இந்திய எண்ணெய் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Boiler Operations Engineer (Grade-A)
மொத்த காலியிடங்கள்: 26
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எவலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி,டெக் முடித்திருக்க வேண்டும்
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Quality Control Officer
மொத்த காலியிடங்கள்: 17
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்று வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Human Resource Officer
மொத்த காலியிடங்கள்: 32
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Human Resource/Personnel Management & Industrial Relations/Social Work துறையில் 2 வருட முழுநேர முதுகலை டிப்ளமோ அல்லது முடுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Officer (Health, Safety & Environment)
மொத்த காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானில் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Hindi Officer
மொத்த காலியிடங்கள்: 11
கல்வித்தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பில் இந்தியில் எம்.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியை ஒரு பாடமாகக் கொண்ட பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Hindi Implementation/Translation அல்லது Media பிரிவில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் INDIAN OIL CORPORATION LIMITED (RE_FINERIES DIVISION) என்ற பெயரில் SBI, Service Branch (Code No.7687) கிளைகளில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு நிலையிலும் 40 சதவிகித மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே அடுத்த நிலைக்கு தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.02.2014
ஆன்லைன் படிவ பிரிண்ட் அவுட் தபாலில் சென்று சேர கடைசி தேதி: 12.02.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment