Wednesday, 16 April 2014

பாடத்திட்டத்தில் பங்குச் சந்தை: செபி திட்டம்

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி கூடுதலாக நிதி மற்றும் பங்குச்சந்தை கொள்கைகளை பள்ளி பாடத் திட்டத்தில் சேர்ப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறது.
இதற்கான பரிந்துரையை சி.பி.எஸ்.இ. மற்றும் மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித் திருக்கிறது. இந்த கூடுதல் பாடத்திட்டம் அல்லது புதிய பாடத்திட்டம் வரும் 2014-15 கல்வி ஆண்டில் மாற்றப்படும் என்று செபி தெரிவித்திருக்கிறது.
ஆர்வம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் பங்குச் சந்தை மற்றும் செபியின் வேலைகளை கற்றுக்கொள்ள 2011-ம் ஆண்டு செபி அழைப்பு விடுத்திருந்தது. இதில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல துறையை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment