Showing posts with label டி.இ.டி.. Show all posts
Showing posts with label டி.இ.டி.. Show all posts

Thursday, 7 November 2013

டி.இ.டி., தேர்வில் சாதனையாளர்கள்

டி.இ.டி., தேர்வில் முதல் மூன்று இடங்களை எட்டு பேர் பிடித்தனர். இவர்களில் ஆறு பேர் பெண்கள்.



Wednesday, 30 October 2013

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு


இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. 

ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 23 September 2013

டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை


ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங் களை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் ரங்கராஜன் கூறியதாவது:

பகுதி நேர தொழிற்கல்வி சிறப்பாசிரியர்களை, முழு நேர ஆசிரியர்களாக தரம் உயர்த்திட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும். பதவி உயர்வு மற்றும் இட மாறுதலில் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை, முன்னுரிமை பட்டியல் படி, பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் ஆண்டு முழுவதும் நடக்கிறது. இதை வரைமுறைப்படுத்தி, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் சார்பில், வரும், 25ம் தேதி, சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடக்க உள்ளது.இவ்வாறு, ரங்கராஜன் கூறினார்.

Saturday, 29 June 2013

டி.இ.டி., தேர்வுக்கு 4.8 லட்சம் பேர் விண்ணப்பம்


ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வுக்கு, இதுவரை, 4.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கின்றன. இதற்கான விண்ணப்பங்களை, கடந்த, 17ம் தேதியில் இருந்து, டி.ஆர்.பி., வழங்கி வருகிறது. விண்ணப்பங்களை வாங்கவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்கவும், ஜூலை, 1 கடைசி நாள். இதற்கு இன்னும், இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், இதுவரை, 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியிருப்பதாகவும், 4.8 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில், திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று மாலை தெரிவித்தன.

கடைசி நாளன்று, பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள் எண்ணிக்கை, 5.5 லட்சம் முதல், 6 லட்சம் வரை உயரலாம் என, எதிர்பார்ப்பதாகவும், டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை ஆசிரியர் தேர்வு : ஜூலை, 21ல் நடக்கும், முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, ஒரு லட்சத்து, 76 ஆயிரத்து, 654 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான, "ஹால் டிக்கெட்', அடுத்த வாரத்தில், தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண என்ற டி.ஆர்.பி., இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது.

"தேர்வர்கள், வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படாது;அனைவரும், இணையதளத்தில் இருந்து, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்' என்று, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர்.