Wednesday, 1 January 2014

வேதியியல் தொகுப்பு

 
வேதியியல் தொகுப்பு


வேதியியல் பாடத்தை பொறுத்தவரை சற்று கடினமானமாதக இருந்தாலும் கீழ்காணும் தலைப்புகளில் பிரித்து படிக்கத் தொடங்கினால் நல்ல பலன்களை அடையலாம். தற்போதைய சமச்சீர் பாடப் புத்தகங்களிலோ அல்லது பழைய பாடபுத்தகங்களிலோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
01. நீர்
02. பருப்பொருட்களின் தன்மை
03. திண்மம், திரவம், தனிமம், சேர்மம், கலவைகள், அமிலங்கள்
04. அமிலங்களும் அதன் மூலக்கூறுகளும்
05. காரங்களும் மற்றும் உப்புகள்
06. உலோகம் மற்றும் அலோகம்
07. அணு அமைப்பு
08. தனிம வரிசை அட்டவணை
09. வேதி விணைகள்
10. வேதி பிணைப்புகள்
11. நிலக்கரி மற்றும் கார்பன்

வேதியியல் அல்லது இரசாயனவியல் எனப்படுவது பருப்பொருளின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய அறிவியல் ஆகும். வேதியியல் அடிப்படையான மூன்று அறிவியல்களில் ஒன்று. மற்றவை உயிரியல், இயற்பியல் ஆகும். வேதியியலில் கரிம வேதியியல் - Organic Chemistry,   கனிம வேதியியல் - Inorganic Chemistry,   இயல் வேதியியல் - Physical Chemistry என மூன்று பெரும்பிரிவுகள் உள்ளன.
வேதியியல் அணுக்கள் பற்றியும், அவ்வணுக்களுக்குப் பிற அணுக்களுடனான இடைவினைகள் பற்றியும், வேதியியல் பிணைப்புக்களின் இயல்புகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது.
நிலவியல், உயிரியல் போன்ற இயற்கை அறிவியல் துறைகளை இயற்பியலுடன் இணைக்கும் துறையாக வேதியியல் இருப்பதால், சில வேளைகளில் வேதியியலை "அறிவியலின் மையம்" என்றும் அழைப்பதுண்டு. வேதியியல் இயற்பியல் இரண்டும் அறிவியலின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது இயற்பியலில் இருந்தும் வேறானது.
மரபுவழி வேதியியல் ஆனது அடிப்படைத் துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகள், சாரப்பொருட்கள், உலோகங்கள், பளிங்குகள், பிற பொருட் சேர்க்கைகள் குறித்து ஆய்வு செய்கிறது. இவ்வாய்வு அப் பொருட்களின் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்பெறலாம்.
வேதியியல் ஆய்வு கூடங்களில் வேதியியலில் ஆராயப்படும் இடைவினைகள், தாக்கங்கள், மாற்றங்கள் மற்றும் வேதிப்பொருட்களிடையே இடம்பெறும் இடைவினைகளின் விளைவாக அல்லது பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையேயான இடைவினைகளின் விளைவாக ஏற்படும் வேதிப் பொருட்களின் நடத்தைகள் பற்றிய ஆய்வுகள், வேதியியல் ஆய்வு கூடங்களில் நடைபெறுகின்றன.
"வேதியியல் தாக்கம்" அல்லது "வேதிவினை" என்பது சில சாரப்பொருட்கள் ஒன்று அல்லது பல சாரப்பொருட்களாக மாற்றம் அடைவதைக் குறிக்கிறது. இதை ஒரு வேதிச் சமன்பாட்டினால் குறியீடாக வெளிப்படுத்த முடியும். இச் சமன்பாடுகளின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கை மிகப் பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கும். ஒரு சாரப்பொருள் உட்படும் வேதிவினைகளின் இயல்புகளும், அதனோடு ஆற்றல் மாற்றங்களும், வேதியியல் விதிகள் எனப்படும்

மாசுபாடும் ஓசோன் சிதைவடையும்
* நாம் வாழும் இடத்தின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில், உயிர்களுக்த் தீங்கு விளைவிக்கும் விரும்பத்தகாத மாற்றமே மாசுபடுதல் எனப்படும்.
* நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றுபவர்கள் அங்குள்ள கார்பன் துகள்களை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகிறது. இது கறுப்பு நுறையீரல் நோய் எனப்படும்.
* சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற வேதிப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தும்போது அவை ஆவியாகி மேலே சென்று மழை பெய்யும்போது நீரோடு கலந்து அமில மழையைத் தோற்றுவிக்கிறது.
* கதிரியக்கப் பொருட்களான ரேடியம், தோரியம், யுரேனியம் போன்றவற்றின் பயன்பட்டால் காற்று, நிலம் நீர் ஆகியவை மாசுபடுகின்றன.
* 130 டெசிபலுக்கு மேல் உண்டாகும் ஒலியினால் செவிப்பரை, உட்செவியின் மயிரிழைகள் பாதிக்கப்பட்டு தற்காலிக மற்றும் நிரந்தர காது கேளாத் தன்மை ஏற்படும். ஒலி மாசுபாட்டினால் கவனச்சிதைவு ஏற்படுகிறது.
* புவி வெப்பமாதலின் காரணமாக புவியின் கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் கடல்பகுதிகளில் கால நிலையில் ஏற்படக்கூடிய ஒர் ஒழுங்கற்ற காலநிலை மாற்றம் எல்நினோ விளைவு எனப்படும்.
* வாயு மண்டலத்தில் உருவாகும் குளோரின் மற்ரும் புரோமின் கூட்டுப் பொருட்களால் தான் ஓசோன் படல சிதைவு ஏற்படுகிறது.
* ஜப்பானில் மினாமிட்டா பகுதியில் 1952ல் மினாமிட்டா நோய் என்ற ஒருவித நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம் அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாதரசம், பாக்டீரியக்களால் மீத்தைல் மெர்குரி என்ற நச்சாக மாறுவது தான். இதை உண்ட மீன்களை மனிதன் உண்ணும்போது கை, கால்கள், உதடு, மார்பு ஆகிய பகுதிகள் உணர்ச்சியற்றுப் போனதுடன், பார்வைக்குறைபாடு, மனநிலை பாதிப்பு, செவிட்டுத் தன்மையும் ஏற்பட்டது.
* காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஜன் ஆக்சைடு போன்ற பசுமை வாயுக்கள் சூரிய வெப்பத்தை உறிஞ்சி அப்பட்யே தக்க வைத்துக் கொள்வதால், பூமியின் வெப்பநிலை உயர்கிறது. இதுவே பசுமை இல்ல விளைவு எனப்படும்.
* புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரிபொருட்கள் அரைகுறைவாக எரிக்கப்படுவதால் கார்பன் மோனாக்சைடு உண்டாகி காற்ரில் கலக்கிறது. இது இரத்தத்தின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் திறனைக் குறைத்து விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
* நிலக்கரி மற்றும் பெட்ரோலிய பொருட்களை எரிக்கும்போது உருவாகும் ஹைட்ரோகார்பன்கள் காற்றில் கலந்து மாசுபடச் செய்கிறது.

நீர்
* புவிப்பரப்பில் சுமார் ஐந்தில் நான்கு பங்கு நீர் ஆகும். புவிப்பரப்பில் 1.4 ஆயிரம் மில்லியன் கன கிலோ மீட்டர் நீர் உள்ளது. மொத்த நீரளவில் 3 சதவீதம் தூய நீர் உள்ளது.
* எல்லா உயிர்களிலும் நீர் மிகுதியாக உள்ளது. மனித உடலில் 65 சதவீத நீரும், யானையின் உடலில் 70 சதவீத நீரும், உருளைக்கிழங்கில் 80 சதவீத நீரும், தக்காளியில் 95 சதவீத நீரும் உள்ளது.
* நாளொன்றுக்கு குடிநீராக பெண்களுக்கு குறைந்த அளவு 1.5 லிட்டர் தூய நீரும், ஆண்களுக்கு 2 லிட்டர் நீரும் தேவைப்படுகிறது.
* மனித உடலில் மூன்றில் இரண்டு வங்கு நீராகும். இயற்கையில் நீர் மூன்று நிலைகளிலும் (திடநிலையில் பநிக்கட்டியாகவும், திரவ நிலையில் நீராகவும், வாயு நிலையில் நீராவியாகவும்) காணப்படுகின்றன.
* 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒரு கிராம் நீரானது 537 கலோரி வெப்ப ஆற்றலை உட்கொண்டு நீராவியாக மாறுகிறது. இதுவே ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் எனப்படும்.
* ஒரு கிராம் பனிக்கட்டியானது (திண்மம்) 0 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் நீராக (திரவம்) மாறத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் உருகுதலின் உள் உறை வெப்பம் எனப்படும்.
* பனிக்கட்டியின் உருகுதலின் உள் உறை வெப்ப மதிப்பு மிக அதிகமாகும். அதன் மதிப்பு 79.7 கலோரி/கிராம் ஆகும்.
* ஒரு கிராம் நீரின் வெப்பநிலையில் 1 டிகிரி செலிசியஸ் அதிகரிக்கத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவை நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் என்பர். நீரின் தன்வெப்ப ஏற்புத்திரன் மதிப்பு 1 கலோரி/கிராம்/கெல்வின் ஆகும்.
* நீர் ஒரு சர்வ கரைப்பான் (Universal Solvent) ஆகும். அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரைப்பான் நீர் எனலாம்.
* அம்மோனியா, ஹைட்ரஜன் குளோரைடு, ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களிலும் நீர் கரையும்.
* ஆக்சிஜனும் நீரில் கரைகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனே நீர்வாழ் உயிரினங்கள் சுவாசிக்கப் பயன்படுகிறது.
* கரைபொருளானது எதில் கரையுமோ அதுவே கரைப்பான் ஆகும் எ.கா. நீர், ஆல்கஹால் ஆகியன். கரைபொருளும், கரைப்பானும் சேர்ந்த ஒருபடித்தான கலவை கரைசல் ஆகும்.
* நீர் பற்றியும் அதன் விரவலைப் பற்றியும் படிக்கும் அறிவியல் நீரியல் (Hydrology) எனப்படும்.
* நீர்கோளத்தில் (Hydrosphere) 14,60,000 கன கிலோ மீட்டர் நீர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 97.3 சதவீதம் நீர், கடல் மற்றும் பெருங்கடல்களிலும், 2.7 சதவீத நீர் ஆறு, ஏரி, பனிமலை மற்றும் நிலத்தடி நீரிலும் இருக்கிறது. இதில் 1 சதவீதம் மட்டுமே குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.
* உலக சுகாதார அமைப்பின் (World Health Organisation) 5 மில்லியன் மக்கள் குடிநீர் மாசுபடுதலனால் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
* இந்தியாவில் 70 சதவீத நீர் மாசுபட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
* சில பகுதிகளில் கிடைக்கும் நீரில் சோப்பு எளிதில் கரைந்து நுறையைத் தரும். இந்நீரை நுறைதரும் நீர் அல்லது மென்னீர் (Soft water) என்கிறோம். சோப்புக் கரைசலுடன் நுறையை எளிதில் தராத நீர், வன்னீர் அல்லது கடின நீர் Hardwater எனப்படும்.
* கடின நீர் இரு வகைப்படும். ஒரு வகை கடின நீர் கொதிக்க வைப்பதால் மென்னீராக மாறுகிறது. இது தற்காலிக கடின நீர் (Temporary Hardwater) ஆகும். மற்றொரு வகை கொதிக்க வைப்பதால் மென்னீராக மாறுவதில்லை. இது நிலையான கடின (Permanet Hardwater) நீராகும்.
* நீரின் கடினத் தன்மைக்குக் காரணம் அதில் கரைந்துள்ள சில உப்புக்களே ஆகும். நீரில் கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் பைகார்பனேட்டுகள் கரைந்திருந்தால் அது தற்காலிக கடினநீராகவும், இதே உலோகங்களின் சல்ஃபேட், குளோரைடு உப்புக்கள் கரைந்திருந்தால் அது Permanet Hardwater ஆகவும் அமையும்.
* நீரில் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் எடை இயைபில் 1:8 என்ற விகிதத்திலும், கன அளவு இயைபில் 2:1 என்ற விகிதத்திலும் உள்ளன.
* 1781-ம் ஆண்டு ஹென்றி காவன்டிஷ் என்பவர் இரு கன அளவு ஹைட்ரஜனும், ஒரு கன அளவு ஆக்சிஜனும் சேர்ந்த கலைவையை எரித்து நீரைத் தயாரிக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்.
* 1783-ல்  A.L.லவாட்சியர் என்ற பிரெஞ்சு வேதியியல் அறிஞர் நீர் என்பது ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரு தனிமங்களால் ஆனது எனவும், ஒவ்வொரு நீர் மூலக்கூறிலும், இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவும் இருப்பதாகக் கண்டறிந்தார்.
* எனவே நீர் மூலக்கூறை ஹைட்ரஜன் மோனாக்சைடு அல்லது ஆக்சிஜன் ஹைட்ரைடு என்றும் அழைக்கலாம்.
* ஹாப்மன் வோல்டா மீட்டர் உபகரணத்தைப் பயன்படுத்தி நீரின் கன அளவு இயைபைக் கண்டறியலாம்.
* ஒரு பொருளில் மின்னோட்டத்தைச் செலுத்தி அதன் மூலக்கூறுகளை பகுதிப்பொருட்களாகப் பிரிகையடையச் செய்யும் (சிதைக்கும்) நிகழ்ச்சியே மின்னாற் பிரிப்பு எனப்படும்.
* மின்னோட்டத்தினால் பிரிகையடையும் பொருள் மின்பகுளி எனப்படும்.
* நீர் ஒரு ஒளிபுகும், நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற நீர்மம். இதில் கரைந்துள்ள காற்று, கார்பன் டை ஆக்சைடு மற்றும் சில வகை உப்புக்ளே இதன் மாறுபட்ட சுவைக்குக் காரணமாகும்.
* வளிமண்டல அழுத்தத்தில் நீரின் உறைநிலை 0 டிகிரி செல்சியஸ் ஆகும். 1 வளிமண்டல் அழுத்தத்தில் நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் ஆகும்.
* நீர் வெப்பத்தை லேசாகக் கடத்தும் திறன் உடையது. தூய நீர் மின்னோட்டத்தைக் கடத்தாது.
* அமிலம் அல்லது காரம் கலந்த நீர் மின்னோட்டத்தைக் கடத்தும் திறன் உடையது.
* நீரின் நிறை மாறாமலிருப்பின் அதன் அடர்த்தி பருமனுக்கு எதிர் விகிதத்தில் அமைகிறது. அதாவது நீரின் பருமன் அதிகரிக்கும்போது அடர்த்தி குறைகிறது.
* நீரை 4 டிகிரி செய்சியஸ்க்கும் குறைவாக குளிர்விக்கும்போது நீரின் பருமன் அதிகரிகிகிறது. எனவே 0 டிகிரி செல்சியசில் உள்ள நீரின் மருமனை விட அதிகமாக இருக்கிறது.
* 0 டிகிரி செல்சியஸில் உள்ள பனிக்கட்டியின் அடர்த்தி 4 டிகிரி செல்சியஸில் உள்ள நீரின் அடர்த்தியை விடக் குறைவாக இருக்கும்.
* நீரின் அடர்த்தி 4 டிகிரி செல்சியஸில் 1 கிராம்/க.செ.மீ எனவும், பனிக்கட்டியின் அடர்த்தி 0.91 கிராம்/க.செ.மீ எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
* 0 டிகிரி செல்சியஸில் ஒரு குறிப்பிட்ட நிறையை உடைய பனிக்கட்டியின் பருமன் அதே நிறையை உடைய நீரின் பருமனை விட அதிகம். எனவே 0 டிகிரி செல்சியஸில் பனிக்கடியின் அடர்த்தி 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள அடர்த்தியை விடக் குறைவு. ஆகவே பனிக்கட்டி நீரில் மிதக்கிறது.
* நீரின் முக்கிய இயற்கை ஆதாரம் கடல் ஆகும். கடல் நீரில் 3.5 சதவீதம் உப்புகள் கைரந்துள்ளன. முக்கியப் பகுதிப்பொருளான சோடியம் குளோரைடு 2.8 சதவீதம் உள்ளது. மேலும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றின் உப்புக்களும் அடங்கியுள்ளன.
* கடல்நீரில் உள்ள உப்பின் அளவு சராசரியாக 1000 பங்குக்கு 35 பங்காகும். அதாவது 3.5 சதவீதம் ஆகும்.
* கடல்நீரில் இருந்து கிடைக்கும் உப்பை அயோடினேற்றம் செய்து பயன்படுத்துவதால், முன்கழுத்துக் கழலை (Goitre) தடுக்கலாம்.
* கடல் நீரிலிருந்து அதில் கரைந்துள்ள உப்புக்களைப் பிரிக்கின்ற முறைக்கு உப்பு நீக்கம் ( De-salination)  என்று பெயர்.
* ஹைட்ரஜனின் ஐசோடோப்பாகிய டியூட்டிரியத்தைப் பெற்ற சேர்மம் கன நீர் என்றும் டியூட்டிரியம் ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது.

பொருட்களின் அமைப்பு
* எதுவொன்று தனக்கென்று ஒரு குறி்ப்பிட்ட பருமனையும் நிறையையும் பெற்றுள்ளதோ அதுவே பருப்பொருள் எனப்படும்.
* குறிப்பிட்ட இடத்தை (பருமன்) ஆக்கிரமித்துக் கொள்வதும், குறிப்பிட்ட வடிவத்தை உடையதும் திண்மம் ஆகும்.
* குறிப்பிட்ட இடத்தை (பருமன்) ஆக்கி்ரமித்துக் கொள்ளாததும், குறிப்பிட்ட வடிவமற்றதும் வாயுவாகும்.
* திடப்பொருளானது சூடேற்றப்படும்போது திரவப் பொருளாக மாறுவதே உருகுதல் எனப்படும். எந்த வெப்பநிலையில் ஒரு திடப்பொருளானது உருகி, திரவ பொருளாக மாறுகிறதோ அதுவே அத்திடப்பொருளின் உருகுநிலை எனப்படும். பனிக்கட்டியன் உருகுநிலை 0 டிகிரி செல்சியஸ் ஆகும்.
* திரவப்பொருளைச் சூடேற்றும்போது அது வாயுவாக மாறுவதே ஆவியாதல் எனப்படும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஆவியாதல் தொடர்ந்து மிக வேகமாக நடைபெறுவதே கொதித்தல் எனப்படும்.
* எந்தவொரு வெப்பநிலையில் திரவமானது கொதிக்க ஆரம்பிக்கின்றதோ, அதுவே அத்திரவத்தின் கொதிநிலை எனப்படும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் எனப்படும்.
* ஒரு திடப்பொருள் சூடேற்றப்படும்போது திரவமாகாமல் நேரடியாக வாயுவாக மாறி, பின் குளிரூட்டப்படும்போது நேரடியாகத் திடப்பொருளாக மாறுவதே பதங்கமாதல் எனப்படும். எ.கா. கற்பூரம், அயோடின். அம்மோனியம் குளோரைடு போன்ற திண்மங்கள் பதங்கமாகின்றன.
* ஒரு திரவப் பொருள் குளிர்விக்கப்படும் போது, திடப்பொருளாக மாறும் நிகழ்ச்சியே உறைதல் எனப்படும்.

பருப்பொருட்களின் நிலைகள்:
* பல துகள்கள் சேர்வதால் கிடைக்கும் உருவம் பருப்பொருள்கள் எனப்படும். எந்த ஒரு பொருளும் மூன்று நிலைகளில் காணப்படுகிறது.
* அதுவே திண்ம, நீர்ம மற்றும் வாயு நிலைகளாகும். இம்மூன்று இயற்கை நிலைகள் பொதுவான சில பண்புகளைப் பெற்றிருக்கின்றன.
* இம்மூன்று நிலைகளும் வெப்பநிலை உயர்த்தப்படும் பொழுது பருமனாளவில் அதிகரிக்கின்றன. வெப்பத் தாழ்வு ஏற்படும்பொழுது பருமனளவில் குறைகின்றன. இவ்விளைவு திண்ம, நீர்ம நிலைகளை விட வாயு நிலைகளில் அதிகம் காணப்படுகிறது.
* திண்மமும், நீர்மமும் புறப்பரப்பு கொண்டவை, ஆனால் வாயுக்கள் இதனைப் பெற்றிருக்கவில்லை.

திண்மங்கள்
* திண்மங்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. இதற்கு அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே காரணமாகும்.
* திண்ணங்களில் காணப்படும் அணுக்கள் அல்லது மூலக்குறுக்களுக்கிடையே கவர்ச்சி விசை உள்ளது. எனவே, அவை நிலையான தன்மையைப் பெற்று வடிவமைப்பைப் பெற்றுள்ளன.
* திடப்பொருட்கள் இரு வகைப்படும். அவை உண்மைத் திண்மங்கள் அல்லது படிகத் திண்மங்கள் மற்றும் படிக வடிவமற்ற திண்மங்கள் எனப்படும்.
* உலோகங்கள், உப்பு, வைரம் ஆகியவை படிகத் திண்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். கண்ணாடி, கார்பன் துகள்கள், பிசின்கள் ஆகியவை படிக வடிவமற்ற திண்மங்களாகும்.
* நீர்மம் மற்றும் வாயுக்கள் பாய்பொருள்கள் எனப்படுகின்றன.

பொருட்களின் நிலைமாற்றம்
* நீரைக் கொதிக்க வைக்கும்பொழுது அது நீராவியாக மாறுகிறது. நீரும் நீராவியும் ஒரு பொருளே. இந்த மாற்றத்தின் பொழுது புதியதாக ஒரு பொருள் தோன்றவில்லை. இம்மாதிரியான மாற்றத்தை இயற்பியல் மாற்றம் என்கிறோம். உறைதல், உருகுதல், காய்ச்சி வடித்தல் மற்றும் பதங்கமாதல் முதலியன இத்தகைய மாற்றங்களில் சில.
* எந்தவொரு மாற்றத்தில் புதிய பொருட்கள் தோன்றுகின்றனவோ அது வேதியியல் மாற்றம் எனப்படும். கற்பூரம் எரியும்பொழுது கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராவி ஆகிய புதிய பொருட்கள் தோன்றுகின்றன. இது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
* ஒளிச்சேர்க்கை, வெள்ளி கருத்துப் போதல், இரும்பு துருப்பிடித்தல் மற்றும் எரிபொருள் எரிதல் முதலானவை வேதியியல் மாற்றங்களில் சில. வேதியியல் மாற்றங்களை வேதியியல் வினைகள் என்றும் அழைப்பர்.
* ஒரு வேதிவினையில் ஈடுபடும் பொருட்களுக்கு வினைபடு பொருள்கள் என்று பெயர். ஒரு வேதிவினையில் உருவாகின்ற பொருட்களுக்கு விளைபொருள்கள் என்று பெயர்.
* ஒரு வேதிவினையில் வினைபடு பொருட்கள் விளை பொருட்களாக மாற்றப்படுகின்றன. வேதிவினை நிகழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடு தேவைப்படுகிறது.
* எளிதில் ஆவியாகாத கரைபொருளைக் கொண்டுள்ள நீர்மங்களை தூய்மைப்படுத்தப் பயன்படும் முறையே காய்ச்சி வடித்தல் ஆகும். ஆவியாக்குதலும் பின்னர் அதைக் குளிர்விப்பதும் இதில் அடங்கும்.
* வெவ்வேறு கொதிநிலைகளை உடைய நீர்மங்கள் கலந்துள்ள கலைவையைப் பிரித்தெடுப்பதற்கும் காய்ச்சி வடித்தல் முறையைப் பயன்படுத்தலும். இத்தகைய காய்ச்சி வடித்தல் முறைக்கு பின்னக் காய்ச்சி வடித்தல் என்று பெயர்.

தனிமங்கள்
* பருப்பொருள்களை தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகள் என வகைப்படுத்தலாம்.
* எந்தவொரு தூய பொருளை இயற்பியல் மற்றும் வேதியியல் முறையினால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்களாகப் பிரிக்க முடியாதோ அப்பொருள் தனிமம் எனப்படும்.
* தனிமங்களும் சேர்மங்களும் தூய பொருட்கள் ஆகும்.
* ஒரு தனிமம் என்பது ஒரே விதமான அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டதாகும். அனைத்துப் பொருட்களும் தனிமங்களால் உருவாக்கப்பட்டவையே ஆகும்.
* இதுவரை 112 தனிமங்களை வேதியியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றுள்ள 82 தனிமங்கள் சாதாரணமானவை (இயல்பானவை). எஞ்சிய 30 தனிமங்கள் கதிரியக்கத் தன்மையையுடையவை. இவை கதிரியக்கத் தனிமங்கள் எனப்படுகின்றன.
* மனித உடலில் 65 சதவீதம் ஆக்சிஜன், 18 சதவீதம் கார்பன், 10 சதவீதம் ஹைட்ரஜன், 3 சதவீதம் நைட்ரஜன், 2 சதவீதம் மற்ற தனிமங்கள் காணப்படுகின்றன.
* இதுவரை கண்டறியப்பட்டுள்ள 112 தனிமங்களில் 21 தனிமங்கள் இயற்கையில் கிடைப்பதில். அவை செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. எ.கா. புளூடோனியம், கியூரியம், அன்னில்பென்டியம் ஆகியன.
* தனிமங்கள் அவற்றின் பண்புகளுக்கேற்ப உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.

அணு
* தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருப்பதும் ஆனால் எப்பொழுதும் வேதி வினைகளில் பங்கு கொள்வதுமாகிய தனிமத்தின் மிகச்சிறிய அலகிற்கு அணு என்று பெயர்.
* அணுவை புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் போன்ற மிகச்சிறிய அணுத்துகள்களாகப் பிரிக்க முடியும்.
* எப்பொழுதும் தனித்தே இருப்பதும், பொருளின் இயற்பியல் மற்றும் வேதியியல் தன்மைகளைக் காட்டும் ஒரு பொருளின் மிகச்சிறிய அலகிற்கு மூலக்கூறு என்று பெயர்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குகின்றன.
* ஹைட்ரன் மூலக்கூறு (H2), ஆக்ஸிஜன் மூலக்கூறு (O2 ), குளோரின் மூலக்கூறு (Cl2) நைட்ரஜன் மூலக்கூறு (N2) ஆகியவை ஈரணு மூலக்கூறுகளுக்கு உதாரணங்கள்.
* ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் புளோரின் , குளோரின், புரோமின், அயோடின் போன்ற ஹாலஜன்கள் (உப்பீனிகள்) ஈரணுத்தனிமங்கள் ஆகும்.
* ஒசோன் (O3) மூலக்கூறு மூவணு மூலக்கூறுகளுக்கு உதாரணமாகும். சல்ஃபர் மூலக்கூறு (S8) 8 கந்தக அணுக்களால் ஆனது.
* இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை அல்கெமி (Alchemy)  எனப்படும்.
* பல தனிமங்கள், தனித்த நிலையில் இருக்கும் அணுக்களை தங்கள் அடிப்படை அலகுகளாகக் கொண்டிருக்கின்றன. இத்தகைய தனிமங்களில், அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறுகளை உருவாக்குவதில்லை. இத்தகைய தனிமங்கள் ஓரணுத் தனிமங்கள் எனப்படுகின்றன. உதாரணம் காப்பர், சில்வர், ஹீலியம் போன்றவை.
* ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறில் எத்தனை அணுக்கள் உள்ளனவோ அதுவே அத்தனிமத்தின் அணுக்கட்டு எண் ஆகும்.
* சில்வர், பொட்டாசியம், கார்பன் மற்றும் மந்த வாயுக்கள் ஆகியவற்றின் அணுக்கட்டு எண் ஒன்று ஆகும். ஹைட்ரஜன், புரோமின், குளோரின், ஆக்சிஜன், நைட்ரஜன் ஃப்ளூரின் ஆகியவற்றின் ஏணுக்கட்டு எண் இரண்டு ஆகும். எனவே அவை H2, B2, Cl2, O2, N2, F2 என குறிக்கப்படுகின்றன.
* பாஸ்பரஸ் மூலக்கூறில் (P4) நான்கு அணுக்கள் உள்ளன. எனவே அதன் அணுக்கட்டு எண் நான்கு. சல்பரின் மூலக்கூறில் (S8) எட்டு அணுக்கள் உள்ளன. அதன் அணுக்கட்டு எண் எட்டு ஆகும்.

சேர்மங்கள்
* ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற சில தனிமங்களே இயற்கையில் தனித்துக் கோணப்படுகின்றன. பெரும்பான்மையான பொருட்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒன்றிணைந்து உருவானவை. அத்தகைய பொருட்கள் சேர்மங்கள் என்றழைக்கப்படுகின்றன.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து உருவான பொருளே சேர்மம் எனப்படும்.
* சேர்மங்களின் அடிப்படை அலகுகள் தனித்தியங்கும் மூலக்கூறுகளாகும்.
* சேர்மங்கள் ஒரு படித்தான தன்மை பெற்றவை. நீர் ஒரு சேர்மம்.
* கார்பன் ஆக்சிஜனுடன் சேர்ந்து கார்பன் டை ஆக்சைடைக் கொடுக்கிறது. ஹைட்ரஜன், ஆக்சிஜனுடன் சேர்ந்து நீரினைத் தருகிறது. நீரில் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் 1:8 என்ற நிறை விகிதத்தில் உள்ளன.
* மனித இரத்தத்தில் மற்றும் உயிர்ச் செல்களின் முறையான இயக்கத்திற்கு சோடியம் குளோரைடு (NaCl) என்ற சேர்மம் அவசியமாகிறது.
* சோடியம் ஹைட்ராக்சைடு (எரிசோடா) சோப்பு தயாரிக்கப் பயன்படுகிறது. செயற்கை உரம் தயாரிப்பில் அம்மோனியா (NH3) என்ற சேர்மம் பயன்படுகிறது.
* இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் இரும்பின் சேர்மமாகும். பசுமையான இலைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் இருக்கும் குளோரோஃபில் என்பது மெக்னீசியத்தின் சேர்மமாகும்.
* கால்சியம் பாஸ்பேட் என்பது எளும்பு மற்றும் பற்களில் இருக்கும் கால்சியத்தின் சேர்மமாகும்.
* சர்க்கரை ஒரு சேர்மம். ஒரு சர்க்கரை மூலக்கூறில் 12 கார்பன் அணுக்களும், 22 ஹைட்ரஜன் அணுக்களும், 11 ஆக்சிஜன் அணுக்களும் உள்ளன.

சலவை சோடா
* சலவை சோடா என்பது சோடியம் கார்பனேட் டெக்கா ஹைட்ரேட் (Na2Co3.10H2O) முன்னர் சோடியம் கார்பனேட் கடல் வாழ் செடிகளின் சாம்பலிருந்து தயாரிக்கப்பட்டது.
* சோடியம் கார்பனேட் முதலில் நீரற்ற சோடியம் காபர்பனேட் சால்வே முறையில் (அம்மோனியா சோடா முறையில்) பெருமளவில் தயாரிக்கப்பட்டு, பின்னர் சலவை சோடா கார்பனேட் டெக்கா ஹைட்ரேட்டாக மாற்றப்படுகிறது.
* சலவை சோடா கடின நீரை மென்னீராக்கவும், காகிதம், சோப்பு, துணி வண்ணப் பூச்சுகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* நீரின் கடினத் தன்மைக்குக் காரணம் அதில் கரைந்துள்ள கால்சியம், மெக்னீசியம் உப்புக்கள் ஆகும்.
* சலவை சோடாவை கடின நீரில் கரைத்தால் கடினத் தன்மைக்குக் காரணமான கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்கள் சலவை சோடாவுடன் வினைபுரிந்து கரையாத திண்மப் பொருளாக வீழ்படிவாகி நீரை மென்னீராக மாற்றுகிறது.
சமையல் சோடா
* சமையல் சோடா என்பது சோடியம் ஹைட்ரஜன் கார்பனேட் NaHCO3 சோடியம் பை கார்பனேட்) ஆகும்.
* சோடியம் பை கார்பனேட் சால்வே முறையில் பெருமளவில் தயார்க்கப்படுகிறது.
* சமையல் சோடா ரொட்டி சோடா தயாரிக்கப் பயன்படுகிறது. ரொட்டி சோடா என்பது சோடியம் பை கார்பனேட்டும், டார்டாரிக் அமிலமும் கொண்ட கலவையாகும். ரொட்டிச் சோடா உணவுப் பொருளை மென்மைப்படுத்தவும், குளிர்பானங்களில் காற்றூட்டம் செய்யவும் பயன்படுகிறது.
சலவைத் தூள்
* சலவைத் தூளின் வேதிப்பெயர் கால்சியம் ஆக்சிகுளோரைடு (CaOCl2) ஆகும்.
* சலவைத் தூள் பெருமளவில் பெக்மேன் சாதனத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
* சலவைத் தூள் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தூள். அதிக அளவு குளோரின் மணமுடையது.
பாரிஸ் சாந்து
* பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் ஆகும். ஜிப்சத்தை திறந்த வெளித் தீயில் எரித்து ஒரு தூளை எகிப்தியர்கள் 5000 வருடங்களுக்கு முன் பெற்றனர். இந்தத் தூளை நினைவுச் சின்னங்கள் கட்டப் பயன்படுத்தினர்.
* இந்தத் தூள் தயாரிக்கப் பயன்படும் ஜிப்சம் பாரிஸ் நாட்டில் அதிகம் கிடைப்பதால் பாரிஸ் சாந்து என குறிப்பிடப்படுகிறது.
* பாரிஸ் சாந்து சாக்பீஸ் தயாரிக்கவும், சிலைகள் வார்க்கவும், மருத்துவமனைகளில் எலும்பு முறிவுகளைச் சரி செய்யவும், பல் மருத்துவத்திலும் பயன்படுகிறது.
சிமெண்ட்
* முதன்முதலில் எகிப்து நாட்டினர்தான் சிமெண்டின் பயன்களை அறிந்து பிரமிடுகளை கட்டுவதற்கு இதைப் பயன்படுத்தினர்.
* எரிந்த சிலிகேட்டுகள், சுண்ணாம்பு கொண்ட கலவையே இயற்கையில் கிடைக்கும் சிமெண்ட் ஆகும்.
* 1824-ல் ஜோசப் அஸ்பிடின் என்ற செங்கல் செய்யும் ஆங்கிலேயர் முதன்முதலில் சிமெண்டைக் கண்டுபிடித்தார்.
* போர்ட்லாண்ட் நாட்டில் உள்ள சுண்ணாம்புக் கல்லினை இப்பொருள் ஒத்திருந்தால், அவர் கண்டுபிடித்த சிமெண்ட்டை போர்ட்லாண்டு சிமெண்ட் என்று அழைத்தார்.
* சிமெண்ட் என்றாலும் போர்ட்லாண்ட் சிமெண்ட் என்றாலும் இரண்டும் ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.
* போர்ட்லாண்ட் சிமெண்டில் சுண்ணாம்பு (CaO) 60 முதல் 70 சதவீதமும், சிலிகா (Si) 20 முதல் 25 சதவீதமும், அலுமினா (Al2O3) 5 முதல் 10 சதவீதமும், ஃபெர்ரிக் ஆக்ஸைடு (Fe2O3) 2 முதல் 3 சதவீதமும் உள்ளன.
* காரை என்பது சிமெண்ட்டும், மணலும் 3:1 என்ற விகிதத்தில், தேவையான நீருடன் கலந்த கலவையே ஆகும். கட்டிடங்கல் கட்டுவதர்கு தேவையான பொருட்களான செங்கல், கற்கள் போன்றவற்றுடன் சேர்ந்து, சிறிது நேரம் சென்றபின் அவை இறுகி கடினமடைகிறது.
* சிமெண்ட், மணல், நொறுக்கப்பட்ட கல், நீர் ஆகியவை கலந்த கலவைக்கு கற்காரை என்று பெயர். சிமெண்ட் இறுகும்போது கற்காரை மிகவும் கடினமாகவும், உறுதியாகவும் மாறுகிறது. இது கட்டிடங்கள், சாலைகள், அணைக்கட்டுகள், பாலங்கள் கட்டப் பயன்படுத்தப் படுகிறது.
* வலுவூட்டப்பட்ட காரை (RCC)  இரும்புத் தண்டுகள் அல்லது எஃகு வலைகளை கற்காரையினுள் புதைத்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட காரையாகும். இருகும்போது கடினமானதாகவும், உறுதியாகவும் மாறுகிறது.
கண்ணாடி
* முதன்முதலில் கண்ணாடிப் பொருட்களை தயாரித்தவர்கள் எகிப்தியர்கள் இந்தியாவில் வெவ்வேறு வகையான கண்ணாடிகள் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, பெரோசாபாத், தில்லி போன்ற இயங்களில் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன.
* சாதரணக் கண்ணாடியின் இயைபு (Na2) CaO 6SiO என்ற வாய்ப்பாட்டின்படி உள்ளது.
* சாதாரணக் கண்ணாடி தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் சோடியம் கார்பனேட், கால்சியம் கார்பனேட், சிலிகா ஆகியவை.
* கண்ணாடி தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை நன்கு பொடியாக்கி துல்லியமாக எடையறிந்து தகுந்த விகிதத்தில் கலக்க வேண்டும். இக்கலவைக்கு திரட்டு (Batch) என்று பெயர். கண்ணாடியின் இளகு தன்மையை அதிகரிக்க குறிப்பிட்ட அளவு உடைந்த கண்ணாடித் துண்டுகள் (Cullets) சேர்க்கப்படுகின்றன.
* இக்கலவை உலையில் வெப்பப்படுத்தப்பட்டு, நீர்மமாக இருப்பதைக் குளிர்வித்து வார்ப்பதன் மூலம் கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.
* கண்ணாடியை மெதுவாகவும், ஒரே சீராகவும் குளிர வைப்பதை கட்டுப்படுத்தி ஆற்றுதல் (Annealing) என்பர்.
* சோடா கண்ணாடி என்பது சாதாரண கண்ணாடி இதையே மென் கண்ணாடி என்றும் அழைப்பர். இவ்வகைக் கண்ணாடியை ஜன்னல் கண்ணாடிகள், மின் விளக்குகள், சோதனைக் குழாய்கள் மற்றும் கண்ணாடி டம்பளர்கள் செய்யப் பயன்படுத்துவர்.
* கடினக் கண்ணாடி என்பது அதிக வெப்பநிலையில் உருகிறது.. இது வெப்பம் தாங்கவல்ல உபகரணங்களைச் செய்யப் பயன்படுகிறது.
* ஒளி ஊடுருவும் கண்ணாடி என்பது அதிக ஒளி விலகல் எண்ணைக் கொண்டுள்ளது. எனவே மூக்குக் கண்ணாடி வில்லைகள், புகைப்படக் கருவிகள், தொலைநோக்குக் கருவிகள், நுண்ணோக்கிக் கருவிகள் மற்றும் பல ஒளி உபகரணங்கள் செய்யப்பயன்படுகிறது.
* பைரக்ஸ் கண்ணாடி என்பது வெப்பம், அதிர்ச்சி மற்றும் பல வேதி வினைப் பொருளைத் தாங்கக் கூடிய தன்மையுடையதாகும். இது அடுப்புக்களில் வைக்கப்படும் பாத்திரங்கள், குடுவைகள், முகவைகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது.
* பிளிண்ட் கண்ணாடி என்பது அதிக ஒளி விலகல் எண் உடையது மறஅறும் ஒளியைச் சிதறடிக்கக் கூடியது. எனவே இது உயர்ந்த ரகக் கண்ணாடி உபகரணங்கள் மற்றும் அலங்காரக் கண்ணாடிப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது.
* கண்ணாடி இழைகள் என்பவை உருகிய கண்ணாடியை மிகக்குறுகிய துளைகளின் வழியாக மிகுந்த அழுத்தத்தில் செலுத்தி கண்ணாடி நார்கள் தயாரிக்கப்படுகின்றன. கொத்தாக உள்ள இந்தக் கண்ணாடி இழைகள் கண்ணாடிக் கம்பளியாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
* கண்ணாடிக் கம்பளி ஒரு நல்ல வெப்பக் கடத்தாப் பொருளாக இருக்கிறது. மேலும் நெருப்புப் பற்றாத ஆடைகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
* வண்ணக் கண்ணாடிகள் என்பவை உருகிய கண்ணாடியுடன் உலோக ஆக்சைடுகள் போன்ற நிறமூட்டிகளைச் சிறிதளவு சேர்த்துத் தயாரிக்கப் படுவதாகும்.
* குரோமிக் ஆக்சைடு பச்சை நிறத்தையும், கோபால் ஆக்சைடு நீல நிறத்தையும், மாங்கனீசு டை ஆக்சைடு ஊதா நிறத்தையும், ஃபெரிக் ஆக்சைடு பழுப்பு நிறத்தையும், காட்மியம் சல்பைடு மஞ்சள் நிறத்தையும், செலினியம் சல்பைடு ரூபி சிவப்பு நிறத்தையும் தருகிறது.
* வண்ணக் கண்ணாடிகள் அலங்காரப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன.
எஃகு
* முற்காலத்தில் வாள்கள் செய்ய எஃகு பன்படுத்தப் பட்டது. எஃகின் பண்புகள் அதில் உள்ள கார்பன் அளவைப் பொறுத்தது. பொதுவாக இரு வகையான எஃகுகள் உள்ளன.
* முதல் வகை மென்மையான எஃகு. இதில் 0.1 முதல் 0.4 சதவீதம் வரை கார்பன் உள்ளது. இதைத் தகடாக அடிக்கலாம். கம்பியாக நீட்டலாம். மிகவும் உறுதி வாய்ந்தது. இது தகடுகள், கம்பிகள், மோட்டார் வண்டி பாகங்கள், அச்சுகள், திருகாணிகள், தண்டவாளங்கள், சக்கரங்கள், கப்பல்கள், பாலங்கள் ஆகியவற்றில் பயன்படுகிறது.
* இரண்டாவது வகை கடின எஃகு. இதில் 0.5 முதல் 1.5 சதவீதம் வரை கார்பன் உள்ளது. இது மிகக் கடினமானது. மேலும் இதைக் கடினமடையச் செய்தல் (Quenching) மூலம் கடினமாக்கலாம். சவரக் கத்திகள், கத்திகள், துளையிடும் மற்றும் வெட்டும் கருவிகள் தயார்க்கப் பயன்படுகிறது.
* துருப்பிடிக்காத எஃகு என்பது 8 சதவீத நிக்கலும், 18 சதவீத குரோமியமும் உள்ளது. இது துருப்பிடிக்காது. மிக அதிக மீளும் தன்மை உடையது.
* டங்ஸ்டன் எஃகில் 5 சதவீதம் குரோமியமும் சிறிதளவு வெனேடியமும் உள்ளது.
* இது யங்ஸ்டனுடன் சேரும்பொழுது கடினமாகிறது.
* நிக்கல் எஃகில் 2 சதவீதம் நிக்கல் உள்ளது. இது மிதிவண்டி பாகங்கள், வாகன ஊர்தி பாகங்கள், வானூர்தி பாகங்கள் செய்யவும் பயன்படுகிறது.
* மாங்கனீசு எஃகில் 7 முதல் 20 சதவீதம் வரை மாங்கனீசு உள்ளது. இது ஹெல்மேட், பாறை அரைக்கும் இயந்திரங்கள், இரயில் தண்டவாளங்கள் ஆகியவற்றை செய்ய பயன்படுகிறது.
* சிலிக்கான் எஃகில் 15 சதவீதம் சிலிக்கான் உள்ளது. இது அமிலத்தால் தாக்கப்படாது. எனவே அமிலங்களை எடுத்துச் செல்லும் குழாய்கள் செய்ய பயன்படுகிறது. 35 சதவீதம் சிலிகான் இருப்பின் இது மின்கம்பம் செய்யவும், மின் காந்தங்கள் செய்யவும் பயன்படுகிறது.
* கோபால்ட் எஃகில் 35 சதவீதம் கோபால்ட் உள்ளது. இது காந்தத் தன்மை உடையது. எனவே கோபால்ட் எஃகு நிலையான காந்தம் தயார்க்கப் பயன்படுகிறது.
கலவைகள்
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தூய பொருட்கள் எந்த விகிதத்திலும் கலந்திருப்பதே கலவையாகும். அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் அல்லது சேர்மங்கள் எந்த விகிகத்திலும் கலந்திருப்பதே கலவையாகும்.
* ஒரு கலவையில் அதன் பகுதிப் பொருட்கள் ஒரே சீராகக் கலக்கப்பட்டிருந்தால் எது ஒருபடித்தான கலவை எனப்படும். எ.கா. காற்று, உப்புக் கரைசல்கள்.
* எந்தவொரு கலவையில் அதன் பகுதிப் பொருட்கள் சீராகக் கலக்கப்படவில்லையோ அதுவே பலபடித்தான கலவையாகும். எ.கா. மரத்தூள், இரும்புத்தூள், சாதாரண உப்பு ஆகியவற்றால் உருவான கலவை.
* கடல்நீர் என் பது, நீரும் அதிக அளவிலான உலோக உப்புக்களும் கலந்த கலவையாகும். பாறை உப்பு என்பது, சாதாரண உப்பும் நுண்ணிய மணலும் சேர்ந்த கலவையாகும்.
* புகை என்பது கார்பன் துகள்களும், காற்றும் கலந்த கலவையாகும். சமையல் வாயு என்பது பியூட்டேன் மற்றும் பென்டேன் வாயுக்களின் கலவையாகும்.
* காற்று என்பது ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு , நீராவி கலந்த கலவையாகும்.
* பால் என்பது கொழுப்புக்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியன் கலந்த கலவையாகும்.
* கலவைகள் ஒருபடித்தான கலவைகள் என்றும், பலபடித்தான கலவைகள் என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
* ஒருபடித்தான கலவையில் ஒரே ஒரு நிலைமை உள்ளது. உலோகக் கலவைகள், காற்று, ஆல்கஙாலும் நீரும் கலந்த கலவை ஆகியன இதற்கு உதாரணங்கள்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நிலைமைகள் கொண்ட கலவை பலபடித்தான கலவையாகும். நீருடன் எண்ணெய் கலந்த கலவை, மணலும் உப்பும் கலந்த கலவை, * மணலும் சர்க்கரையும் கலந்த கலவை ஆகியன இதற்கு உதாரணங்கள்.
கரைசல்கள்
* ஒரு கரைசலில் எது கரைகிறதோ அது கரைபொருள். எது கரைக்கிறதோ அது கரைப்பான். எனவே கரைசல் என்பது கரைபொருளும் கரைப்பானும் கலந்த ஒருபடித்தான கலவை. அது ஒரே நிலைமையாகத் தோன்றும்.
* உப்பும் காப்பர் சல்பேட்டும் நீரில் கரைகின்றன. எனவே அவை நீரில் கரையும் பொருள்கள் எனப்படும். கால்சியம் கார்பனேட் போன்றவை நீரில் கரையாப் பொருள்களாகும்.
* எந்த அளவிற்கும் ஒரு பொருள் கரைப்பானில் கரைகிறதோ அதுவே அதன் கரைதிறன் ஆகும்.
* இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களின் ஒருபடித்தான கலவை கரைசல் எனப்படும். இரண்டு பொருட்கள் இருந்தால் இருமடி என்றும், மூன்று பொருட்கள் இருந்தால் மும்மடி என்றும், நான்கு பொருட்கள் இருந்தால் நான்மடி என்றும் அழைக்கப்படுகிறது.
------------------------------------------------------------------------------------------
தினந்தோறும் வாழ்வில் பயன்படும் சில சேர்மங்கள்
* சலவைத்தூள் அல்லது கால்சியம் ஆக்ஸிகுளோரைடு (CaOCl2) சலவைத் தொழிலிலும், கிருமிநாசினியாகவும், ஆக்சிஜனேற்றியாகவும் பயன்படுகிறது.
* அயோடோஃபார்ம், குளோரோஃபார்ம் ஆகிய சேர்மங்களைத் தயாரிக்கவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் சலவைத்தூள் பயன்படுகிறது.
* மண்ணின் வேதிப்பெயர் சிலிக்கன் டை ஆக்சைடு (SiO2)
* நீரின் வேதிப்பெயர் சிலிக்கன் டை ஆக்சைடு (H2O)
* சோப்பின் வேதிப்பெயர் சோடியம் பால்மிடேட் (C15H31COONa).
* சர்க்கரையின் வேதிப்பெயர் சுக்ரோஸ் (C12H22O11)
* சலவைத் தூளின் வேதிப்பெயர் கால்சியம் ஆக்சி குளோரைடு (CaOCl2)
* சாதாரண உப்பின் வேதிப்பெயர் சோடியம் குளோரைடு (Nacl)
* பி.வி.சி. பிளாஸ்டிக்கின் வேதிப்பெயர் பாலி வினைல் குளோரைடு.
* சோடியம் பைகார்பனேட் (ரொட்டிச் சோடா) NaHCO3 தீயணைக்கும் கருவியில் பயன்படுவதுடன், வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை நீக்கப் பயன்படுகிறது. மேலும் * சோடியம் பைகார்பனேட் ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பேக்கிங் பவுடர் தயாரிக்கப் பயன்படுகிறது.
* பேக்கிங் புவடரில் சோடியம் பை கார்பனேட்டும், டார்டாரிக் அமிலமும் உள்ளன. பேக்கிங் பவுடரில் நீரை சேர்க்கும்போது சோடியம் பை கார்பனேட்டும் அமிலமும் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயு உருவாகிறது. கேக், பிரெட் போன்ற ரொட்டிகள் தயாரிக்கும்போது அவற்றை உப்பச் (மேலெழும்ப வைத்து) மிருதுவாக்குவது கார்பன் டை ஆக்சைடே ஆகும்.
* சோடியம் கார்பனேட் அல்லது சலைவச் சோடா (Na2 Co3) சலவைத் தொழிலில் சலவைச் சோடாவாகப் பயன்படுகிறது. சோடியம் கார்பனேட், வீடுகளில் சுத்தம் செய்யும் பொருளாகவும் பன்படுகிறது. பலவித உலர்ந்த சோப்புப் பவுடர்களில் இது முக்கியப் பகுதிப் பொருளாக உள்ளது. மேலும் கடின நீரை மென்னீராக்கவும், எரிசோடா, போராக்ஸ், கண்ணாடி, சோப்பு போன்ற பல சோடிய சேர்மங்கள் தயாரிக்கவும் காகிதம் தயாரிக்கவும் பயன்படுகிறது.
* சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) (Nacl) உணவு சயாரிப்பிலும், எரிசோடா, வாஷிங் சோடா, சலவைச் சோடா போன்ற பல சோடிய சேர்மங்கள் தயாரிக்க மூலப்பொருளாகவும், ஹைட்ரோகுளோரிக் அமிலம் தயாரிக்கவும், குளோரின் வாயு தயாரிப்பிலும், சோப்பு தயாரிப்பிலும், மிகக்குறைந்த வெப்பநிலையை உருவாக்கும் உறை கலவை (பனிக்கட்டி + சோடியம் குளோரைடு) தயாரிப்பிலும் பயன்படுகிறது.
* மேலும் மீன் இறைச்சி போன்றவற்றைக் கெடாமல் பாதுகாக்கவும் சோடியம் குளோரைடு பயன்படுகிறது.

No comments:

Post a Comment