Wednesday, 30 April 2014

மாம்பழத்துக்குத் தடை: ஐரோப்பிய யூனியனிடம் முறையிட இந்தியா முடிவு

இந்தியாவிலிருந்து அல் போன்ஸா மாம்பழம் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்த தடையை எதிர்த்து ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் முறையிட இந்தியா முடிவு செய்துள்ளது.
மாம்பழம் மற்றும் நான்கு காய்கறிகளுக்கு ஐரோப்பிய யூனியன் தாற்காலிக தடை விதித்துள்ளது. இந்தத் தடை மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் விதித்த தடை ஒருதலைப்பட்சமானது. இதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கக் கூடாது என்று இந்தியா கருதுகிறது. இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சர், ஐரோப்பிய யூனியனின் வர்த்தக ஆணையர் கார்ல் டி குஹ்டுக்கு கடிதம் எழுதுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக செவ்வாய்க் கிழமை மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. ஆண்டுக்கு 60 லட்சம் பவுண்ட் மதிப்பிலான மாம்பழங்களை இந்தியாவிலிருந்து இங்கிலாந்து இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment