மத்திய அரசின் அலுவலக பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறையின் கீழ் இயங்கும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விவரங்கள்:
பணி: ஸ்டோர் அசிஸ்டென்ட்:
காலியிடங்கள்: 02 (பொது).
துறை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தேசிய வரைபடம் மற்றும் ஆய்வு அலுவலகம்.
வயதுவரம்பு: 17.02.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களின் பதிவேடுகளை பராமரிப்பு பிரிவில் ஒராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெபுடி ரேஞ்ஜர்:
காலியிடங்கள்: 01 (பொது)
துறை: கொல்கத்தாவில் உள்ள வன மற்றும் வன விலங்குகள் பாதுகாப்புத் துறை.
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: +2 முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டேட்டா புராசசிங் அசிஸ்டென்ட்:
காலியிடங்கள்: 29 (ஒபிசி- 23, எஸ்டி- 6)
துறை: வணிக புலனாய்வு மற்றும் புள்ளியியல் துறை, கொல்கத்தா.
வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அறிவியல், கணிதம், பொருளாதாரம், வணிகவியல், புள்ளியியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் கனிணி துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: இன்வஸ்டிகேட்டர்:
காலியிடங்கள்: 06 (பொது-02, எஸ்சி-01, எஸ்டி-01, ஒபிசி-02).
துறை: டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள ரிஜிஸ்டர் ஜெனரல் அலுவலகம்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மொழியியல் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சயின்டிபிக் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 02 (பொது-01, ஒபிசி-01)
துறை: நேஷனல் டெஸ்ட் ஹவுஸ்.
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
கல்வித் தகுதி: இயற்பியல் அல்லது வேதியியல் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி., அல்லது சிவில் அல்லது கெமிக்கல் டெக்னாலஜி ஆகிய துறைகளில் பி.இ முடித்து சம்பந்தப்பட்ட துறைகளில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
காலியிடங்கள்: 19 (பொது- 10, எஸ்சி- 03, எஸ்டி-01, ஒபிசி-05)
துறை: கொல்கத்தாவில் உள்ள கூட்டாண்மை மண்டல அலுவலகம்.
வயது: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: வணிகவியல், பொருளாதாரம் அல்லது சட்டம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: ரூ.50. இதனை 'சென்ட்ரல் ரெக்ருட்மென்ட் பீ ஸ்டாம்ப்' மூலம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, ஆளுமைத்தேர்வு, திறனறியும் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Director ,
Staff Selection Commission (ER),
234/4, A.J.C.,
Bose Road,
NIZAM PALACE,
1st MSO Building, 8th Floor,
KOLKATA 700020.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.2.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழுமையான விவரங்கள் அறிய http://www.sscer.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment