Monday, 17 February 2014

மத்திய இடைக்கால பட்ஜெட் 2014-15: முக்கிய அம்சங்கள்

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 2014-15ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்வதுடன், வரும் ஜூலை மாதம் வரையிலான அத்தியாவசிய செலவினங்களுக்கான அனுமதியை (வோட் ஆன் அக்கவுன்ட்) மத்திய அரசு கோரியது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் வழங்கிய உரையின் முக்கிய அம்சங்கள்:
சமூக நீதி அமைச்சகத்துக்கு ரூ.6730 கோடி ஒதுக்கீடு.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ.7000 கோடி ஒதுக்கீடு.
நாட்டில் 14 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து நிலை மேம்படுத்தப்பட்டுள்ளனர்.
சிறிய ரக கார்கள் மீதான உற்பத்தி வரி 12-ல் இருந்து 8 சதவீதமாக குறைப்பு.
உணவு, உரம் மற்றும் எரிவாயு மானியத்துக்கு ரூ. 2,46,397 கோடி.
வரிச் சட்டங்களில் மாற்றம் இல்லை. ஆனால், மறைமுக வரிகளில் மாற்றம் உண்டு.
அமெரிக்கா, சீனாவுக்குப் பிறகு, உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நிலையைக் கொண்டுள்ளது இந்தியா.
கல்விக் கடன்களுக்கான ரூ.2,600 வட்டி தள்ளுபடி.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு ரூ.33,725 கோடி.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு ரூ.67,398 கோடி.
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கு ரூ.6730 கோடி.
குடிநீர் அமைச்சகத்துக்கு ரூ.15,260 கோடி ஒதுக்கீடு.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ரூ.21,000 கோடி ஒதுக்கீடு.
வீட்டு வசதித் துறை அமைச்சகத்துக்கு ரூ.6000 கோடி.
ரயில்வே துறைக்கான உறுதுணைத் தொகை ஒதுக்கீடு, ரூ.29,000 கோடி உயர்வு.
உணவு மானியத்துக்கு ரூ.1,16,000 கோடி ஒதுக்கீடு.
2015-ல் இருந்து ராணுவத் துறையினருக்கு 'ஒன் ரேங்க் - ஒன் பென்ஷன்' திட்டம் அறிவிப்பு.
மானியங்களுக்கு ரூ.2,46,397 கோடி ஒதுக்கீடு.
பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு 10 சதவீதம் கூட்டப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை விஷயத்தில் அரசு முழுமையான உறுதிபூண்டுள்ளது.
தேசிய திறன் மேம்பாட்டு அறக்கட்டளைக்கு கூடுதலாக ரூ.1000 கோடி.
நாட்டில் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தேசிய சோலார் திட்டத்தின் கீழ் 4 அல்ட்ரா மெகா சோலார் திட்டங்கள்.
தேசிய வேளாண் - வனக் கொள்கைக்கு அரசு ஒப்புதல்.
வடகிழக்கு மாநிலங்கள், ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டுக்கு கூடுதலாக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கிடு.
தற்போது நாட்டில் 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகள் உள்ளன.
கல்விக்கு ரூ.79,541 கோடியை அரசு செலவிட்டுள்ளது.
236 மில்லியன் டன் உணவுப் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 554 மில்லியன் டன் நிலக்கிரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 67 சதவீத மக்கள் பயனடைகின்றனர்.
வேளாண் துறையின் மொத்த உற்பத்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் 4% ஆக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் 4.6% ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வெகுவாக உயர்ந்துள்ளது. இறக்குமதி குறைந்துள்ளது.
உலகின் மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சவாலாக இருந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறை, தற்போது கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

No comments:

Post a Comment