Friday 24 January 2014

தெற்காசியாவின் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் திறக்கப்பட்ட நாள் (ஜன.24- 1857)

தெற்காசியாவில் முதல் பல்கலைக்கழகம் கல்கத்தாவில் முதன்முதலாக 1857-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி திறக்கப்பட்டது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1887 - அபிசீனியப் படைகள் டொகாலி என்ற இடத்தில் இத்தாலியர்களைத் தோற்கடித்தனர். * 1897 - சுவாமி விவேகானந்தர் சிகாகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. * 1908 - பேடன் பவல் சாரணீய இயக்கத்தை ஆரம்பித்தார். * 1918 - கிரெகோரியின் நாட்காட்டி ரஷ்யாவில் பெப்ரவரி 14 முதல் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. * 1924 - ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம் லெனின்கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது. * 1927 - ஆல்பிரட் ஹிட்ச்கொக் தனது 'தி பிளெஷர் கார்டன்' என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்.

* 1939 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் * 1943 - இரண்டாம் உலகப்போர்: பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment