Thursday, 23 January 2014

2005க்கு முன் வெளியான ரூபாய் நோட்டுகள் செல்லாது: ஏப். 1 முதல் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம்

வரும் மார்ச் 31க்குப் பிறகு, 2005க்கு முன் வெளியிடப்பட்ட எல்லா கரன்சி தாள்களையும் ரிசர்வ் வங்கி வாபஸ் பெறுகிறது. இதன்படி 2005க்கு முன் வெளியான ரூ. 500, ரூ. 1000 நோட்டு உள்ளிட்ட எல்லா கரன்சி நோட்டுகளும் புழக்கத்திலிருந்து வாபஸ் பெறப்படும்.
கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளை கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளது.
இந்த நோட்டுகளை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். மறு அறிவிப்பு வரும் வரை இந்த வசதி தொடரும் என ரிசர்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2005க்கு முன் வெளியான நோட்டுகளின் பின்பக்கத்தில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு விவரம் இருக்காது.
2005க்குப் பிறகு வெளியிடப்பட்ட நோட்டுகளின் பின்பக்கத்தில் கீழ்பகுதியின் நடுவில் சிறிய வடிவில் கண்ணுக்குத் தெரியும்படி அச்சிடப்பட்ட ஆண்டின் விவரம் இருக்கும். இதை வைத்து அந்த நோட்டுகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment