Tuesday 19 August 2014

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்: உத்தராகண்ட் பாஜக எம்பி கோரிக்கை

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழி யாக அறிவிக்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப் பினர் தருண் விஜய் கோரியுள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார்.
தற்போது உத்தராகண்ட் மாநிலம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தருண் விஜய் உள்ளார். குடியரசுத் தலை வரை சந்தித்த பிறகு செய்தி யாளர்களிடம் தருண் விஜய் கூறியதாவது: சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு சென்னை உயர் நீதிமன்றமும் ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளது.
சில வட மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியே, அலுவல் மொழியாக உள் ளன. அதேபோல, மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை சென்னை உயர்நீதி மன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று குடி யரசு தலைவரிடம் மனு அளித் துள்ளேன்.
இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள் ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலை வர்களும் வலியுறுத்தி வருவதை குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினேன். விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழியாக அறிவிக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு தருண் விஜய் கூறினார்.
தமிழ் மொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது பற்றி கேட்டபோது, “தமிழ் மொழி எனக்கு மிகவும் விருப்பமானது. அதனால்தான் அதற்கு ஆதரவாக பேசி வருகிறேன்” என்று தருண் விஜய் பதிலளித்தார்.

No comments:

Post a Comment