Thursday 31 October 2013

Padma Vibhushan & Padma Bhushan—2013


Padma Vibhushan

Raghunath Mohapatra, Art, Orissa
S Haider Raza, Art, Delhi
Prof Yash Pal, Science and Engineering, Uttar Pradesh
Prof Roddam Narasimha, Science and Engineering, Karnataka

Padma Bhushan

Dr Ramanaidu Daggubati, Art, Andhra Pradesh
Sreeramamurthy Janaki, Art, Tamil Nadu
Dr (Smt) Kanak Rele, Art, Maharashtra
Sharmila Tagore, Art, Delhi
Dr (Smt) Saroja Vaidyanathan, Art, Delhi
Abdul Rashid Khan, Art, West Bengal
Late Rajesh Khanna, Art, Maharashtra
Late Jaspal Singh Bhatti, Art, Punjab 
Shivajirao Girdhar Patil, Public Affairs, Maharashtra
Dr Apathukatha Sivathanu Pillai, Science, Engineering Delhi
Dr Vijay Kumar Saraswat, Science and Engineering, Delhi
Dr Ashoke Sen Science and Engineering Uttar Pradesh
B N Suresh, Science and Engineering, Karnataka
Prof Satya N Atluri, Science and Engineering, USA
Prof Jogesh Chandra Pati, Science and Engineering, USA 
Ramamurthy Thyagarajan, Trade and Industry, Tamil Nadu
Adi Burjor Godrej, Trade and Industry, Maharashtra
Dr Nandkishore Shamrao Laud, Medicine, Maharashtra
Mangesh Padgaonkar, Literature and Education, Maharashtra
Prof Gayatri Chakravorty Spivak, Literature & Education USA
Hemendra Singh Panwar, Civil Service, Madhya Pradesh
Maharaj Kishan Bhan, Civil Service, Delhi 
Rahul Dravid, Sports, Karnataka
H Mangte Chungneijang Mary Kom, Sports, Manipur Manipur

Indian Railway


Indian Railway— Important Production units

Golden Rock Locomotive Workshops (1928) — Trichy— Diesel-electric Locomotives
Chittaranjan Locomotive Works(1947) — Chittaranjan, Asansol— Electric Locomotives
Diesel Locomotive Works (1961) — Varanasi— Diesel Locomotives
Diesel-Loco Modernisation Works(1981) — Patiala — Diesel-electric Locomotives
Integral Coach Factory(1952) — Chennai— Passenger coaches
Rail Coach Factory(1986) — Kapurthala— Passenger coaches
Rail Spring Karkhana(1988) — Gwalior— Passenger coach springs
Rail Wheel Factory(1984) — Bangalore— Railway wheels and axles
Rail Wheel Factory(2012) — Chhapra— Railway wheels 
Rail Coach Factory, Raebareli(2012) Raebareli— Passenger coaches

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்


இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா

1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது

அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

மிக உயர்ந்த கெளரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது

மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது

மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

Sardar Patel "Iron Man of India"

Sardar Vallabhbhai Jhaverbhai Patel (31 October 1875 – 15 December 1950) was an Indian statesman, one of the leaders of the Indian National Congress and one of the founding fathers of the Republic of India. He is known to be a social leader of India who played an unparalleled role in the country's struggle for independence and guided its integration into a united, independent nation. In India & elsewhere, he was often addressed as Sardar, which means Chief in Hindi, Urdu, and Persian. As the first Home Minister and Deputy Prime Minister of India, Patel organised relief for refugees in Punjab and Delhi, and led efforts to restore peace across the nation. Patel took charge of the task to forge a united India from the British colonial provinces allocated to India and more than five hundred self-governing princely states, released from British suzerainty by the Indian Independence Act 1947. Using frank diplomacy, backed with the option and use of military force, Patel's leadership persuaded almost every princely state. Often known as the "Iron Man of India" or "Bismarck of India", he is also remembered as the "Patron Saint" of India's civil servants for establishing modern all-India services.

Questions Answers


1. Who has recently won the first Queen Elizabeth Prize for Engineering?
ANSWER :- Tim Berners Lee

2. Which neighbouring country of India is constructed a temple for goddes Sitha?
ANSWER :- Sri Lanka 

3. Shanthi Prayas-II is the joint military exercise recently held between which countries?
ANSWER :- Nepal and United States 

4. Who has been named to lead the Indian women cricket team for limited-overs series against Bangladesh?
ANSWER :- Harmanpreet Kaur 

5. Who was recently in news as the first non-American Editor of "Time International"?
ANSWER :- Bobby Ghosh 

6. Which term is used for Convention on International Trade in Endagered Species (CITES)?
ANSWER :- Washington Convention 

7. Who was awarded the 2012-2013 Chameli Devi Jain Award for outstanding Women Mediaperson?
ANSWER :- Alka Dhupkar 

8. The famous quot "Finance is the brain of economy" was given by which Economist?
ANSWER :- Joseph Stiglitz 

9. The top secret 'Operation Lal Dora' which is recently in news is related to which incident ?
ANSWER :- Landing of Indian Troops in Mauritius 

10. Who has been choosen for the prestigious Saraswathi Samman 2012 ?
ANSWER :- Sugathakumari 

11. Which company has launched it's all-electrical Four seated passenger car,the e2o on India?
ANSWER :- Mahindra and Mahindra 

12. In which country, the world's biggest dinosaur park is slated to come up?
ANSWER :- Australia 

13. Who is the first director of research for Brookings India?
ANSWER :- Subir Gokarn 

14. Which is the second male cloned buffalo calf in the world?
ANSWER :- Swaran 

15. Who heads the ministerial panel formed recently to discuss impact of retail FDI and minimum support prices?
ANSWER :- Sharad Pawar 

16. AS per first ever survey of slum housholds by the Census of India, which city has the most number of households in slums?
ANSWER :- Vishakhapatnam 

17. The rebel alliance Seleka has been making news frequently in context with which African Country?
ANSWER :- Central African Republic 

18. Who heads the Expert Committee for the purpose of reviewing the institutional frame work of Prasar Bharathi?
ANSWER :- Sam Pitroda 

19. Who has became the head of an interim government in Nepal and tasked with steering the country towards election by June?
ANSWER :- Khilraj Regmi 

20. Which is the first ever massive exercise conducted by the Indian Air Force to test battle efficiency in a wartime scenario?
ANSWER :- Operation Livewire 

21. The Chashma Nuclear Power Complex, which is often in news is located in which country?
ANSWER :- Iran 

22. Which Indian is the youngest cardinal Indian to take part in the conclave to elect a successor to Pope Benedict XVI?
ANSWER :- Cleemis Thottunkal 

23. Dholera, which the government is planning to develop as a new smart industial city is located in which state?
ANSWER :- Gujarath 

24. Who has been chosen for this year's prestigious Abel Prize in Mathematics?
ANSWER :- Pierre Deligne 

25. Who is considered as the father of African literature has died recently?
ANSWER :- Chinua Achebe 

26. The United States has officially transferred the control of controversial Bagram prison to the local government of which country?
ANSWER :- Afganisthan 

27. 'A bank for the Buck' is a book written by one of India's top financial journalists Tamal Bandyopadhyay. The book is a story of which bank?
ANSWER :- HDFC Bank 

28. The space scientist and Planning Commission member who headed the panel which submitted its report asking for ban on mining in 37% of Western Ghats?
ANSWER :- K.Kasturirangan 

29. The Telgu writer who was selected for the Jnanpith Award for the year 2012?
ANSWER :- Ravuri Bharadwaja 

30.The Serious Fraud Investigation Office (SFIO) works under which ministry?
ANSWER :- Ministry of Coporate Affairs 

31. The Leveson Report reviewed the general culture and ethics of the media in which country?
ANSWER :- Britain 

32. The commercial production of oil and gas has started in the Aishwarya Oil Field. These fields are located in which state?
ANSWER :- Rajasthan 

33. Who has won the Femina Miss India 2013 contest?
ANSWER :- Navneet Kaur Dhillon 

34. Who has won Asia's top literary prize, Man Asian Literary Prize for his novel 'The Garden of Evening Mists', for the year 2013?
ANSWER :- Tan Twan Eng 

35. Which European country claims sovereignty over the Falkland island?
ANSWER :- Britain 

36. 'The Test of My Life' is the autobiography of which cricket player?
ANSWER :- Yuvaraj Singh 

37. Asia's largest solar power project has been recently commissioned in which state?
ANSWER :- Rajasthan 

38. The lowest dropout rate of school students in the country is in which state?
ANSWER :- Kerala (0.53%) 

39. The Socialist and successor of the late leader Hugo Chavez who has won the Venezuela's President poll?
ANSWER :- Nicolas Maduro 

40. Violin Maestro son of Lalgudi Gopala Iyer and exponent of Lalgudi bahani style who died recently at the age of 80?
ANSWER :- Lalgudi Jayaraman (April 22)

Computer Awareness


1. Which of the following layer is not present in TCP/ IP model?
comptr-awrns-DH

(1) Application layer (2) Session layer
(3) Transport layer (4) Internet layer
(5) None of these

2. A ________ is a “plug in” to the browser that allows you to view interactive web pages that contains games, movies , ads etc.

(1) Quick time (2) wizard
(3) shockwave (4) Terminal
(5) None of these

3. Which of the following was the 1st search engine?

(1) Lycos (2) Yahoo
(3) Google (4) Bing
(5) Ask

4. Ctrl + F10 is shortcut key for?

(1) Maximize currently selected window
(2) Minimize currently selected window
(3) Move between two or more excel files
(4) Move between two or more excel sheets
(5) None of these

5. 192 . 112. 252. 121 belongs to which class?

(1) Class A (2) Class B
(3) Class C (4) Class D
(5) Class E

6. Which of the following is not an SQL language?

(1) DDL (2) DCL
(3) TQL (4) DML
(5) None of these

7. Binary value of 45 is ________ .

(1) 11001 (2) 101101
(3) 100101 (4) 101100
(5) None of these

8. Which of the following was developed in 2nd Generation of computer?

(1) I.C (2) Vacuum Tube
(3) Microprocessor (4) Transistor
(5) None of these

9. A work sheet is an excel 2003 file contains ________ columns and _______ rows.

(1) 256, 64336 (2) 256 , 65536
(3) 254, 65536 (4) 254, 64336
(5) None of these

10. Which of the following is not a language processor?

(1) Compiler (2) interpreter
(3) processor (4) assembler
(5) None of these

Answers:
1--- 2
2--- 3
3---- 1
4---- 1
5---- 3
6---- 3
7---- 2
8---- 4
9---- 2
10--- 3

Current Affairs (Sports)


US Open Tennis Tournament 2013 Winners

Women’s Singles :- On 8 September Serena Williams (U.S) won the US Open Tennis Tournament 2013 Women’s singles title after defeated Victoria Azarenka of Belarus in the final at Arthur Ashe Stadium in New York.With this win Serena Williams secured her fifth US Open title and 17th Grand Slam title of the overall career.

Men’s Singles :- Rafael Nadal (Spain) won the 2013 men’s singles U.S. Open title after defeated Novak Djokovic (Serbia) in the final.It is Nadal’s second US Open title, and his 13th Grand Slam.
Women’s Doubles :- Czech duo Andrea Hlavackova and Lucie Hradecka won the U.S. Open women’s doubles title after defeated Australia’s Ashleigh Barty and Casey Dellacqua in the final.

Men’s Doubles :- The pair of Leander Paes of India and Radek Stepanek of the Czech Republic won the doubles title after defeated Alexander Peya of Austria, and Bruno Soares of Brazil in the final .Leander Paes has earlier won the US open title two times .Now Paes has 14 major titles in his cupboard, including six mixed doubles trophies.......

Tokyo To Host 2020 Summer Olympics.......

Wrestling Selected for 2020 Olympic Games......

Afghanistan Won SAFF Championship 2013......

Sania Mirza Wins Pan Pacific Open Doubles Title....

Sania Mirza of India and Cara Black of Zimbabwe won the Toray Pan Pacific Open tennis championship women’s doubles title after defeated Hao-Ching Chan (Chinese Taipei) and Liezel Huber (USA) in the final at Tokyo on 28 September .This was Sania’s fourth title of the season......

India Won Sultan of Johor Cup Hockey Tournament 2013.....

India defeated Malaysia 3-0 to win 3rd Under-21 Sultan of Johor Cup hockey tournament in Johor Bahru on 29 September .The goals from the Indian side were scored by Amon Mirash Tirkey (22nd), Affan Yousuf (52nd) and Manpreet Singh (64th).....

Wednesday 30 October 2013

Indian ballistic missiles


Prithvi I - Army Version (150 km range with a payload of 1,000 kg)

Prithvi II - Air Force Version (250 km range with a payload of 500 kg)

Prithvi III - Naval Version (350 km range with a payload of 1000 kg)

Agni-I— 700 km (SRBM=short-range ballistic missile)

Agni-II—2,500 km (MRBM=medium-range ballistic missile)

Agni-III —5,000 km (IRBM=intermediate-range ballistic missile)

Agni-IV —4,000 km (IRBM=intermediate-range ballistic missile)

Agni-V —5,500 km (ICBM=Intercontinental Ballistic Missile)

Agni-VI —10,000 km (ICBM=Intercontinental Ballistic Missile) Under development

Top 10 Current Affairs


1. Along expected lines, the Reserve Bank of India Governor hiked the repo rate by 25 basis points in the October monetary policy review today. The repo rate is now at 7.75 per cent. Current Rates:
1. Repo Rate – 7.75%
2. Reverse Repo Rate – 6.75%
3. CRR – 4%
4.SLR – 23%
5. Bank Rate – 8.75%
6. MSF – 8.75%

2. Rajendra Yadav, the noted Hindi writer passed away on 28 October 2013 at Mayur Vihar, Delhi because of prolonged illness. He was 84 years old.

3. India is prepared to announce the name of Suresh Reddy as the first Indian ambassador to Asean.

4. Tennis player-producerAshok Amritraj, who has produced 109 Hollywood films, was presented with the 'Soul of India Award' for his outstanding achievements in the film industry.

5. The Government of India on 29 October 2013 decided to appoint Air Marshal Arup Raha as the next Chief of the Air Staff.

6. The Centre has constituted a high-level committee headed by former CRPF Chief, K Vijay Kumar, to look at the division of assets and the administrative framework which would be required when Telangana is created upon bifurcation of Andhra Pradesh.

7. With a networth of $21 billion, Mukesh Ambani has retained his title as India’s wealthiest for the sixth year in a row. NRI steel tycoon Lakshmi Mittal ($16 billion) also continues to hold the second position, while Sun Pharma’s Dilip Shanghvi has jumped to third place.

8. The country’s richest woman, Savitri Jindal, was Tuesday inducted as a minister in the Haryana cabinet by Chief Minister Bhupinder Singh Hooda.

9. Priyanka Chopra, the Bollywood actress became the global brand ambassador of American fashion brand Guess in the last week of October 2013.

10. P.S. Raghvan was appointed as the next Ambassador of India to Russia on 28 October 2013.

Dr. Homi Jehangir Bhabha


Dr. Homi Jehangir Bhabha "father of Indian nuclear programme"

Homi Jehangir Bhabha, FRS ( 30 October 1909 – 24 January 1966) was an Indian nuclear physicist, founding director, and professor of physics at the Tata Institute of Fundamental Research.Colloquially known as "father of Indian nuclear programme",Bhabha was the founding director of two well-known research institutions, namely the Tata Institute of Fundamental Research (TIFR) and the Trombay Atomic Energy Establishment (now named after him); both sites were the cornerstone of Indian development of nuclear weapons which Bhabha also supervised as its director.

BANKING AND FINANCIAL ABBREVIATIONS



*.ADB :Asian Development Bank
*.ADTV: Average Daily Trading Volumes
*.ACR : Actual Cost Report
*.AOC : Annual Operating Cost
*.BIFR : Board for Industrial and Financial Reconstruction
*.BOT : Balance of Trade
*.BOP : Balance of Payments
*.BSE : Bombay Stock Exchange
*.CAC : Capital Account Convertibility
*.CACP : Commission for Agricultural Cost Prices(Fixes MSP)
*.CCEA : Cabinet Committee on Economic Affairs
*.OPCD : Organization Economic Co-Operative Development
*.CPI : Consumer Price Index
*.CRISIL : Credit Rating Information Services Of India Ltd
*.CRM : Customer Relationship Management
*.EA : Economic Analysis
*.EBT : Earnings before Tax
*.ECI : Employment Cost Index
*.ELSS : Equity linked savings scheme
*.EPS : Earning Per Square
*.ESOP : Employee Stock Option Plans
*.EPZ : Export Processing Zone
*.IIP : Index of Industrial Production
*.FSDC : Financial Stability Development Counsil
*.FATF : Financial Action Test Force
*.FSB : Financed Stability Board
*.FDI : Foreign Direct Investments
*.FII : Foreign Institutional Investers
*.FEMA : Foreign Exchange Management Act
*.FIPB : Foreign Investment Promotion Board
*.FPI : Fixed Price Incentive
*.FPO : Follow on Public Offer
*.FTA : Free Trade Agreement
*.FCCB : Foreign Currency Convertable Bonds
*.FRBM Act : Fiscal Responsibility And Budget Management Act
*.GDP : Gross Domestic Product
*.GDR : Global Depository Receipt
*.GNP : Gross National Product
*.GST : Goods and Service Tax
*.IBRD : International Bank for Reconstruction and Development
*.ICRA : Indian Credit Rating Agency
*.IPO : Initial Public Offer
*.IPR : Intellectual Property Rights
*.IRDA : Insurance Regulatory Development Authority
*.JSC : Joint Stock Company
*.LLP : Limited Liability Partnership
*.HDI : Human Development Index
*.MAT : Minimum Alternative Tax
*.MFI : Micro Finance Institution
*.MFN : Most favoured Nation
*.MNC : Multinational Company
*.MSP : Minimum Support Price
*.MOU : Memorandum Of Understanding
*.NAV : Net Asset Value
*.NCD : Non Convertable Debuntures
*.NGO : Non-Government Organisation
*.NRC : Non Recurring Cost
*.NRI : Non-Resident Indian
*.NSE : National Stock Exchange
*.NSSO : National Sample Survey Organisation
*.PPP : Purchasing Power Parity & Public Priveate Partnership
*.PSU : Public Sector Undertakings
*.QIB : Qualified Institutional Borrower
*.SEBI : Securities and Exchange Board of India
*.RIDF : Rural Infrastructural Development Fund
*.ROCE : Return On Capitol Employed
*.SARFAESI : Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest
*.SDR : Special Drawing Right
*.SDR :Special Drawing Right
*.SEBI :Securities and Exchange Board of India
*.SFC :State Financial corporation
*.VAT : Value Added Tax
*.WPI : Wholesale Price Index
*.PPI : Producer Price Index
*.SEZ : Special Economic Zone
*.SHG : Self-Help Group
*.SME : Small and Medium Enterprises
*.SDDS :Special Data Dissemination Standards

INDIAN POLITICS - QUESTION & ANSWERS


1. The members of the State Public Service Commission are appointed by the :
# Governor

2. In India, who is the Chairman of the National Water Resources Council :
# Prime Minister 

3. The oath of office is conducted to the president by :
# the chief justice of India 

4. A person wants to contest election for the membership of Gram Panchayat, what should be his age?
# 21 years of above 

5. Survey of India is under the Ministry of :
# Science & Technology 

6. The General Budget is presented in the parliament normally in the month of :
# February 

7. Who is popularly known as 'Father of Indian Constitution' :
# Dr. B.R. Ambedkar 

8. The preamble declares India as a sovereign state which implies:
# India is free to conduct internal as well as external affairs 

9. The members of the Rajya Sabha are elected by :
# elected members of the legislative assembly 

10. The president can be removed from his office before the expiry of his normal term only on the recommendation of :
# the two Houses of Parliament

டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு


இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. 

ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது. 6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன. தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவசப் பொறியியல் கல்வி, வேலை வாய்ப்பு வழங்கும் ரயில்வே துறை


இலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறும் உதவித் தொகையும் வழங்கி, எல்லாவற்றுக்கும் மேலாக படித்து முடித்தவுடன் வேலையையும் வழங்குகிறது ரயில்வே துறை.

எல்லோருக்கும் கனவு

"ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்து உடனடியாக கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற வேண்டும்" பிளஸ் டூ படிக்கும் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கனவு இதுதான்.

பன்னாட்டு நிறுவனங்கள், இன்போசிஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் கை நிறைய சம்பளத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய பெற்றோர்களின் ஆசையாக இருக்கிறது.

இலவச பொறியியல் படிப்பு

இப்படிப்பட்ட சூழலில், மாதந்தோறும் உதவித் தொகையுடன் பொறியியல் படிப்பை தந்து, படித்து முடித்த கையோடு அரசு வேலையும் கிடைக்கிறது என்றால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது. மத்திய அரசின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறைதான் அந்த கொடை வள்ளல்.

உதவித் தொகையுடன் பொறியியல் படிப்பை முடித்ததும் வேலையும் பெறும் அந்த அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்யும் பொறுப்பு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் (யு.பி.எஸ்.சி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு நடத்தி, தகுதியான 42 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வில் மொத்தம் 3 தாள்கள். ஒவ்வொன்றுக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் 600 மதிப்பெண். முதல் தாளில் பொது விழிப்புணர்வு திறன், ஆங்கிலம், பொது அறிவு, உளவியல் சம்பந்தப்பட்ட கேள்விகளும், 2ஆம் தாளில் இயற்பியல், வேதியியல் தொடர்பான கேள்விகளும், 3வது தாளில் கணிதக் கேள்விகளும் இடம்பெறும். அனைத்தும் கொள்குறி வகை (அப்ஜெக்டிவ்) கேள்விகள்தான்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆளுமைத்திறன் தேர்வு நடத்துவார்கள். இதற்கு 200 மதிப்பெண். தேர்வு செய்யப்படும் நபர்கள் ரயில்வே அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கப்பட்டு, ரயில்வே பணிமனையில் செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி காலம் 4 ஆண்டுகள். முதல் இரண்டு ஆண்டு காலத்தில் உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.9,100-ம், 3ஆம் ஆண்டும், 4ஆம் ஆண்டு முதல் 6 மாதங்களும் ரூ.9,400-ம், எஞ்சிய 6 மாத காலத்தில் மாதந்தோறும் ரூ.9,700-ம் வழங்கப்படும். 4 ஆண்டு படித்து முடித்ததும் தேர்வு நடத்தப்பட்டு ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பி.இ. மெக்கானிக்கல் பட்டம் வழங்கப்படும்.

ரயில்வே வேலை

தேர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ரயில்வே துறையில் மெக்கானிக்கல் என்ஜினியராக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

யார் தேர்வு எழுதலாம்?

இப்பொறியியல் படிப்பில் சேர தகுதியான நபர்களை தேர்வு செய்ய யு.பி.எஸ்.சி. ஸ்பெஷல் கிளாஸ் ரயில்வே அப்ரண்டீஸ் தேர்வை நடத்துகிறது. 2014-ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜனவரி 12-ஆம் தேதி சென்னை, மதுரை உள்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இதற்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.upsc.gov.in) நவம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிளஸ் டூ முடித்தவர்கள், பொறியியல் முதல் ஆண்டு தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது பிளஸ் டூ படிப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்கள்தான். 1.1.2014 அன்றைய தேதியின்படி வயது 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும்.

Tuesday 29 October 2013

பிரசன்டேஷன் - இப்படித்தான் இருக்க வேண்டும்!


ஒரு குறிப்பிட்ட துறை என்றில்லை. அனைத்திற்குமே, பிரசன்டேஷன் மற்றும் கேள்வி-பதில் திறன்கள் ஆகியவை பிரதான அம்சங்களாகிவிட்டன. எனவே, அவைப்பற்றி ஏராளமான ஆலோசனைகளும், கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. ஒருவரின் பணி வெற்றிக்கு, பிரசன்டேஷன் திறனும், கேள்வி-பதில்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை தீர்மானிக்கின்றன என்றால் அதில் மிகையில்லை. அவை தொடர்பான விஷயங்களை இப்போது அலசலாம்.
உங்களின் பார்வையாளர்களை அறியுங்கள்...

நமக்கு பார்வையாளர்களாக(audience) அமைந்தவர்கள் யார்? இந்த கலந்துரையாடலிலிருந்து அவர்கள் எதை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்? நமது பிரசன்டேஷன், அவர்களிடம் என்னமாதிரியான சிந்தனையை உருவாக்க வேண்டுமென விரும்புகிறோம்? போன்ற கேள்விகள் முக்கியமானவை. உங்களின் பார்வையாளர்களைப் பற்றிய முன் மதிப்பீடு மிகவும் பயனுள்ளது. ஏனெனில், அதன்மூலமாக, அவர்கள் எந்தவிதமான கேள்விகளைக் கேட்பார்கள் என்பதைக் கணித்து, அதன்மூலமாக நீங்கள், உங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்து, வகுப்பறையில் ஒரு பிரசன்டேஷன் வழங்க உள்ளீர்கள் எனில், உங்களின் பிரதான பார்வையாளர் பேராசிரியராக இருப்பார். அவர், உங்களின் செயல்பாட்டுத் திறனை இதன்மூலம் மதிப்பிடுவார். 
அதேசமயத்தில், ஒரு செமினார் அல்லது மாநாடாக இருந்தால், நீங்கள் அங்கே, உங்களின் துறை தொடர்பான நிபுணராக இருப்பீர்கள். பார்வையாளர்கள், உங்களிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ள விரும்பலாம்.

கேள்விகளை எதிர்பார்த்தல்

உள்ளடக்கத்தை ஆய்வு செய்கையிலேயே, அந்தப் பாடம் தொடர்பாக நாம் தயாராகி விடுகிறோம். ஆனால், அதேசமயத்தில், பார்வையாளர்கள் என்ன மாதிரியான கேள்விகளை கேட்பார்கள் என்பது பற்றி ஓரளவு யூகித்து, அதன்படி சில ஏற்பாடுகளை நீங்கள் செய்துகொண்டால், அது புத்திசாலித்தனம். ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு தெளிவான புரிதலுக்கு நீங்கள் வர வேண்டுமெனில், அதன்பொருட்டு, தேவையான நேரம் செலவழித்து,பல அம்சங்களை ஆராய்ந்து, உங்களை தயார்படுத்திக்கொள்வது அவசியம்.

நுணுக்கமான கவனிப்பு

உங்களது பிரசன்டேஷன் செயல்பாட்டில் நீங்கள் வெற்றியடைய வேண்டுமெனில், கவனிப்பு திறன் மிகவும் முக்கியம். பார்வையாளர், என்ன கேட்க வருகிறார், அதன் நோக்கம் என்ன போன்ற விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமெனில், உங்களின் கவனிப்பு கூர்மையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு முந்தக்கூடாது. பல இடங்களில், பிரசன்டேஷன் செய்பவர்கள், பார்வையாளரின் கேள்வியை முழுவதுமாக கேட்க விடாமல், அதை அறைகுறையாக புரிந்துகொண்டு, பதில் தருகிறார்கள். இதனால், பார்வையாளர்கள் அதிருப்தியடைகிறார்கள்.

எனவே, பார்வையாளரை, முழுவதுமாக பேச விடுதல் முக்கியம். கேள்வியை முழுவதுமாக முடிக்கும் முன்பாகவே, அதை புரிந்துகொண்டதாக நினைத்து, பதில் சொல்ல ஆரம்பிப்பது, உங்களது பிரசன்டேஷனை முனை மழுங்க செய்துவிடும்.

பகுப்பாய்தல் மற்றும் தெளிவாக வெளிப்படுத்தல்
பொதுவாக, சந்தேகங்களுக்கு பதிலளிக்கையில், சற்று நிதானமாகவே செயல்பட வேண்டும். கேள்வி கேட்பவர் எளிதாக புரிந்துகொள்ளும் வகையிலும், உங்களின் விளக்கும் திறனும், நீங்கள் பயன்படுத்தும் மொழியும் இருக்க வேண்டும். முடிந்தளவு எளிமையான வார்த்தையையும், வார்த்தை கட்டமைப்பையுமே பயன்படுத்த வேண்டும். சிக்கலான வார்த்தைப் பயன்பாடு, குழப்பத்தையே ஏற்படுத்தும்.
மேலும், நீங்கள் ஒரு விஷயத்தை விளக்கும்போது, நடைமுறையிலிருந்து ஒரு சிறப்பான, எளிய உதாரணத்தைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில், ஒரே சந்தேகத்தில், பல கேள்விகள் உள்ளடங்கியிருக்கும். இதைத் தெளிவாக புரிந்துகொண்டு, ஒரே சமயத்தில் அனைத்திற்கும் பதிலளிக்காமல், பகுதி பகுதியாக பிரித்து, ஒருநேரத்தில், ஒரு கேள்விக்கு மட்டுமே பதிலளிக்கவும்.

புரிந்ததா?

ஒரு கேள்விக்கான பதிலைக்கூறி முடித்த பின்பாக, கேள்வி கேட்டவரிடம், உங்கள் கேள்விக்கான எனது பதில் சரிதானா? என்று கேட்டுவிடுதல் நன்று. ஏனெனில், அவர் தனது கேள்வியை சரியாக விளக்காமல் விட்டிருக்கலாம் அல்லது கேள்வியை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம் அல்லது உங்களது பதில் உங்களுக்கு மட்டுமே திருப்தியைக் கொடுத்திருக்கலாம், கேள்வி கேட்டவருக்கு அல்ல.
இதனால், மேற்குறிப்பிட்ட வகையில் கேட்டு, அவரின் திருப்தியை சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்படின், திரும்பவும் பதில் கூறலாம்.

பயப்படத் தேவையில்லை

நீங்கள் பிரசன்டேஷன் செய்யும் விஷயத்தை முடிந்தளவு தெளிவாக படித்திருப்பீர்கள்தான். ஆனாலும், எதையும் முழுதாக யாராலும் படிக்க முடியாது. அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட நேரம் பிரசன்டேஷன் செய்ய, ஒரு விஷயத்தை, ஆதிமுதல் அந்தம்வரை அலசி ஆராய்தல் என்பது சாத்தியமில்லாத விஷயம். முனைவர் பட்ட ஆராய்ச்சி என்பதே, ஒரு சிறு விஷயத்தை, சிறிய அளவில் ஆய்வுசெய்வதுதான். ஏனெனில், ஒவ்வொரு விஷயமும் நம் கற்பனைக்கெட்டாத அளவு அவ்வளவு பெரியது!

அந்த வகையில், பார்வையாளர் கேட்கும் கேள்வியானது, உங்களின் எல்லையைத் தாண்டியதாக இருந்தால், அதற்காக பயப்படவோ, தயங்கவோ வேண்டாம். பதிலை, குறிப்பிட்ட காலத்தில் கூறுகிறேன், உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன், இதுதொடர்பாக நான் பார்க்க வேண்டியுள்ளது என்பன போன்ற சரியான காரணங்களை கூறுங்கள். யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால், தெரியவில்லை என்றால் அசிங்கமாக நினைத்துவிடுவார்களோ என நினைத்து, சம்பந்தமின்றி எதையெதையோ பேசி, மழுப்பி, உங்களின் பிரசன்டேஷன் மற்றும் உங்களின் மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டாம். இதனால், பலரின் நேரம் விரயமாகும்.

குழு உணர்வோடு இருங்கள்

கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை, ஒரு குழுவாக பிரசன்டேஷன் செய்வது, நடைமுறையாக உள்ளது. இத்தகைய செயல்பாட்டில், ஒருவரின் தனித்திறன் அளவிடப்படுவதுடன், அவரின் குழு செயல்பாட்டு திறனும் மதிப்பிடப்படுகிறது. கேள்வி - பதில் பகுதியில்தான் இந்த மதிப்பீடு கூர்மையடைகிறது. இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் தெளிவாக பதில் சொல்ல வேண்டும். உங்களின் சக குழு உறுப்பினரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் முந்திக்கொண்டு பதிலளிக்கக் கூடாது. ஒருவேளை சக உறுப்பினர் அளிக்கும் பதில் திருப்தியற்றதாகவும், சரியானதாகவும் இல்லாமல் இருந்தால்கூட, நீங்கள் உங்களது அதிருப்தியை பலரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தக்கூடாது.

சக உறுப்பினர் பதிலளித்து முடித்தவுடன், பேராசிரியரின் அனுமதிபெற்று, கூடுதல் தகவலாக, உங்கள் நண்பர் விட்டதை நீங்கள் கூறலாம். இதன்மூலம், உங்கள் குழுவின் செயல்பாட்டுத் திறனை அதிகப்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஒரு குழுவாக செயல்படும்போது, அதன் தவறுக்கு நீங்களும் ஒருவராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், அந்தத் தவறுக்கு நீங்கள் காரணம் இல்லையென்றாலும்கூட.

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு: ஜூலை 18, 1918),தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில்அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கெரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.

தொண்ணூற்று நான்கு வயதான மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது. சூன் 2008ல் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

இளமை

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதிதென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தைசோசா பழங்குடி இன மக்கள் தலைவர். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் 'நெல்சன் ரோபிசலா மண்டேலா'. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரின் சிறுவயதில் குத்துச் சண்டை வீரராகவே அறியப் பெற்றார். 

அந்தக் குடும்பத்திலிருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்டேலா, இளம் வயதில் ஆடு,மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்ளியின் ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா,லண்டன் மற்றும் தென்னாபிரிக்காபல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1941-ஆம் ஆண்டுஜோகானஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றி வந்தார்.

அரசியல்

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 

1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இவை சுதேச மக்களுக்கு எதிரானவை. நீதியற்றவை. இவற்றிற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என அறை கூவி கறுப்பின மக்களை விழிப்படையச் செய்வதில் வெற்றி கண்டார். 1948 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின்ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, கறுப்பின மக்களுக்கெதிராக முறையற்ற நடவடிக்கைகளை எடுத்தது. மண்டேலாவும் அவரின் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.

இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். மெதுவாக கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான "ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" என்ற கட்சியின் முதன்மை பொருப்புக்கு வந்தார். அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இனவெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துப் போராடினார். 

இவரின் தலைமையில் அரசின் இனவாதக் கொள்கைகளுக்கு எதிராக அறப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன. இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதைக் கண்ட வெள்ளையர் அரசு 1956 இல், அரசுக்கு எதிராக புரட்சி செய்தார் என கைது செய்தது. சிறையில் இருந்து வெளிவந்த மண்டேலா தீவிரமாகச் செயற்பட்டார். இதன் காரணமாக 1960 களில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வேகமாக வளர்ச்சியடைந்தது. 1960 இல் ஆப்பிரிக்கர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்குவதற்கு எதிராக ஊர்வலம் ஒன்றை Sharpeville நகரில் நடாத்தினர். பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 69 பேர் கொல்லப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 5ல் தேசத்துரோகக் குற்றம் சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்ப்பட்டனர். நெடிய சட்ட போராட்டத்திற்கு பிறகு 1961 அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அறப்போர் மூலம் போராடி உரிமைகளைப் பெற முடியாதென்பதை உணர்ந்து கொண்ட மண்டேலா ஆயத வழிமுறையை நாடினார். இதனையடுத்து அவரைக் கைது செய்ய வெள்ளையாட்சியினர் முடிவு செய்தனர்.

1961-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். இதை உருவாக்கியதிலும் இவருக்கு பங்குண்டு. வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்று, அரசு மற்றும் இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.

1961 டிசம்பர் 16 ஆம் நாள் இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடத்தப்பட்டது. அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் நடவடிக்கைகளால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இனவெறிக்கு எதிரான இவரது போர் நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனைக் காரணம் காட்டி அமெரிக்காவும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை நடைமுறையில் இருந்தது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress ] தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தது வெள்ளை அரசு. அரசுக்கு எதிராகப் புரட்சி செய்தமை, அமைதியைக் குலைத்தமை, கலகத்தை உருவாக்கியமை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வழக்கு 1963 இல் ரிவோனியா செயற்பாடு (process Rivonia) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

சிறை

மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது.

பல ஆண்டுகள் அவரைத் தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்னாப்பிரிக்க அரசாங்கம். மனைவியைச் சந்திப்பதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

விடுதலைக்கான போராட்டங்கள்

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால்தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார். 
மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

"மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்" என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார். இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது.

விடுதலை

அப்போதைய தென்னாப்பிரிக்கா அரசுத் தலைவரான பிரெட்ரிக் வில்லியம் டெக்ளார்க் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கி, மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.1990 இல் மண்டேலா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71. இந்நிகழ்வு உலகம் முழுவதும் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

வரவேற்பு

தென்னாப்பிரிக்கா அரசு அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி. பி. சிங் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

விருதுகள்

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு "நேரு சமாதான விருது" வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார். 1990-ல் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது. 

தென்னாப்பிரிக்காவின் அதிபராதல்

1994 மே 10 ந் தேதி அவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப் பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன்பின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2வது முறை அதிபர் பதவிக்கு போட்டியட மறுத்துவிட்டார்.