Wednesday, 12 February 2014

தமிழகத்தில் விழிப்புணர்ச்சி வேரை முதன் முதலில் நிலைநிறுத்தத் தொடங்கிய கவிஞன் பாரதிதாசன். பாரதியின் தாக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட புரட்சிக் கவிஞர் அவரது பரம்பரைக் கவிஞர்களில் முதன்மையானவர் வாணிதாசன். பாவேந்தரின் மாணவர் என்ற பெருமைக்குரியவர்.
வாழ்க்கைப் பயணம்: பிரெஞ்சு இந்தியாவின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரிக்கு(பாண்டிச்சேரி) அருகில் உள்ள நீர்வளம் நிறைந்த வில்லியனூர் என்னும் ஊரில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட திருக்காமு, துளசி அம்மையாருக்கு 1915 ஆம் ஆண்டு ஜூலை 22 ம் தேதி மகனாகப் பிறந்தார் வாணிதாசன். இவர்களது குடும்பம் ஒரு வைணவக்குடும்பம்.
வாணிதாசனின் இயற்பெயர் ரங்கசாமி. இது வாணிதாசனின் தந்தை திருக்காமுவின் தந்தை பெயர். வாணிதாசனின் பாட்டனார் பிரெஞ்சு அரசில் மேயராக இருந்தவர். செல்வமும் செல்வாக்கும் மிக்கக் குடும்பம் வாணிதாசனுடையது. ரங்கசாமி என்பது பாட்டனாரின் பெயராக இருந்ததால், குடும்பத்தில் உள்ளவர்கள் ரங்கமசாமி என்று பெயரசொல்லி அழைக்கத் தயங்கினர். எனவே வைணவக் குடும்ப மரபிற்கேற்ப எதிராசலு என்னும் செல்லப் பெயரால் அழைக்கப்பெற்றார்.
எதிராசலுவின் தாயார் அவருக்கு ஏழு வயது இருக்கும்போது ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து சில மாதங்களிலேயே உடல்நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் தாயின் அரவணைப்பின்றி தமது 12 ஆம் வயதுவரை எதிராசலு வாழ்ந்தார். அதன்பின் 1926 ஆம் ஆண்டு திருக்காமு உறவினர்களின் வற்புறுத்தலால் தனது உறவுக்கார பெண்ணான செல்லம்மாள் என்பவரை மறுமணம் புரிந்துகொண்டார்.
எனினும் தாயில்லாப் பிள்ளை என்கிற உணர்வு ஏற்படாமல் சிற்றன்னை செல்லம்மாளும், அவருடைய அப்பத்தா(தந்தையின் தாய்) பெத்தகத்தம்மாளும் நன்கு வளர்த்தனர்.
கல்வி: 1922 ஆம் ஆண்டு வில்லியனூர் திண்ணைப் பள்லியில் ரங்கசாமி சேர்க்கப்பெற்றார். விளையாட்டின் மீது மோகம் கொண்டு பள்ளிக்குச் சரியாக செல்லாமல் இருந்தார். பள்ளி ஆசியர் திருக்காமு ஒரு பொறுப்புள்ள அரசு அலுவலர். மேலும் தாயில்லா பிள்ளை என்பதால் எடையும் வெளியிக்காட்டாமல் பொறுத்துக் கொண்டார்.
1924 ஆம் ஆண்டு கவிஞரின் தந்தை வில்லியனூர் எனப்படும் மையப்பள்ளியில் தனது மகனைச் சேர்த்தார். அங்கு பிரெஞ்சு, தமிழ் கற்பிக்கப்பட்டன.
கவிஞரின் தந்தை பணி காரணமாக பாகூருக்கும், புதுச்சேரிக்கும் மாற்றப்பட்டார். அப்போது புதுச்சேரிய்ல் நான்காம் வகுப்பு நான்காம் வகுப்பு பயின்று வந்தார். அப்போது பாவேந்தர் அவரது வகுப்பு ஆசிரியர். மேலும் சி.சு.கிறுஷ்ணன் எல்லப்ப வாத்தியார், முத்துக்குமாரசாமி பிள்ளை ஆகியோர் ராமசாமியின் தமிழார்வத்தை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
1928 ஆம் ஆண்டு பதின்மூன்றாவது வயதில் மைய இறுதித்தேர்வில் புதுவை வட்டாரத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.
1932 -ல்  பிரெஞ்சு மொழிக்கல்வி முதல் பகுதி சான்றிதழ் தேர்வை எழுதி அதிலும் நல்ல மதிப்பெண்களை எடுத்தார்.
1934 -ல் பிரவே என்னும் தமிழ் பண்டிதர் தேர்வை தனியைக எழுதுவோருக்காக பாவேந்தர் பாரதிதாசன் தனிப்பட்ட வகுப்பு நடத்தி வந்தார் அதில் பயின்ற ராமசாமி இத்தேர்விலும் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்கு தகுதியானார்.
1937 ஆம் ஆண்டு அப்போதைய பதுவை நகரமேயர் இரத்தினவேலு பிள்ளை என்னும் பெரியவரின் பரிந்துரையின் பேரில் உழவர்கரையை அடுத்த பேட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
ரமி: பள்ளி ஆசிரியராகப் பணியாற்றஇய ராமசாமி, மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளையொட்டி பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா! எனத் தொடங்கும் முதல் கவிதையை மதுரையிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த சி.பா.ஆதித்தனாரின் திங்கள் இதழான தமிழன் இதழ் வெளியிட்டது.
இவ்விதழுக்கு தொடர்ந்து கவிதைகளை எழுதிவந்த ராமசாமி "ரமி" என்னும் புனைப்பெயரில் கவிதைகளை அனுப்பினார். இப்பெயரை விரும்பதா தமிழன் நிர்வாகம் வாணிதாசன் என்னும் புனைபெயரில் எழுதுமாறு கேட்டுக்கொணடது. இதனை ஏற்ற ராமசாமி வாணிதாசன் ஆனார்.
பாரதிதாசன் - வாணிதாசன்: நான்காம் வகுப்பு ஆசிரியர், பிரவே தேர்வு பயிற்சி ஆசிரியர் என்னும் நிலைகளைத் தாண்டி உள்ள உணர்வுகளால் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.(1944) கால கட்டங்களில் எப்போதும் பாரதிதாசனோடு இருப்பவராய் வாணிதாசன் மாறிப்போனார்.
1944 ஆம் ஆண்டு குறும்பகரம் பள்ளியின் பணியாற்றிபோது "விதவைக்கொரு செய்தி" என்னும் தலைப்பில் அமைந்த நான்கு வெண்பாக்கள் அறிஞர் அண்ணார் நடத்திய திராவிட நாடு இதழில் முகப்பு அட்டையில் வெளியிடப்பெற்றது. மேலும், அண்ணாவும் வாணிதாசனைப் பாராட்டி எழுதினார்.
1945 -ல் மீண்டும் பாகூருக்கு மாற்றப்பெற்று, சென்னையில் வித்துவான் பட்டம் பெற்றார். இதன்மூலம் 1948ல் புதுச்சேரி கல்வே கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.
திருமணம்: 1935 ஆம் ஆண்டு தமது இருபதாம் வயதில் தம் சிற்றன்னையின் தமையன் மகள் ஆதிலட்சுமியை மணந்தார். ஆண்களும், பெண்களுமாக மொத்தம் ஒன்பது குழந்தைகளைப் பெற்றிருந்தார் கவிஞர் வாணிதாசன்.
இலக்கியப்பயணம்: தமிழன் இதழ் மூலம் தொடங்கிய இலக்கியப் பயணம் திராவிட நாடு இதழின் மூலம் சிறப்பான புரட்சிக்கவிஞராய் அடையாளம் காணப்பட்டார். இதனால் முரசொலி, முத்தாரம், மன்றம், தென்றல் போன்ற திராவிட இயக்கப் பத்திரிக்கைகள் அவரின் கவிதைகளை கேட்டு வாங்கி வெளியிட்டு வந்தன.
1950-ல் புதுச்சேரியில் பாரதிதாசனால் நடைபெற்ற கவியரங்கில் முதல்பரிசை முடியரசனும், இரண்டாம் பரிசை வாணிதாசனும் பெற்றனர்.
அரசியலில் ஏற்பட்ட ஆர்வத்தினால் புரட்சியாளர் பெரியாரின் தன்மான இயக்கத்தில் பாரதிதாசன் முழக்கமிட்டதால் அவரின் சமுதாய உணர்வு அவரின் பரம்பரையினரையும் அதில் இணைத்தது. அதன்வாயிலாக வாணிதாசன் புரட்சிக்கவிதைகளை சுயமரியாதை இயக்கத்துக்காக எழுதினார். இதனை சுயமரியாதை ஏ"ுகள் வெளியிட்டன.
படைப்புகள்: 1935-ல் முதல் படைப்பு பாரதி நினைவு நாள் படைப்பு. தனிப்பாடல்கள் பாடுவதோடு நில்லாமல் குறுங்காப்பியங்களைப் புனைவதில் ஆர்வம் காட்டினார் வாணிதாசன்.
1949-ல் முதன் முதலில் புதுக்கோட்டை செந்தமிழ் நிலையத்தரால் தமிழச்சி என்னும் குறுங்காப்பியம் வெளியிடப்பெற்றது. கொடி முல்லை என்னும் காப்பியத்திற்கு பின்னர் எழுத்தப்பட்டது. ஆனால் முதலில் வெளியிடப்பட்டது தமிழச்சி.
1950 -ல் கொடிமுல்லை காப்பியத்தை செந்தமிழ் நிலையத்தார் வெளியிட்டனர். இவை இரண்டும் சீர்திருத்தக்காப்பியங்களாகும்.
1952-ல் தொடுவானம். இவை இசைத்தமிழுக்குப் பெருமை சேர்த்தது. இவற்றில் இசைப்பாடல்கள் பெரிதும் இடம் பெற்றிருந்தது.
1954-ல் எழிலோவியம் வெளியிடப்பட்டது. இதில் ஞாயிறு, மலை, முகில், காடு, கடல், சேரி, நிலை என்னும் எட்டு இயற்கை பொருள்களையும் பூந்தொட்டி, நூல், விளக்கு, முதுவைப்பருவம் குறித்த தனித்தனிப் பாடல்களாக தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது.
1956 -ல் 88 பாடல்களைக் கொண்ட வாணிதாசன் கவிதைகள் வெளியிடப்பட்டது. அப்போது அவரது புகழ் உச்சத்திற்கு சென்றது. இயற்கை, இன்பம், மக்கள், புரட்சி, தமிழ், பூக்காடு, இசைக்குரியார் போன்ற ஏழு உட்தலைப்புகளின் கீழ் பகுக்கப்பட்டு வெளியிடப்பட்டதுதான் இந்த கவிலை நூல்.
பொங்கல் பரிசு: கவிஞரால் வெவ்வேறு காலங்களில் பொங்கலுக்காகப் பல்வேறு இதழ்களுக்கு எழுதப்பெற்ற பொங்கல் வாழ்த்துப் பாடல்கள் ஒரு நூலாக தொகுக்கப்பெற்று 1958-ல் பொங்கல் பரிசு என்னும் பெயரில் வெளியடப்பட்டது.
தீர்த்த யாத்திரை என்னும் நூலும் வெளியிடப்பட்டது. இந்நூல் பாடல்களில் கதைகளைச் சொல்லும் கவிதை நூலாகும். இதனை கதைப்பாடல் என்றும் அழைப்பார்கள்.
1958- ல் இன்ப இலக்கியம்
1959 -ல் குழந்தை இலக்கியம்
1963 -ல் சிரித்த நுணா - தொகுப் நூல்
1963 -ல் இரவு வரவில்லை - தொகுப்பு நூல்
1963 -ல் பாட்டுப் பிறக்குமடா - தொகுப்பு நூல்
1963 -ல் இனிக்கும் பாட்டு குழந்தைகளுக்கா
1970 -ல் எழில் விருத்தம் - இவை எழிலோவியத்தைப் போன்ற நூல். இந்நூல் தீ.வீரபத்திர முதலியார் எழுதிய விருத்தப்பாவியலுக்கு இலக்கியமாகப் பாடப்பட்ட நூல்.
1972 -ல் பாட்டரங்கப்பாடல்கள் - இவை பல்வேறு பாட்டரங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு.
வோர்ட்ஸ்வோர்த்: கவிஞரின் வாணிதாசன் கவிதைகள் என்னும் தலைப்பில் வெளிவந்த பாடல்களின் தொகுப்பில் இயற்கையைப் பற்றிய கருத்துக்கள் இவரின் பாடல்களில் மிகுதியாக காணப்பட்டதால் இவரை தமிழகத்தின் வோர்ய்ஸ்வோர்த் என்று பாராட்டினார்கள். இந்த கவிதை தொகுப்பு பெரும்புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களிடம் பகுத்தறிவைத் தூண்டுவதே தன் பாடல்களின் நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பதுதான் சிறப்பு..
பட்டம்: மயிலை சிவமுத்து என்பவரால் தமிழ்நாட்டுத்தாகூர் என்று அழைக்கப்பெற்றார்.
சிறப்பு பெயர்கள்: கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் போன்ற சிறப்புப் பெயர்களும் இவருக்குண்டு.
பரிசு: தமிழக அரசு கவிஞரின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி இவரது குடும்பத்திற்கு ரூபாய் 10000 பரிசு வழங்கியுள்ளது. மேலும் இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கி பெருமை சேர்த்துள்ளது.
இவருடைய கவிதைகள் உருது, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 34 ஆண்டுகள் இவர் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். தான் வாழ்ந்த வீட்டிற்குப் "புரட்சி அகம்' என்று பெயர் வைத்த வாணிதாசனைப் போற்றும் வகையில், புதுவை அரசு இவர் வாழ்ந்த சேலியமேட்டில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு வாணிதாசன் பெயரைச் சூட்டியுள்ளது.
நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்:
01. இரவு வரவில்லை
02. இன்ப இலக்கியம்
03. இனிக்கும் பாட்டு
04. எழில் விருத்தம்
05. எழிலோவியம்
06. குழந்தை இலக்கியம்
07. கொடி முல்லை
08. சிரித்த நுணா
09. தமிழச்சி
10. தீர்த்த யாத்திரை
11. தொடுவானம்
12. பாட்டரங்கப் பாடல்கள்
13. பாட்டு பிறக்குமடா
14. பெரிய இடத்துச் செய்தி
15. பொங்கற்பரிசு
16. வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
17. வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
18. வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி
19. விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ
மறைவு: இயற்கையின் அழகை ரசித்தவரை 07.08.1974 ஆம் ஆண்டு இயற்கை ரசிக்க அழைத்துக் கொண்டது.

No comments:

Post a Comment