Saturday, 11 January 2014

2017-ல் சந்திராயன்-2: இஸ்ரோ தலைவர் தகவல்

வரும் 2017-ம் ஆண்டு சந்திராயன்-2 திட்டம் நிறைவேற்றப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிலவுக்கு சந்திராயன் 1 ஆய்வுக்கலத்தை 2008-ம் ஆண்டு இஸ்ரோ அனுப்பி வைத்தது. 2008 அக்டோபர் 22-ம் தேதி சந்திராயன் நிலவிலிருந்து 100 கி.மீ. தொலைவில் வெற்றிகரமாக நிலை நிறுத் தப்பட்டது.
அங்கிருந்தபடி நிலவின் ரசாயன, கனிம வளங்களையும், நிலவின் தரையமைப் பையும் சந்திராயன்-1 ஆய்வுக்கலம் ஒளிப் படங்களாக எடுத்து அனுப்பி வருகிறது. சந்திராயன்-1 வெற்றியைத் தொடர்ந்து, சந்திராயன் 2 ஆய்வுக்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தியத் தயாரிப்பு ஜிஎஸ்எல்வி ஏவுகணை மூலம் சந்திராயன் 2 அனுப்பப்படவுள்ளது.
டெல்லியில் பத்திரிகையாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
நிலவில் ஆய்வுசெய்வதற்கான உலவியை (ரோவர்) உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் மென்மையாக தரையிறங்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த 2012 மே மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தரையிறங்கும் உபகரணத்தை (லேண்டர்) இந்தியாவில் மேம்படுத்துவது சாத்தியமே என்ற சாதகமான முடிவு பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் இஸ்ரோ இறங்கியுள்ளது.
சந்திராயன் -2 திட்டத்தைச் செயல்படுத்த 2 அல்லது 3 ஆண்டுகள் அவகாசம் தேவைப் படும். ஓரிரு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. தரையிறங்கு உபகரணம் மென்மையாகத் தரையிறக்கப்படுவதற்காக அதன் திசைவேகத்தைக் குறைக்க வேண்டும்.
தரையிறங்கு உபகரணத்துடன் சார்ந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். எங்கு தரையிறக்குவது என்பதை படங்கள் எடுத்து உறுதிசெய்து, பின்னர் அங்கு தரையிறக்குவது என்பனவற்றில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியமாகிறது என்றார்.
சந்திராயன் 2 திட்டம் ரஷிய-இந்தியக் கூட்டு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்ப டுவதாக இருந்தது. ஆனால், ரஷிய விண் வெளி ஆய்வு மையத்தின் ஒரு திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து இதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் உலவி மற்றும் தரையிறங்கு உபகரணத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment