Showing posts with label செமிட்டிக் மொழிகள் (Semitic languages). Show all posts
Showing posts with label செமிட்டிக் மொழிகள் (Semitic languages). Show all posts

Tuesday, 22 October 2013

செமிட்டிக் மொழிகள் (Semitic languages)


செமிட்டிக் மொழிகள் (Semitic languages) என்பது 300 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மொழிகளின் குடும்பமாகும். பெரும்பாலும் நடுகிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் கிழக்கு ஆபிரிக்கா பகுதிகளில் பேசப்படுகிறது. செமிட்டிக் மொழிகள் ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் வடகிழக்கு துணைப்பிரிவில் அடங்குகின்றன. மேலும், இக்குடும்பத்தில் ஆசியாவில் பேசப்படும் ஒரே மொழிக் கிளையாக செமிட்டிக் மொழிகள் விளங்குகின்றன.

இன்று மிகக் கூடுதலாக பேசப்படும் செமிட்டிக் மொழி அரபு மொழியாகும். 270 மில்லியன் மக்கள் அரபு மொழியையும், 27 மில்லியன் மக்கள் அம்ஃகாரிக் மொழியையும் 7 மில்லியன் மக்கள் எபிரேய மொழியையும் பேசுகின்றனர். செமிடிக் மொழிகள் உலகின் முதலாவது எழுத்து வடிவை கொண்ட மொழிகளுள் ஒன்றாகும். அக்காத் மொழியின் எழுத்து முறைமை கிமு 3வது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. செமிடிக் என்ற பெயர் ஊழிவெள்ளத்திலிருந்து தப்பியதாக விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நோவாவின் மகனான சேம் என்பரை முதலாக கொண்டு இடப்பட்டதாகும்.