மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூ.240 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.39 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் பணம், மது பானம், பரிசு பொருட்கள் போன்றவைகளை தேர்தல் ஆணையம் னியமித்துள்ள பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.240 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திர பிரதேசமே முதல் இடத்தில் உள்ளது.
அது மட்டும் அல்லாமல், 1.32 கோடி லிட்டர் மதுபானம் முக்கியமாக அவை நாட்டு சாராயம், 104 கிலோ ஹெராயின், தங்க நகைகள் உள்ளிட்டவைகளை சட்டத்துக்கு விரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஏராளமான பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் பணப்பட்டுவாடாவில் ஆந்திரம் முதல் இடத்தில் உள்ள நிலையில், தமிழகம் அடுத்த இடத்தை பிடித்துள்ளது. இங்கு ரொக்கப் பணம் மட்டுமே ரூ.39 கோடி பறிமுதல் ஆனது. இதற்கு அடுத்த இடத்தை கர்நாடகா பெற்றுள்ளது.
தேர்தல் சமையத்தில் வாக்குக்கு பணம் அளிக்கும் முறை பரவலாக இருக்கும் நிலையில், கறுப்புப் பண புழக்கம், சட்டத்துக்கு விரோதமான பரிவர்தணைகள் போன்றவைகள் அதிகம் நடக்கும். இதனை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நூற்றுக்கணக்கில் பறக்கும் படை அதிகாரிகளை நியமித்தது.
No comments:
Post a Comment