Friday, 25 April 2014

தமிழகத்திலேயே சென்னையில் மலேரியா பாதிப்பு அதிகம்: இன்று உலக மலேரியா நோய் தடுப்பு தினம்

ஆண்டு தோறும் சென்னையில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் மலேரியாவால் பாதிக்கப்படு கின்றனர் என்று தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்கு னர் டாக்டர் எஸ்.இளங்கோ தெரிவித்தார்.
உலக மலேரியா நோய் தடுப்பு தினம், ஏப்ரல் 25-ம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது. ஒருங் கிணைந்த மலேரியாகொசு ஒழிப்பு முறையை கடைப்பிடிக் கும்படி இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவுரை வழங்கியுள்ளது.
சுகாதாரத்துறை மட்டுமின்றி உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை என அனைத்து துறைகளும் ஒன்றாக இணைந்து கொசு ஒழிப்பு திட் டத்தை கடைப்பிடித்தால் மட்டுமே மலேரியாவை முழுமையாக ஒழிக்க முடியும் எனவும் தெரிவித் துள்ளது.
மலேரியா வகைகள்
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக் குநர் டாக்டர் எஸ்.இளங்கோ கூறியதாவது:
அனபிலஸ் என்ற வகையை சேர்ந்த பெண் கொசுவே மலேரி யாவை பரப்புகிறது. இந்த கொசு சுத்தமான தண்ணீரிலேயே முட்டை யிட்டு கொசுவை உற்பத்தி செய் கிறது. சாதாரண மலேரியா, வைவாக் மலேரியா, பால்சிபேரம் மலேரியா, ஓவேல் மலேரியா, மலே ரியா மலேரியா என பலவகையான மலேரியாக்கள் உள்ளன.
தமிழகத்தில் மலேரியா
தமிழகத்தில் கடலோரப்பகுதி மலேரியா, ஆற்றுப்படுகை பகுதி மலேரியா மற்றும் நகர்ப்புற பகுதி மலேரியா என 3 வகை உள்ளது. சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் நகர்ப்புற மலேரியா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பதிவாகும் மலேரியா பாதிப்பில், 60 சதவீதம் மலேரியா பாதிப்பு சென்னையில் பதிவாகிறது.
மீதமுள்ள 40 சதவீதம் மலேரியா பாதிப்புத்தான் மற்ற மாவட்டங்களில் உள்ளது. சென்னையில் ஆண்டு தோறும் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
அபாயகரமான மலேரியா
பால்சிபேரம் மலேரியாதான் மிகவும் அபாயகரமானது. இந்த மலேரியாவுக்கு உடனடியாக சிகிச்சை பெறாவிட்டால் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் மூளையை பாதிக்கும். சில சமயங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தும். அஸ்ஸாம், மேகாலயா போன்ற வடமாநிலங்களில் பால்சிபேரம் மலேரியாவால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறனர். அவர்கள் சிகிச்சைக்காக தமிழகத்தில் சென்னை போன்ற முக்கிய நகர்களுக்கு வருகின்றனர். அவர்களிடம் இருந்து பால்சிபேரம் மலேரியா, மற்றவர்களுக்கும் எளிதாக பரவுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒரு வாரத்தில் குணம்:
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண் காணிப்பாளர் கே.சுப்பிரமணியன் கூறியதாவது:
மலேரியாவை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். ஆரம்ப சுகா தார நிலையம் முதல் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை மலேரியாவுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட் டிற்குள் கொசுக்கள் வருவதை தடுக்க, மாலையில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்.
வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடும் குளிருடன் காய்ச்சல் இருந்தால் உடனடி யாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
ரத்த பரிசோதனையில் மலேரியா என்பது உறுதி செய்யப் பட்டால், ஒரு வாரம் மாத்திரை களை சாப்பிட்டால் மலேரியா குணமாகிவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment