Thursday, 27 February 2014

விடுதலைப் போராட்டத்தில் மகளிர்: தில்லையாடி வள்ளியம்மை

தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக காந்தியடிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தில் தனது பதினாறாவது வயதிலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’வள்ளியம்மை. ஒரு பெண்ணாக, தமிழராக, இந்தியராக என பல பரிமாணத்தில் பெருமை சேர்த்தவர் வள்ளியம்மை.
வெள்ளையர்கள் தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தி, தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொண்டிருந்த காலம். தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு போன்றவற்றைப் பயிரிட விரும்பிய வெள்ளையர்கள், பயிர்த்தொழில் தெரிந்த அடிமைகளைத் தேடி அலைந்தனர். அங்கிருந்த தென்னாப்பிரிக்க நீக்ரோ தொழிலாளர்களோ அடிக்கடி வெள்ளை முதலாளிகளோடு முரட்டுத்தனமாக சண்டையிட்டு வந்தனர். அதனால் தங்களது ஆதிக்கத்தில் இருந்த இந்தியா போன்ற பிற காலனி நாடுகளிலிருந்து பண்ணைத் தொழிலுக்கேற்ற கூலிகளை இறக்குமதி செய்துகொண்டனர்.
அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக தஞ்சாவூர் மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்திலிருந்து கப்பலேறி தென்னாப்பிரிக்காவிற்கு தன் மனைவி மங்களத்துடன் சென்றவர்தான் முனுசாமி முதலியார்.
பிறப்பு: நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் ஒரு கூலித் தொழிலாளியாக தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கினார். அங்கு தான் பிப்ரவரி 22. 1898 ஆம் ஆண்டு வள்ளியம்மை பிறந்தார்.
எதிர்கால இன்பக் கனவுகளோடு தென்னாப்பிரிக்கா சென்ற இந்தியத் தொழிலாளர்கள் அங்கே வெள்ளையர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இந்தியர் ஒவ்வொருவரும் அங்கே வாழ 3 பவுன் வரி செலுத்தினால்தான் அங்கே வாழ முடியும். வாக்குரிமை கிடையாது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையக்கூடாது. வெள்ளையர் பள்ளிகளில் படிக்கமுடியாது. வெள்ளையர்களுடன் சமமாக அமர்ந்து பயணம் செய்யக்கூடாது, கிறிஸ்துவ மதப்படி நடந்த திருமணங்கள்தான் செல்லும் இப்படியெல்லாம் ஒடுக்கப்பட்ட இந்தியக்குடிகள் வாழும் பகுதிகள் சேரிகளாகப்பட்டன. சுகாதார வசதியின்றி நோய்களும் பரவின.
இந்தச் சூழலில்தான் 1893 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார். தாதா அப்துல்லா கம்பெனிக்கான வழக்குகளை ஓராண்டிற்குள் முடித்துத் திரும்பும் எண்ணத்துடன் சென்றவர், அங்கே இந்தியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறினார். அதை எதிர்த்துப் போராடவும், இந்தியர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்.
அப்போது தென்னாப்பிரிக்க ‘கேப்’ உச்சநீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பு கொடுத்தார். அந்த நாட்டில் இனி ‘கிறிஸ்தவ சடங்குப்படியும், திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும். மற்ற எந்தத் திருமணமும் செல்லாது’ என்பதே அந்தத் தீர்ப்பு.
இதனால் அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் அனைத்தும் செல்லாது என்றும், அவர்கள் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினைக் கண்டு இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்கினர். காந்திஜி இவர்களை ஒன்றிணைத்து இயக்கமாக்கி, போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்தார்.
அந்தச் சமயத்தில் இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட எல்லா பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மை சென்று வந்தாள். காந்தியின் சொற்பொழிவுகள் வள்ளியம்மை நெஞ்சில் ஆழப்பதிந்தன. விடுதலைக் கனலை விரைந்து மூட்டின.
புதிதாக இந்தியர்கள் குடியேறுவதைத் தடுக்க டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இது வள்ளியம்மையின் தன்மான உணர்வைத் தாக்கியது. வெள்ளையரின் நிறவெறியை எதிர்த்து அண்ணல் காந்தியின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் வள்ளியம்மை.
அதுவரை, போராட்டங்களில் பெண்கள் ஈடுபட வேண்டாம் என்று தடுத்து வந்த காந்திஜி, இந்தப் போராட்டத்தில் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். ஏனெனில், ‘‘இந்த திருமணச்சட்டம் பெண்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. கட்டிய மனைவியையே அங்கீகாரமில்லாத நிலைக்கு ஆளாக்கி, குழந்தைகளின் வாழ்வுரிமையையும் பறிக்கும் வன்கொடுமைச் சட்டம் இது’’ என்றார் காந்தி.
1913 ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் நகரில் பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை கூடியது. ஆவேச முழக்கத்துடன் ஆங்கில அரசின் நிறவெறித் திமிருக்கு எதிராக அணி திரண்டு கிளம்பியது. அணியின் முதல் வரிசையில் நின்ற மூன்று பெண்மணிகள் கஸ்தூரிபா, வள்ளியம்மை, வள்ளியம்மையின் தாயார்.
‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்!’ என்று வள்ளியம்மை முன் வரிசையில் நின்று முழங்கிய முழக்கம் ஏனைய சத்தியாகிரகிகளை எழுச்சிகொள்ளச் செய்தது! ‘எங்கள் தேசத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை’ என்று பிரிட்டிஷ் அரசு பேசி வந்த ஆணவத்திற்கு அன்றுதான் அஸ்தமனம் தொடங்கியது. காலனி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் அழுந்திக் கிடந்த ஒரு சமூகம் அன்றுதான் வீறிட்டெழுந்தது.
ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன் முன்னேறியது.
நியூகாசில் போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கிய இடங்களில் சத்தியாக்கிரகிகள் தங்கிச் சென்றபோது, தன் இளவயது காரணமாக ஓடியாடி, தன் உடன் வந்த சத்தியாகிரகிகளுக்கு வள்ளியம்மைதான் இயன்றவரை தொண்டு செய்தாள்.
நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தமிழர்கள். அவர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு முழங்கினார் காந்தி. உடனடியாக வேலை நிறுத்தம் செய்தனர். தமது தமிழ்மக்களின் ஒத்துழைப்பைக் கண்டு மேலும் உற்சாகமானாள் வள்ளியம்மை.
போராட்டப் பெண்கள் தடையை மீறி டிரான்ஸ்வால் நகர எல்லைக்குள் நுழைந்தபோது, எல்லோரும் கைது செய்யப்பட்டு 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு அனைவரும்சிறையில் அடைக்கப்பட்டனர்.
பதினாறு வயதான வள்ளியம்மையும் கடுங்காவல் தண்டனையை ஏற்று சிறைக்குச் சென்றாள். ஆனால் சிறை அதிகாரிகளோ அவளிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள். சிறையிலே சுகாதாரக் கேடான சூழ்நிலை. சிறை அறையில் தலைமாட்டிலே ஒரு மண்சட்டி, அதற்கொரு மூடி, அதிலேதான் மலஜலம் கழித்துக்கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் அதைக்கொண்டு போய் போட்டுவிட்டு, சட்டியைச் சுத்தம் செய்துகொண்டு வரவேண்டும். தகுந்த மருத்துவ வசதியும் இல்லை.
மெலிந்த தேகம் கொண்ட வள்ளியம்மை நோய்க்கு ஆளானாள். உடல்நலம் பாதிக்கப்பட்டாள். ‘‘உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்’’ என்றான் வெள்ளை மனம் இல்லா வெள்ளைக்கார சிறை அதிகாரி.
‘‘அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்’’ என்று மறுத்துவிட்டாள் வள்ளியம்மை.
அடுத்த சில நாட்களில் அவளது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. அவள் கவலைக்கிடமான நிலைமைக்கு ஆளாகி விட்டதாக மருத்துவர்கள் எச்சரித்தனர். அதனால், தண்டனைக் காலம் முடியும் முன்பே, அவசரம் அவசரமாக வள்ளியம்மை 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மிகவும் பலவீனமான நிலையில் இருந்த அவளை ஒரு ஜமுக்காளத்தில் கிடத்தி வீட்டிற்குக் கொண்டு சென்றனர்.
மறைவு: விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த அந்தத் தீபம், பத்தே நாள்களில் அதாவது 22.02.1914-ல் அணைந்து போனது. ஆனால், போராட்டம் வலுப்பெற்றது. தன்னலம் கருதாமல் போராடிய இளம் வள்ளியம்மையின் மறைவு காந்தியை வெகுவாகப் பாதித்தது.
‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் காந்தி ‘‘இந்தியாவின் புனிதமகள் ஒருத்தியை இழந்துவிட்டோம். ஏன், எதற்கு என்று கேட்காமல் தனது கடமையைச் செய்தவள் அவள். மாதர்களுக்கே உரிய _ துன்பத்தைச் சகிக்கும் மனோபலமும், தன்மானமும் கொண்டவள்! அவளது தியாகம் இந்திய சமூகத்திற்கு நிச்சயம் பலனளிக்கும்!’’என்று மனமுருகி எழுதினார்.
ஜோகன்ஸ்பர்க்கில் வள்ளியம்மை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்பினார் காந்தி. வாழ்நாள் முழுவதும் வள்ளியம்மையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.
தனது சுயசரிதையில் பல இடங்களில் வள்ளியம்மையை நினைவுகூர்ந்து துக்கம் தாங்காமல் எழுதுகிறார் காந்தி.
தன் உயிரைக் காத்த வள்ளியம்மையை காந்தியால் எப்படி மறக்கமுடியும்? ஆம்! ஒருமுறை சத்தியாகிரகப் போராட்டத்தின்போது, வெறிபிடித்த வெள்ளையன் ஒருவன் காந்திஜியைச் சுட துப்பாக்கியை உயர்த்திய போது, வள்ளியம்மை திடீரென்று ஓடிவந்து காந்தியின் முன்னால் நின்று கொண்டு, ‘‘இப்போது காந்தியைச் சுடு, பார்க்கலாம்!’’ என்றாள் ஆவேசமாக! அவளது நெஞ்சுரம் கண்டு அந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிப் போனான் என்றும் மேலும் இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாகிரக சரித்திரத்தில் வள்ளியம்மாவின் பெயரும் நீங்கா இடம் பெற்றிருக்கும்" என்று காந்தி குறிப்பிட்டிருந்தார்.
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி, உயிர் விட்ட முதல் போராட்டக்காரர் தில்லையாடி வள்ளியம்மை. பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை "பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்" என காந்தி பாராட்டியுள்ளார்.
காந்திஜி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது எல்லாக் கூட்டங்களிலும் வள்ளியம்மையின் தியாகத்தைக் குறித்துப் பேசினார். அவள் பிறந்த தில்லையாடி கிராமத்திற்குச் சென்று, அவளது உறவினர்களைச் சந்தித்துப் பேசினார்.
"தென்னாப்பிரிக்காவில் வெள்ளையனின் துப்பாக்கி முன்பாக துணிச்சலுடன் எதிர்நின்று அன்று தன்னைக் காப்பாற்றிய வள்ளியம்மை இன்று இந்தியன் கோட்ஸே சுட்டுக் கொல்லும்போது குறுக்கே பாய்ந்து காப்பாற்ற நம்மருகே இல்லையே....!" என்று காந்தி தனது கடைசி மூச்சின்போது நினைத்திருப்பாரோ...?
1997-ல், வள்ளியம்மையின் நூற்றாண்டின்போது ஜோகன்ஸ்பர்க் நகரில் நெல்சன் மண்டேலா முயற்சியால் வள்ளியம்மையின் கல்லறை புதுப்பிக்கப்பட்டு விழா எடுக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த ‘முதல் விடுதலைப் போராளி’ வள்ளியம்மை, ஒரு தமிழ்ப் பெண் என்பது நமக்கு மற்றொரு பெருமைதானே!
நினைவு மண்டபம்: தமிழக அரசு தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி கிராமத்தில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அண்ணல் காந்தியடிகள் தில்லையாடிக்கு 01.05.1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில்தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.

பட்டதாரிகளுக்கு பாண்டியன் கிராம வங்கியில் பணி

தமிழக்தின் விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு 37 ஆண்டுகளாக வங்கி சேவையில் பயணித்து வரும் பாண்டியன் கிராம வங்கில் Officer in Middle Management Grade பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 131
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01 . Officer ஸ்கேல் - III - 07
02 . Officer ஸ்கேல் - II (பொது வங்கி அதிகாரி ) - 14
03 . Officer ஸ்கேல் - II (தகவல் தொழில்நுட்பம்) - 05
04 . Officer ஸ்கேல் - II (கருவூல மேலாளர்) - 01
05 . Officer ஸ்கேல் - II (வேளாண் அலுவலர்) - 04
06 . Officer ஸ்கேல் - I - 100
தேர்வு செய்யப்படும் முறை: IBPS நடத்திய பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்முக்த் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான www.pandangramabank.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2014
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.pandangramabank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

+2 முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய துறையான இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Postal Assistant மற்றும் Sorting Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 8243
பணி:
01. Postal Assistant
02. Sorting Assistant
வயதுவரம்பு: 27.03.2014 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருக்க வேண்டும் மேலும் உள்ளூர் மொழி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + கிரேடு சம்பளம் ரூ.2,400
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு .400. SC/ST/PH மற்றும்/ பெண்கள் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.pasadrexam2014.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.03.2014
மேலும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு முறைகள் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.pasadrexam2014.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

நாட்டின் முதல் அஞ்சல் துறை ஏடிஎம் சென்னை தி.நகரில் திறப்பு

நாட்டிலேயே முதலாவது அஞ்சல் துறை தானியங்கி பணப்பட்டுவாடா எந்திரத்தை (ஏடிஎம்) சென்னையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.
சென்னை தியாகாரய நகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில், இந்த ஏடிஎம்-ஐ திறந்து வைத்துப் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மக்களின் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப அஞ்சல் துறை புதிய உத்திகளைக் கையாண்டு உயர்ந்து வருகிறது.
இந்த புதிய முயற்சியில் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியான மைய வங்கி சேவையை அஞ்சல் துறை துவக்கியுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறையில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இதுபோன்ற ஏடிஎம் மூலம் பணம் பெற்றுக் கொள்ளலாம்.
பத்து நாட்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் அஞ்சல் துறையின் இது போன்ற சேவைகளுக்காக ரூ.4,909 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தேன்.
விரைவில் நாடு முழுவதும் 1,55,000 மையங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும். இந்த ஏடிஎம் சேவையைப் பயன்படுத்துவதற்கு வசதிகள் செய்யப்படும். நாடு முழுவதும் 2015ம் ஆண்டுக்குள் இதைச் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதுபோன்ற வசதி மேலும் நான்கு மையங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆறு மாத காலத்திற்கு சோதனை முறையில் செயல்படுத்தப்படும். அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் அஞ்சல் துறை ஏடிஎம் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் பெறும் வசதிக்காக வங்கிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்" என்றார் ப.சிதம்பரம்.
அஞ்சல் துறை ஏடிஎம் சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் 1000 மையங்களில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பணம் கொடுத்தால் அரசியல் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்தல் கணிப்புகள்- அம்பலப்படுத்தியது இந்தி தொலைக்காட்சி

பணம் கொடுக்கத் தயாராக இருந்தால் கட்சிகள் விருப்பத்துக்கு ஏற்ப கணிப்பு முடிவுகளை மாற்றி வெளியிட கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் தயாராக இருப்பதாக இந்தி மொழி செய்தித் தொலைக்காட்சி ஒன்று அம்பலப்படுத்தி இருக்கிறது.
‘நியூஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற இந்தி செய்தி அலைவரிசை இந்த கருத்துக் கணிப்பு நிறுவனங்களின் செயல்பாடு பற்றி அறிய ஒரு நிருபரை அனுப்பி ரகசிய நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்தது. இதில் கிடைத்த சில தகவல்களை நியூஸ் எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் ஆசிரியர் வினோத் காப்ரி முதலில் செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
வாக்காளர்கள் விழிப்புணர்வுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்த அவர் தேர்தல் ஆணையத்திடம் இதுபற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும் என்றார்
கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விவரங்களை தமது தொலைக்காட்சியிலும் நியூஸ் எக்ஸ்பிரஸ் ஒளிபரப்பியது.
இதனிடையே. இந்த ரகசிய நடவடிக்கையி்ல் கிடைத்த விவரங்களின் நம்பகத்தன்மையை ‘இந்து’ பத்திரிகையால் சுயேச்சையான வழியில் உறுதிப்படுத்த முடியவில்லை.
ரகசிய திட்டத்துடன் இந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் நிருபர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் 13 கருத்துக் கணிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளனர்.
ஏசி நீல்சன் நிறுவனமும் தி சென்டர் பார் தி ஸ்டடி ஆப் டெவலபிங் சொசைட்டிஸ் அமைப்பும் இந்த நிருபர்களின் திட்டத்துக்கு உட்படவில்லை.
பிற 11 நிறுவனங்கள் கட்சிகளின் விருப்பத் துக்கு ஏற்ப கணிப்பு முடிவுகளை மாற்ற தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றன என்று இந்தி டிவி செய்தி சேனல் தெரிவித்திருக்கிறது.
சி-வோட்டர் என்ற நிறுவனம் கணிப்பு முடிவின் ஏற்கத்தக்க பிழை அளவு விகிதத்தை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தி கட்சிக்கு கூடுதல் இடம் கிடைக்கும் வகையில் மாற்றி அமைக்கத் தயார் என தெரிவித்திருக்கிறது.,
சி வோட்டர் அமைப்பின் முதன்மை ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான யஷ்வந்த் சின்ஹா இதை மறுத்துள்ளார்.
தமது சார்பில் சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்புகளை ரத்து செய்வதாக இந்தியா டுடே குழுமம் அறிவித்துள்ளது. விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்துக்கு நோ்ட்டீஸ் அனுப்பி இருப்பாகவும் தெரிவித்துள்ளது.
சி வோட்டர் நிறுவனத்திடம் விளக்கம் கோரப்படும் என டைம்ஸ் நவ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஏ.கோஸ்வாமியும் தெரிவித்துள்ளார். தமக்காக கருத்துக்கணிப்பு நடத்திட சி வோட்டர் நிறுவனத்தை டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் ஈடுபடுத்தி வருகிறது.
இந்தி டி.வி. சேனலின் ரகசிய நடவடிக்கையில் சிக்கியுள்ள இன்னொரு நிறுவனம் தர ஆய்வு மற்றும் சேவைகள் அமைப்பாகும். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர் இந்தி டிவி சேனல் நிருபரிடம் பேசும்போது உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 200 தொகுதி கிடைக்கும் என ஒரு ஏஜென்சி பெயரிலும், சமாஜ்வாதி கட்சிக்கு 200 தொகுதிகள் கிடைக்கும் என வேறொரு ஏஜென்சி பெயரிலும் கருத்து கணிப்பை தயாராக வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
கருத்துக்கணிப்பை வசதிக்கேற்ப மாற்றி அமைக்க தயார் என இப்ஸாஸ் என்கிற நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது பற்றி விளக்கம் தர அவகாசம் கேட்டுள்ள அந்த நிறுவனத்தை அதன் பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை.
கருத்து கணிப்பு விவரங்களை மாற்றத் தயார் என்று மிட்ஸ்ட்ரீம் மார்க்கெடிங் ஆராய்ச்சி இயக்குநர் சஞ்சய் பாண்டேவும் தெரிவித்திருப்பதாக இந்தி தொலைக்காட்சி சேனல் சுட்டிக் காட்டி இருக்கிறது. அப்படி எதுவும் நான் சொல்லவில்லை என மறுத்துள்ளார் பாண்டே.

கதை படிக்காமல் என்ன வாழ்க்கை?

ஜான் வில்லியம்ஸ் எழுதிய ‘ஸ்டோனர்’ என்ற நாவல், முதல் பதிப்புக்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏன் மறு பதிப்பு விற்பனையில் முதலிடத்தைப் பிடித்தது என்று எவராலும் விளக்கம் தர முடியாது.
ஏராளமான புத்தகங்கள் வாசகர்களால் படித்து மறக்கப்பட்ட பிறகு, பேச்சுவாக்கில் யாரோ சிலர் சிலாகித்துவிட, மீண்டும் புதிய வாசகர்களால் தேடிப்பிடித்து வாங்கப்பட்டாலும் சில நூறு பிரதிகளுக்கு மேல் விற்பது அரிது. இந்த நிலையில், இலக்கியத்தின் மீது காதலில் விழுந்துவிட்ட இளைஞன் புதிய உலகைக் காண்பதாக வரும் ‘ஸ்டோனர்’ நாவல் ஏன் திடீரென வாசகர்களின் கவனத்தைக் கவர வேண்டும் என்று புரியவில்லை.
ஓடிப்போய் அந்த நாவலை வாங்கிய வாசகர்களில் பலர் அதைத் திறந்து பார்க்கும் வாய்ப்பைக்கூட இன்னும் பெற்றிருக்க மாட்டார்கள்; அடித்துச் சொல்லலாம், அதை வாங்கியவர்களில் கணிசமானவர்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்கவே போவதில்லை என்று! அந்த வாசகர்களின் புத்தக அலமாரிகளில் ‘முதுகு முறிக்கப்படாமல்’ அந்த நாவல் இனி ஆண்டுக் கணக்கில் உறங்கிக்கொண்டிருக்கப்போகிறது. 1992-ல் அபாரமாக விற்பனையான ஜுங் சாங் எழுதிய ‘வைல்ட் ஸ்வான்ஸ்’ நாவலுக்கும் இதே மரியாதைதான் கிடைத்தது!
வாசிப்பு அருகிவிட்ட காலம் இது
இருந்தாலும், சோகத்தை வெளிப்படுத்தும் ‘ஸ்டோனர்’ என்ற அந்த நாவல் நம்முடைய சிந்தனைக்குத் தீனி போடுகிறது. தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் நாவலாசிரியையுமான ரூத் ரெண்டல், ‘ரேடியோ-4’-ல் செய்த விமர்சனத்தில், “இந்த நாவல் நம்முடைய காலத்தது” என்றார். “படிப்பது என்பது அரிதான செயலாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், இது அரிய இலக்கிய விருந்து” என்றார். புத்தகம் படிப்பதென்பது தன்னெழுச்சியாக நடக்கும் செயலாக இப்போது இல்லை. படிப்பது ‘சிறப்பு நடவடிக்கை'யாகிவிட்டது. புத்தகம் படிப்போர் மனதில் நான் சொல்வது அச்சத்தை ஊட்டக்கூடும்.
ரூத் ரெண்டல் சொல்வது சரியா? அவர் சொல்வது சரியல்ல என்று மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஊட்டக்கூடிய விதத்தில் எழுத வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துவிட்டேன். இதை எப்படிச் சொல்வது என்று திட்டமிட்டுக்கொள்ளவில்லை.
ஆனால், “பிரிட்டனில் உள்ள வளரிளம் பருவத்தினர் ஹாரி பாட்டர் நாவல்களை உடனுக்குடன் வாங்கிவிடுகின்றனர். பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் 1,50,000 தலைப்புகளில் புத்தகங்கள் புதிதாக அச்சிடப்படுகின்றன. பொருளாதாரத்தில் மந்தநிலை, புத்தகங்களை மின்புத்தகங்களாகப் படித்துக்கொள்ளலாம் என்ற சூழல்கள் உள்ள போதிலும் 2013-ல் மட்டும் 104 கோடி பவுண்டுகள் மதிப்புக்குப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.
‘பெர்சபோன்' புத்தகங்களும் ‘அன்பவுண்ட்' பதிப்பகப் புத்தகங்களும் ஏராளமாக விற்பனையாகின்றன. அன்பவுண்ட் நிறுவனத்தாரின் ‘லெட்டர்ஸ் ஆஃப் நோட்' என்கிற புத்தகம் கிறிஸ்துமஸ் பருவத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் என்ற சாதனையையும் படைத்திருக்கிறது” என்று கூற முற்பட்டேன்.
நூலகங்கள் மூடப்படும் காலம் இது
இதையெல்லாம் எழுத என்னுடைய மேஜைக்கு அருகில் உட்கார்ந்தபோது என்னையும் அறியாமல், அச்சமூட்டும் எண்ணங்களே ஏற்பட்டன. ‘‘உண்மைகளை எதிர்கொள்ளத் தயங்காதே” என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். “நூலகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகின்றன. நூலகங்களை மூடக் கூடாது என்று தொழிலாளர் அமைப்புகள்கூட வற்புறுத்தாமல் வேடிக்கை பார்க்கின்றன. விற்பனைக் குறைவால் புத்தகக் கடைகளை நடத்தவே முடியாமல் உரிமையாளர்கள் தடுமாறுகின்றனர். பி.பி.சி. நிறுவனம் இப்போது இலக்கியத்துக்காகத் தன்னுடைய தொலைக்காட்சி சேவையில் நேரம் ஒதுக்குவதை நிறுத்திவிட்டது' என்ற உண்மைகளும் கண் முன்னால் தோன்றுகின்றன.
சமீபத்தில் ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் தங்கள் மடிக்கணினியின் சின்னத்திரையையே உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். படித்த, வசதியான வீட்டு இளைஞர் அருகிலிருந்தார். அவரிடம் மெல்ல பேச்சுக்கொடுத்தேன். “சமீபத்தில் வாசித்த புத்தகம் எது?” என்று கேட்டேன். “நான் புத்தகம் படிப்பதையே நிறுத்திவிட்டேன்” என்று அவர் பதிலளித்தார்.
140 பிரதிகள்
ஒரு பதிப்பாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “நல்ல நாவல் என்று பாராட்டப்படும் புத்தகத்தின் விற்பனை இப்போது எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். “விமர்சகரால் நன்றாகப் பாராட்டப்பட்ட புத்தகம் என்றால், அதிகபட்சம் ஒரே சமயத்தில் 140 வரை விற்கும்!” என்று சாவதானமாகப் பதிலளித்தார்.
நல்ல புத்தகங்கள் என்பவை பல்கலைக்கழகப் பேராசிரியர்களையோ, வாழ்க்கையை எதிர்கொள்ள அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பற்றியவையோ அல்ல. தொலைக்காட்சி நிறுவனங்களின் ‘அறுசுவை அரசர்கள்' எழுதும் ‘ரெசிபி'யைப் பற்றியதாகவோ, வயதாகிக்கொண்டே வரும் நகைச்சுவை நட்சத்திரங்களைப் பற்றியதாகவோதான் இருக்கின்றன. படிப்பு என்பது அமைதியாக வும் பொறுமையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய தவம். ஆனால் இப்போது, படிக்க முடியாதபடிக்கு ஊளையிடும் சூறைக்காற்றே எங்கும் நிறைந்திருக்கிறது.
ட்விட்டர் உலகம்
2014-ல் அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள் இரண்டு என்று இலக்கிய முகவர் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று ட்விட்டரில் அறிவித்தார். அந்த இரண்டில் ஒரு புத்தகம், வரும் ஜூன் மாதம் வரையில் பதிப்பிக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லையாம்! ட்விட்டர் உலகவாசிகள் நூல்களைப்பற்றி விவாதிக்கவும் அறிமுகப்படுத்தவும் ட்விட்டர்தான் நல்ல இடம் என்று பேசிக்கொள்கிறார்கள். என்ன காரணத்தாலோ இந்த ரசிகர்கள் அப்படி ‘நவீனத்தைத் தேடி' அலைகிறார்கள். விளைவு, நாவல் எழுதி வெளிவருவதற்கு முன்னதாகவே அதைப் பற்றிய இரக்கமற்ற விமர்சனங்கள் வெளியாகி நாவலே கொல்லப்பட்டுவிடுகிறது!
‘தி கோல்டு பிஞ்ச்', ‘தி லூமினேர்ஸ்' என்ற நாவல்கள் கற்பனையான அலமாரியில் வாசிக்கப்படாமலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மொத்த விற்பனையாளருக்கு வேனில் போய்க்கொண்டிருக்கும் புத்தகத்தைக்கூடக் கடுமையாக விமர்சித்து அதன் ஆயுளை முடித்துவிடுகிறார்கள்.
நீங்கள் கருவியல்ல
எதிர்காலத்தில் மிகக் குறைந்த வாசகர்கள்தான் நாவல்களைப் படிப்பார்கள் என்றால், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டுமா? நிச்சயமாக, கவலைப்பட்டுத்தான் ஆக வேண்டும். இலக்கிய எதிர்காலத்துக்காக அல்ல, புரிந்துணர்வே அடிபட்டுப்போகிறதே என்பதற்காக. சிறிய வயதில் நாவல்களை எடுத்துப் படிக்காமல் இருந்திருந்தால், என்னால் இந்த அளவுக்கு நன்கு எழுதவும் படிக்க வும் முடிந்திருக்காது. கணினி அறிவியலாளர் ஜேரன் லேனியர் இப்படி வலியுறுத்துகிறார்: “நீங்கள் மனிதர்தான், கருவியல்ல”.
கதைகளின் வல்லமை
கதைகளைப் படிக்காமல் எப்படி நாம் நம்மையும், நம்மைத் தாங்கி நிற்கிற இந்தப் புவியையும் புரிந்துகொள்ளப் போகிறோம்? நமக்கு நாமே பேசிக்கொண்டுதானே நம்முடைய கோபங்களைத் தணித்துக்கொண்டு, உத்வேகம் பெற்று, சிந்தனையை மேம்படுத்திக்கொண்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுவருகிறோம்.
கதைகளும் அற விழுமியங்களும் பின்னிப்பிணைந்தவை என்று நான் கூறும்போது, பண்டைய கலை விமர்சகரான லீவிஸின் ‘தொண்டரடிப்பொடி' என்றே என்னை நீங்கள் நினைக்கலாம், ஆனால், உண்மை அதுதான். நாவல்கள் படிப்பது நமக்குள் இரக்க சிந்தையைத் தூண்டுகிறது. உலகம் சிக்கலானது என்பதைப் புத்தகங்கள்தான் நமக்கு உணர்த்துகின்றன. சமுதாயத்தின் முடிச்சுகளைக் கதைப் புத்தகங்கள்தான் அவிழ்க்கின்றன. ஸ்டீபன் கிராஸ் என்ற உளவியல் பகுப்பாய்வாளர் எழுதிய
‘தி எக்ஸாமின்ட் லைஃப்' என்ற புத்தகம் அபாரமாக விற்பனை யானது. தொழிலில் அவர் பெரிய நிபுணர் அல்ல என்றாலும் சிக்மண்ட் பிராய்டு போலவே, அழகாகக் கதை சொல்லும் வல்லமையை அவர் பெற்றிருக்கிறார். அதனால்தான் புத்தகம் விற்பனையானது. புத்தகங்கள் என்றாலே அழகியல் உணர்ச்சி, கலாச்சாரம், படிப்பதில் கிடைக்கும் இன்பம் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் வேண்டாமென்று புறக்கணிப்பது எத்தனை பரிதாபகரமானது?
என் பாட்டிக்கு உடம்பெல்லாம் காது
என்னுடைய தந்தைவழிப் பாட்டி 11 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்த நேரிட்டது. கண்ணில் அரிதாக ஏற்படும் பாதிப்பு காரணமாகப் பள்ளிக்கூடம் செல்வதை நிறுத்திவிட்டார். நாளாக நாளாக அது வளர்ந்து அவரது கண் பார்வை முழுக்கப் பறிபோனது. வெகு இளம் வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.
எனவே, அவர் எப்போதும் வறுமையிலேயே வாழ்ந்துவந்தார். ஆனால், அவருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. யாருக்காகவும் எதற்காகவும் அதை விட்டுக்கொடுக்க அவர் மறுத்துவிட்டார். ஆரம்ப காலத்தில் பெரிய எழுத்துப் புத்தகங்களையோ, சிறிய எழுத்தாக இருந்தால் - உருப்பெருக்கிக் கண்ணாடி கொண்டோ - படித்துவந்தார்.
நிலைமை மேலும் மோசமாகவே ‘பேசும் புத்தகங்களை' வாங்கிப் படித்தார். ஒரு பெரிய டேப் ரிக்கார்டரையும், அதுவரை டேப்புகளாக வெளியான புத்தகங்கள் பற்றிய விவரக் குறிப்புப் புத்தகத்தையும் வரவழைத்தார். அவற்றிலிருந்து அவர் தனக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்.
கண் பார்வை இல்லாததால் புத்தகத்துடன் இருக்கும் நேரத்தில் வீட்டுக்குள் யார் வந்தாலும் அவருக்குத் தெரியாது. எனவே, நாங்கள் அவருக்குத் தெரியாமல் பின்னாலிருந்து அவர் எப்படிப் படிக்கிறார் என்று பார்ப்போம். டேப்பில் கதை கூறப்படும்போது, நாற்காலியின் நுனிக்கே வந்து டேப்புக்கு அருகில் குனிந்து காதைத் தீட்டிக்கொண்டு கேட்பார். ஒரு வார்த்தையையும் தவறவிட்டுவிடக் கூடாது என்ற கவனம் அதில் தெரியும். ‘உடம்பெல்லாம் காது' என்ற சொலவடை அவருக்கே பொருந்தும்.
‘புத்தகக் குரல்' ஒலிக்கும்போது அவருடைய புருவங்கள் நெறியும், முகத்தில் அவ்வப்போது லேசான புன்னகை அரும்பும், எல்லாவிதமான உணர்ச்சிகளும் அவருடைய முகத்தில் கதைக்கேற்ப வந்து போகும். அவருடைய புருவங்களைக் கவனித்தால், அது இடைவிடாமல் நாட்டியமாடுவதைப்போல இருக்கும். புத்தகத்துடன் ஒன்றியிருக்கும்போது அவர் வேறொரு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பார். குளிரும் பசியும் வாட்டினாலும்கூட அவருடைய படிப்பைக் கெடுத்துவிடக் கூடாது என்பதால், நான் பொறுமையாகக் காத்துக்கொண்டிருப்பேன். பாட்டி டீ வேண்டும் என்று கேட்க எனக்குத் தயக்கமாக இருக்கும்.
© தி கார்டியன், தமிழில்: சாரி.

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம்: வேட்பாளர் செலவுக்கணக்கில் சேர்க்க முடிவு- தேர்தல் ஆணையம் அதிரடி

சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சித்தலைவர்கள், வேட்பா ளர்கள் பெயரில் செய்யப் படும் விளம்பரங்களையும் அவர் களது தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான நெறிமுறைகளை வகுக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
சமீபகாலமாக அரசியல் கட்சிகளும், அதன் முக்கியத் தலைவர்களும் சமூகவலைத் தளங்களின் மூலம் தங்களது கருத்துக்களையும், பணிகளையும் வெளியிட்டு வருகின்றன.
கம்ப்யூட்டர் இருந்தால்தான் இன்டர்நெட்டை உபயோகிக்க முடியும் என்ற நிலை மாறி, சாதாரண வகை செல்போன்களிலேயே இன்டர்நெட் உபயோகிக்கும் முறை வந்துவிட்டதால், கோடிக் கணக் கணக்கான செல்போன் உபயோகிப் பாளர்களும் இணையதளத்தை பார்க்க வழி ஏற்பட்டுள்ளது.
இதனால், “பேஸ்புக்”, “டிவிட் டர்” போன்ற சமூகவலைத் தள பக்கங்கள் மீது அரசியல் கட்சி களின் பார்வை திரும்பியுள் ளது. பல பெரிய கட்சிகள், தங்களது கட்சிகளில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற தனிப்பிரிவினையே தொடங்கியுள்ளன. அ.தி.மு.க-வும் கடந்த வாரம் இப்பிரிவைத் தொடங்கியுள்ளது. இவ்வகையில் தமிழகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோ ரும், மேலும் பல அ.தி.மு.க, தி.மு.க எம்.பி.களும் பேஸ்புக் பக்கங்களில் இளைஞர்களுடன் பழகத் தொடங்கியுள்ளனர்.
பல கோடி ரூபாய் செலவு
சமூகவலைத்தளங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சில பெரிய கட்சிகள், பெரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து, பிரமாண்டமாக தங்களது பக்கத்தை உருவாக்கி, அதை தொடர்ந்து செயல்படுத்தவும், ஆயிரக் கணக்கானோரை ‘நண்பர்கள்’ பட்டியலில் சேர்க்கவும் பல கோடி ரூபாயை செலவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் போலியான முகவரிகள் ஏற்படுத்தப்படுவதா கவும் புகார்கள் எழுந்துள்ளன.
தலைமை தேர்தல் அதிகாரிகள்
இது பற்றி மத்திய தேர்தல் ஆணையத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், இப்பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையம் விவாதித்துள்ளது. சமூகவலைத் தளங்களின் விஸ்வருப வளர்ச்சியே கடந்த நாடாளுமன்ற தேர்தலுக் கும் இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்கு சமூகவலைத்தளத்தில் கடிவாளம் போட அனைத்து தலைமை தேர் தல் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரத்தினர் “தி இந்து”விடம் புதன்கிழமை கூறியதாவது:-
சமூவலைத்தளங்களில் அரசியல் கட்சிகள் பெரும் செலவில் பிரச்சாரத்தை மேற்கொள் ளத் தொடங்கியுள்ளன. அதனால் அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு வழிவகை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, வேட்பாளரின் தேர்தல் செலவுக்
கணக்கில், சமூகவலைத் தளங்களில் செய்யப்படும் செலவுகளையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை எப்படி கணக்கிடுவது, எவ்வளவு பேரை வைத்து அவர்கள் இந்த பணியை செய்கிறார்கள் என்பது போன்ற தகவல்களைக் கண்டறிவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

தலைவர்கள் அறிவோம்: பெரியார்

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர்.
பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும், திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடிய சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும் இந்தியாவின் கண்ணிராத பகுத்தறிவு சிற்பி என்றும் போற்றப்பட்ட ஈ.வெ. ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளின் தொகுப்பினை காண்போம்.
பிறப்பு: ஈ.வெ. ராமசாமி அவர்கள், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் வெங்கட்ட நாயக்கருக்கும் - சின்னதாயம்மைக்கும்(முத்தம்மாள் என்ற இயற்பெயர்) மகனாக தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற சகோதரிகளும் இருந்தனர். இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் நாயுடு மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர்.
மொழி அறிவு: பெரியார் மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
ஆரம்ப வாழ்க்கை: தனது படிப்பை ஐந்தாம் வகுப்புவரை முடித்துகொண்ட ஈ.வெ.ரா, அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தன்னுடைய 12 வது வயதில் தந்தையின் வணிகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் பெரியார் பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் தனது பகுத்தறிவு சிந்தனையால், திராவிடத்தை சதியால் அடக்கியாண்ட ஆரியத்தை துடுக்குடன் பல கேள்விகள் கேட்கத்தொடங்கினார்.
அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் பெரியார் வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும் இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும், இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின.
திருமணம்: அவருடைய 19 வது வயதில் பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நிரம்பிய நாகம்மையாரை மணந்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நாகம்மையார் தன்னுடைய கணவரின் புரட்சிக்கு முழுவதுமாக தன்னை அற்பணித்துக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். மணமான இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.
1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் சேர்ந்து விருந்துண்டார். இதனால் இவருக்கும், இவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர், இவருடைய பகுத்தறிவு செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்கு சென்றார்.
காசிக்கு பயணம்: 1904 ஆம் ஆண்டு பெரியாருக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், காசிக்கு சென்ற அவருக்கு, அங்கு பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் பெரியாருக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டு  வீதியில் தள்ளப்பட்டார். இந்த நிலைமையை எண்ணி மிகவும் வருந்தினார். பின்னர் பசித்தாளாமல் குப்பைத் தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவை உண்டு பசியாற்றினார். அதுமட்டுமல்லாமல், காசியில் நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைகாரர்களாக இருப்பதையும் மற்றும் புனித கங்கையில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ட இறைப்பற்றுள்ளவாரக இருந்த பெரியார் காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக (ஒரு நாத்திகவாதியாக) மாற்றிக்கொண்டார்.
அரசியலில் பெரியார்: காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட பெரியார், 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளை பின்பற்றியதுமட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்துக்கூறினார். வெளிநாட்டு துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார். 1921 ஆம் ஆண்டு கள்ளுக்கடைகளை மூட வலியிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னைமரங்களை வெட்டிச்சாய்த்தார். இப்போராடத்தில், கைது செய்யப்பட்டு சிறைதண்டனையும் பெற்றார்.1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மதுகுடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபாட்ட அவர், மீண்டும் கைதுசெய்யப்பட்டார். 1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். பின்னர், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால், இது இனவேற்றுமையை பிரதிபலிப்பதாக அமைவதால் அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் பெரியார் 1925-ல் அக்கட்சியை விட்டு விலகினார்.
வைக்கம் போராட்டம் (1924-1925): பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் ஒரு வலுவான நம்பிக்கை இருந்தது. கேரளாவில் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ள வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும், ஈழவர்களும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் கோயிலுக்குள் நுழையவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 ஆம் ஆண்டு டி.கே. மாதவன் அவர்கள், இதை எதிர்த்து காந்திய வழியில் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினார். இப்போராட்டதில், நாடெங்குமுள்ள காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்தின் சார்பாக தந்தை பெரியார் கலந்துகொண்டார் பின்னர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். அவருடைய துணைவியான நாகம்மையாரும் இப்போராட்டத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டபோதிலும், அவருடைய தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் வெற்றியும் கிட்டியது. இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என தமிழக மக்களால் அழைக்கப்பட்டார்.
சுயமரியாதை இயக்கம்: 1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடபழக்க வழக்கங்களை சமுகத்தில் மக்களிடம் இருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது. தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைபிடிக்கும் பார்ப்பனியம், பெண்களை தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து குரல்கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்பனரல்லாதார் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சி திருமணங்களை நடத்திக்காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமணமுறையையும் இவ்வியக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இடஒதுக்கீடு முறையை கடைபிடிக்க இவ்வியக்கம் வலியுறுத்தியது. பின்னர், தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” 1925 ஆம் ஆண்டு தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது. சுயமரியாதையாளர்கள் ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களிலும்,மாநாடுகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
1929, இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில், தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.
1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரிஸ், சிங்கப்பூர், இலங்கை, மேலும் பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிக்கூறினார்.
இந்தி எதிர்ப்பு: 1937 ஆம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றபிறகு ‘இந்தி’ கட்டாயமொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் வெடித்தன. இந்தி பேசும் வடஇந்தியர்களிடமிருந்து தமிழர்களை பிரித்து இரண்டாம் தர குடிமக்களாக காட்டுவது மட்டுமல்லாமல், தமிழர்களின் முன்னேற்றத்தையும், பண்பாட்டையும் சிதைத்து விடும் என வலியுறுத்தி 1938- ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் மற்றும் சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரியாருடன் பலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1939 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட பெரியார் “நீதிக்கட்சியின்”(1916 ஆம் ஆண்டு பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமை சங்கம் என்ற அரசியல் கட்சி பின்னாளில் நீதிக்கட்சியாக மாறியது) தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் நீதிக்கட்சி பெரும் வளர்ச்சிப்பெற்றது. இருப்பினும், நீதிக்கட்சியில் பெரும்பாலான உறுப்பினர்கள் செல்வந்தராகவும், கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருந்ததால், பெரியாரின் கீழ் செயல்பட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினார்.
பெரியாரின் திராவிட கழகம்: பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சென்று சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறைமறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்திதொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.
பெரியார் - அண்ணாவிற்கிடையே கருத்துவேறுபாடும் திமுக உதயமும்:  பெரியாரின் திராவிட கழகம், சமுதாய மறுமலர்ச்சி, விழிப்புணர்வு,  மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளை சார்ந்து இருந்ததால், திராவிட கழகத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரியார் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல்,‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். ஆனால் கா.ந. அண்ணாதுரை மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியை பெறுவதில் அக்கறை காட்டினார். இதனால் இருவருக்குமிடைய கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. திராவிட கழகத்தின் தொண்டர்களும், உறுப்பினர்களும் கழகத்திலிருந்து விலக சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருந்தபொழுது, ஜூலை 9, 1948  ஆம் ஆண்டு பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டதை காரணம் காட்டி, அண்ணாதுரை தலைமையிலான திராவிட கழகத்திலிருந்து விலகினார். பின்னர் கா.ந. அண்ணாதுரை தனது வழிகாட்டியான பெரியாரிடமிருந்து பிரிந்து, 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
இறுதிகாலம்: இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார், 1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், 1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1962-ல் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளரவேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவு நிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும்.
புனைபெயர்கள்: இவருடைய சமுதாய பங்களிப்பைப் பாராட்டி ‘யுனஸ்கோ நிறுவனம்’ ஜூன் 27, 1973 ஆம் ஆண்டு பெரியாரை ‘புத்துலக தொலைநோக்காளர்’, ‘தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்’, ‘சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை’ என பாராட்டி விருது வழங்கியது. அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ‘கடும் எதிரி’, ‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.
மறைவு: குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பகுத்தறிவின் சிற்பி, அறிவு பூட்டின் திறவுகோல், எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்த வித்தகர், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் உலக மக்களின் உள்ளத்தில் என்றும் உறவாடிக் கொண்டு இருக்கும் உத்தமர்தான் பெரியார்.
பல நூற்றாண்டு கால வரலாற்றை வெறும் இருபது வருடங்களில் நிகழ்த்திக்காட்டிய வரலாற்றுத் தேடல்; மனிதகுல வரலாற்றில் தன் மக்களின் விடியலுக்காகப் போராடிய மாபெரும் விரர்; இந்திய விடுதலையில் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிருந்து, மதுவிலக்குக் கொள்கைகளை காந்திக்கு எடுத்துரைத்து, சுயமரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்த திருமணம் என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, தன் தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வகைசெய்த பகுத்தறிவு பகலவன், திராவிடம் என்கிற பல நூற்றாண்டு கால வரலாற்றின் ‘வெற்றி நாயகன்’என இன்னும் சொல்லிக்கொண்டே போகக்கூடிய அரும்பணியை ஆற்றிய மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
பெரியார் கடந்து வந்த காலவரிசை:
1879 – செப்டம்பர் 17 ஆம் தேதி ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
1885 – திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
1891 – பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
1892 – வாணிபத்தில் ஈடுபட்டார்
1898 – நாகம்மையாரை (அகவை-13) மணந்தார்.
1902 – கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
1904 – ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
1904 – காசிக்கு சென்று ஒரு நாத்திகவாதியாக திரும்பினார்.
1907 – பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
1909 – எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
1919 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
1922 – மெட்ராஸ் ப்ரிசிடென்ஸி காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
1925 – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.
1924 – வைக்கம் போராட்டத்தை நடத்தினார்.
1925 – காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.
1929 – ஐரோப்பா, ரஷ்யா, மற்றும் மலேஷியா போன்ற சர்வதேச நாடுகளுக்கு பயணம்.
1929 – தன்னுடைய பேருக்கு பின்னால் இருந்த ‘நாயக்கர்’ என்ற பட்டத்தைத் துறந்தார்.
1933 – பெரியாரின் துணைவியாராகிய நாகம்மையார் மரணம்.
1938 – தமிழர்கள் வாழும் நாடு தமிழர்கே என முழங்கினார். நவம்பர் 13 ஆம் தேதி 1938ல் 5000க்கு மேற்ப்பட்ட பெண்கள் கலந்துகொண்ட தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டிலிலேயே "பெரியார்" என்ற பெயரால் அழைக்கப்படார். (குடி அரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று தான் 18.12.1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25.12.1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது)
1939 – நீதி கட்சி தலைவரானார்.
1944 – நீதி கட்சியின் பெயர் ‘திராவிட கழகம்’ என மாற்றப்பட்டது.
1948 – ஜூலை 9, ஆம் தேதி பெரியார் மணியம்மையை மறுமணம் புரிந்து கொண்டார்.
1949 – பெரியார் மற்றும் கா.ந.அண்ணாதுரையிடையே பிளவு ஏற்பட்டு ‘திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
1973 – பெரியார் டிசம்பர் 24 ஆம் தேதி, தனது 94 வது வயதில் காலமானார்.
நினைவகங்கள்: தமிழக அரசு பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தைபெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ORGANISATION AND THERE HQ’s

ORGANISATION AND THERE HQ’s

1. UNO – New York
2. UNICEF – New York
3. UNESCO – Paris
4. UNIDO – Vienna
5. WHO – Geneva
6. UNFPA – New York
7. ILO – Geneva
8. IMF – Washington DC
9. WTO – Geneva
10. International Court Of Justice – The Hague
11. International Atomic Energy Agency – Vienna
12. World Bank – Washington D.C.
13. International Committee of theRed Cross -Geneva
14. International Maritime Organisation – London
15. Universal Postal Union – Berne
16. Food and Agricultural Organisation – Rome
17. World Meteorological Organisation – Geneva
18. SAARC – Kathmandu
19. Amnesty International – London
20. Transparency International – Berlin
21. World Intellectual Property Organization – Geneva
22. International Renewable Energy Agency – Abu Dhabi (UAE) (Interim Hqs)
23. Commonwealth of Nations – London
24. International Standards Organisation – Geneva

IAS Exam (UPSC Civil Services Exam) Pattern and Syllabus

IAS Exam (UPSC Civil Services Exam) Pattern and Syllabus

Civil Services Exams conducted by Union Public Service Commission. The exam is conducted in two phases:
Preliminary Test
Mains Exam including Personality Test

Preliminary Examination:
The Preliminary Examination comprising of two compulsory Papers of 200 marks each and of two hours duration each. Detailed below is the new syllabus and pattern of the Preliminary Examination, which is brought to the notice of the prospective candidates intending to appear at the Civil Services Examination (CSE) in 2011 onwards:

Paper I - (200 marks) Duration: Two hours
Current events of national and international importance
History of India and Indian National Movement
Indian and World Geography - Physical, Social, Economic geography of India and the World.
Indian Polity and Governance – Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues, etc.
Economic and Social Development – Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Sector Initiatives, etc. (data byhttp://goo.gl/8a2rgq)
General issues on Environmental ecology, Bio-diversity and Climate Change - that do not require subject specialization
General Science.

Paper II- (200 marks) Duration: Two hours
Comprehension
Interpersonal skills including communication skills;
Logical reasoning and analytical ability
Decision making and problem solving
General mental ability• Basic numeracy (numbers and their relations, orders of magnitude etc.) (Class X level), Data interpretation (charts, graphs, tables, data sufficiency etc. -Class X level)
English Language Comprehension skills (Class X level).
Questions relating to English Language Comprehension skills of Class X level (last item in the Syllabus of Paper-II) will be tested through passages from English language only without providing Hindi translation thereof in the question paper.
The questions will be of multiple choice, objective type.

Mains Exam:

The written examination will consist of the following papers:
Paper-I
Section 1 Essay - 200 Marks
Section 2 English Comprehension & English Précis - 100 Marks (Of Matriculation/ Xth standard level)

Paper-II
General Studies–I - 250 Marks
(Indian Heritage and Culture, History and Geography of the World and Society)

Paper-III
General Studies –II - 250 Marks
(Governance, Constitution, Polity, Social Justice and International relations)

Paper-IV
General Studies –III - 250 Marks
(Technology, Economic Development, Bio-diversity, Environment, Security and Disaster Management)

Paper-V
General Studies –IV - 250 Marks
(Ethics, Integrity and Aptitude)

Paper-VI
Optional Subject – Paper 1 - 250 Marks

Paper-VII
Optional Subject – Paper 2 - 250 Marks

Sub Total (Written test) - 1800 Marks

Personality Test - 275 Marks.

Grand Total - 2075 Marks

நீடித்த வெற்றிக்கான சூத்திரம்!

எவ்வளவோ சங்கடங்களுக்கு இடையிலும் சாதித்திருக்கிறார்கள் நம் விவசாயிகள். நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி இந்த ஆண்டு 2,630 லட்சம் டன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம்முடைய நிதி அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் இருவரின் சமீபத்திய பேச்சுகளும் இதை உறுதிசெய்கின்றன.
எல்லா வகை தானிய உற்பத்தியுமே இந்த ஆண்டு நன்றாக இருக்கிறது. கரும்பு, பருப்பு வகைகள், பருத்தி, எண்ணெய் வித்துகளின் விளைச்சலும் ஊக்கம் தருகிறது. தொழில் துறையும் சேவைத் துறையும் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியை எட்டாத சூழலில், வேளாண் துறை இந்த ஆண்டு நமக்கு ஆறுதல்.
நடப்பு நிதியாண்டில் வேளாண் துறையிலும் அதைச் சார்ந்த இதரத் துறைகளிலும் வளர்ச்சி 4.6% ஆகவும் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 4.9% ஆகவும் இருக்கும் என்று மத்திய புள்ளிவிவரத் துறை திரட்டிய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாகவே வேளாண் துறை சராசரியாக 4% வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்ல செய்தி. அதேசமயம், வேளாண் துறை சார்ந்த கொள்கைகளை வகுப்பதில் அரசாங்கத்தின் குளறுபடிகளை வேளாண் துறையின் சமீபத்திய வெற்றி தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஒருபுறம் அரிசி அதிகம் விளைந்தாலும் மறுபுறம் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் போகிறது. உணவுப் பணவீக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில், போதுமான சேமிப்பு வசதிகள் இல்லாமல் தானிய சேமிப்புக் கிடங்குகள் நிரம்பிவழிந்து, பெருமளவில் தானியங்கள் வீணாகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வேளாண் துறையில் அரசின் கொள்கை கோதுமை, அரிசி, பருத்தி, கரும்பு போன்றவற்றின் சாகுபடிக்கே முன்னுரிமை தருகிறது. அடுத்த நிலையில்தான் பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் வருகின்றன. பிற பயிர்களைப் பொறுத்தவரை சந்தை விலை, விவசாயிகளின் ஆர்வம், தண்ணீர் கிடைப்பது ஆகியவற்றைப் பொறுத்தே சாகுபடிக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதை என்னவென்று சொல்வது?
மீண்டும் மீண்டும் இந்த விஷயங்கள் நம் கவனத்தைக் கோருகின்றன. அரிசி, கோதுமை, கரும்பு மீதான அரசின் கவனம் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மற்ற உணவுப் பயிர்கள், தானியங்கள் மீதான அக்கறையும் முக்கியம். அதேபோல, ஓர் ஆண்டைப் போல இன்னோர் ஆண்டும் பருவ மழை பெய்யும் என்றோ விளைச்சல் நன்றாக இருக்கும் என்றோ எந்த நிச்சயமும் இல்லை. ஆகையால், உற்பத்தியான தானியங்களைப் பாதுகாத்துவைக்கப் போதுமான கிடங்குகளை உருவாக்குவது அரசின் உயர்கவனம் அளிக்க வேண்டிய நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். கிடைக்கும் வெற்றியை வீணாகாமல் காப்பதே வருங்கால வெற்றிக்கு அடிப்படையாக அமையும் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும்

யானை ஏன் காதுகளை அசைக்கிறது?

#நிலத்தில் வாழும் உயிர்களில் மிகப்பெரிய பாலூட்டி யானைதான்.
#யானைகள் ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் வாழ்கின்றன.
#யானைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை.
#ஆப்பிரிக்க யானைகளில் பெண், ஆண் இரண்டுக்கும் தந்தங்கள் உண்டு. ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. உணவைத் தோண்டித் தின்பதற்குத் தந்தங்கள் உதவுகின்றன.
#பெண் யானைகளுக்கு 12 வயதாகும்போது, குட்டிகளை ஈனத் தொடங்குகின்றன. யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்.
#யானைகளால் தந்தங்களைப் பயன்படுத்தி, நிலத்தடி நீரையும் தோண்டிப் பருக முடியும்.
#யானைகளுக்குப் பெரிய, மெல்லிய காதுகள். யானையின் காதுகளில் அமைந்துள்ள ரத்தத் தமனிகள்தான் அவற்றின் உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கின்றன. உஷ்ணமான தட்ப வெட்ப நிலையில் காதுகள் வழியாகப் பயணிக்கும் ரத்தம் அதன் உடலைக் குளிர்விக்கிறது.
#பொதுவாக யானைகளை எந்தப் பிராணியும் உணவாகக் கொள்வதில்லை. இருப்பினும் ஆப்பிரிக்கச் சிங்கங்கள், குட்டி யானைகள் மற்றும் பலவீனமான நிலையில் உள்ள யானைகளை வேட்டையாடித் தின்னும். யானைகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மனிதர்களே. வேட்டையாடுவது, வாழ்விடத்தை ஆக்கிரமிப்பது ஆகியவற்றால் யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
#யானையின் தும்பிக்கையால் ஒரு பொருளின் அளவு, வடிவம், வெப்பநிலையை உணர முடியும். உணவைத் தூக்கவும், தண்ணீரை எடுத்து வாயில் ஊற்றவும் தும்பிக்கை பயன்படுகிறது.
#யானையின் தும்பிக்கை 2 மீட்டர் அளவு வளரக்கூடியது. தும்பிக்கையின் கனம் 140 கிலோகிராம். ஒரு லட்சம் தசை நாண்களால் உருவாக்கப்பட்டது அது. ஆனால் தும்பிக்கையில் எலும்புகள் இல்லை.
#பெண் யானைகள் சேர்ந்து வாழக்கூடியவை. ஆண் யானைகள் 13 வயதில் தங்கள் மந்தையை விட்டுப் பிரிந்து செல்கின்றன. அந்த வயதிலிருந்து ஒரு ஆண் யானை தனியாகவே வாழத் தொடங்குகிறது.
#யானைகள் அருமையாக நீச்சல் அடிக்கக்கூடியவை. தும்பிக்கையை சுவாசக் குழாய் போலப் பயன்படுத்தி ஆழமான நீர்பகுதிகளிலும் யானைகளால் இருக்க முடியும்.
#யானைகள் தாவர உண்ணிகள். இலைகள், கிளைகள், மூங்கில்கள் மற்றும் வேர்பகுதிகளை உணவாக கொள்கின்றன.

கப்பல்கள் தொடர் விபத்து எதிரொலி: கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி ராஜினாமா

கடற்படை தலைமை தளபதி தேவேந்திர குமார் ஜோஷி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில மாதங்களாக கடற்படை கப்பல்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவதற்கு தார்மீக பொறுப்பேற்று கடற்படை தலைமை தளபதி டி.கே.ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளது.
புதிய தலைமை தளபதி நியமிக்கப்படும் வரை கடற்படை துணை தலைமை தளபதி ஆர்.கே.தொவான் அப்பொறுப்பை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் கடற் படை தலைமை தளபதி ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச் சராக இருந்தபோது கடற்படை தலைமை தளபதி விஷ்ணு பகவத் பதவி நீக்கப்பட்டார்.
நேற்று நீர்மூழ்கி கப்பலில் நிகழ்ந்த விபத்து தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, விளக்கமளித்துள்ளார்.
நீர்மூழ்கி கப்பலில் புகை- 7 வீரர்களுக்கு பாதிப்பு
இந்திய கடற்படைக்கு சொந் தமான ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் நேற்று திடீரென மர்மமான வகையில் புகை பரவியது. இதை சுவாசித்த கடற்படை வீரர்களில் 7 பேர் மூச்சுத் திணறி மயக்க நிலைக்குச் சென்றனர். கப்பலில் இருந்த 2 வீரர்களின கதி தெரியவில்லை.
மும்பையில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் நேற்று காலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது அதிகாரிகள், கடற்படை வீரர்கள் என 70 பேர் கப்பலில் இருந்தனர். ஒரு கேபினில் மட்டும் புகை பரவியுள்ளது. இது விபத்துதான், சதிச் செயல் ஏதுமில்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திடீரென புகை வெளியானது குறித்த தகவல் கிடைத்ததும் கப்பல் உடனடியாக கரைக்கு கொண்டு வரப்பட்டது. உடல் நலக் குறைவு ஏற்பட்ட 7 வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். மேலும் இருவர் கப்பலின் எந்த பகுதியில் உள்ளனர் என்பது தெரியவில்லை. சம்பவம் நிகழ்ந்த கப்பல் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தாகும். கடந்த 7 மாதங்களில் இந்திய கடற்படையின் வெவ் வேறு கப்பல்களில் 10 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 சம்பவங்கள் நீர்மூழ்கி கப்பல் சம்பந்தப்பட்டவை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ல் மும்பை துறைமுகத்தில் இருந்த ஐஎன்எஸ் சிந்துரக்சகா கப்பல் கடலில் மூழ்கியதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். இது சமீபகாலத்தில் கடற்படையில் நிகழ்ந்த பெரிய துயரகர விபத்தாகும்.

வால் நட்சத்திரத்தைத் துரத்திச்செல்லும் விண்கலம்

ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய விண்கலம் ஒன்று இப்போது 67 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வால் நட்சத்திரம் ஒன்றை எட்டிப்பிடிப்பதற்காக அதைத் துரத்திச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த விண்கலத்தின் பெயர் ரோசட்டா.
ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தை அடுத்த சில மாதங்களில் எட்டிப்பிடிப்பதுடன் நில்லாமல், அதைச் சுற்றிவர ஆரம்பிக்கும். இரண்டு மாத காலம் இப்படிச் சுற்றிவந்து, வால் நட்சத்திரத்தை நோட்டம்விடும். பிறகு, அந்த விண்கலத்திலிருந்து துளையிடும் கருவி, குட்டி அடுப்புகள், மோப்பக் கருவி சகிதம் பிலே என்னும் பெயர் கொண்ட இறங்கு கலம் ஒன்று வால் நட்சத்திரத்தில் இறங்கித் துளைபோட்டு, வால் நட்சத்திரத்தை ஆராயப்போகிறது.
விண்வெளி வரலாற்றில் வால் நட்சத்திரம் ஒன்று இவ்விதம் ஆராயப்படுவது இதுவே முதல்முறை. ஆகவே, விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை மிக ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
வால் நட்சத்திரம் என்றால் பயம் ஏன்?
ஒரு காலத்தில் வால் நட்சத்திரத்தைக் கண்டு மன்னர்களும் சரி, மக்களும் சரி அஞ்சினார்கள். வானில் வால் நட்சத்திரம் தோன்றினால், மன்னருக்கு ஆபத்து என்று அஞ்சப்பட்டது. அத்துடன் மக்களைப் பஞ்சம், நோய் ஆகியவை தாக்கும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், இன்றோ வால் நட்சத்திரம்தான் மனிதர்களைக் கண்டு பயப்பட வேண்டும்.
வால் நட்சத்திரம் ஒன்று இரவு வானில் நீண்ட வாலுடன் செல்வது பிரமிப்பூட்டும் காட்சியாக விளங்கலாம். ஆனால் பூமி, செவ்வாய் போன்ற கிரகங்களுடன் ஒப்பிட்டால் வால் நட்சத்திரம் வெறும் சுண்டைக்காய்.
ஒன்று அல்லது இரண்டு பெரிய பாறைகள், கல் மற்றும் மண், உறைந்த நிலையிலான பலவகை வாயுக்கள், நிறையப் பனிக்கட்டி இவற்றை யெல்லாம் மொத்தையாக உருட்டி வைத்ததுதான் வால் நட்சத்திரம். ஒரு வால் நட்சத்திரத்தின் தலையும் அதுதான். வால் என்பது தூசு அல்லது வால் நட்சத்திரத்திலிருந்து வெளியே தள்ளப்படும் வாயுக்களே. ஒரு வால் நட்சத்திரத்தின் வால் பல லட்சம் கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருக்கலாம். சூரிய ஒளி படுவதால் வால் ஒளிரு கிறது. நமது பூமி, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை வால் நட்சத்திரத்தின் வால் வழியே சென்றுள்ளது.
ஒரு வால் நட்சத்திரத்தின் தலை, மிஞ்சிப்போனால் 30 கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கலாம். ஆதி காலத்தில் ஏதோ விஷயம் புரியாமல் வால் நட்சத்திரம் என்று பெயர் வைத்து விட்டார்களே தவிர, நட்சத்திரத்துக்கும் வால் நட்சத்திரத்துக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது.
67-பி / சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ
ரோசட்டா இப்போது துரத்தும் வால் நட்சத்திரத்துக்கு வருவோம். அது சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளமும் மூன்று கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அந்த வால் நட்சத்திரத்தின் பெயர்: 67-பி / சுரியுமோவ்-ஜெராசிமெங்கோ. 1969-ம் ஆண்டில் இந்த வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்த இரண்டு ரஷ்யர்களின் பெயர்களைச் சேர்த்து அதற்குப் பெயர் வைக்கப்பட்டது. இவர்களில் ஜெராசிமெங்கோ பெண் விஞ்ஞானி.
இந்த வால் நட்சத்திரம் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவிட்டுச் செல்கிறது. ஏதாவது ஒரு வால் நட்சத்திரத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்பி, அந்த வால் நட்சத்திரத்தில் பள்ளம் தோண்டி ஆராய்ச்சி நடத்துவது என்று முடிவுசெய்த ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, இந்த வால் நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது.
இந்த முடிவைத் தொடர்ந்து, ரோசட்டா விண்கலம் 2004 ஆண்டு மார்ச் மாதம் செலுத்தப்பட்டது. ஆனால், அந்த விண்கலம் இப்போதுதான் வால் நட்சத்திரத்தைத் துரத்த ஆரம்பித்துள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் ஆவானேன்?
10 ஆண்டுகள் பயணம்
இதற்கு 67 பி வால் நட்சத்திரத்தின் நீள்வட்டச் சுற்றுப்பாதை ஒரு காரணம். எந்த ஒரு வால் நட்சத்திரமாக இருந்தாலும், அது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றும். சூரியனைச் சுற்றி முடித்த பின்னர், மிகத் தொலைவுக்குச் சென்றுவிடும். 67 பி வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும்போது சுமார் 85 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும். பிறகு, அங்கிருந்து சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும்.
அந்தக் கட்டத்தில், அதாவது சூரியனை நோக்கி அந்த வால் நட்சத்திரம் வர ஆரம்பிக்கும்போது, ரோசட்டா அதைத் துரத்த வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டது.
நீங்கள் ஒரு பஸ்ஸை துரத்திப் பிடிக்க வேண்டுமானால் பஸ்ஸின் பின்புறமாக அதைத் துரத்தினால்தான் அதைப் பிடிக்க முடியும். ஆகவே, ரோசட்டா 85 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்றால்தான் அங்கிருந்து அது வால் நட்சத்திரத்தைத் துரத்த முடியும்.
ரோசட்டா 2004-ம் ஆண்டில் செலுத்தப்பட்டபோது, அந்த விண்கலத்துக்கு அவ்வளவு தூரம் செல்வதற்கான வேகம் கிடையாது. ஆகவே, ரோசட்டாவுக்கு மேலும்மேலும் வேகம் கிடைத்தாக வேண்டும். அவ்விதம் கூடுதல் வேகம் பெற வழி உண்டு.
ரோசட்டா மூன்று தடவை பூமியைச் சுற்றியது. ஒரு தடவை செவ்வாய் கிரகத்தைச் சுற்றியது. ஒரு விண்கலம் தொலைவிலிருந்து வந்து பூமியை ஒரு தடவை சுற்றிச் சென்றால், பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக அந்த விண்கலத்துக்கு இயல்பாகவே வேகம் அதிகரிக்கும். இது இயற்கை நியதி. ரோசட்டா ஏற்கெனவே கூறியபடி பூமியை மூன்று தடவையும் செவ்வாயை ஒரு தடவையும் சுற்றியபோது அதன் வேகம் அதிகரித்தது. இதன் பலனாக அது 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல முடிந்தது. 10 ஆண்டுகள் ஆனதற்கு இதுதான் காரணம்.
ரோசட்டா இப்படிச் சுற்றிச்சுற்றி வந்த கால கட்டத்தில் அது ஸ்டெயின்ஸ் மற்றும் லூடேஷியா ஆகிய விண்கற்களை நெருங்கி ஆராய்ந்து தகவல் அனுப்பியது.
நீள் உறக்கம்
ரோசட்டா பூமியிலிருந்து 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தபோது, அதாவது 2011-ம் ஆண்டு வாக்கில் அந்த விண்கலத்தில் இருந்த கருவிகள் செயல்படுவதை நிறுத்தி, ரோசட்டாவை நீள் உறக்கத்தில் இருக்கும்படி செய்தார்கள். நிபுணர்கள் ஒரு காரணமாகத்தான் இதைச் செய்தனர். ரோசட்டாவில் உள்ள கருவிகள் செயல்பட மின்சாரம் தேவை. ஆகவேதான் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கென ரோசட்டாவின் இரு புறங்களிலும் தலா 14 மீட்டர் நீளத்துக்கு சோலார் செல் எனப்படும் மின் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. பூமி, சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டரில் உள்ளது. இந்த அளவு தூரத்தில் இருந்தால், மின் பலகைகள் மூலம் நிறைய மின்சாரம் கிடைக்கும்.
ஆனால், சூரியனிலிருந்து 80 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்போது அந்த மின் பலகைகள் மீது அற்ப அளவுக்கே சூரிய ஒளி விழும்; போதுமான மின்சாரமும் உற்பத்தியாகாது. எனவேதான் இந்த நீள் உறக்கம். அதே நேரத்தில் அவ்வளவு தொலைவிலிருந்து மறுபடி சூரியனை நோக்கி வர ஆரம்பிக்கும் கட்டத்தில் ரோசட்டா விழித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. அதாவது, ரோசட்டாவில் உள்ள கணினி விழித்துக்கொண்டு பூமிக்குத் தகவல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது கடிகாரத்தில் அலாரம் வைப்பதற்கு ஒப்பானது.
சுமார் 31 மாத காலம் உறக்கத்தில் இருந்த ரோசட்டா, கடந்த ஜனவரி 20-ம் தேதி விழித்துக்கொண்டு சமிக்ஞை அனுப்பியது. இந்த சமிக்ஞை பூமிக்கு வந்துசேர 45 நிமிஷங்கள் ஆனது. ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் தலைமைக் கேந்திரத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு கவலையுடன் காத்திருந்த விஞ்ஞானிகள், இந்த சிக்னல் கிடைத்தவுடன் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். ரோசட்டாவின் கணினியில் கோளாறு ஏற்பட்டு, அந்த விண்கலம் விழித்துக்கொள்ளாமல் போயிருந்தால் எல்லாம் பாழ். எதுவும் செய்திருக்க முடியாது. இப்போது ரோசட்டா சுமார் 67 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
வருகிற மே மாத வாக்கில் தகுந்த ஆணைகள் மூலம் ரோசட்டாவின் வேகம் குறைக்கப்படும். அது வால் நட்சத்திரத்தை மெல்ல நெருங்கி ஆகஸ்ட் மாத வாக்கில் வால் நட்சத்திரத்தைச் சுற்றிவர ஆரம்பிக்கும். நவம்பர் 11-ம் தேதி பிலே இறங்கு கலம் வால் நட்சத்திரத்தில் மெதுவாக இறங்கி ஆய்வுப் பணிகளைத் தொடங்கும்.
எதற்காக இந்த ஆராய்ச்சி
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு, 10 வருஷக் காத்திருப்பு; சின்னஞ்சிறிய வால் நட்சத்திரம் ஒன்றை இவ்வளவு கஷ்டப்பட்டு ஆராய்வானேன்?
சூரியன் தோன்றியபோது பூமி, செவ்வாய் முதலான கிரகங்களும் தோன்றின. தயிர் கடையும்போது வெண்ணெய் ஒதுங்குவதுபோல சூரியக் குடும்பத்தின் கிரகங்கள் தோன்றியபோது மிஞ்சிய பொருட்கள் சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால் ஒதுங்கின. இப்படி ஒதுங்கியவைதான் வால் நட்சத்திரங்கள். எனவே, வால் நட்சத்திரங்களை - ஏதேனும் ஒரு வால் நட்சத்திரத்தை ஆராய்ந்தால் சூரியக் குடும்பம் தோன்றியபோது இருந்த நிலைமைகளை அறிய முடியும். சூரியக் குடும்பத் தோற்றம்பற்றி மேலும் தெரிந்துகொள்ள இயலும். இந்த நோக்கில்தான் ரோசட்டாவில் 12 கருவிகளும் கீழே இறங்கும் பிலேவில் ஒன்பது கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.
வருகிற ஆகஸ்ட் தொடங்கி, அடுத்த வருட டிசம்பர் வரை ரோசட்டா விண்கலம் அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றியபடி தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். வால் நட்சத்திரம் அடுத்த வருட ஆகஸ்டில் சூரியனுக்கு நெருக்கமாக இருந்துவிட்டு, அதாவது சூரியனைச் சுற்றிவிட்டு டிசம்பர் வாக்கில் வந்த வழியே செல்ல முற்படும். அத்துடன் ரோசட்டாவின் பணி முடிந்துவிடும். ரோசட்டா சுற்றுப்பாதைப் படத்தை இந்த இணையதளத்தில் காணலாம்: http://prnewsdaily.com/rosetta-comet-chaser-phones-home-bbc-news/
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், அறிவியல் எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

Wednesday, 26 February 2014

தலைவர்கள் அறிவோம்: அம்பேத்கார்

வரலாறுகளில் வாழ்பவர்கள் சிலர், வரலாறாய் வாழ்பவர்கள் சிலர். தம் செயல்களும், அவற்றின் சமுதாய நோக்கும் பன்முகப் பார்வையும், ஆழமும், மனித நேயச் சிந்தனையும் ஒரு மனிதனின் வரலாற்று நிலைப்பாட்டை நிர்ணயிக்கின்றன. அந்த வெளிப்பாடுகளின் வெளிச்சத்தில் வரலாற்றுக் காலமாகவே விளங்குகிறார் அம்பேத்கர்.
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், சமூகநீதிப் புரட்சியாளர் என பன்முகம் கொண்டர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்து விளங்கியவர்.
'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர். எல்லாவற்றிற்க்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.
பிறப்பு: மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் (அப்போது மாவ் (Mhow)பிரித்தானிய இந்தியா) 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி ராணுவ வீரராய் இருந்த ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோருக்கு 14-வது குழந்தையாகப் பிறந்தார் அம்பேத்கார். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்
ராணுவ வீரரான தந்தையின் பணிக்காலம் சில வருடங்களிலேயே முடிந்துவிட ஓய்வூதியத்தின் வெளிச்சத்தில் அவருடைய கல்வி ஆரம்பமானது. சிறுவயதில் ஆனந்தமாய் விளையாடிய அவர் தன்னுடைய பள்ளிக் காலத்தில் தானும் தன்னுடைய குடும்பமும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடத்தப்படுவதை அறிந்தார்.
கல்வி: 1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை. இதுபோன்ற கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது. அதுவே அவரை பின்னாளில் தலித் இனத்தின் விடுதலைக்காகப் போராடத் தூண்டியது.
பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார்.
1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றர். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்தது.
திருமணம்: மெட்ரிகுலேசன் தேர்வை முடித்த கையோடு அதாவது பதினேழாவது வயதில் அம்பேத்கருக்கு ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
மேல் படிப்பு: கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டம் பெற்றார்.
படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார்.
பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.
அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
பின்னர் மக்கள் பயனடைய விதமாக பியுப்பிள்ஸ் எஜீகேஷன் சொசைட்டி என்ற பெரியதோர் கல்விக்கூடத்தை நிறுவி உயர்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரி, தொழிற்கல்லூரி, போன்ற பல நிறுவனங்களை ஏற்பட வழி செய்தார். சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற வழிமுறைகளைப் பயில் எதிர்கால மக்கள் பிரதிநிதிகளுக்கென்று ஓர் கல்லூரியைத் தோற்றுவித்தார்.
அரசியலும் சமுதாயமும்: 1920ல் அரசியலில் நுழைந்தார். ஆயிரக்கணக்கான கூட்டங்கள், மாநாடுகள் வாயிலாக மக்களை விழிப்படையச் செய்தார். 'ஒதுக்கப்பட்ட பாதரம், மூத்தத் தலைவன்' போன்ற பத்திரிகைகளைத் துவக்கினார்.
1927ல் சௌதார் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்திலும் மற்றும் கலாரம் கோயில் நுழைவுப் போராட்டத்திலும் வெற்றிகண்டார்.
1928ல் பம்பாய் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு சிறுபிள்ளைகள் கல்வி, தாய்மார்களின் மகப்பேறு கால உதவி, விவசாய தொழிலாளர் ஊதியம் போன்றவைகளை நிறைவேற்றினார்.
விவசாய அடிமை முறையை ஒழித்தார். தீண்டாமை ஒழிப்புக்கான சட்டங்கள் கொண்டு வந்தார்.
தொழிலாளர்களுக்கு எட்டுமணி நேர வேலை, அவசரகால – ஒய்வுகால உதவி போன்றவைகளுக்காக வழி வகுத்தார்.
இந்திய சமுதாய அரசியல் நிலைமைகளை ஆராயவந்த எல்லா குழுக்களுக்கும் தம் ஆய்வுரைகளை வழங்கினார்.
1930-32ல் லண்டன் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டு பழங்குடி மக்களுக்கு அரசியல் உரிமையாக தனிபிரிதிநிதித்துவத்தைப் பெற்றார். அரசியல் சட்டத்தை எழுதினார். மத்திய அமைச்சரவையிலிருந்தபோது பல நல்ல திட்டங்களை வகுத்தார்.
தீண்டாமைக்கு எதிராக சமூகப்பணிகள்: பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார்.
1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.
இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார்.
 இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள எர்வட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன. வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.
பூனா உண்ணாவிரதமும் புகழ்பெற்ற குற்றச்சாட்டும்: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்திஜி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அப்போது அம்பேத்கார் அவர்கள் “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது” என்று பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”
இந்திய அரசியலமைப்பில் அம்பேத்கார்: இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகஸ்ட் 29ல் அம்பேத்கர் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.
அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது ,அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். (1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952 ல் அந்த சட்டம் நிறைவேறியது)
அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.
ரிசர்வ் வங்கி ஆக்கத்தில் அம்பேத்கார்: அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.
* கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
* பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
* ரூபாயின் சிக்கல்கள்: மூலமும் தீர்வும்
* கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.
பௌத்த சமயத்திற்கு மாறுதல்:
அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார். இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார். இதைப்பற்றி யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார்.
பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார். புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார். அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 1954ம் ஆண்டு இரு முறை பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு ரங்கூனில் நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார். 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார். 1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார், அவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.
இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள். அதன் பின் இவர் காட்மண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார். இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.
மறைவு: 1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954 ஜூன் முதல் அக்டோபர் வரை படுக்கையிலேயே இருந்து வந்தார். இவரின் உடல்நலம் கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு டிசம்பர் ஆறாம் நாள் 1956, பாபாசாகேப் அம்பேத்கார், தலித் இன விடுதலைக்காய் கொழுந்துவிட்டெரிந்த விளக்கு சட்டென்று அணைந்தது. அவருடைய மறைவு தலித் விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தை வெகுவாகப் பாதித்தது
பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.. டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர்.
இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.
அம்பேத்கர் கருத்துக்கள்: 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது 'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது’ என்ற கருத்தை முன் வைத்தார் அம்பேத்கார்.

தமிழக மாவட்டங்களின் தனி நபர் வருமானம்

தமிழக மாவட்டங்களின் தனி நபர் வருமானத்தை ஒப்பிட்டு பார்த்தால், மாநிலத்தில் கடைசி நிலையில் பெரம்பலூர், அதைவிட நான்கு மடங்கு அதிக வருமானத்துடன் முதல் இடத்தில் கன்னியாகுமரி. இதிலிருந்தே மாவட்டங்களிடையே எவ்வளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு உள்ளது என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள முடியும்.
அண்மையில் தமிழ் நாடு அரசு வெளியிட்ட ‘புள்ளியியல் தகவல் 2013’ என்ற அறிக்கையிலிருந்து இந்தத் தகவல்கள் எடுக்கப்பட்டன. மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில் 18 மாவட்டங்கள் மாநில சாராசரி தனி நபர் வருமானத்தை விட குறைவான வருமானத்தை பெற்றுள்ளன. மீதம் உள்ள 14 மாவட்டங்கள் சராசரியை விட அதிக தனி நபர் வருமானத்தை பெற்றுள்ளன. குறைந்த தனி நபர் வருமானம் உள்ள 18 மாவட்டங்களை பின் தங்கிய மாவட்டங்கள் என்றும், அதிக தனி நபர் வருமானம் உள்ள 14 மாவட்டங்களை முன்னேறிய மாவட்டங்கள் என்று பிரித்து ஆராய்வோம்.
இந்த மாவட்டங்களை வரைபடத்தில் பார்க்கும் போது பின் தங்கிய மாவட்டங்கள் அனைத்தும் வடமேற்கு (கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி), கிழக்கு (விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர்), காவேரி டெல்டா (நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்), தெற்கு (புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி) என ஒன்றோடு ஒன்று இணைந்த மாவட்டங்கள் (ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளவை). வளர்ச்சி அடைந்த 14 மாவட்டங்கள் வடக்கில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்), மேற்கில் (ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி) தெற்கில் (விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி) என பிரிந்துள்ளன (பச்சை வண்ணத்தில் உள்ளவை).
மாவட்டங்களின் இந்த இரு தொகுப்பை வேறு புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மாவட்டங்களுக்கிடையே உள்ள பொருளாதார இடைவெளி மேலும் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் வருகிறது.
2004-05 முதல் 2009-10 வரையிலான மாவட்டங்களின் மொத்த உற்பத்தியை ஒப்பிட்டு பார்க்கும் போது, பின் தங்கிய 18 மாவட்டங்களின் வளர்ச்சி 10.9%, இது மாநில வளர்ச்சியான 12.9% விட குறைவு, இதற்கு எதிர்மாறாக, 14 வளர்ந்த மாவட்டங்களின் வளர்ச்சி 13.3%. பின் தங்கிய மாவட்டங்களில் குறைந்த வளர்ச்சியும், முன்னேறிய மாவட்டங்களில் அதிக வளர்ச்சியும் இருப்பது இவற்றிற்கு இடையே உள்ள பொருளாதார இடைவெளியை அதிகப்படுத்தும். மிகவும் பின் தங்கிய மாவட்டமான அரியலூர் 5.7% வளர்ச்சியையும், மிகவும் வளர்ந்த மாவட்டமான கன்னியாகுமரி 16% வளர்ச்சியை அடைந் திருப்பது, புவியியல் ரீதியான பொருளாதார ஏற்றதாழ்வை தெளிவாகக் காட்டுகிறது.
மேலும் பின் தங்கிய பதினெட்டு மாவட்டங்களில் ஐந்து தான் மாநில சாராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை அடைந்துள்ளன, ஆனால் முன்னேறிய பதினான்கு மாவட்டங்களில் பதினோரு மாவட்டங்கள் மாநில சராசரியை விட அதிக வளர்ச்சி கண்டுள்ளன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 பின் தங்கிய மாவட்டங்களின் மக்கள் தொகை 33,480,399 மாநிலத் மக்கள் தொகையில் இது 46.4%; ஆனால், 14 முன்னேறிய மாவட்டங்களின் மக்கள் தொகை 38,658,559, அதாவது, மாநில மக்கள் தொகையில் இது 53.6%. இவ்வாறு வளர்ந்த மாவட்டங்களில் மக்கள் கூடுவது புதிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனை மேலும் ஒரு புள்ளி விவரம் மூலம் அறியலாம்.
மாவட்டங்களிடையே உள்ள நகரமயமாக்கலை ஒப்பிடும் போது, மாநிலத்தில் 48.4% நகர்மயமாக்கல் இருக்கும் போதும், முன்னேறிய மாவட்டங்களில் அது 62.2% ஆகவும், பின் தங்கிய மாவட்டங்களில் நகரமயமாக்கல் 32.6% ஆகவும் உள்ளது.
மாவட்டங்களிடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு மக்களை வளர்ந்த மாவட்டங்களில் கூடச்செய்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் மக்களுக்கு குடிநீர், கழிவு நீர் வெளியேற்றல், சாலை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மின்சாரம் போன்ற பொது சேவைகளை எடுத்து செல்வதில் பாரபட்சம் ஏற்படும். முன்னேறிய மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை உள்ள நகரங்களில் அதிக பொது சேவைகள் கேட்டு அரசியல் ரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தி அவற்றை பெற முயற்சிப்பது எளிது. முன்னேறிய மாவட்டங்களில் அதிகரித்து வரும் தொழில் மற்றும் சேவை நிறுவனகளும் இதற்கு துணை நிற்கும்.
பின் தங்கிய மாவட்டங்களில் நகரமயமாக்கல் குறைவு, கிராமங்கள் பரந்து விரிந்தி ருக்கும். இம்மாவட் டங்களால் அரசியல் ரீதியான நெருக்கடிகள் கொடுத்து தேவையான அளவு பொது சேவைகளை பெற முடியாது. எனவே, புவியியல் ரீதியில் சமமான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதல் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் அடிப்படை சமூக பொருளாதார கட்டமைப்பு வசதிகள் சமமாக அளிக்கப் படவேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்தின் புவியியல் ரீதியான பொருளாதாரக் காரணிகளை அறிந்து வெவ்வேறு தொழில்களை வளர்க்க வேண்டும். இவ்வாறான புவியியல் ரீதியான பொருளாதாரத் திட்டமிடுதல் இருந்தால் மட்டுமே, மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும். நம்மிடையே ஒரு தெலுங்கானா தேவை இல்லை.

வீண் குழப்பம் வேண்டாம்

பிளஸ் டூ தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த நேரத்தில் நன்றாகப் படிக்கும் சிலருக்கும்கூட, எல்லாவற்றையும் படித்து விட்டோமா? குறிப்பிட்ட பாடத்திலிருந்து முக்கியமான கேள்விகள் கேட்டுவிட்டால், நம்மால் பதில் அளிக்க முடியாதே, எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது, ஆனால் ஒரே குழப்பமாக இருக்கிறதே. பரீட்சை ஹாலில் பதில் மறந்து போய்விட்டால் என்ன செய்வது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழும்.
தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் எதைப் பற்றியும் குழப்பிக்கொள்ளாமல், சகஜமான மனநிலையில் இருந்தாலே நிறைய மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும். இந்தக் கடைசிக் கட்டத்தில் தேர்வுக்கு எப்படித் தயாராவது என்பது குறித்துச் சில யோசனைகள்:
தேர்வுக்கு முந்தைய தயாரிப்பு
l தேர்வுக்குக் குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பாகவே அனைத்துப் பாடங்களையும் படித்துவிடுவது நல்லது.
l நமக்கு எந்தப் பாடம் பிடிக்குமோ, அந்தப் பாடத்தை முதலில் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்
l பதற்றம், கோபம் இல்லாமல் படிக்க வேண்டும். அப்போதுதான் மனதில் நிற்கும்
l தேர்வு நேரங்களில் கிரிக்கெட் போன்ற விளை யாட்டுகள், டி.வி. பார்ப்பது போன்றவற்றைச் சில நாட்களுக்காவது ஒதுக்கி வைத்துப் பாடத்தில் கவனம் செலுத்தினால் நிறைய மதிப்பெண்கள் பெறலாம்
l தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்
l தேர்வுக்கு வேண்டிய நுழைவுச் சீட்டுகள், எழுது பொருட்கள் போன்ற கருவிகளை ஒரே இடத்தில் சேகரித்து வைக்கவும்
l தேர்வு நேரத்தில் உடல்நிலையை நன்றாக வைத்திருக்க வேண்டும். தேர்வு நாட்களில் ஜுரம், தலைவலி போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
l தொடர்ந்து படிக்கும் நேரங்களில் அவ்வப்போது தேநீர், பிஸ்கெட், வெள்ளரிக் காய், பேரீச்சம் பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்
l வெயில் காலம் நெருங்குவதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்
தேர்வுக்குத் தயாராகும் முறை
l மொத்தமாகப் பாடங் களைப் படிப்பது நல்லதல்ல. பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் படித்தால் மனதில் தங்கிவிடும்
l தினசரி குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்
l ஒரு மணி நேரம் படித்தால் 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்
l படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதினால் 16 முறை படித்ததற்குச் சமம்
l பாடங்களைத் திரும்பப் படிக்க அட்டவணை தயார் செய்ய வேண்டும். அதைத் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தயார் செய்வது நல்லது. இல்லாவிட்டாலும் இப்போது செய்யலாம்.
l ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். நன்றாகப் படித்த பாடங்களுக்குக் குறைந்த நேரம், அதிகம் படிக்காத பாடங்களுக்கு அதிக நேரம் என்று ஒதுக்க வேண்டும்
l கணக்கு, வரைபடங்கள் ஆகியவற்றுக்குத் தினசரி நேரம் ஒதுக்குவது நல்லது
l மதிப்பெண் வாரியாகப் பாடத்தைப் பிரித்துப் படிக்க வேண்டும். முதலில் அதிக மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள், கடைசியாக ஒரு வார்த்தை மதிப்பெண்கள் என்று படிக்க வேண்டும்
l படிப்புக்கு மத்தியில் நமக்குப் பிடித்த காரியங் களைச் செய்யக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் பரீட்சை பதற்றம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்
l தேர்வுக்குத் தயார் செய்யும் நேரத்தில் தியானம் செய்வது அல்லது பிடித்த விளையாட்டுகளை விளையாடுவது பதற்றத்தைத் தணிக்க உதவும்
தேர்வு சமயத்தில்
l தேர்வுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத் திற்கு முன்னதாகவே படித்து முடித்துவிட வேண்டும்
l தேர்வுக்கு முந்தைய அரை மணிநேரத்தில் எதையும் படிக்க வேண்டாம்
l தேவையான அனைத்தும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த பின் அறைக்குள் நுழைய வேண்டும்
l ஒரு மதிப்பெண்களுக்கான பதில்களை முதலில் எழுதி விட வேண்டும்.
l பிறகு தெரிந்த பதில்களை எழுத வேண்டும். தெரிந்த பதில்கள் எழுதுவதைத் தள்ளிப் போட வேண்டாம்
l கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம். ஆனால் மனதில் பதற்றம் வேண்டாம்
l தேர்வு முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்ன தாகவே எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்
l அமைதியாக மனதைச் செலுத்திப் படியுங்கள், உங்கள் முயற்சிக்குத் தக்க பலன் கிடைக்கும். வாழ்த்துகள்!