகிறது.
* மேலும் மீன் இறைச்சி போன்றவற்றைக் கெடாமல் பாதுகாக்கவும் சோடியம் குளோரைடு பயன்படுகிறது.

தாவரவியல் - பூஞ்சைகள்

 பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
* வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது எனலாம்.
* பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றனய.
* பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology) என்று பெயர்
* பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
* விட்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் உலகம் மற்றும் தாவர உலகம் என்ற இரண்டு தனி உலகங்களாக வகைப்பட்டுள்ளது.
* பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
* பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
* மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்கக் பொருள்களின் மீது வாழ்கின்றன. எ.கா. ரைசோபஸ், அகாரிகஸ்
* பூஞ்சைகளின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* மைசீலியங்கள் கிளைத்த மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர்.
* பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
* மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
* மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
* ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்
* வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும். சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன.
* மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
* முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
* சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
பூஞ்சைகளின் தனிப் பண்புகள்:
* பூஞ்சையின் செல்களுக்கு செல் சுவர் உண்டு. இவை கைட்டின் எனப்படும் அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகளால் ஆன ஒரு பாலிமரினால் ஆனது. இது ஒரு மியூக்கோ பாலிசாக்கரைடு வகையைச் சார்ந்தது.
* பூஞ்சைகளில் பச்சையம் இல்லை. எனவே இவை பிற ஊட்டமுறையைச் சார்ந்தவை.
* பூஞ்சையில் சேமிப்புப் பொருள் தரசம்(ஸ்டார்ச்) கிடையாது. தரத்திற்கு பதிலாக சேமிப்பு பொருளாக எண்ணெய் மற்றும் கிளைக்கோஜன் உள்ளது.
பூஞ்சைகளின் உடல் அமைப்பு:
* பூஞ்சைகள் நன்கு கிளைத்து மெல்லிய நூல் வடிவ ஹைஃபாக்கள் எனப்படும் இலைகளால் ஆனது. ஹைஃபாக்கள் அனைத்தும் சேர்ந்து மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* ஹைஃபாக்களின் இடையில் செப்டம் எனப்படும் குறுக்குச் சுவர்களுடனோ அல்லது இல்லாமலோ பூஞ்சைகள் காணப்படலாம்.
* குறுக்குச் சுவர் அற்ற ஹைஃபாக்களில் பல நியூக்ளியஸ்கள் உள்ளன. இதற்கு சீனோசைட்டிக் என்று பெயர்.
பூஞ்சைகளின் உணவூட்ட முறை:
* பூஞ்சைகளிள் பிற ஊட்டமுறையைக் கொண்டவை. தமது உடலத்துக்கு வெளியே உள்ள ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
* எனவே பூஞ்சையில் உணவு செறித்தல் செல்லுக்கு வெளியே உள்ள நொதிகளின் உதவியால் செல்லுக்கு வெளியில் நடைபெறுகிறது. இந்த அம்சம் ஒர் வித்தியாசமான அம்சமாகும்.
* பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ(Decomposers), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ (Symbionts) பெறுகின்றன.
* பூஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிக்ள் ஊடுருவவும், உறிஞ்சுவதற்கும் சில சிறப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றன. இவை ஹாஸ்டோரியாக்கள் எனப்படுகின்றன.
* ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்ட வளர்ச்சியாகும்.
பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை:
* பூஞ்சைகளின் இரு முக்கியக் கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. அவை: 1.லைக்கன்கள் 2. மைக்கோரைசாக்கள்.
* ஆல்காக்களுக்கும், பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை லைக்கன்கள் ஆகும்.
* லைக்கன்கள் வகையில் காணப்படும் ஆல்கா, பச்சை ஆல்கா அல்லது நீலப்பசும் ஆல்கா, பூஞ்சைகளில் ஆஸ்கோமைசீட்ஸ் அல்லது பெசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்த பூஞ்சைகள் கூட்டுயிரி வாழ்க்கையை மேற்கொள்ளும்.
* பூஞ்சைகளுக்கும், சில உயர் தாவர வேர்களுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் எனப்படும்.
* இரு வகையான மைக்கோ ரைசாக்கள் காணப்படுகின்றன. 1. எக்டோடிராஃபிக் மைக்கோ ரைசாக்கள் 2. எண்டோடிராஃபிக் மைக்கோரைசாக்கள்.
* மரங்களிலிருந்து பூஞ்சைகள் கார்போ ஹைட்ரேட்டையும், வைட்டமின்களையும் பெறுகின்றன. அதற்குப் பதிலாக மண்ணின் மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாக பூஞ்சைகள் சிதைக்கின்றன. இவை எளிதாகத் தாவரங்களால் உறிஞ்சப்படுகின்றன.
பூஞ்சைகளின் வகைப்பாடு:
* ஆல்காக்களுக்கு இணையான ஒரு வகுப்பாக கருதப்பட்டு தாலோஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில் வகைப்படுத்தப்பட்டன.
* வாஸ்குலார் திசுக்களற்ற வேர், தண்டு, இலை என்று பிரித்தறிய முடியாத உடலம் தாலஸ் ஆகும்.
* பூஞ்சைகள் மிக்சோமைக்கோட்டா, யூமைக்கோட்டா என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* மிக்சோமைக்கோட்டாவிற்கு எடுத்துக்காட்டு ஸ்லைம் மோல்டுகள்.
* யூமைக்கேோட்டா என்ற பிரிவின் கீழ் ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. அவை: 1. மாஸ்டிகோ மைக்கோட்டினா 2. சைகோ மைக்கோட்டினா 3. ஆஸ்கோ மைகோட்டினா 4. பெசிடியோ மைசீட்டுகள் 5. டியூட்ரோ மைசீட்டுகள் ஆகியன.
* கருப்பு ரொட்டிக் காளான்கள் என்று அழைக்கப்படும் ரைசோபஸ் மற்றும் மியூக்கர், சைகோ மைகோட்டினா வகுப்பைச் சார்ந்தவை.
* மியூக்கர் ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும். இது பொதுவாக ஊசிக்காளான் என்று அழைக்கப்படுகிறது. கருப்பு ரொட்டிக் காளான் என்றும் இதை அழைப்பதுண்டு. இப்பேரினத்தில் 50 சிற்றினங்கள் உள்ளன.
* மியூக்கர் சைகோ மைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்தது. மியூக்கரின் ஒய்வு நிலையிலுள்ள ஸ்போர்கள் கிளாமிடோஸ்போர்கள் எனப்படும்.

தாவரவியல் - பூஞ்சைகள்

 பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
* வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது எனலாம்.
* பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றனய.
* பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology) என்று பெயர்
* பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
* விட்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் உலகம் மற்றும் தாவர உலகம் என்ற இரண்டு தனி உலகங்களாக வகைப்பட்டுள்ளது.
* பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
* பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
* மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்கக் பொருள்களின் மீது வாழ்கின்றன. எ.கா. ரைசோபஸ், அகாரிகஸ்
* பூஞ்சைகளின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* மைசீலியங்கள் கிளைத்த மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர்.
* பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
* மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
* மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
* ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்
* வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும். சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன.
* மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
* முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
* சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
பூஞ்சைகளின் தனிப் பண்புகள்:
* பூஞ்சையின் செல்களுக்கு செல் சுவர் உண்டு. இவை கைட்டின் எனப்படும் அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகளால் ஆன ஒரு பாலிமரினால் ஆனது. இது ஒரு மியூக்கோ பாலிசாக்கரைடு வகையைச் சார்ந்தது.
* பூஞ்சைகளில் பச்சையம் இல்லை. எனவே இவை பிற ஊட்டமுறையைச் சார்ந்தவை.
* பூஞ்சையில் சேமிப்புப் பொருள் தரசம்(ஸ்டார்ச்) கிடையாது. தரத்திற்கு பதிலாக சேமிப்பு பொருளாக எண்ணெய் மற்றும் கிளைக்கோஜன் உள்ளது.
பூஞ்சைகளின் உடல் அமைப்பு:
* பூஞ்சைகள் நன்கு கிளைத்து மெல்லிய நூல் வடிவ ஹைஃபாக்கள் எனப்படும் இலைகளால் ஆனது. ஹைஃபாக்கள் அனைத்தும் சேர்ந்து மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* ஹைஃபாக்களின் இடையில் செப்டம் எனப்படும் குறுக்குச் சுவர்களுடனோ அல்லது இல்லாமலோ பூஞ்சைகள் காணப்படலாம்.
* குறுக்குச் சுவர் அற்ற ஹைஃபாக்களில் பல நியூக்ளியஸ்கள் உள்ளன. இதற்கு சீனோசைட்டிக் என்று பெயர்.
பூஞ்சைகளின் உணவூட்ட முறை:
* பூஞ்சைகளிள் பிற ஊட்டமுறையைக் கொண்டவை. தமது உடலத்துக்கு வெளியே உள்ள ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
* எனவே பூஞ்சையில் உணவு செறித்தல் செல்லுக்கு வெளியே உள்ள நொதிகளின் உதவியால் செல்லுக்கு வெளியில் நடைபெறுகிறது. இந்த அம்சம் ஒர் வித்தியாசமான அம்சமாகும்.
* பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ(Decomposers), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ (Symbionts) பெறுகின்றன.
* பூஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிக்ள் ஊடுருவவும், உறிஞ்சுவதற்கும் சில சிறப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றன. இவை ஹாஸ்டோரியாக்கள் எனப்படுகின்றன.
* ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்ட வளர்ச்சியாகும்.
பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை:
* பூஞ்சைகளின் இரு முக்கியக் கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. அவை: 1.லைக்கன்கள் 2. மைக்கோரைசாக்கள்.
* ஆல்காக்களுக்கும், பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை லைக்கன்கள் ஆகும்.
* லைக்கன்கள் வகையில் காணப்படும் ஆல்கா, பச்சை ஆல்கா அல்லது நீலப்பசும் ஆல்கா, பூஞ்சைகளில் ஆஸ்கோமைசீட்ஸ் அல்லது பெசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்த பூஞ்சைகள் கூட்டுயிரி வாழ்க்கையை மேற்கொள்ளும்.
* பூஞ்சைகளுக்கும், சில உயர் தாவர வேர்களுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் எனப்படும்.
* இரு வகையான மைக்கோ ரைசாக்கள் காணப்படுகின்றன. 1. எக்டோடிராஃபிக் மைக்கோ ரைசாக்கள் 2. எண்டோடிராஃபிக் மைக்கோரைசாக்கள்.
* மரங்களிலிருந்து பூஞ்சைகள் கார்போ ஹைட்ரேட்டையும், வைட்டமின்களையும் பெறுகின்றன. அதற்குப் பதிலாக மண்ணின் மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாக பூஞ்சைகள் சிதைக்கின்றன. இவை எளிதாகத் தாவரங்களால் உறிஞ்சப்படுகின்றன.
பூஞ்சைகளின் வகைப்பாடு:
* ஆல்காக்களுக்கு இணையான ஒரு வகுப்பாக கருதப்பட்டு தாலோஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில் வகைப்படுத்தப்பட்டன.
* வாஸ்குலார் திசுக்களற்ற வேர், தண்டு, இலை என்று பிரித்தறிய முடியாத உடலம் தாலஸ் ஆகும்.
* பூஞ்சைகள் மிக்சோமைக்கோட்டா, யூமைக்கோட்டா என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* மிக்சோமைக்கோட்டாவிற்கு எடுத்துக்காட்டு ஸ்லைம் மோல்டுகள்.
* யூமைக்கேோட்டா என்ற பிரிவின் கீழ் ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. அவை: 1. மாஸ்டிகோ மைக்கோட்டினா 2. சைகோ மைக்கோட்டினா 3. ஆஸ்கோ மைகோட்டினா 4. பெசிடியோ மைசீட்டுகள் 5. டியூட்ரோ மைசீட்டுகள் ஆகியன.
* கருப்பு ரொட்டிக் காளான்கள் என்று அழைக்கப்படும் ரைசோபஸ் மற்றும் மியூக்கர், சைகோ மைகோட்டினா வகுப்பைச் சார்ந்தவை.
* மியூக்கர் ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும். இது பொதுவாக ஊசிக்காளான் என்று அழைக்கப்படுகிறது. கருப்பு ரொட்டிக் காளான் என்றும் இதை அழைப்பதுண்டு. இப்பேரினத்தில் 50 சிற்றினங்கள் உள்ளன.
* மியூக்கர் சைகோ மைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்தது. மியூக்கரின் ஒய்வு நிலையிலுள்ள ஸ்போர்கள் கிளாமிடோஸ்போர்கள் எனப்படும்.

தாவரவியல் - பூஞ்சைகள்

 பூஞ்சைகள் மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் ஒன்று.
* வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது எனலாம்.
* பூமியில் எல்லா வகை சுற்றுச்சுழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றனய.
* பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவிற்கு மைகாலஜி (Mycology) என்று பெயர்
* பூஞ்சைகள் பச்சயமற்ற தாலோபைட்டு வகையைச் சார்ந்தவை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
* விட்டேக்கரின் ஐந்துலக வகைப்பாட்டில் பூஞ்சைகள் உலகம் மற்றும் தாவர உலகம் என்ற இரண்டு தனி உலகங்களாக வகைப்பட்டுள்ளது.
* பொதுவாக பூஞ்சைகள் பல செல்களால் ஆன யூகேரியோட்டுகள் ஆகும்.
* பூஞ்சைகள் மட்குண்ணிகள், ஒட்டுண்ணிகள் என இரண்டு வகையான வேறுபட்ட ஊட்ட முறைகளை கொண்டுள்ளது.
* மட்குண்ணிகள் இறந்த மற்றும் அழுகிய அங்கக் பொருள்களின் மீது வாழ்கின்றன. எ.கா. ரைசோபஸ், அகாரிகஸ்
* பூஞ்சைகளின் உடலம் மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* மைசீலியங்கள் கிளைத்த மெல்லிய இழைகளால் ஆனவை. இந்த இழைகளுக்கு ஹைபாக்கள் என்று பெயர்.
* பூஞ்சைகளின் செல் சுவர் கைட்டின் மற்றும் பூஞ்சை செல்லுலோஸினால் ஆனது.
* மைசீலியம் வளரக்கூடிய தளத்திற்கு வளர்தளம் என்று பெயர்.
* மைசீலியமானது மெல்லிய இழைகள் போன்ற ஹைபாக்களால் ஆனது.
* ஈஸ்ட்டு போன்ற பூஞ்சைகள் ஒரு செல் உயிரினங்களாகும்
* வண்ணான் படை அல்லது தேமல் போன்றவை பூஞ்சைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களாகும். சில பூஞ்சைகள் மரப்பட்டையில் வளர்கின்றன.
* மரக்கட்டையின் மீது வளர்வது சைலோபில்லஸ் அல்லது மரக்கட்டை பூஞ்சையாகும்.
* முடி அல்லது மாட்டுக் கொம்பு போன்ற பொருளின் மீது வளர்பவை கெராட்டினோபில்லஸ் அல்லது கெரடின் பூஞ்சைகள் எனப்படும்.
* சில பூஞ்சைகள் உயர்நிலைத் தாவரங்களின் வேர்களோடு கூட்டுயிரியாக வளர்கின்றன. இந்த வகை வேர்களுக்கு மைகோரைசா என்று பெயர்.
பூஞ்சைகளின் தனிப் பண்புகள்:
* பூஞ்சையின் செல்களுக்கு செல் சுவர் உண்டு. இவை கைட்டின் எனப்படும் அசிட்டைல் குளுக்கோசமைன் அலகுகளால் ஆன ஒரு பாலிமரினால் ஆனது. இது ஒரு மியூக்கோ பாலிசாக்கரைடு வகையைச் சார்ந்தது.
* பூஞ்சைகளில் பச்சையம் இல்லை. எனவே இவை பிற ஊட்டமுறையைச் சார்ந்தவை.
* பூஞ்சையில் சேமிப்புப் பொருள் தரசம்(ஸ்டார்ச்) கிடையாது. தரத்திற்கு பதிலாக சேமிப்பு பொருளாக எண்ணெய் மற்றும் கிளைக்கோஜன் உள்ளது.
பூஞ்சைகளின் உடல் அமைப்பு:
* பூஞ்சைகள் நன்கு கிளைத்து மெல்லிய நூல் வடிவ ஹைஃபாக்கள் எனப்படும் இலைகளால் ஆனது. ஹைஃபாக்கள் அனைத்தும் சேர்ந்து மைசீலியம் என்று அழைக்கப்படுகிறது.
* ஹைஃபாக்களின் இடையில் செப்டம் எனப்படும் குறுக்குச் சுவர்களுடனோ அல்லது இல்லாமலோ பூஞ்சைகள் காணப்படலாம்.
* குறுக்குச் சுவர் அற்ற ஹைஃபாக்களில் பல நியூக்ளியஸ்கள் உள்ளன. இதற்கு சீனோசைட்டிக் என்று பெயர்.
பூஞ்சைகளின் உணவூட்ட முறை:
* பூஞ்சைகளிள் பிற ஊட்டமுறையைக் கொண்டவை. தமது உடலத்துக்கு வெளியே உள்ள ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
* எனவே பூஞ்சையில் உணவு செறித்தல் செல்லுக்கு வெளியே உள்ள நொதிகளின் உதவியால் செல்லுக்கு வெளியில் நடைபெறுகிறது. இந்த அம்சம் ஒர் வித்தியாசமான அம்சமாகும்.
* பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ(Decomposers), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ (Symbionts) பெறுகின்றன.
* பூஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிக்ள் ஊடுருவவும், உறிஞ்சுவதற்கும் சில சிறப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றன. இவை ஹாஸ்டோரியாக்கள் எனப்படுகின்றன.
* ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்ட வளர்ச்சியாகும்.
பூஞ்சைகளின் கூட்டுயிர் வாழ்க்கை:
* பூஞ்சைகளின் இரு முக்கியக் கூட்டுயிர் வாழ்க்கையில் ஈடுபடுகின்றன. அவை: 1.லைக்கன்கள் 2. மைக்கோரைசாக்கள்.
* ஆல்காக்களுக்கும், பூஞ்சைகளுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கை லைக்கன்கள் ஆகும்.
* லைக்கன்கள் வகையில் காணப்படும் ஆல்கா, பச்சை ஆல்கா அல்லது நீலப்பசும் ஆல்கா, பூஞ்சைகளில் ஆஸ்கோமைசீட்ஸ் அல்லது பெசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்த பூஞ்சைகள் கூட்டுயிரி வாழ்க்கையை மேற்கொள்ளும்.
* பூஞ்சைகளுக்கும், சில உயர் தாவர வேர்களுக்கும் இடையே காணப்படும் கூட்டுயிர் வாழ்க்கையே மைக்கோரைசாக்கள் எனப்படும்.
* இரு வகையான மைக்கோ ரைசாக்கள் காணப்படுகின்றன. 1. எக்டோடிராஃபிக் மைக்கோ ரைசாக்கள் 2. எண்டோடிராஃபிக் மைக்கோரைசாக்கள்.
* மரங்களிலிருந்து பூஞ்சைகள் கார்போ ஹைட்ரேட்டையும், வைட்டமின்களையும் பெறுகின்றன. அதற்குப் பதிலாக மண்ணின் மட்கில் காணப்படும் புரதங்களை அமினோ அமிலங்களாக பூஞ்சைகள் சிதைக்கின்றன. இவை எளிதாகத் தாவரங்களால் உறிஞ்சப்படுகின்றன.
பூஞ்சைகளின் வகைப்பாடு:
* ஆல்காக்களுக்கு இணையான ஒரு வகுப்பாக கருதப்பட்டு தாலோஃபைட்டா என்ற பிரிவின் கீழ் தாவர உலகில் வகைப்படுத்தப்பட்டன.
* வாஸ்குலார் திசுக்களற்ற வேர், தண்டு, இலை என்று பிரித்தறிய முடியாத உடலம் தாலஸ் ஆகும்.
* பூஞ்சைகள் மிக்சோமைக்கோட்டா, யூமைக்கோட்டா என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
* மிக்சோமைக்கோட்டாவிற்கு எடுத்துக்காட்டு ஸ்லைம் மோல்டுகள்.
* யூமைக்கேோட்டா என்ற பிரிவின் கீழ் ஐந்து துணைப் பிரிவுகள் உள்ளன. அவை: 1. மாஸ்டிகோ மைக்கோட்டினா 2. சைகோ மைக்கோட்டினா 3. ஆஸ்கோ மைகோட்டினா 4. பெசிடியோ மைசீட்டுகள் 5. டியூட்ரோ மைசீட்டுகள் ஆகியன.
* கருப்பு ரொட்டிக் காளான்கள் என்று அழைக்கப்படும் ரைசோபஸ் மற்றும் மியூக்கர், சைகோ மைகோட்டினா வகுப்பைச் சார்ந்தவை.
* மியூக்கர் ஒரு மட்குண்ணிப் பூஞ்சையாகும். இது பொதுவாக ஊசிக்காளான் என்று அழைக்கப்படுகிறது. கருப்பு ரொட்டிக் காளான் என்றும் இதை அழைப்பதுண்டு. இப்பேரினத்தில் 50 சிற்றினங்கள் உள்ளன.
* மியூக்கர் சைகோ மைசீட்ஸ் வகுப்பைச் சேர்ந்தது. மியூக்கரின் ஒய்வு நிலையிலுள்ள ஸ்போர்கள் கிளாமிடோஸ்போர்கள் எனப்படும்.

கடினமாக உழைத்தால் கலெக்டர் ஆகலாம்!

கடினமாக உழைத்தால் கலெக்டர் ஆகலாம்!

கலெக்டர் ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவு. கூடுதல் ஆர்வம், விடா முயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் ஆகலாம். இந்திய அளவில் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் தேர்வு, ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்திய ஆட்சிப் பணி, இந்திய அயல்நாட்டுப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி உள்ளிட்ட 24 உயர் பதவிகளில் பொறுப்பு வகிக்க முடியும்.

பிரிலிமினரி, மெயின், பர்சானலிட்டி அண்டு இன்டர்வியூ என யு.பி.எஸ்.சி.,. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் 21 முதல் 30 வயது வரையும், ஓ.பி.சி. பிரிவினர் 33 வயது வரையும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 35 வயது வரையும் தேர்வு எழுதலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயதில் தளர்வு அளிக்கப்படுகிறது. ஒருவர் நான்கு முறை தேர்வு எழுதலாம். ஓ.பி.சி.,

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஏழு முறை எழுதலாம்.

பிரிலிமினரி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் பொது அறிவு, இரண்டாம் தாள் திறன் அறிவு. தலா 200 மதிப்பெண்கள். இரண்டாம் கட்டமாக நடத்தப்படும் மெயின் தேர்வு எட்டு தாள்கள் கொண்டது. கடந்த 2013-ம் ஆண்டு மெயின் தாளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல் பிரிவு தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. இரண்டாம் பிரிவு ஏழு தாள்கள் கொண்டது. தகுதித் தேர்வு பகுதி - ஏ, பகுதி -பி என இரு பிரிவாக நடத்தப்படுகிறது.

பகுதி -ஏ தேர்வு இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 8-ன் படி அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து எழுதலாம். பகுதி - பி ஆங்கிலத்தில் எழுத வேண்டும். இவ்விரு தேர்வுக்கும் மதிப்பெண்கள் தலா 300. தகுதித் தேர்வின் மதிப்பெண்கள், சிவில் சர்வீஸ் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களுடன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மெயின் தேர்வு இரு பிரிவுகளை கொண்டது. ஒன்று தகுதித் தேர்வு. மற்றொன்றில் ஏழு தாள்களை எழுத வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே ஏழு தாள்களையும் திருத்துவார்கள்.

தேர்வுக்கு தயாராக விரும்புவோர் மொழிப் பாடத்தில் புலமை பெற்றிருப்பது அவசியம். 21 வயதில் தேர்வை எழுத ஆரம்பிப்பவர்கள் பலரும் தேர்ச்சி அடையவில்லை என்றால் சோர்வடைந்து விடுகின்றனர். 68 சதவீதம் பேர் இரண்டு, மூன்றாவது தேர்விலே தேர்ச்சி பெறுகிறார்கள். முதல் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவே. எனவே, பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால் கலெக்டர் கனவு கைகூடும்!

இஸ்ரோ எதிர்நோக்கும் ஜி.எஸ்.எல்.வி. சவால்!

இந்திய விண்வெளித் துறையின் கவனம் எல்லாம் இப்போது ஜனவரி 5-ல்தான் குவிந்து கிடக்கிறது. அன்றுதான் ஜி. எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட இருக்கிறது.
சுமார் இரண்டு டன் எடை கொண்ட ஜிசாட் -14 என்னும் செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரே செலுத்தும் திறன்கொண்ட இந்த ராக்கெட் வெற்றி பெற்றாக வேண்டுமே என நம்முடைய விண்வெளித் துறையினர் கவலைகொண்டிருந்தால் அதில் வியப்பில்லை. ஏனெனில், இதுவரை இந்த வகை ராக்கெட்டை ஏழு தடவை உயரே செலுத்தியதில் மூன்று தடவைதான் வெற்றி கிடைத்திருக்கிறது.
பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.என்ன வேறுபாடு?
உள்ளபடி நம்மிடம் இரண்டு வகை ராக்கெட்டுகள் உள்ளன. ஒன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட். இது பொதுவில் சுமார் 400 அல்லது 600 கி.மீ. உயரத்தில் இரண்டு டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்டது.
1993-ல் தொடங்கி இதுவரை ஒரே ஒரு தோல்வியை மட்டுமே கண்டுள்ளது. 24 தடவை வெற்றி கண்டுள்ளது. வெற்றி மேல் வெற்றியைக் குவித்துள்ள இந்த வகை ராக்கெட் மிக நம்பகமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான், சில வெளி நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் மூலம் செலுத்தச் செய்துள்ளன. இதன் திறன் இரண்டு டன் என்றாலும், இதுவரை அதிகபட்சமாக 1,850 கிலோ கிராம்வரைதான் இது சுமந்து சென்றிருக்கிறது.
ஆனால், இந்தியா சிறியசெயற்கைக்கோள்களை மட்டுமின்றி எடை மிக்க செயற்கைக்கோள்களையும் தயாரித்துவருகிறது. இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள். எடை அதிகம் கொண்டவை. உதாரணமாக, இந்தியா தயாரித்த ஜிசாட் -8 செயற்கைக்கோளின் எடை மூன்று டன். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இருக்க வேண்டியவை. இந்தவகை செயற்கைக்கோள்களை அந்த அளவு உயரத்துக்குக் கொண்டுசெல்ல இந்தியாவிடம் இப்போதைக்கு சக்திமிக்க ராக்கெட் கிடையாது. ஆகவேதான் ஜி.எஸ்.எல்.வி-யை நோக்கி நாம் கவனம் செலுத்துகிறோம்.
இப்போது என்ன செய்கிறோம்?
இப்போது நாம் தயாரித்துவரும் எடை மிக்க செயற்கைக்கோள்கள் அனைத்தும் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு கயானாவில் உள்ள கூரூ விண்வெளிக் கேந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்பட்டு வருகின்றன. இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்தியாவின் அவ்வகை செயற்கைக்கோள்களை கூரூவுக்கு எடுத்துச் செல்லும் செலவு, உயரே செலுத்தித் தருவதற்கு நாம் அளிக்கும் கட்டணம் ஆகிய வகையில் செலவு அதிகம். ஆகவே, சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா ஈடுபட்டது.
கிரையோஜெனிக் இன்ஜின் தரும் சாதகம்
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையே பெரிய அளவில் செய்தால் அது சக்திமிக்கதாகிவிடாதா என்று கேட்கலாம். அது சாத்தியமானதல்ல. ஒரு ராக்கெட்டில் அதிக உந்து திறனை அளிக்கின்ற இன்ஜினைப் பொருத்தினால்தான் அது அதிக சக்தி பெறும். அந்த வகை இன்ஜின் கிரையோஜெனிக் இன்ஜின் எனப்படுகிறது.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை நமக்குத் தெரியும். இந்த இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி, அந்த இரண்டும் சேர்ந்து எரியும்படி செய்தால் அது அதிக உந்து திறனை அளிக்கும். ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 223 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகிவிடும். ஹைட்ரஜன் வாயுவை இதேபோல மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகிவிடும். இந்த வாயுக்களை இவ்விதம் குளிர்விப்பது பெரிய பிரச்சினை அல்ல. கடும் குளிர் நிலையில் இருக்கிற இந்த திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் இன்ஜினை உருவாக்குவதில்தான் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த இரண்டையும் பயன்படுத்துகிற ராக்கெட் இன்ஜின் கிரையோஜெனிக் (கடும் குளிர்விப்பு நிலை) ராக்கெட் இன்ஜின் எனப்படுகிறது.
ராக்கெட் என்பது ஒன்றின்மீது ஒன்று பொருத்தப்பட்ட மூன்று அடுக்கு ராக்கெட்டாக அல்லது இரண்டு அடுக்கு ராக்கெட்டாக இருக்கும். ராக்கெட்டின் முனையில் இடம்பெறும் அடுக்கானது இவ்விதம் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டதாக இருக்கும்.
உலகில் நான்கு டன் அல்லது ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்தும் சக்திமிக்க ராக்கெட்டுகள் அனைத்திலும் கிரையோஜெனிக் இன்ஜின்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்தவகை இன்ஜின்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தைக் காசு கொடுத்து ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா 1990-களில் முயன்றது. ஆனால் அமெரிக்கா குறுக்கிட்டு, ரஷ்யாவிடமிருந்து இத்தொழில்நுட்பம் கிடைக்காதபடி தடுத்துவிட்டது.
இந்நிலையில், இந்தியா கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. இவ்வித இன்ஜின்கள்குறித்து ஆராய்ச்சி நடத்தவும் மற்றும் இவற்றைச் செயல்படுத்தி சோதிப்பதற்காகவும் ஒரு கேந்திரம் தமிழகத்தில் மகேந்திரகிரி என்னுமிடத்தில் உள்ளது.
கிரையோஜெனிக் சவால்கள்
கிரையோஜெனிக் இன்ஜின்களை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ராக்கெட் இன்ஜினில் இந்த இரு திரவங்களையும் தனித்தனித் தொட்டிகளில் அதே குளிர் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் விட்டால் இரண்டும் ஆவியாகிவிடும். ஆகவே, ராக்கெட் கிளம்புவதற்குச் சற்று முன்னர்
தான் இந்த இரு திரவங்களையும் நிரப்புவர். ராக்கெட் கிளம்புவதற்குள் எப்படியும் கொஞ்சம் ஆவியாகிவிடும் என்பதால், சற்று அதிகமாகவே நிரப்புவர். இந்த இரு தொட்டிகளிலிருந்தும் திரவ ஆக்சிஜனும் திரவ ஹைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில் இன்ஜின் அறைக்கு வர வேண்டும். தொட்டிகளிலிருந்து இன்ஜின் அறைக்கு இவற்றைச் செலுத்துவதற்கான பம்புகள், வால்வுகள், மோட்டார்கள் ஆகியவை கடும் குளிர் நிலையைத் தாங்கும் திறன்கொண்ட விசேஷ உலோகங்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கடும் குளிர்நிலையில் சாதாரண உலோகங்கள் பொடிப் பொடியாகிவிடும் அல்லது உருக்குலைந்துவிடும்.
இன்ஜின் அறையில் இரண்டும் கலந்துஎரியும்போது பயங்கர வெப்பம் தோன்றும்.அந்த வெப்பத்தினால் இன்ஜின் அறையின்உலோகத்தால் ஆன சுவர்கள் உருகிவிடக்கூடாது. இப்படிப் பல பிரச்சினைகள். இவற்றையெல்லாம் சமாளித்து இந்தியா உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜினைத் தரையில் நிலையாக வைத்து நடத்திய பரிசோதனைகளில் பல தடவை வெற்றி காணப்பட்டுள்ளது.
எடைமிக்க செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்குப் பொதுவில் மூன்றடுக்கு ராக்கெட் பயன்படுத்தப்படும். சில நாடுகள் இரண்டு அடுக்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூன்று அடுக்கு ராக்கெட் ஆகும்.
இதில் மூன்றாவது அடுக்கில் பொருத்துவதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கப்பட்டது.முந்தைய அனுபவங்கள் இந்தியா சொந்தமாகத் தயாரித்த கிரையோஜெனிக் இன்ஜினை (மூன்றாவது அடுக்கில்) பொருத்தி 2010-ம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின் முகப்பில் 2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ராக்கெட் தோல்வியில் முடிந்தது. மூன்றாவது அடுக்கிலான கிரையோஜெனிக் இன்ஜின் செயல்படாமல் போனதே தோல்விக்குக் காரணம்.
இதன் பிறகு, அதே ஆண்டு டிசம்பரில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட்டது. அப்போது வேறு காரணங்களால் அது திசை மாறியபோது, கடலுக்கு மேலாக நடு வானில் அழிக்கப்பட்டது. பிறகு, 2013 ஆகஸ்டில் மறுபடி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைச் செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ராக்கெட்டை உயரே செலுத்துவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த சமயத்தில், ராக்கெட்டிலிருந்து ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு ராக்கெட்டைச் செலுத்துவது ரத்துசெய்யப்பட்டது.
இப்படியான பின்னணியில்தான் வருகிற ஜனவரி 5-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட இருக்கிறது. ராக்கெட்டின் வெற்றி பெரிதும் கிரையோஜெனிக் இன்ஜினின் செயல்பாட்டைப் பொருத்தது எனலாம்.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏன் 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த வேண்டும் என்று கேட்கலாம்.பல வீடுகளில் மாடியில் டி.வி. நிகழ்ச்சிகளைப் பெறுவதற்காகக் கிண்ண வடிவ ஆன்டெனா பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை தென்கிழக்கு அல்லது
தென்மேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். இந்த ஆன்டெனா ஒன்றின் மையத்திலிருந்து அது நோக்கி இருக்கும் திசையை நோக்கிக் கற்பனையாகக் கோடு கிழித்தால், அது உயரே இருக்கின்ற ஒரு செயற்கைக்கோளில் போய் முடியும்.
அந்தக் குறிப்பிட்ட செயற்கைக்கோளிலிருந்துதான் அந்த ஆன்டெனா சிக்னல்களைப் பெறுகிறது. சிக்னல்கள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்பவை. ஆகவே, ஆன்டெனாவும் செயற்கைக்கோளும் எப்போதும் ஒன்றை ஒன்று பார்த்தபடியே இருந்தாக வேண்டும். ஆணியடித்து நிறுவப்பட்ட ஆன்டெனா போலவே வானில் அந்த செயற்கைக்கோளும் ஒரே இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். நிலையாக இருக்க முடியாது. ஆனால், அது நிலையாக இருப்பது போன்று செய்ய முடியும்.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள ஒருநாள் ஆகிறது. சரியாகச் சொன்னால், 23 மணி 56 நிமிஷம் 4 வினாடி ஆகிறது. ஆகவே, பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருக்கின்ற ஒரு செயற்கைகோள் ஒன்று பூமியைச் சுற்ற மிகச்சரியாக அதே நேரத்தை எடுத்துக்கொண்டால், அது பூமியைச் சுற்றவும் செய்யும்; ஒரே இடத்தில் இருப்பதுபோலவும் ஆகிவிடும். அந்த அளவில் ஒரு செயற்கைக்கோள் 35,786 கி.மீ. உயரத்தில் இருக்கும்படி செய்தால், அது பூமியை ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக மேலே குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும். இது இயற்கையின் நியதி. ஆகவேதான் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அந்த அளவு உயரத்துக்குச் செலுத்தப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஜிசாட்-14 போன்ற செயற்கைக்கோள்களை 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த முடியாதா என்று கேட்கலாம். ஏற்கெனவே கூறியபடி அதன்
திறன் சுமாரானது. மேலும், அதிக உயரத்துக்கு அது செல்ல வேண்டுமானால், அது ஏற்றிச் செல்லும் சுமையைக் குறைத்தாக வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளில் அந்தவகை ராக்கெட் இரண்டு முறைதான் 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்தப்பட்டது. அதாவது, 2002-ம் ஆண்டில் அது மெட்சாட் (அதன் பெயர் பின்னர் கல்பனா என்று மாற்றப்பட்டது) எனப்பட்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்துக்குக் கொண்டுசென்று செலுத்தியது. அதன் எடை 1,060 கிலோ. கல்பனா செயற்கைக்கோளுடன் ஒப்பிடுகையில், ஜிசாட்-14 செயற்கைக்கோளின் எடை சுமார் இரண்டு டன். பின்னர் 2011-ம்
ஆண்டில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஜிசாட்-12 செயற்கைக்கோள் அந்த உயரத்துக்குச் செலுத்தப்பட்டது. அதன் எடை 1,400 கிலோ கிராம்.
ஏன் முடியாது?
“பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2008-ல் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பினோமே, அதே ராக்கெட் மூலம் அண்மையில் செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பி சாதனை புரிந்தோமே?” என்றும் கேட்கலாம். இந்த இரண்டுமே 1,400 கிலோ கிராம் எடைக்குக் குறைவு. இந்த இரண்டையும் பி.எஸ்எல்.வி. ராக்கெட் சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு சென்று, பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றும்படி செய்தது. இது அந்த ராக்கெட்டின் திறனுக்கு உட்பட்டதே.
இவை உயரே சென்ற பின்னர், விசேஷ உத்திகளைப் பின்பற்றி - இயற்கையின் சக்தியைப் பயன்படுத்தி - சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பிவைத்தோம். வேறுவிதமாகச் சொன்னால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டானது அவற்றை நேரடியாகச் சந்திரனுக்கோ செவ்வாய்க்கோ அனுப்பிவிடவில்லை. சக்திமிக்க ராக்கெட் அப்போது நம்மிடம் இருந்திருக்குமானால், அவற்றை நேரடியாகவே சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பியிருக்க முடியும்.எனினும், சுமாரான திறன்கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தி விசேஷ உத்திகளைக் கையாண்டு நாம் சாதனை படைத்தோம் என்பது பெருமைக்குரிய விஷயமே.
ஒரு ராக்கெட் அதிகத் திறன் கொண்டதாக இருந்தால்தான் அது அதிக உயரத்துக்குச் செல்லும். அதிக வேகத்துடன் பாயும். அத்துடன் அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தும்.
இப்போது செலுத்தப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி. (மார்க் 2) ராக்கெட்கூட நமக்குப் போதாது. ஆகவேதான் இதைவிட இன்னும் திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டுவருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்டது. நமக்கு இப்போது அந்த அளவு எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகின்றன. முதலாவதாக, நாம் டி.வி-யில் பார்க்கிற நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள் மூலமாகத்தான் நம்மை வந்தடைகின்றன. பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். ஆனால், இவ்வித செயற்கைக்கோள்கள் மேலும் பல பணிகளைச் செய்கின்றன. பங்குச்சந்தை வர்த்தகம் இவை மூலம்தான் நடைபெறுகின்றன. பல தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்புப் பணிகள் இவற்றின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. ஒரு மருத்துவமனையில் நடக்கின்ற அபூர்வமான அறுவைசிகிச்சையை வேறு மருத்துவமனைகளில் நேரடியாகக் காண உதவுகின்றன. கல்வித் துறையிலும் இவற்றின் பங்கு உள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இல்லாவிடில், நாட்டில் பல முக்கியப் பணிகள் ஸ்தம்பித்துவிடும் என்ற நிலை உள்ளது.
நாட்டில் தகவல் தொடர்புத் தேவைகள் அதிகரித்துவருகின்றன. பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன. ஆகவேதான் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் இவ்வித செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன. இப்போது பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்த மாதிரியில் நம் தலைக்குமேலே 35 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் 13 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டுவருகின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனாலும் இது போதவில்லை.
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுள் சுமார் 12 ஆண்டுகள். ஆகவே, ஏற்கெனவே உயரே உள்ள ஒரு செயற்கைக்கோளின் ஆயுள் முடிந்துவிட்டால், அந்த இடத்தை நிரப்பப் புதிதாக ஒன்றைக் காலாகாலத்தில் செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, நாட்டில் புதிது புதிதாக டி.வி. சேனல்கள் தோன்றிவருகின்றன. அத்துடன் கிண்ண வடிவ ஆன்டெனாக்கள் மூலம் டி.வி. சேனல்களை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன. இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் தங்களுக்கு மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்திவருகின்றன. வேறு தரப்பினரும் இவ்விதம் கோருகின்றனர்.
தகவல் தொடர்பு செயற்கைகோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர் என்னும் கருவிகளே கீழிருந்து டி.வி. நிறுவனங்கள் போன்றவை அனுப்பும் சிக்னல்களைப் பெற்று, அவை இந்தியா முழுவதிலும் கிடைக்கும்படி செய்கின்றன.
இப்பிரச்சினையைச் சமாளிக்கும் நோக்கில்தான் இஸ்ரோ நிறுவனம் மேலும் அதிகஎடைகொண்ட, மேலும் அதிக டிரான்ஸ்பாண்டர்களைக்கொண்ட செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக, 1995-ல் செலுத்தப்பட்ட இன்சாட்-2 சிசெயற்கைக்கோளின் எடை 2,106 கிலோ கிராம். 2003-ல் செலுத்தப்பட்ட 3 ஏ செயற்கைக்கோளின் எடை 2,950 கிலோ கிராம். இத்துடன் ஒப்பிட்டால் 2012-ல் செலுத்தப்பட்ட ஜிசாட் -10 செயற்கைக்கோளின் எடை 3,455 கிலோ கிராம். இவற்றில் இடம்பெற்ற டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துவந்துள்ளது. இன்சாட் 2 சி செயற்கைக்கோளில் 20 டிரான்பாண்டர்களே இடம் பெற்றிருந்தன. ஆனால், ஜிசாட்- 10 செயற்கைக்கோளில் 30 டிரான்ஸ்பாண்டர்கள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் ஏரியான் ராக்கெட் மூலமே செலுத்தப்பட்டவை.
அடுத்த சில ஆண்டுகளில் செலுத்தப்பட இருக்கும் ஜிசாட்-11 செயற்கைக்கோள் நாலரை டன் எடைகொண்டதாகவும் 40 டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டதாகவும் விளங்கும். ஒருவேளை இது இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படலாம். எடைமிக்க செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திறன் இஸ்ரோவிடம் உள்ளது.
அன்றுமுதல் இன்றுவரை இது விஷயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இஸ்ரோ, ஆரம்பம் முதல் ஒரு தெளிவான கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளது. அதாவது, செயற்கைக்கோள் தயாரிப்பையும் ராக்கெட்டுகளை உருவாக்குவதையும்
ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டுக்கொள்ளவில்லை. சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கிய பின்னரே, பெரிய செயற்கைக்கோள்களைத் தயாரிப்பது என்ற கொள்கையைப் பின்பற்றவில்லை. இஸ்ரோ உருவாக்கிய ஆர்யபட்டா என்னும் முதல் செயற்கைக்கோளின் எடை 360 கிலோ கிராம். அதைச் செலுத்த அப்போது இந்தியாவிடம் ராக்கெட் கிடையாது. 1975-ல் ஆர்யபட்டா ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து 1980-ம் ஆண்டில் இந்தியா உருவாக்கிய எஸ்.எல்.வி. என்னும் எளிய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளின் எடை 30 கிலோ கிராம்.
செயற்கைக்கோள் தயாரிப்பில் காணப்பட்ட வேகமான முன்னேற்றத்தை நம்மால் ராக்கெட் தயாரிப்பில் காண முடியாமல் போய்விட்டது. இப்போது செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்திய கிரையோஜெனிக் இன்ஜினின் திறன் உறுதிப்படுத்தப்படுமானால், ராக்கெட் துறையில் இனி வேகமான முன்னேற்றத்தைக் காண இயலும்.
என். ராமதுரை, கட்டுரையாளர்,
மூத்த பத்திரிகையாளர்,

புது வருடத்தில் புது திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். புது அனுபவங்களை தேர்ந்தெடுங்கள். புது விஷயங் களிலும் நம்பி கை வையுங்கள். வெற்றி உங்கள் வச மாகட்டும்.!

புது வருஷம் என்ன ரெசல்யூஷன் எடுக்கப்போகிறீர்கள் என்று கேட்டார் நண்பர். வருடம் புதிதாவதை விட நாம் தான் புதிதாக வேண்டும் என்று சொல்ல நினைத்தேன்!
எத்தனையோ சபதங்கள் எடுக்கலாம். துவங்க, குறைக்க, தவிர்க்க ஏராளம் உள்ளன. புத்தாண்டு தினம் இவற்றையெல்லாம் கொஞ்சம் நினைவுப்படுத்துகிறது. அவ்வளவு தான். தவிர, என் கடந்த கால ரெக்கார்டுகள் அவ்வளவு கௌரவமாக இல்லை. பல சின்ன சின்ன சபதங்களைக் கூட சில நாட்களிலேயே முறித்திருக்கிறேன். இனி புத்தாண்டு ரெசல்யூஷன்ஸ் எதுவும் எடுப்பதில்லை என்று கூட ரெசல்யூஷன் எடுத்துப்பார்த்தேன். ம்ஹூம்..அதை கூட நிறைவேற்ற முடியவில்லை!
இருந்தும் வாழ்த்து அட்டைகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், பரிசுகள் அனுப்புவது, கடந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் பற்றிப் பேசுவது, அடுத்த ஆண்டுக்கான ஆருடம் சொல்வது என சில சடங்களுடன் புது வருடம் துவங்குகிறது.
தொழில் துறையில் சற்று தேக்க நிலை காரணமாக உரத்த கொண்டாட்டம் இல்லை. வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, புதிய திட்டங்கள் முடக்கம் என ஸ்ருதி குறைந்து காணப்படுகிறது. இருந்தும் புதிய தொழில் முதலீடுகளும் திட்டங்களும் வராமல் இல்லை.
நெருக்கடியில் ஒரு நிறுவனம் என்ன செய்கிறது என்பதுதான் அதன் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. எம்.டி.ஆர் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.
மாரவள்ளி டிபன் ரூம் (எம்.டி.ஆர்) பழைய பெங்களூரின் தொன்மையான உணவகம். லால் பாக் கேட்டெதிரே உள்ள இந்த ஓட்டலின் வெண்ணெய் போட்ட மசால் தோசைக்கும் டிகிரி காபிக்கும் பல பிரபலங்கள் அடிமை. காபிக்கு தனி வரிசையில் நின்று கூட்டம் டோக்கன் போடும். பெங்களூரைத் தெரிந்தால் எம்.டி.ஆரைத் தெரியும் என்ற அளவிற்கு பெரிய பெயர்.
1977ல் அதற்கு ஒரு சோதனை வந்தது. அன்று மத்தியில் ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு ஓட்டல்களை 1 ரூபாய்க்கு முழு சாப்பாடு போடச்சொல்லி சட்டம் கொண்டு வந்தது. எல்லா உணவுகளுக்கும் விலையை நிர்ணயம் செய்தது. எம்.டி.ஆருக்கு பெரும் சிக்கல். அந்த விலைக்கு அந்த ருசியும் தரமும் கொடுக்க முடியாது. விலையையும் தரத்தையும் குறைத்தால் வாடிக்கையாளர்களிடம் பெயர் கெட்டு வியாபாரமும் பாதிக்கப்படலாம். என்ன செய்ய?
துணிந்து ஓட்டலை மூடுகிறார் முதலாளி. சட்டம் திரும்ப பெறும் வரை இதுதான் சரி என்கிறார். தொழிலாளர்கள் குடும்பங்கள் அவதிப்படுவதைப் பார்த்து அவர்களுக்கு சிறு ஊதியமாவது கொடுக்க சமையலுக்கு தேவையான பொடிகளை தயாரித்து சிறு அளவில் விற்க ஆரம்பிக்கிறார். ஒரு வருடத்தில் மைசூரில் உள்ள அந்த மத்திய அரசு நிறுவனம் ராணுவத்தினருக்கு பொட்டலமிட்ட உணவுகள் தயாரித்து தர முடியுமா எனக்கேட்டு வந்தது. தொழில்நுட்பம் கற்று அந்த ஆர்டரை பெறுகிறார். அந்த சின்ன வெற்றி தான் விதை. அடுத்த 20 ஆண்டுகளில், பதப்படுத்தப்பட்ட இந்திய தயார் உணவு என்றால் எம்.டி.ஆர் தான் என்று உலகளாவிய பெயரையும் பல நூறு கோடிகள் வியாபாரத்தையும் ஈட்டியது.
1980ல் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஜனதா சாப்பாட்டை நிறுத்தியவுடன் மீண்டும் ஓட்டல் திறக்கப்பட்டு இன்று வரை சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பது தனிக்கதை!
ஒரு பொருளின் திடம் அசாதரண சோதனையில் தான் வெளிப்படுகிறது. இரும்பின் திடம் அறிய உடைத்தும், நெருப்பில் காய்ச்சியும், ரசாயனம் கொட்டியும் ஆய்வு செய்கிறோம். அது போலத்தான் மனிதர்களும் நிறுவனங்களும் அசாதாரண சூழலில் தங்கள் திடத்தை நிரூபிக்கிறார்கள். நெருக்கடிகள் தான் மனிதர்களை புதிய செயல்கள் செய்யத் தூண்டியிருக்கின்றன. மூக்கு சொறிந்து கொண்டு குப்புற படுத்த காலங்களில் மனிதன் எதையும் கண்டு பிடிக்கவில்லை.
அட்ரினலின் சுரக்க சிக்கலில் மாட்டிக்கொள்ளும் காலங்களில் தான் அவன் தன் அடுத்த கட்ட சிந்தனையை நோக்கி நகர்ந்திருக்கிறான். சொகுசான வாழ்க்கை நம் போராட்ட உணர்வையும் ஆக்க சிந்தனையையும் மழுங்கடிக்கூடியவை. நெருக்கடிகளை அது தரும் பாடங்களுக்காக நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். எதிர்பாராது வரும் சிக்கல் இன்னமும் விசேஷம். அப்படி எனக்கு ஒரு சிக்கல் வந்தது 2003ல்.
“வியாழக்கிழமை தேதி உள்ளதா? கடைசி நேரத்தில் கேட்பதற்கு மன்னிக்கவும். ஹைதராபாத்தில் ப்ரொக்ராம். ஏற்கனவே முடிவாகியிருந்தவர் வர முடியாத நிலை. உங்களால் நடத்த முடியுமா?”
ஒப்புக்கொண்டேன். “எது பற்றி பயிற்சி? யாருக்கு?” என்று கேட்டவுடன் நண்பர் அதெல்லாம் புது ஜி.எம். பேசுவார். நான் காலை ஃப்ளைட் அவருடன் போடுகிறேன். மார்கெடிங் ஆளுங்க. உங்க எனர்ஜிக்கு பிச்சு உதறிடலாம்” என்று பொத்தாம் பொதுவாக சொல்லி போனை வைத்தார்.
பயண நாள் வரை பயிற்சி பற்றி எந்தத் தகவலும் வரவில்லை. “எந்த தலைப்பு கொடுத்தாலும் உங்க இஷ்டத்துக்கு தானே ஏதோ ஒண்ணு பேசுவீங்க. என்னமோ எப்பவும் ப்ரிப்பேர் பண்ற மாதிரி என்ன புதுக் கவலை?” என்று மனைவி கேட்டதில் உண்மை இருந்தாலும் முகம் தெரியாத ஆளுடன் இருட்டில் சண்டை போட போவதை உணர்ந்தேன்.
ஜி.எம் என்னுடன் ஹைதராபாத் வரும் வரை பேசினார். கிரிக்கெட், செவ்வாய் தோஷம், ஷேர் மார்க்கெட், மாம்பலம் கொசு, ரஜினிகாந்த், 72ல் பாகிஸ்தான் யுத்தம், சைக்காலஜி, தமிழ் நாடு காங்கிரஸ் கோஷ்டிகள் என அனைத்தையும் பேசினார். அந்த நாளின் நிகழ்ச்சி நிரல் பற்றி வாயைக்கூடத் திறக்கவில்லை. கடைசியில் நான் சிறு முயற்சி செய்த போது, “சார், ஸ்பேர் பார்ட்ஸ் ஆளுங்க சார். உங்களப் பத்தி தெரியும். ஜமாயுங்க!” என்றார்.
அட்டகாசமாய் அறிமுகம் செய்து வைத்தார். நான் பேச ஆரம்பித்து 30 வினாடிகளுக்குள் ஏதோ ஒன்று சரியில்லை என்று புரிந்தது. நகைச்சுவை முயற்சிகள் முழுத் தோல்வியை சந்தித்தன. “பேசறது புரியுதா கனவான்களே?” என்று கேட்டேன்.
“தெலுகுலு மாட்லாடண்டி. நோ இங்கிலீஷ்!” என்றனர். திரும்பிப் பார்த்தால் ஜி.எம். மொபைலில் பேசிக்கொண்டே வெளியே ஓடினார். 40 பேர். 8 மணி நேரம். தெலுங்கில் நடத்தணும். அனைவரும் தொலை தூரம் கடந்து மிகுந்த எதிர்பார்புடன் வந்துள்ள டீலர்கள். நான் ஆரம்பித்தேன் ஆங்கிலத்திலேயே: “எனக்கு ஆந்திராவில் பிடித்தவை: 1. நடிகை ஜெயப்பிரதா. 2. சிரஞ்சீவி. 3. திருப்பதி வெங்கடாஜலபதி. வரிசை மட்டும் சமயத்திற்கேற்ப மாறும்.” பலர் முகத்தில் புன்னகை.
“நான் உங்கள் ஊருக்கு வந்து உங்கள் பாஷை பேசாதது என் தவறு. எனக்கு தெலுங்கு புரியும். பேச வராது. உங்களுக்கு ஆங்கிலம் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலமும் நீங்கள் தெலுங்கும் பேசுவோம். மொழி பெயர்ப்பு தேவைப்பட்டால் ஜி. எம். இருக்கிறார்!” என்றவுடன் கரகோஷத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
Role Play யுத்திகளை Video Recorded Feedback உதவியுடன் செய்ததால், மிகச்சிறப்பாக சென்றது பயிற்சி. “மன்ச்சி புரோகிராம் சார்!” என்று என்னை ஆந்திரா முழுவதும் செல்லச் சொல்லி பரிந்துரைத்து அந்த கூட்டம். ஒரு டப்பிங் ஸ்டார் அந்தஸ்துடன் இரவு வீடு திரும்பினேன்.
அந்த வெற்றியால் நாடு முழுவதும் என்னை கூட்டிச் சென்றார்கள். விற்பனை- சேவை- உதிரி பாகஙகள் வியாபாரம் மூன்றையும் புரிந்து தொடர்ந்து பணியாற்றினேன். அன்னிய மொழி மக்களுடன் சரளமாக பயிற்சி எடுக்க கற்றுக் கொண்டேன். அந்த ஹைதராபாத் சிக்கலை என்றும் நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்.
புது வருடத்தில் புது திறன்களை கற்றுக்கொள்ளுங்கள். புது அனுபவங்களை தேர்ந்தெடுங்கள். புது விஷயங் களிலும் நம்பி கை வையுங்கள். வெற்றி உங்கள் வச மாகட்டும்.!