Wednesday, 5 March 2014

டி.என்.பி.எஸ்.சி. 'குரூப் 4' தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. 'குரூப் 4' தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்தத் தேர்வு முடிவுகளை இன்று காணலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் 5,566 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 12 லட்சம் பேர் எழுதினர்.
குரூப்-4 தேர்வைப் பொருத்தவரை ஒரே ஒரு எழுத்துத் தேர்வுதான். மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசு வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: