Saturday, 26 April 2014

உலகில் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள்: ‘டைம்’ பட்டியலில் மோடி, கேஜ்ரிவால், கோவை முருகானந்தம்

உலகின் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், நரேந்திர மோடி, அர்விந்த் கேஜ்ரிவால், கோவையைச் சேர்ந்த முருகானந்தம், எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகிய நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.
2014-ம் ஆண்டுக்கான இப்பட்டியல் தரவரிசைப்படுத்தப் படாமல் பொதுவாக 100 பேரை மட்டும் குறிப்பிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பிளவுபடுத்தும் அரசியல்வாதி
பட்டியலில் இடம் பெற்றுள்ள வர்கள் பற்றிய அறிமுகத்தையும் ‘டைம்’ கொடுத்துள்ளது.
அதில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைத் தலைமை தாங்குவதற்காக முன்னிறுத்தப் பட்டுள்ள பிளவுபடுத்தும் அரசியல் வாதி’ என மோடி பற்றிக் குறிப் பிட்டுள்ளது.
மேலும், ‘துரிதமான நடவடிக்கை, தனியார்துறையை ஊக்குவித்தல், நல்ல நிர்வாகம் ஆகியவற்றுக்காக மோடி புகழ் பெற்றவர்.
அதே போன்று, ஏதேச்சதிகா ரத்துக்கும், இந்து தேசியவாதத் துக்கும் அவர் புகழ் பெற்றவர். ஆனால், இந்தக் கவலைகள் மாற்றத்தை எதிர்பார்க்கும் தேசத்தின் முன் ஒரு பொருட் டாக இல்லை’ என்றும் தெரிவித் துள்ளது.
எதிர்ப்பு அரசியலாளர்
‘நவீன இந்திய அரசியல்வாதி களில் எதிர்ப்பு அரசியலாளரான கேஜ்ரிவால், இந்திய அரசியலில் சக்திமிக்க மாற்றுநபர்’ எனக் குறிப்பிட்டுள்ளது டைம்.
‘49 நாள்களில் அவரின் ஆட்சிய திகாரம் முடிவுக்கு வந்தாலும், அவருக்கு எதிரான பிரச்சாரங் களைப் பின்னுக்குத் தள்ளி தன்னை நிரூபித்திருக்கிறார். க்ஷ
பைபிள் கதைகளில் வரும் கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெற்ற தாவீதைப் போல, பெரும் கட்சிகளை எதிர்த்து இந்திய அரசியலில் சிறப்பிடம் பிடித்திருக் கிறார்’ என்றும் டைம் கேஜ்ரிவாலை வர்ணித்துள்ளது.
இந்தியாவின் மனசாட்சி
‘இந்த நாவலாசிரியர் இந்தியா வின் மனசாட்சி’ என அருந்ததி ராயை டைம் வர்ணித்துள்ளது.
சுகாதாரப் போராளி
கோவையைச் சேர்ந்த ஏ.முருகானந்தம் டைம் நூற்றுவர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நான்காவது இந்தியர் ஆவார்.
இவரை சுகாதாரப் போராளி என வர்ணித்துள்ளது. இவர் தன் மனைவியின் பிரச்சினைக்காகக் கண்டறிந்த பிரத்யேகத் தீர்வு, மலிவு விலை நாப்கின்கள்.
தென்னிந்தியாவின் சிறு நகரத்தைச் (கோவை) சேர்ந்த இவர், தன் மனைவி பழைய துணிகளைச் சேமிப்பதைப் பார்த்து எதற்காக எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி “என் மாதவிடாய்க் காலத்தில் இவை உதவும்” எனச் சொல்ல, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று தொழில்முனைவர் ஆனவர்’ என டைம் இதழ் தெரிவித்துள்ளது.
இதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜிங்பிங், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், போப் பிரான்சிஸ், ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புடின், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்ஸாய், அமெரிக்க புலனாய்வுத் துறையின் அத்து மீறல்களை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்த எட்வர்டு ஸ்னோடென், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment