Saturday, 1 March 2014

Coase Theory of Firm - என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் அளவு எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது; ஒரு நிறுவனம் எந்தெந்த உற்பத்தியில் ஈடுபடும் என்ற கேள்விகளுக்கு விடை அளிக்க Ronald Coase என்ற நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர் முயற்சித்தார்.
சந்தையில் வாங்குவதால் ஏற்படும் செலவையும் நிறுவனத்திற்குள்ளேயே வாங்குவதால் உள்ள செலவோடு ஒப்பிட்டு முடிவுசெய்வதுதான் லாபம் தரக்கூடியது, அதன் அடிப்படையில்தான் நிறுவனத்தின் அளவும், நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகளும் இருக்கும் என்று Coase கூறினார்.
கார் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், பல பொருட்களை வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாங்கும். உதாரணமாக, சிறு உதிரிபாகங்கள், டயர், டியூப் போன்ற பொருட்களை வெளியில் வாங்கும். இந்நிறுவனம் இந்தப் பொருட்களை மற்ற நிறுவனங்களிடமிருந்து வாங்கும்போது அந்நிறுவனங்களின் லாபமும் அவற்றின் விலையில் இருக்கும்.
இப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை இக்கார் நிறுவனமே வாங்கிவிட்டால், குறைந்த விலையில் அப்பொருட்களை உற்பத்தி செய்து பெறமுடியும். ஆனால், இந்தக் கூடுதல் பாகங்களை உற்பத்தி செய்ய அதிக நிர்வாக செலவு ஆகும் என்றால், அந்நிறுவனம் தொடர்ந்து சந்தையிலேயே அப்பொருட்களை வாங்கும்.
asymmetric information
ஒரு வியாபார ஒப்பந்தத்தில் இருபுறமும் உள்ள இருவரிடையே வெவ்வேறான தகவல்கள் இருக்கும். உதாரணமாக என்னிடம் ஒரு பழைய கார் உள்ளது. அக்காரின் செயல்பாடுகள் எல்லாம் எனக்கு மட்டுமே தெரியும். அக்காரை பற்றிய விபரங்கள் சிறிதளவே தெரிந்த நீங்கள் என்னிடம் வாங்க முன்வருகிறீர்கள்.
ஆகவே நம் இருவரிடையே காரைப் பற்றிய விவரங்கள் சமமாக இல்லை, இதனை asymmetric information என்பர். பழைய பொருட்கள் வியாபாரம் மட்டுமல்லாமல் வேறு பல பொருட்களின் சந்தைகளிலும் இவ்வாறாக asymmetric information நிலவும். காப்பீடு, சிக்கலான electronic பொருட்கள், தொலைபேசி சேவை என்று பல உதாரணங்களைக் கொடுக்கலாம். asymmetric information இருப்பதால் adverse selection அல்லது moral hazard போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

No comments:

Post a Comment