மத்திய எரிசக்தித் துறை முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா கூறியது போல்,
நெகாவாட் அடிப்படையிலான மின் ஆளுமை மற்றும் பகிர்மான முறை சிறந்தது என்று
மின் துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மெகாவாட் உற்பத்தி அளவு என்பது போல், நெகாவாட் என்பது நாம் எவ்வளவு
மின்சாரம் சேமிக்கிறோம் என்பதற்கான அளவாகக் கூறப்படு கிறது. நெகாவாட் என்ற
வார்த்தையை அமெரிக்காவின் ராக்கி மவுண்டன் இன்ஸ்டிடியூட் நிறுவன விஞ்ஞானி
அமோரி லோவின்ஸ் 1989ல் பயன் படுத்தினார். அதாவது தேவையற்ற இடங்களில்
மின்சாரத்தை பயன் படுத்தாமல் இருப்பதும், மின்சாரத்தை வீண் செலவு செய்யாமல்
இருப் பதும், இயற்கையிலிருந்து கிடைக் கும் எரிசக்தியை சேமிப்பதும்
நெகாவாட் அளவீட்டில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த அளவீடு தற்போது
அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அதிகரிக்கும் அணுமின் நிலையங் களால் சுற்றுச்சூழல் மாசுபடு வதுடன்,
நோய்களும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறி
வருகின்றனர். இதைத் தவிர்க்க மெகாவாட் அடிப் படையில் எவ்வளவு உற்பத்தி செய்
தோம் என்பதற்கு பதிலாக, நெகாவாட் அடிப்படையில் சேமிப்பு, மறு சுழற்சி
அடிப்படையில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான முறையே சிறந்தது என்று மத்திய
எரிசக்தி முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா சமீபத்தில் கருத்து
தெரிவித்தார்.
நிலக்கரி, அணு மின் நிலையங்கள் இல்லாத நெகாவாட் மின் கையாளும் முறை
சாத்தியமா என்பது குறித்து மின் துறை வல்லுநர்கள் அளித்த பதில் வருமாறு:
டி.ஜெயசீலன், தமிழக மின் பகிர்மானக் கழக ஓய்வுபெற்ற இயக்குநர்
நிலக்கரியோ, அணு சக்தியோ இல்லாத மின் உற்பத்திக்கு சாத்தியங் கள்
குறைவாகத்தான் உள்ளன. தற்போது நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருகிறது.
அதற்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்து தர வேண்டும். இல்லையென்றால் தொழில்
துறையில் எந்த முன்னேற்றமும் வராது.
தொழில் முன்னேற்றத்துக்காக மின் உற்பத்தி திட்டங்கள் வருவது மிகவும்
அவசியமானது. மின் தேவைகளை குறைக்க வேண்டுமென்பதை விட அதை சேமிக்க வேண்டும்
என்பது சரிதான். அதனால்தான், தமிழக மின் துறையின் மூலம், மின்சாரத்தை வீண்
செய்யாத இயந்திரங்களை பயன் படுத்தவும், மின் சக்தியை சேமிக்கும்
சி.எப்.எல். பல்புகளை பயன்படுத்தவும் நுகர்வோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக மின் நிலையங்கள் பெரும்பாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த ஆபத்தும் தராத
வகையில், மற்ற மாநிலங்களை விட சிறந்த மின் உற்பத்தி திறன் கொண்டவையாகவே
செயல்படுகின்றன.
எஸ்.அப்பாவு, தமிழக மின் துறை தலைமை ஆய்வாளர்
மின்சாரத்தை சேமிக்க பல வகையான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மின்
துறையால் மேற் கொள்ளப்படுகின்றன. மின்சாரத்தை சேமிக்கும் பல்வேறு
நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. மின்சார பயன்பாட்டை குறைக்க
முடியாது. ஏனென்றால் மின் சக்தி மூலமே தொழில் வளர்ச்சி இருக்கிறது. மாறாக
மின்சாரம் வீணாவதை பல வழிகளில் தடுக்க முடியும்.
அந்த அடிப்படையில் மின்சாரம் வீணாகாமல் இருக்க, பி.இ.இ. தர சான்றிதழ் பெற்ற
மின் உப கரணங்களை பயன்படுத்துவதை கட்டாயமாக்கியிருக்கிறோம். மின்
உற்பத்திக்கான எரிபொருளான நிலக் கரியோ, அணு எரிபொருளோ ஒரு கட்டத்தில்
தீரும் என்று கூறினாலும் சூரியசக்தி, காற்றாலை, உயிரிக்கழிவு என்பது போல்
நாளுக்கு நாள் புதிய தொழில் நுட்பம் வரும் என்பதை மறுக்க முடியாது. அதனால்
தேவை யற்ற பீதி வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment