Saturday 18 January 2014

குரூப்-I பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

சப்-கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-I பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

அற்விப்பு எண்: 17/2013

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 29.01.2014



பதவி: Deputy Collector

பணிப்பிரிவு: Tamilnadu Civil Service

பணிக்கோடு எண்: 001

பதவிக்கோடு: 1001

காலியிடங்கள்: 03

வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.



பதவி: Deputy Superintendent of Police

பணிப்பிரிவு: Tamilnadu Police Service

பணிக்கோடு எண்: 1002

பதவிக்கோடு: 001

காலியிடங்கள்: 33

வயதுவரம்பு: 01.07.2013 தேதிப்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

உடல் தகுதிகள்:

ஆண்கள்: உயரம்: 165 செ.மீ

மார்பளவு – விரிவடைந்த நிலையில் 86 செ.மீ

பெண்கள்: உயரம்: 155 செ.மீ



பதவி: Assistant Commissioner(C.T)

பணிப்பிரிவு: Tamilnadu Commercial Taxes Service

பணிக்கோடு: 001

பதவிக்கோடு: 1003

காலியிடங்கள்: 33

வயதுவரம்பு: பட்டத்தாரிகளுக்கு 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பி.எல் முடித்தவர்களுக்கு 31-க்குள் இருக்க வேண்டும்.

பதவி: Assistant Director of Rural Development Department

பணிப்பிரிவு: Tamilnadu Panchayat Development Service

பணிக்கோடு: 001

பதவிக்கோடு: 1006

காலியிடங்கள்: 10

சம்பளம்: ரூ.15,600-39,100 + கிரேடு சம்பளம் ரூ.5,400

கல்வித்தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10+2+3 கல்வி முறையில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிப்பவர்களும் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யபப்டுவார்கள்

தேர்வுகள்: முதல்நிலைத் தேர்வு ஒரே தாளைக் கொண்டதாகும். இதில் General Studies பிரிவிலிருந்து பட்டப்படிப்பு தரத்தில் 150 கொள்குறி வகை கேள்விகளும், Aptitude & Mental Ability பிரிவுகளில் இருந்து பத்தாம் வகுப்பு தரத்தில் 50 கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

தேர்வு மையங்கள்: அரியலூர் -030, மதுரை -010, தேனி -020, சென்னை -001, நாகப்பட்டினம் -011, திருவள்ளூர் -021, சிதம்பரம் -104, நாகர்கோவில் -119, திருவண்ணாமலை -022, கோயமுத்தூர் -022, நாமக்கல் -012, திருவாரூர் -023, தர்மபுரி -004, பெரம்பலூர் -014, தூத்துக்குடி -024, திண்டுக்கல் -005, புதுக்கோட்டை -015, திருச்சிராப்பள்ளி -025, திருநெல்வேலி -026, ஈரோடு -006, திருப்பூர் -032, காஞ்சிபுரம் -007, சேலம் -017, வேலூர் -027, காரைக்குடி -138, சிவகங்கை -018, விழுப்புரம் -028, கரூர் -009, தஞ்சாவூர் -019, விருதுநகர் -029, கிருஷ்ணகிரி -031, நீலகிரி -013.

முதன்மைத் தேர்வு சென்னையில் நடைபெறும்.

தேர்வு கட்டணம்: முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.125 (தேர்வு கட்டணம் ரூ.75 + விண்ணப்பக் கட்டணம் ரூ,50). முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.125. கட்டணத்தை Net Banking, Credit Card, Debit Card -ஐ பயன்படுத்தி ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.netஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.01.2014

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.01.2014

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 26.04.2014 காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை.

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற SC/ST-A/ST/MBC/DC/BC/BC-M பிரிவினர்கள் 90 மதிப்பெண்களும், இதர பரிவினர்கள் 120 மதிப்பெண்களும் பெற வேண்டும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றபவர்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு (Main Exam) அனுமதிக்கப்படுவார்கள்.

முதன்மை தேர்வானது General Studies Paper-I, General Studies Paper -II, General Studies -III என்ற மூன்று தாள்களைக் கொண்டதாகும். மூன்று தாள்களிலும் 300 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளுக்கான தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும். தேர்வில் விரிவாக விடையளிக்கும் வகையில் கேள்விகள் கேட்கபப்டும்.

கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். முதன்மை தேர்வினை விண்ணப்பதாரர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 120 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment