Showing posts with label குரூப்-4 வி.ஏ.ஓ.. Show all posts
Showing posts with label குரூப்-4 வி.ஏ.ஓ.. Show all posts

Saturday, 20 April 2013

தேர்வு பாட திட்டங்களை தமிழில் வெளியிட நடவடிக்கை


டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.

குரூப்-2, குரூப்-4, வி.ஏ.ஓ., உள்ளிட்ட, ஆறு தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை, மீண்டும் மாற்றி அமைத்து, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொது அறிவு பாடத்திட்டங்கள், திறன் அறிதல் மற்றும் கூர்மையாக சிந்தித்து விடை அளிக்கும் பகுதி ஆகியவை, ஆங்கில வழியில் வெளியிடப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பு தர நிலையில் நடக்கும் குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வுகளை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இவர்களுக்கான பாடத்திட்டங்களும், ஆங்கில வழியில் உள்ளன. இதை, தமிழ் வழியில் வெளியிட்டால், தேர்வர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், விரைவில், இந்தப் பணியை முடித்து, தமிழ்வழியில் வெளியிட, தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. குரூப்-4, வி.ஏ.ஓ., பொது தமிழ் பகுதியில், பொருத்துதல், பொருத்தமான பொருளை அறிதல், பொருந்தாத சொல்லை கண்டறிதல், இலக்கியம் மற்றும் சிற்றிலக்கியங்கள் உள்ளிட்டவை, பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. புகழ்பெற்ற ஆசிரியர்களைப் பற்றிய பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.