Saturday, 25 January 2014

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் பணி

பாதுகாப்பு துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியரிங் அசிஸிடென்ட் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Assistant Trainee(EAT)
காலியிடங்கள்: 24 (எலக்ட்ரானிக்ஸ-10, மெக்கானிக்கல்-12, எலக்ட்ரிக்கல்-02)
சம்பளம்: ரூ.10,050 - 25,450.
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Technician 'C'
காலியிடங்கள்: 12 (மெக்கானிக்கல்-03, எலக்ட்ரானிக்ஸ்-03, பிட்டர்-07, வெல்டர்-02)
சம்பளம்: ரூ.8,740 - 22,150
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன்எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்ஸ், பிட்டர், வெல்டர் பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து எழுத்து தேர்வுக்கு கொண்டு வரவேண்டும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 02.03.2014
தேர்வு நடைபெறும் இடம்: Ghaziabad, Delhi
மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2014
அஞ்சலில் விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.02.2014

No comments:

Post a Comment