Saturday, 25 January 2014

இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் (ஜன.25-1971)

இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18-வது மாநிலமாக 25 ஜனவரி 1971-ல் அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய நகரங்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1882 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜார்ஜ் ஆகியோர் கொழும்பு வந்து சேர்ந்தனர். * 1890 - நெல்லி பிளை தனது 72 நாள் உலகம் சுற்றும் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். * 1917 - டானிஷ் மேற்கிந்தியத் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு 25 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது. * 1918 - உக்ரைன் மக்கள் போல்ஷெவிக் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தனர். * 1919 - நாடுகளின் அணி நிறுவப்பட்டது. * 1924 - முதலாவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பிரான்சில் ஷாமனீ என்ற இடத்தில் ஆரம்பமானது. * 1942 - இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மீதும் ஐக்கிய இராச்சியம் மீதும் போரை அறிவித்தது. * 1949 - சீனக் கம்யூனிஸ்டுகளின் படைகள் பீக்கிங்கினுள் நுழைந்தன.

* 1949 - இஸ்ரேலில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் David Ben-Gurion பிரதமரானார். * 1955 - சோவியத் ஒன்றியம் ஜெர்மனி மீதான போரை அதிகாரபூர்வமாக  நிறுத்தியது. * 1971 - உகண்டாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் மில்டன் ஓபோட் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இடி அமீன் தலைவரானார். * 1981 - மா சே துங்கின் மனைவி ஜியாங் கிங்-ற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. * 1986 - தேசிய எதிர்ப்பு இயக்கத்தினரால் உகாண்டா அரசு கவிழ்க்கப்பட்டது. * 1994 - நாசாவின் கிளமென்டைன் விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. * 1995 - யோசப் வாஸ் அடிகளார் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

* 1998 - கண்டியின் தலதா மாளிகையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 25 பேர் படுகாயமடைந்தனர். * 1999 - மேற்கு கொலம்பியாவில் இடம்பெற்ற 6.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர். * 2002 - விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது. * 2005 - இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மந்திராதேவி என்ற இடத்தில் கோயில் ஒன்றில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 258 பேர் கொல்லப்பட்டனர். * 2009 - முல்லைத்தீவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள கல்மடு குளத்தின் அணை விடுதலைப் புலிகளால் உடைக்கப்பட்டது.

No comments:

Post a Comment