Showing posts with label மின்சாரம் தொடர்பான சில சொற்கள். Show all posts
Showing posts with label மின்சாரம் தொடர்பான சில சொற்கள். Show all posts

Monday, 25 November 2013

மின்சாரம் தொடர்பான சில சொற்கள்


ஆல்டெர்னேட்டிங் கரண்ட், ஏசி (Alternating current, AC) - மாறுதிசை மின்னோட்டம்
பேட்டரி (Battery) - மின்கலம் சார்ஜ் (Charge) 
பெயர்ச்சொற்கள் – மின்தன்மை, மின்னேற்றம், மின்னூட்டம்.
வினைச்சொற்கள் – மின்னேற்று, மின்னூட்டு
சார்ஜர் (Charger) - மின்னேற்றி
சர்க்யூட் (Circuit) - மின்சுற்று
கண்டக்டர் (Conductor) - மின்கடத்தி
டைரக்ட் கரண்ட், டி.சி. (DC) - நேர்திசை மின்னோட்டம்
டிஸ்சார்ஜ் (Discharge) - மின்கசிவு
எலெக்ட்ரிக்ஸ் (Electrics) - மின் அமைப்பு
ஹைட்ரோஎலெக்ட்ரிக் (hydroelectric) - நீர்மின் (நீர்மின் நிலையம்), புனல்மின் (புனல்மின் நிலையம்)
இண்டக்ஷன் (Induction) - மின்தூண்டல்
ப்ளக் (plug) - மின்பொருத்தி
பைலான் (pylon) - (உயர் அழுத்த) மின்கோபுரம்
ரெசிஸ்டென்ஸ் (resistance) - மிந்தடுப்புத் திறன், மின் எதிர்ப்புத்திறன்
செமிகண்டக்டர் (semiconductor) - குறை மின்கடத்தி
ஷாக் (shock) - மின்தாக்கு
ஷார்ட், ஷார்ட் சர்க்யூட் (short, short circuit) - மின்சுற்றுக் கோளாறு
ஸ்டேட்டிக் எலெக்ட்ரிசிட்டி (static electricity) - நிலை மின்சாரம்
டிரான்ஸ்ஃபார்மர் (transformer) - மின்மாற்றி
வயர் (wire) - மின்சரடு
வோல்டேஜ் (voltage) - மின்னழுத்தம்
வோல்ட்மீட்டர் (voltmeter) - மின்னழுத்தமானி