Showing posts with label குரூப்-1 தேர்வு வயது வரம்பை உயர்த்தக்கோரி உண்ணாவிரதம். Show all posts
Showing posts with label குரூப்-1 தேர்வு வயது வரம்பை உயர்த்தக்கோரி உண்ணாவிரதம். Show all posts

Saturday, 12 October 2013

குரூப்-1 தேர்வு வயது வரம்பை உயர்த்தக்கோரி உண்ணாவிரதம்

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-1 தேர்வை நடத்துகிறது.

குரூப்-1 தேர்வு எழுதுவதற்கு தமிழகத்தில் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 30 ஆகவும், மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், கேரளாவில் வயது வரம்பு 50 ஆகவும், குஜராத், அரியானா, ஜார்கண்ட் உள்பட பல மாநிலங்களில் 45 ஆகவும் உள்ளது. 

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை பொதுப்பிரிவு, எம்.பி.சி., பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய அனைத்துப் பிரிவுக்கும் 45 ஆக உயர்த்தக்கோரி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வர் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்தும் குரூப்-1 தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆறுமுகம், பி.எல்.சுந்தரம், மற்றும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துப் பேசினர்.