* குபுகுபுவென புகை கக்கிப் போகும் ரயில் நம் நாட்டுக்கு வந்து 160 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முதன் முதலில் இந்தியாவில் எங்கே ரயில் ஓடத் தொடங்கியது? பம்பாய்க்கும் தானேவுக்கும் இடையே எனச் சட்டெனப் பதில் சொல்வோம். இந்த ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கியது தெரியுமா? 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று தான். இதுதான் இந்தியாவில் ஓடிய முதல் ரயில்.
* இந்தியா விண்வெளிக்கு அனுப்பிய முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது எப்போது விண்வெளிக்கு அனுப்பப்பட்டது தெரியுமா? 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி அன்றுதான்.
* ஆகாயத்தில் அட்டகாசமாகப் பறந்து போகும் விமானத்த கண் இமைக்காமப் பார்ப்போம். இந்தியாவுல போயிங் 707 விமானம் முதலில் எப்போது, எங்கே போச்சுன்னு தெரியுமா? இந்தியாவுல இருந்து கிளம்பிய முதல் போயிங் விமானம் லண்டனுக்குத்தான் போனது. சென்ற தேதி, 1960-ம் ஆண்டு ஏப்ரல் 20.
* கப்பலோட்டிய தமிழர் யாருன்னு கேட்டா உடனே வ. உ. சிதம்பரம் பிள்ளை என்று பதில் சொல்லிவிடுவோம். இவர் முதலில் எப்போது எங்கே கப்பல் போக்குவரத்து தொடங்கினார் தெரியுமா? 1906-ம் ஆண்டு அக்டோபர் 16 அன்று கப்பல் கம்பனியை உருவாக்கினார். தூத்துக்குடியிலிருந்து கொழும்புக்கு கப்பல் போக்குரவரத்தைத் தொடங்கினார்.
No comments:
Post a Comment