1. அரிஸ்டாட்டில் எழுதிய படைப்புகளில் சுமார் 50 தொகுப்புகள் அதிர்ஷ்டவசமாக அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. கி.மு.80ஆம் ஆண்டில் பள்ளத்திற்குள் தூக்கியெறியப்பட்டிருந்த அவரது படைப்புகளை ஆசியாவிற்குள் ஊடுருவி வந்த ரோமானிய படையினர் கண்டெடுத்து தங்கள் படைத் தளபதி கல்லாவிடம் கொடுக்க, அவற்றை ரோம் நகருக்கு கொண்டுசென்ற கல்லா, மறுபிரதிகள் எடுக்க வைத்தாராம்.
2. அமெரிக்காவின் 26வது ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் ( 1901-09) 40 புத்தகங்கள் எழுதியுள்ளார். ஹார்வார்ட் யூனிவர்சிட்டியில் படிக்கும் போதே ""தி நேவல் வார் ஆஃப் 1812'' என்ற முதல் புத்தகத்தை எழுதினார்.
3. போப் ஆண்டவரின் ஆசியை பெற்ற முதல் கற்பனை நாவல் எது தெரியுமா? 1880 ஆம் ஆண்டு ஜெனரல் லீவாலஸ் எழுதிய "பென்ஹர்' என்ற நாவலாகும்.
4. ரூத் யார்ட் கிப்ளிங், தன்னுடைய குழந்தையை அன்புடன் கவனித்துக் கொண்ட பணிப்பெண் ஒருத்திக்கு புத்தகமொன்றை எழுதி அன்பளிப்பாகக் கொடுத்ததோடு, அவளுக்குப் பணம் தேவைப்படும்போது நல்ல பதிப்பாளரிடம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளவும் அனுமதியளித்திருந்தார். பல ஆண்டுகள் கழித்து அவளுக்குப் பணத் தேவை ஏற்பட்டபோது கிப்ளிங் தன்னிடம் அளித்த "ஜங்கிள் புக்' என்ற புத்தகத்தை விற்றதன் மூலம் தன்வாழ்நாள் முழுவதும் வசதியாக வாழும் அளவிற்குப் பணம் கிடைத்தது.
5. வால்ட் விட்மன் எழுதிய "லீவ்ஸ் ஆஃப் கிராஸ்' என்ற புத்தகத்தின் ஒரு பகுதியை மட்டுமே படித்துப் பார்த்த அவரது மேலதிகாரி ஜேம்ஸ் ஹார்லன். மக்கள் மனதைக் கெடுக்கும்விதமாக கவிதை எழுதுவதாக காரணம் காட்டி அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
6. பெர்சிஷெல்லி, ஜார்ஜ் பைரன், ஜான் வில்லியம் போலியாரி, மேரி உல்ஸ்டோன் கிராப்ட் ஆகிய நால்வரும் விடுமுறையைக் கழிப்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர். எல்லோரும் ஒரு பேய்க் கதை எழுதவேண்டும் என்று அவர்களுக்குள் ஒரு போட்டி எழுந்தது. முதல் மூவரும் எழுதத் தொடங்கி முடிக்க முடியாமல் பின் வாங்க, 18 வயதான மேரி உல்ஸ்டோன் மட்டும் முழுமையான நாவலொன்றை எழுதி முடித்தார். இரண்டாண்டுகள் கழித்து 1818ஆம் ஆண்டு அவரது கணவர் ஷெல்லி முகவுரையுடன் அந்த நாவலை வெளியிட்டபோது பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த நாவல்தான் "டாக்டர் பிராங்கைன்ஸ்டன்'
7. இந்திய எழுத்தாளர்களில் ஆண்டுக்கு நான்கு நாவல்கள் மற்றும், வாரந்தோறும் பத்திரிகைகளில் ரெகுலர் காலங்கள் என பரபரப்பாக எழுதிவரும் ஷோபாடே, தனக்கு இன்ஸ்பிரேஷனாக தோன்றும் மனிதர்களை பற்றி டேப்பில் பதிவு செய்து கொண்ட பின்னரே எழுதுவாராம்.
8. விடியற்காலை 4.30 மணிக்கெல்லாம் விழித்தெழும் குஷ்வந்த் சிங், காலை செய்திகளை கேட்ட பின்னரே மூன்று மணி நேரம் எழுதும் பழக்கத்தை வைத்திருந்தார். இவரது மகன் ராகுல் சிங்கின் பர்சனல் கம்ப்யூட்டரை பயன்படுத்துவதுண்டு.
No comments:
Post a Comment