Sunday, 2 March 2014

'இஸ்ரோ'வில் இன்ஜினியரிங் பணிவாய்ப்பு

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் எனப்படும் இஸ்ரோவை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு பெயர் போன இந்த நிறுவனம் அதன் அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தில் 3 பிரிவுகளின் கீழ் சயின்டிஸ்ட்/இன்ஜினியரிங் பிரிவில் உள்ள 102 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: இஸ்ரோவின் சயின்டிஸ்ட் / இன்ஜினியரிங் காலியிடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 35ம், மெக்கானிகலில் 50ம், கம்ப்யூட்டர் சயின்ஸில் 17ம் நிரப்பப்பட உள்ளன.
தகுதி: தொடர்புடைய பிரிவில் பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பைக் குறைந்தபட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த கல்வியாண்டில் இறுதிப் படிப்பை முடிப்பவர்களும் இந்தப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது: 13.03.2014அடிப்படையில் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: முதலில் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் கிடைக்கும் சலானின் உதவியுடன் ரூ.100/-ஐ ஏதாவது ஒரு பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செலுத்த வேண்டும். சலானின் ஒரு பகுதியைப் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Head, P & GA (ICRB), ISRO Headquarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore - 560094 
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.03.2014
இணையதள முகவரி: <http://www.isro.gov.in/isrocentres/isac.aspx>
Click Here

No comments:

Post a Comment