மாநில பணியாளர் காப்பீட்டு கழகத்தில் (Employee's State Insurance Corporation) காலியாக உள்ள சமூக பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Social Security Officers(SSos)
மொத்த காலியிடங்கள்: 267
சம்பளம்: ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,600
வயதுவரம்பு: 20.02.2014 தேதியின்படி 21 - 27-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். Commerce/Law/Management போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கம்ப்யூட்டரில் பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும்.
அரசு, அரசுசார் நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களில் 3 வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு மையங்கள்: சென்னை, பெங்களூர், கல்கத்தா உள்பட 22 மையங்களில் நடைபெறுகிறது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.275. இதனை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கிடைக்கும் செல்லானை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் செலுத்த வேண்டும்.
SC/ST/PWD/ESIC பணியாளர்கள், முன்னாள் இராணனுவத்தினர் மற்றும் பெண்கள் பிரிவினர் விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.esic.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2014
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.02.2014
ஆன்லைன் பிரிண்ட அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.02.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.esic.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment