Monday, 10 March 2014

நாளைய உலகம்- காடுகளை கவனிக்கும் கூகுள்

கொல்கத்தாவில் மைக்ரோசாப்ட்
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் மைக்ரோசாப்ட் பொறியியல் மையங்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக விரைவிலேயே கோல்கத்தாவில் ‘மைக்ரோசாப்ட் சென்டர் ஃபார் எக்சலன்ஸ்’ என்னும் மையத்தை தொடங்கவுள்ளது. இந்த
மையம் உருவானால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதை கருத்தில் கொண்ட மேற்குவங்க அரசு, பெங்களூருவில் அமைய விருந்த இந்த மையத்தை மிகவும் போராடி கோல்கத்தாவிற்கு கொண்டு சென்றிருக்கிறது.
தீர்ந்தது பிரச்னை
பேஸ்புக், ட்விட்டர், நெட் பேங்கிங், அவுட்லுக் என்று முழுக்க முழுக்க பாஸ்வேர்டுகளாலான இந்த வாழ்க்கையில், அவற்றை நினைவில் வைத்துக்கொள்ள மூளையோடு சேர்த்து ஒரு 1 GB ஹார்ட் டிஸ்க் தேவைப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துபாயைச் சேர்ந்த அல் சலோம் என்னும் மாணவர் ‘ஜியோகிராபிக்கல் பாஸ்வேர்டு சிஸ்டம்’ என்னும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். ஒருவர் இணையத்
திலுள்ள மேப்பில் தனக்கு பிடித்த மரத்தையோ மலையையோ சுற்றி ஒரு வட்டத்தையோ இல்லை சதுரத்தையோ வரைந்தால் குறிப்பிட்ட அந்த இடத்திற்கான ஆரம், விட்டம், சுற்றளவு, அச்சரேகை மகர ரேகை போன்ற புவியியல் விவரங்கள் பாஸ்வேர்டாக மாறிவிடும். இதன் மூலம் பாஸ்வேர்டை பாதுகாப்பதும், நிர்வகிப்பதும் எளிதாகி விடும்.
காடுகளை கவனிக்கும் கூகுள்
சுற்றுச்சூழலை பாதுகாக்க டூடுல்களை மட்டுமே போட்டு வந்த கூகுள், இப்போது நேரடியாக களத்தில் இறங்கிவிட்டது. காடுகளை காப்பாற்ற ‘குளோபல் ஃபாரெஸ்ட் வாட்ச்’ என்னும் ஆன்லைன் சாதனத்தை உருவாக்கியுள்ளது. உலகிலுள்ள எல்லா காடுகளையும் செயற்கைகோள் மூலம் கண்காணிப்பதுதான் அந்த ஆன்லைன் சாதனத்தின் வேலை. அந்த சாதனத்தை பயன்படுத்தும் பயனர், தனக்கு அருகாமையில் அழிந்து கொண்டிருக்கும் காடுகளை உடனடியாக காப்பாற்றிவிட முடியும். காடுகள் அழிந்த பிறகு உலகில் இத்தனை சதவீதம் காடுகள் அழிந்துவிட்டது என்று புள்ளிவிவரம் கூறுவதை தவிர்த்து அழிந்து கொண்டிருக்கும் காடுகளை காப்பாற்றுவதற்காக இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளதாம் கூகுள் நிறுவனம்.
முடிவிலிருந்து தொடக்கம்
விண்டோஸ் XP பயனர்களுக்கு இது கொஞ்சம் சோகமான செய்தி. வருகிற ஏப்ரல் 8-ம் தேதியோடு மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் XPக்கான சேவைகளை நிறுத்த
வுள்ளது. இந்த தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விண்டோஸ் XP இயங்குதளத்தை பயன்படுத்தி வருபவர்களுக்கு இனி மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து எந்த சேவைகளும் கிடைக்காது. விண்டோஸ் XPக்கான மென்பொருள்களையும் யாரும் பயன்படுத்த முடியாது. இப்படி
விண்டோஸ் XPக்கு மூடுவிழா கொண்டாடினாலும், அதே தினத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்தின் அடுத்த வெர்ஷனாக விண்டோஸ் 8.1 இயங்குதளத்தை கொண்டு வரவுள்ளது.

No comments:

Post a Comment