சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங் பிறந்த பங்காய் கிராமத்தை வரலாற்று நினைவுச்சின்னமாக அறிவித்து அதை மேம்படுத்த பைசாலாபாத் நகர நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. இதை சாத்தியப்படுத் தும் விதமாக வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இடங்களை மேம் படுத்தி அவற்றின் பெருமைமிகு பழமைத்தன்மைக்கு மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் பங்காய் கிராம மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
லாகூரிலிருந்து 150 கிமீ தொலைவில் உள்ளது பங்காய் கிராமம். இந்த கிராமத்துடன் பைசாலாபாத் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மேலும் 5 கிராமங்களும் மேம்படுத்தப்பட உள்ளன என பைசாலாபாத் மாவட்ட அதிகாரி மாலிக் முஷ்டாக் திவானா (மனித ஆற்றல் மேலாண்மை பிரிவு) ‘தி இந்து’ நிருபரிடம் தெரிவித்தார்.
லியால்பூர் வரலாற்று நினைவுச் சின்ன அறக்கட்டளை மேற்கொள்ளும் இத் திட்டத்துக் கான செலவு ரூ. 12 கோடி ஆகும். இந்த திட்டத்துக்கு அனுமதி கேட்டு பஞ்சாப் மாகாண முதல்வருக்கு மனு அனுப்பி வைக்கப்படும் என்றார் திவானா. கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களை அதன் பழைமை பாரம்பரியத்துக்கு மேம்படுத்தி கட்டமைப்பு வசதிகளை செம்மைப் படுத்தி பயணிகள் வருகையை அதிகரிப்பது இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம்.
பங்காய் கிராமத்துடன் மனித நேய ஆர்வலரும் பொறியாளரு மான சர் கங்காராமின் கங்காபூர் கிராமம், சுதந்திரப் போராட்ட தியாகி அகமது கானின் ஊரான கரால் மற்றும் வேறு 2 பகுதி களும் மேம்படுத்தப்படும். ஒதுக்கப் பட்ட நிதியைக்கொண்டு இந்த கிராமங்களை அழகு பெறச்செய்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் படும். பைசாலாபாத் மாவட்ட நிர்வாகம் அண்மையில் 45 இடங்களை வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளாக அறிவித்தது. அவற்றில் இந்த கிராமங்களும் உள்ளடங்கும்.
பகத் சிங் பிறந்த வீடும் அவர் பயின்ற பள்ளியும் பழைய பொலிவுக்கு மேம்படுத்தப்படும். அவர் பயின்ற ஒரு அறை பள்ளி இன்னும் காட்சி தருகிறது. அதன் சுவரும் கூரையும் இடிந்து போயுள்ளன. ஆனால் கரும்பலகை மற்றும் கதவுகள் அப்படியே இருக்கின்றன.
பங்காய் கிராமத்தின் பெருமை மிகு மகனாக கருதப்படும் பகத் சிங்கை கவுரவப்படுத்தும் வகை யில் இப்போதும் அந்த பள்ளியின் வெளி மைதானத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பகத் சிங்கின் வீடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உரிமையாளர்களுடன் பேசி அதை கையகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment