Monday 27 January 2014

இன்று

இன்று

நைஜீரிய ராணுவக் கிடங்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஆயிரம் பேர் பலி (ஜன.27- 2002)

நைஜீரியாவில் கடந்த 2002-ம் ஆண்டு ராணுக் கிடங்கில் பயங்கர குண்டுவெடிப்பு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1915 - ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர். * 1918 - பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. * 1924 - விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. * 1926 - ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார். * 1938 - நியூயார்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.

* 1944 - இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் இரண்டாண்டு லெனின்கிராட் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. * 1945 - இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.

விண்கலம் வெடித்து 3 வீரர்கள் பலி (ஜன.27- 1967)

அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் அப்பொல்லோ 1 விண்வெளி வீரர்கள் 3 பேர் விண்கலத்தை பரிசோதிக்கும்போது அது வெடித்து தீப்பற்றிது. இதில் அந்த 3 பேரும் பலியானார்கள்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1973 - வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது. * 1996 - நைஜரில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு ராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

No comments:

Post a Comment