Showing posts with label இந்திய கப்பல் படை வேலை. Show all posts
Showing posts with label இந்திய கப்பல் படை வேலை. Show all posts

Sunday, 1 December 2013

பிற நாடுகளுடன் இந்தியாவிற்கு உள்ள கடற்பகுதி எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகப் படையாக கடலோரக் காவல் படை 1977ல் நிறுவப்பட்டது. இந்தப் படை இந்தியாவில் கடல் புற எல்லைப் பகுதியில் மக்களின் பாதுகாப்பை நிலை நாட்டுவது, இந்திய கடலோர எல்லைகளை முழுமையாக பாதுகாப்பது என்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் படையில் துணை கமாண்டண்ட் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் : ஆண்களுக்கான ஜெனரல் டியூடி அஸிஸ்டெண்ட் கமாண்டண்ட், ஆண்களுக்கான பைலட், நேவிகேட்டர் அல்லது அப்சர்வர், டெக்னிகல் பிராஞ்ச், ஆண் மற்றும் பெண் பைலட்டுகள், ஜெனரல் டியூடி - மகளிர் போன்ற பிரிவுகளில் இந்த அதிகாரி காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது : இந்தப் பதவிகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்ச மற்றும் அதிக பட்ச வயது நிர்ணயம் உள்ளது.
துல்லியமான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தகுதி : ஜெனரல் டியூடி பதவிக்கு 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பும், பிளஸ் 2 அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். டெக்னிகல் பதவிக்கு எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், ஏரோனாடிக்ஸ் பிரிவு ஏதாவது ஒன்றில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு தேவை. பைலட், நேவிகேட்டர் அல்லது அப்சர்வர் பதவிக்கு பி.எஸ்.சி., படிப்பை கணிதம் அல்லது இயற்பியலில் முடித்திருக்க வேண்டும். ஆண் மற்றும் பெண் பைலட்டுகள் பிரிவுக்கு பிளஸ்2 அளவிலான படிப்பு தேவைப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.12.2013
விபரங்கள் அறிய இணையதள முகவரி :
http://www.joinindiancoastguard.gov.in/PDF/OFFICER_%20ADVT%2002&2014.pdf>