Showing posts with label last date to apply. Show all posts
Showing posts with label last date to apply. Show all posts

Friday, 4 October 2013

குரூப் - 2 தேர்வு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்


குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். துணை வணிக வரி அலுவலர், சார் - பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளில், 1,064 பணியிடங்களை நிரப்ப, குரூப் -2 தேர்வு அறிவிப்பை, செப்., 4ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது.

செப்., 5ம் தேதி முதல், தேர்வாணைய இணையதளம் வழியாக, பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வு கட்டணத்தை, 8ம் தேதிக்குள், செலுத்த வேண்டும். இதுவரை, 4.5 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. கடைசி நாளான இன்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் - 2 முதல் நிலைத்தேர்வு, டிசம்பர், 1ம் தேதி நடக்கிறது.