Thursday 30 May 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 497 மதிப்பெண் பெற்று 3 பேர் முதல் இடம்

பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று3 பேர் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 3012 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி, 26ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது. சுமார் 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சி.பி.எஸ்.., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 27ம் தேதி வெளியிடப்பட்டது. 

மாணவர்கள் தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலமும், பள்ளிகளிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு முடிவுகளை நூலங்களில் உள்ள இணையதளங்கள் மூலம் இலவசமாக அறிந்து கொள்ளவும் நூலகத்துறை ஏற்பாடு செய்திருந்தது. நூலகங்களிலேயே மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சேவை 3 நாட்கள் வரை வழங்கப்படும் என நூலகத்துறை அறிவித்துள்ளது. 

தேர்வுத்துறை அறிவிப்பு : மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். இன்று வெளியாகும் தேர்வு முடிவில் தோல்வி அடையும் மாணவர்கள், ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும், தேர்வு கட்டணத்தை எஸ்.பி.., வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் வரும் 6ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் தேர்வை, தனித்தேர்வாக எழுதி, மீண்டும் தோல்வி அடைந்‌த தேர்வர்கள், விண்ணப்பத்தை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஜூன்10ம் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும். உடனடித் தேர்வுகள் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடக்கும்.

Tuesday 28 May 2013

கல்லூரி மாணவர்கள் தமிழிலும் தேர்வு எழுதலாம் உற்சாகம்! . ஆங்கிலம் தான் கட்டாயம் என்ற உத்தரவு வாபஸ்

தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், வரும் கல்வியாண்டில், ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவை, வாபஸ் பெறும்படி, உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் மாணவர்கள்,தங்களுடைய உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி வழிக் கல்வி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், தங்கள் விருப்பப்படி தேர்வுகளை, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வந்தனர். தமிழில் தேர்வு எழுத அனுமதித்ததன் மூலம், கிராமப்புற மாணவர்கள், அதிகம் பயன்பெற்றனர்.


ஆங்கிலம் கட்டாயம்


இச்சூழலில், வரும் கல்வியாண்டிலிருந்து, மாணவ, மாணவியர், அசைன்மென்ட் மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது. மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், அதிக வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். மாணவ, மாணவியர் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என, தேர்வு முறை ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டதற்கு காரணம் கூறப்பட்டது.இதுதவிர, ஆசிரியர்களும், பாடங்களை, ஆங்கிலத்தில் தான் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு, மாணவ, மாணவியரிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதுவரை தமிழில் தேர்வு எழுதி வந்த மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வு எழுத சிரமப்படும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து, தினமலர் நாளிதழில்,26ம் தேதி, விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற அரசு உத்தரவிற்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


ஆலோசனை


அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகத்தில், உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித் துறை செயலர் ஆகியோரை அழைத்து பேசினார். அதன்பின், மாணவர்கள் விரும்பும் மொழியில், தேர்வு எழுத அனுமதிக்க முடிவு செய்தார்.


இது குறித்து முதல்வர் விடுத்துள்ள அறிக்கை:


தமிழகத்தில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவ, மாணவியர், தங்களுக்கான உள் தேர்வுகளை, ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டதாக, பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலர், உயர் கல்வித்துறை செயலர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன்.


விவாதத்தின் போது, ஆங்கில மொழித்திறனை வளர்த்துக் கொள்ள, தங்களது உள் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழ்நாடு மாநில, உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.



இந்த உத்தரவு, என் கவனத்திற்கு கொண்டு வரப்படாமல், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது.ங்கில மொழி வழி அல்லது தமிழ் மொழி வழியில் படித்தாலும், மாணவ, மாணவியர், தமிழில் உள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் என் எண்ணம். எனவே, ஆங்கில மொழி வழியில் படிக்கும் மாணவ, மாணவியரும், தங்களுடைய உள் தேர்வுகளை, தமிழ் மொழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என, அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இதன் அடிப்படையில், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால், வெளியிடப்பட்டுள்ள உத்தரவை, திரும்பப் பெற ஆணையிட்டுள்ளேன். அனைத்து மாணவ, மாணவியரும், தங்களுடைய, உள் தேர்வுகளை, அவரவர் விருப்பப்படி, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுதலாம்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.

Manmohan presents Padma Shri to Japanese Tamil scholar

In a rare gesture, Prime Minister Manmohan Singh on Tuesday presented Padma Shri to eminent Japanese Tamil language scholar Noboru Karashima for his outstanding contribution in the field of literature and education.
The 80-year-old Mr. Karashima could not be present for the Padma awards ceremony in New Delhi on April 5, 2013 due to health reasons. The awards were given by President Pranab Mukherjee at Rashtrapati Bhavan.
Mr. Karashima, presently Professor Emeritus at the University of Tokyo, had spent several years in India as a research scholar on South Indian history and epigraphy at the University of Madras.
Besides amazing people with the ease with which he speaks Tamil, Mr. Karashima is also an acknowledged authority on medieval South Indian inscriptions.
The citation read that Mr. Karashima joined the University of Tokyo faculty in 1964 and occupied the prestigious Chair of South Asian History at the university in 1974, which he held for 20 years.
The scholar received a standing ovation as he received the award from the Prime Minister.


Monday 27 May 2013

பிரான்ஸ் நாட்டில் ஆங்கிலத்துக்கு எதிர்ப்பு


பிரான்ஸ் நாட்டின் பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதிக்க, அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரெஞ்ச் மொழி, 1635ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மொழியிலிருந்து தான், ஆங்கிலத்தில் பல மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஆங்கிலம் அளவுக்கு, பிரெஞ்ச் மொழி சர்வதேச அளவில் வளரவில்லை. கடந்த மார்ச் மாதம், பிரான்ஸ் உயர்கல்வி அமைச்சர், ஜெனிவிவி பியாரசோ கூறியதாவது: நம்நாட்டில், 3,000 இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். லண்டனை ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. எனவே, நம்முடைய பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதித்தால், வெளிநாட்டு மாணவர்களை அதிகம் கவர முடியும். எனவே, பல்கலைகளில் ஆங்கிலத்தில் கல்வி போதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.

பெண் அமைச்சரின் இந்த கருத்துக்கு, அந்நாட்டு பார்லியில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "அரசின் இந்த அறிவிப்பு, பிரான்ஸ் மொழி அழிவதற்கு வழி வகுக்கும். அதுமட்டுமல்லாது, ஆங்கிலம் வளருவதற்கு தான் இந்த நடவடிக்கை உதவும்' என்றனர்.

பிரான்ஸ் நாட்டின், 800 கல்வி நிலையங்களில் ஏற்கனவே, ஆங்கிலத்தில் போதிக்கப்படுவதாக பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

கல்லூரிகளில் இனி தமிழுக்கு வேலையில்லை


ஆங்கிலம் தான்!

கல்லூரிகளில் இனி தமிழுக்கு வேலையில்லை. கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆங்கிலம் தான் இனி பிரதானமாகப்போகிறது. "மாணவ, மாணவியர், ஆங்கில மொழி தொடர்பு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும், இதனால், அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும்' என, நூதனமாக ஒரு காரணத்தைக் கூறி, வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ் மொழிக்கு எதிரான, அரசின் இந்த நடவடிக்கைக்கு, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் முதல், கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, தமிழில் எழுதக் கூடாது; ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். அரசின் உத்தரவை அடுத்து, இது குறித்த அறிவிப்புகள், கல்லூரி களில் வெளியிடப்பட்டு உள்ளன.

மாணவ, மாணவியரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்தாலும், இது, மாணவர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி ஆசிரியர்சங்க நிர்வாகிகளும், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில், 80சதவீதம் பேர், அவர்களது, "அசைன்மென்ட்'களையும், பல்கலை தேர்வுகளையும், தமிழ் வழியில் தான் எழுதுகின்றனர். இப்போது, திடீரென, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது' என்றார்.

இது குறித்து, மாநில உயர் கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன் கூறியதாவது:அனைத்து பல்கலை
துணைவேந்தர்களிடமும் விவாதித்து, அவர்களின் ஆலோசனைகளை பெற்றுத் தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்பு பெறவும், இது உதவும்.

ஆசிரியர்களும், ஆங்கிலத்தில், வகுப்புகளை நடத்த வேண்டும் என, உத்தரவிட்டுள்ளோம். இது, மாணவர்களின், ஆங்கில தொடர்பு திறனை வளர்ப்பதற்கு, உதவியாக இருக்கும். மாணவர்கள், இப்போதும், தேர்வை எழுதுவதற்கு, தமிழ் வழியைத் தான் தேர்வு செய்கின்றனர். வணிக ஆங்கிலம் என்ற புதிய பாடத்தை அறிமுகப்படுத்தவும், மாநில உயர் கல்வி மன்றம் முடிவுசெய்துள்ளது. ஆங்கில மொழி அறிவை வளர்த்தல், இலக்கண அறிவை மேம்படுத்துதல் மூலம், மாணவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதக்கூடிய ஆற்றலை பெறுவர்.இவ்வாறு, சிந்தியா பாண்டியன் கூறினார்.

சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் கூறியதாவது:பல ஆண்டுகளாக, மாணவர்கள், தேர்வை, தமிழ் வழியில் எழுதி வருகின்றனர். இதை, பல்கலையும் அனுமதித்துள்ளது. இப்போது, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். பெரிதுபடுத்துவதற்கு இதில் ஒன்றும் இல்லை.நமது மாணவர்கள், தமிழ் அல்லாத பிற மொழியை படிப்பதில்லை. இதனால், அவர்கள், வேலை வாய்ப்பு என்று வரும் போது, தமிழகம் என்ற எல்லைக்குள், அவர்களது நடவடிக்கை முடங்கி விடுகிறது. இதுவே, ஆங்கில அறிவு இருந்தால், தமிழகம் தாண்டி, பிற மாநிலங்களிலும், நமது மாணவர்களால், வேலை வாய்ப்புகளை பெற முடியும்.இவ்வாறு, தியாகராஜன் கூறினார்.

சென்னை, நந்தனம் அரசு கல்லூரி முதல்வர் பிரபு கூறுகையில், "தமிழ் வழியில் படிக்கும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு, தமிழகத்திற்குள், 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் தான் கிடைக்கின்றன. ஆனால், ஆண்டுக்கு, 7 லட்சம் மாணவர்கள், படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனில், ஆங்கில அறிவு அவசியமாக உள்ளது,'' என்றார்.

அரசு தரப்பிலும், கல்வியாளர்கள் தரப்பிலும், புதிய முடிவுவரவேற்கப்பட்டாலும், கல்லூரி ஆசிரியர்கள் தரப்பிலும், ஆசிரியர்சங்க நிர்வாகிகள் தரப்பிலும், எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அரசின் முடிவால், தோல்வி அடையும் மாணவர் கள் எண்ணிக்கை உயர்வதுடன், படிப்பை பாதியில் விடும் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும் என, ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன.

சமூக, பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் முடிவு, மாணவர்கள் மத்தியில், வேறுபாட்டை ஏற்படுத்தும்,'' என, அகில இந்திய பல்கலை, ஆசிரியர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னை, மாநில கல்லூரி மாணவர்சரவணகுமார் கூறுகையில், "ஒவ்வொரு செமஸ்டரிலும், ஐந்து தேர்வுகளை, தமிழ் வழியில் தான் எழுதுகிறேன். ஆங்கில தேர்வை எழுதுவதற்காக மட்டும், ஓரளவு தயாராக வேண்டியுள்ளது. பள்ளியில், நான் ஆங்கிலம் படிக்கவில்லை. இப்போது, திடீரென, எல்லாமே ஆங்கிலம் தான் என்று கூறுவது, மிகவும் கடினமாக உள்ளது,'' என்றார்.

ஐ.ஏ.எஸ்., பதவிக்கான தேர்வில் ஆப்சென்ட் 40 சதவீதம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான, சிவில் சர்வீஸ் முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது. இத்தேர்வை, தமிழகத்தில் இருந்து, 30 ஆயிரம் பேர் எழுதினர். விண்ணப்பித்தவர்களில், 40 சதவீதம்பேர், ஆப்சென்ட் ஆயினர்.

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, அரசுஉயர் பணியிடங்களுக்கு, சிறந்த பணியாளர்களைதேர்வு செய்வதற்கான, சிவில் சர்வீஸ் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என, மூன்று கட்டங்களாக, இத்தேர்வுகள் நடக்கின்றன. நேர்முகத் தேர்வுக்குப் பின், தகுதி வாய்ந்தோர், படி நிலை அடிப்படையில், பல்வேறு பணியிடங்களுக்கு, தேர்வு செய்யப்படுகின்றனர்.

1,000 பணியிடங்கள் :இந்தாண்டில், மத்திய அரசுப் பணிகளில் காலியாக உள்ள, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 1,000 பணியிடங் களுக்கான, முதல் நிலைதேர்வு, நேற்று நடந்தது. இதில், இந்திய வனப் பணியில் (ஐ.எப்.எஸ்.,) காலியாக உள்ள, 80 இடங்களுக்கும், முதல் முறையாக தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்விற்காக, தமிழகத்தில், 30 ஆயிரம்பேர் உட்பட, நாடு முழுவதும், 7 லட்சம்பேர் விண்ணப்பித்திருந்தனர்.

96 மையங்கள் :இவர்களுக்கான, முதல் நிலைதேர்வு,நேற்று இந்தியா முழுவதும் நடந்தது. தமிழகத்தில், 96 மையங்களில் நடந்த தேர்வுகளில், சென்னையில், 21 ஆயிரம் பேர், மதுரையில், 9,000 பேர் என, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரியில், எட்டு மையங்களில், 2,900 பேர் தேர்வு எழுதினர்.ஒவ்வொரு ஆண்டும், இத்தேர்விற்காக, தமிழகத்தில் இருந்து, 20 ஆயிரத்திலிருந்து, 25 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்தாண்டு, 30 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடந்த, முதல் நிலை தேர்வில், இந்திய அரசியல் சாசனம், கணிதம், பொருளாதாரம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களிலிருந்து, பொது அறிவு, திறனாய்வு ஆகிய இரு பிரிவுகளின் கீழ், தலா, 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப் பட்டன.

2,200பேர்தேர்வு :தற்போது நடந்துள்ள, முதல் நிலை தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளன. இதில், கலந்து கொண்டுதேர்வு எழுதியவர்களில், 12 ஆயிரம் பேர், முதல் கட்டமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு, டிசம்பர் மாதம், முதன்மைதேர்வு நடத்தப்படுகிறது.

முதன்மைதேர்வு முடிவுகளின் அடிப்படையில், ஒரு பதவிக்கு, இருவர் அதாவது, 1:2 என்ற விகிதத்தில், 2,00 0பேரும், கூடுதலாக, 200 பேரும் என, 2,200 பேர் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர்.நேர்காணல் முடிந்த பின், அவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், பணிகளுக்குதேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர்.

40 சதவீதம் ஆப்சென்ட்:இதற்கிடையில், இந்தியா முழுவதும் விண்ணப்பித்த, 7 லட்சம்பேரில், 2.5 லட்சம்பேரும், தமிழகத்தில்,தேர்வெழுதிய, 30 ஆயிரம்பேரில், 40 சதவீதம்பேரும் அதாவது, 12 ஆயிரம்பேரும், ஆப்சென்ட் ஆகியுள்ள தகவல் கிடைத்துள்ளது. மாநில அரசு” நடத்தும்தேர்வுகளை விட, மத்திய அரசின்தேர்வுகள் மிகவும் கடினமாக இருப்பதால் தான், இதுபோன்ற, ஆப்சென்ட் பிரச்னை எழுந்து உள்ளது.

இதுகுறித்து, பயிற்சி மையமேலாளர் ஒருவர் கூறியதாவது:மாநில அரசு” நடத்தும் தேர்வுகளில், நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது; ஆனால், சிவில் சர்வீஸ்தேர்வில், நெகட்டிவ் மதிப்பெண் உள்ளது. தமிழ்நாடு அரசு” தேர்வாணையம் நடத்தும், தேர்வுகளுக்காக தயாராகுபவர்கள், பாடங்களை மனப்பாடம் செய்து, அதைக்கொண்டு எழுதி விடலாம். ஆனால், மத்திய அரசு தேர்வுகளில், கேட்கப்படும்கேள்விகளுக்கு, எளிதில் பதிலளிக்க முடியாது.

யு.பி.எஸ்.சி.,யின் பாடத்திட்டங்களும், மிகவும் கடினமானதாக இருக்கிறது. விருப்ப பாடத்தை கண்டிப்பாக எடுத்து படித்து,தேர்வெழுதவேண்டும் என்று, கட்டாயம் இருப்பதால், பலரும் தவிர்க்கின்றனர். பெரும்பாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு,தேர்வு விதிமுறைகள், உள்ளிட்டவை தெரியவில்லை. இதனால்,தேர்வு எழுதுவதை தவிர்க்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில்,தேர்வு எழுதிய சென்னையைச் சேர்ந்த சரண்யா கூறும்போது, பொது அறிவு, திறனாய்வு ஆகிய இரண்டு தேர்வுகளுமே எளிமையாகவும் இல்லை; அதே சமயத்தில் கடினமாகவும் இல்லை. இந்த தேர்வுகளை எளிதாகக் கடந்து விட்டேன். முதன்மை தேர்வு, மிகவும் கடினமாக இருக்க வாய்ப்புள்ளது, என்றார்.

Friday 24 May 2013

கேள்வி பதில்

             கேள்விகள்:

1.   மிகப்பெரிய கடல் பறவை?
2.   உலகின் மிகப்பெரிய கோயில்?
3.   உலகின் மிகப்பெரிய சமுத்திரம்?
4.   உலகின் மிகப்பெரிய குவிமாடம் (Dome)?
5.   உலகின் ஆழமான ஏரி?
6.   உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு?
7.   மிகப்பெரிய பறவை?
8.   உலகின் மிகப்பெரிய உயிரினம்?
9.   உலகில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு?
10. உலகின் மிகப்பெரிய கழிமுகம் (Delta)?
11.   உலகின் உயரமான ஏரி?
22.   உலகின் மிகப்பெரிய வளைகுடா?
13.   உலகின் மிகப்பெரிய மசூதி?
14.   நள்ளிரவில் சூரியன் உதிக்கும் பூமி?
15.   உலகின் மிக நீளமான ரயில்வே?
16.   உலகின் மிக நீளமான சுவர்?
17.   உலகின் மிகச்சிறிய பறவை?
18.   உலகின் மிகச்சிறிய நாடு (பரப்பளவில்)?
19.   மிக உயரமான விலங்கு?
20. உலகின் உயரமான மலைத்தொடர்?
21.   குழந்தைகள் நீதிமன்றம் அமைந்துள்ள முதல் மாநிலம்?
22.   உலகின் மிக உயரமான நீர் ஊற்று?
23.   உலகின் மிக குளிரான இடம்?
24.   உலகின் மிக வெப்பமான இடம்?
25.   உலகின் மிக அதிக மழைபெறும் இடம்?
26.   உலகின் மிக உயரமான ஒற்றைக்கல் சிலை?
27.   இந்தியாவின் மிக உயரமான விமானநிலையம்?
28.   இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி?
29.   இந்தியாவின் மிகப்பெரிய ஆடிட்டோரியம்?
30. இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்?
31.   இந்தியாவின் மிக நீளமான கால்வாய்?
32.   இந்தியாவில் உள்ள பெரிய பாலைவனம்?
33.   இந்தியாவின் மான்செஸ்டர்?
34.   ஏழு தீவுகளின் நகரம்?
35.   இந்தியாவின் மிகப்பெரிய குகை?
36.   இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில்?
37.   இந்தியாவின் பழமையான தேவாலயம்?
38.   இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயம்?
39.   இந்தியாவின் மிகப்பெரிய குருத்துவாரா?
40. இந்தியாவின் மிக உயரமான அணை?
41.   இந்தியாவின் மிக நீளமான அணை?
42.   இந்தியாவின் மிக உயரமான நீர்மின் திட்டம்?
43.   இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரி?
44.   இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி?
45.   அதிகாலை அமைதி நாடு?
46.   இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்?
47.   தங்கக் கம்பளி பூமி?
48.   இந்தியாவின் பழமையான புத்த மடாலயம்?
49.   இந்தியாவின் முதலாவது வனவிலங்கு சரணாலயம்?
50. தமிழகத்தில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?

விடைகள்:

1.   அல்பட்ரோஸ்
2.   அங்கோர் வாட் கோயில் (கம்போடியா)
3.   பசிபிக் பெருங்கடல்
4.   கோல்கும்பாஸ் (இந்தியா)
5.   பாய்க்கால் ஏரி (ரஷ்யா)
6.   சீனா
7.   நெருப்புக் கோழி
8.   நீல திமிங்கலம்
9.   இந்தியா
10. சுந்தரவனம் (இந்தியா)
11.   டிடிகாகா (பெரு-பொலிவியா)
12.   மெக்சிகோ வளைகுடா
13.   ஜாமா மசூதி (டில்லி)
14.   நார்வே
15.   டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே
16.   சீரப் பெருஞ்சுவர் (சீனா)
17.   ஹம்மிங் பறவை
18.   வாடிகன் நகரம்
19.   ஒட்டகச்சிவிங்கி
20. இமயமலைத்தொடர்
21.   டில்லி (2011)
22.   பவுண்டெய்ன் ஹில்ஸ் (அரிசோனா)
23.   பாலியஸ் நெடோஸ்டுபுனோஸ்டி (அண்டார்டிகா)
24.   தலால் (எதியோப்பியா)
25.   மாசின்ரம் (மேகாலயா-இந்தியா)
26.   கோமட்டீஸ்வர் சிலை (சிரவணபெலகோலா)
27.   லே விமான நிலையம் (லடாக்)
28.   ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
29.   ஸ்ரீ சண்முகாநந்தா ஹால், மும்பை
30. பாம்பன் பாலம் (தமிழ்நாடு)
31.   இந்திராகாந்தி கால்வாய் (ராஜஸ்தான்)
32.   தார் பாலைவனம் (ராஜஸ்தான்)
33.   மும்பை
34.   மும்பை
35.   அமர்நாத் (ஜம்மு காஷ்மீர்)
36.   எல்லோரா (மகாராஷ்டிரா)
37.   புனித தோமையார் தேவாலயம் (கேரளா)
38.   புனித கதீட்ரல் தேவாலயம் (பழைய கோவா)
39.   பொற்கோயில் (அமிர்தசரஸ்)
40. பக்ரா அணை (பஞ்சாப்)
41.   ஹிராகுட் அணை (ஒடிசா)
42.   ரோங்டோங் நீர்மின் திட்டம் (இமாச்சல பிரதேசம்)
43.   உலார் ஏரி (காஷ்மீர்)
44.   கொல்லேறு (ஆந்திரப் பிரதேசம்)
45.   கொரியா
46.   அண்ணா நூற்றாண்டு நூலகம் (சென்னை)
47.   ஆஸ்திரேலியா
48.   தவாங் மடாலயம் (அருணாச்சலப் பிரதேசம்)
49.   முதுமலை
50. கிருஷ்ணகிரி மாவட்டம்