கிராமபோன் என்பது 1870-களில் இருந்து 1980-கள் வரை ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகும்.
ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.
பிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் 1877 களின் இறுதியில் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயல்முறை விளக்கம் தரமுடியவில்லை.
அதேநேரம் தாமஸ் எடிசன் தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார். நவம்பர் 21, 1877 இல் தாமஸ் ஆல்வா எடிசன் ஒலியை பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப்படுத்தினார்.
இதன்பின்னர் 1878ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் இதே நாளில் அவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்:
* 1959 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது.
* 1985 - ஸ்பெயினில்வின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
* 1986 - சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
* 1986 - அம்பாறையின் உடும்பன்குளத்தில் 60 விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment